தகவல் தொழில்நுட்ப முதல் தமிழ் வலைத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

Monday, December 1, 2014

வீடியோக்களில் தேவையான பகுதியை மட்டும் வெட்டி எடுப்பதற்கு

கணணி பயனாளர்கள் அனைவருக்கும் வி.எல்.சி மீடியா பிளேயர்(VLC Media Player)பற்றி அறிந்திருப்பர். எளிமையான இந்த மென்பொருள் பல்வேறு புதிய வசதிகளை கொண்டு புதிய தொகுப்பாக வெளிவந்துள்ளது.

தற்போது இந்த மென்பொருளிலேயே நீங்கள் வீடியோவில் தேவையான பகுதிகளை விருப்பப்படி கட் செய்து கொள்ள முடியும்.


இதன் மூலம் வீடியோ கட்டராகவும் இந்த மென்பொருள் பயன்படும்.
இதற்கு முதலில் புதிய பதிப்பான VLC 2.0வை உங்கள் கணணியில் நிறுவிக் கொள்ளவும். VLC மென்பொருளைத் திறந்து View மெனுவில் Advanced Controls என்பதனை கிளிக் செய்தால் மென்பொருளின் கீழ்புறத்தில் புதிய வசதிகளுடைய ஐகான்கள் தோன்றும்.
அதில் முதல் பட்டன் சிவப்பு நிறத்தில் Record என்றிருக்கும். தேவையான பகுதி ஆரம்பிக்கும் இடத்தில் ஒரு முறை அந்த பட்டனில் கிளிக் செய்யவும். பிறகு வீடியோ எதுவரை வேண்டுமோ அதுவரை வீடியோவை ஓடவிடவும். மறுபடியும் அதே Record பட்டனைக் கிளிக் செய்தால் தேவையான வீடியோவின் பகுதி கட் செய்யப்பட்டு விடும்.
வெட்டப்பட்ட வீடியோ Mp4 போர்மட்டில் My Documents->My Videos கோப்பறையில் சேமிக்கப்பட்டிருக்கும். ஆனால் இதில் உள்ள குறை என்று பார்த்தால் தேவையான பகுதி வீடியோவை ஓட விட்டால் மட்டுமே கட் செய்ய முடியும். இருப்பினும் வேகமாக எளிமையான முறையில் கட் செய்து விட VLC மீடியா பிளேயரைப் பயன்படுத்தலாம்.

0 comments:

Post a Comment


Blogger Tips and TricksLatest Tips For BloggersBlogger Tricks

சொயற்படுத்துங்கள்

Blog Archive

Total Pageviews