தகவல் தொழில்நுட்ப முதல் தமிழ் வலைத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

Tuesday, July 15, 2014

Ubuntu வில் தமிழ் Unicode பயன்படுத்தும் முறை

நாம் Windows இயங்குதளத்தில் தமிழ் Unicode இனை பயன்படுத்துவதற்க்கு NHMwriter அல்லது இகலப்பை அல்லது பொங்குதமிழ் போன்றவற்றை பயன்படுத்துவோம். ubuntu வில் தமிழ் இடைமுகத்தினை அமைப்பதற்க்கு m17n என்ற பொதியையும், ibus என்ற மென்பொருளையும் நிறுவிகொள்ளுதல் வேண்டும். 

Terminal இனுள்  பின்வரும் ஆணையை வழங்கி உங்கள் மென்பொருட் களஞ்சியத்தைப் புதுப்பித்துக்கொள்ளுங்கள். கடவுச்சொல் கேட்டால் உங்கள் பயனர் கடவுச்சொல்லைக் கொடுங்கள்.

" sudo apt-get update "

m17n பொதிகளை நிறுவுவதற்கான ஆணையை வழங்குங்கள்.

" sudo apt-get install m17n-db m17n-contrib ibus-m17n "

அடுத்து ibus கட்டகத்தை அமைத்துக்கொள்ளவேண்டும். இதற்கு ibus-setup எனும் மென்பொருள் உதவும். . (இதனை  Applications பட்டியலிலிருந்தே பெறலாம் என்றாலும் வசதிக்காக terminal வழியாகச் செய்வதற்குச் சொல்லித்தருகிறேன்). பின்வரும் ஆணையை வழங்குங்கள்.

" ibus-setup "

input method க்கு சென்று ஆங்கில தமிழ் எழுத்துருக்களை Add செய்தல் வேண்டும்
General என்ற பகுதியில் எமக்கு தேவையான வாறு shortcut key களை வழங்க முடியிம். 

பாமினி வடிவத்தில் யுனிகோடை தட்டெழுத விரும்புபவர்கள் “பாலினி” என்ற உள்ளீட்டமைப்பை  தனியாக நிறுவிக்கொள்ளவேண்டும்.


அதனைத் தரவிறக்கிக்கொள்ள பின்வரும் ஆணையை terminal இல் வழங்குங்கள்.

wget http://mmauran.net/downloads/ta-balini.mim "

தரவிறக்கி முடித்ததும் அக்கோப்பினை m17n அடைவிற்கு அனுப்ப வேண்டும். அதனைச்செய்ய, பின்வரும் ஆணையைச் செயற்படுத்துங்கள்

sudo cp ta-balini.mim /usr/share/m17n/ibus ”

ஒருமுறை கணினியை logout செய்து மறுபடி login செய்யுங்கள்.

முன்னரே காண்பித்தபடி ibus-setup மென்பொருளைப்பயன்படுத்தி பாலினி விசைப்பலகையை add செய்துகொள்ளுங்கள்.

0 comments:

Post a Comment


Blogger Tips and TricksLatest Tips For BloggersBlogger Tricks

சொயற்படுத்துங்கள்

Blog Archive

Total Pageviews