உங்கள் பிளாக்கிற்கு என ஒரு Android App இலவசமாக உருவாக்க - AppsGeyser
Android
மொபைல்களில் உபயோகிக்க லட்சகணக்கான மென்பொருட்கள்(Apps) உள்ளது. நீங்களும்
உங்கள் பிளாக்கிற்கென ஒரு Android மென்பொருளை உருவாக்கி உங்கள் வாசகர்கள்
சுலபமாக உங்கள் தளத்தை மொபைலில் படிக்கும் வசதியை அளிக்கலாம். இந்த Android
App உருவாக்க அதிகளவிலான தொழில்நுட்ப அறிவு பெற்றிருக்க வேண்டிய
அவசியமில்லை. அதிக நேரமும் செலவாகாது. அதிக பட்சம் ஐந்து நிமிடத்திற்குள்
மென்பொருளை உருவாக்கிவிடலாம். கீழே உள்ள வழிமுறையை தொடருங்கள்.
மென்பொருள் உருவாக்கும் வேலையை சுலபமாக செய்ய appsgeyser என்ற ஒரு தளம் உதவி செய்கிறது. முதலில் இந்த லிங்கில் கிளிக் செய்து Apps உருவாக்கும் பகுதியை ஓபன் செய்து கொள்ளுங்கள். கீழே இருப்பதை போல விண்டோ வரும் அதில் உள்ள MOBILE WEBSITE என்ற பட்டனை அழுத்தவும்.
மென்பொருள் உருவாக்கும் வேலையை சுலபமாக செய்ய appsgeyser என்ற ஒரு தளம் உதவி செய்கிறது. முதலில் இந்த லிங்கில் கிளிக் செய்து Apps உருவாக்கும் பகுதியை ஓபன் செய்து கொள்ளுங்கள். கீழே இருப்பதை போல விண்டோ வரும் அதில் உள்ள MOBILE WEBSITE என்ற பட்டனை அழுத்தவும்.
உங்களுக்கு அடுத்த விண்டோ ஓபன் ஆகும். அதில் உங்களுடைய தளத்தின் URL மற்றும் அங்கு கேட்கப்படும் விவரங்களை கொடுக்க வேண்டும்.
- மேலே படத்தில் உள்ளது போல விவரங்களை கொடுத்து கீழே உள்ள CREATE என்ற பட்டனை அழுத்தவும்.
- இதில் icon பகுதியில் டீபால்ட் ஐகானுக்கு பதிவல் உங்களுடைய ஐகானும் தேர்வு செய்து கொள்ளலாம்.
- CREATE பட்டனை அழுத்தியவுடன் உறுப்பினர் படிவம் ஓபன் ஆகும் அதில் உங்கள் விவரங்களை கொடுத்து உறுப்பினர் ஆகி கொள்ளுங்கள். அல்லது பேஸ்புக் மூலம் உறுப்பினராகி கொள்ளலாம்.
முடிவில் உங்களுக்கு கீழே உள்ளதை போல விண்டோ வரும் இப்பொழுது உங்கள் பிலாக்கிர்க்கான மென்பொருள் தயாராகி விட்டது.
1. TEST YOUR APP - இந்த
லிங்கை கிளிக் செய்து நீங்கள் உருவாக்கிய மென்பொருளை டவுன்லோட் செய்து
கொள்ளலாம். இந்த டவுன்லோ லிங்கை உங்கள் பிளாக்கில் கொடுத்து உங்கள்
வாசகர்களுக்கும் பகிரலாம்.
2. DISTRIBUTE- உங்கள்
பிளாக்கில் மென்பொருளை பிரபல படுத்த விரும்பினால் இந்த லினகை கிளிக்
செய்து Android மார்க்கெட்டில் உங்கள் மென்பொருளை வெளியிடலாம். ஆனால் இது
இலவசம் அல்ல குறைந்தது $25 செலவாகும். AppsGeyser தளத்தின் Gallery
பகுதியில் உங்கள் மென்பொருளை வெளியிட பணம் தேவையில்லை ஆனால் அவர்கள் உங்கள்
மென்பொருளை Approval செய்ய வேண்டும்.
3. MONETIZE - மென்பொருள் விளம்பரம் மூலம் பணம் சம்பாதிக்கும் வழி ஆனால் இதற்கும் அவர்களின் approval கிடைக்க வேண்டும்.
இனி உங்கள் வாசகர்கள் உங்கள் பதிவுகளை சுலபமாக Android மொபைல்களில் படித்து கொள்ளலாம்.
டிஸ்கி:
இந்த தளத்தில் தெரியும் உங்கள் தளத்தின் மாதிரியை போலவே மொபைல்களிலும்
தெரியாது. குறிப்பாக விளம்பரங்கள் இருந்தால் அவைகள் தவிர்க்கப்படலாம்.