Ubuntu update செய்யப்பட்ட கோப்புகளை தேவையான போது பயன்படுத்தும் முறை
Ubuntu வில் update செய்யப்படும் போது தரவிறக்கம் செய்யப்படும் கோப்புக்கள் கணினியில் நிலையாக பேணப்படுகிறது. இதேபோல் Software center ஊடாக உள்ளீடு செய்யப்படும் மென்பொருட்களும் நிலையாக பேணப்படுகின்றது. இதைன நாம் பிரதி செய்து வைத்திருப்போம் எனில் எமக்கு தேவையான போது மீண்டும் மீணுடும் பதிவிறக்கம் செய்யாமல் நமது பிரதியில் இருந்தே பயன்படுத்திக் கொள்ள முடியும்.
இக்கோப்புக்கைள பிரதி செய்யும் முறை
1. File System/Var/Cahe/apt/archives என்ற directory யில் update செய்யப்பட்ட மென்போருட்கள் காணப்படும் (.deb என்ற பிற்சேர்கையுடன் உள்ள கோப்புக்கள் மட்டும்) இதனை உமக்கு விரும்பிய இடத்தில் பிரதி செய்து வைத்திருக்கவும்.
2. இவ்வாறு பதிவிறக்கம் செய்யப்பட்ட மென்போருட்களை உள்ளீடு செய்யும் முறையினை Ubuntu மென்பொருள் உள்ளீடு செய்யும் முறை என்ற பதிவின் ஊடாக அறிய முடியும். (" sudo dpkg -i <your copy location>/*.deb " என்ற sudo code இனை பயன்னடுத்தும் முறை)எனவே ubuntu format செய்தாலும் update செய்யப்பட்ட மென்போருட்களை மீண்டும் இணைய இணைப்பு இல்லாமலே உள்ளீடு செய்யமுடியும்.
0 comments:
Post a Comment