ப்ளேம் (Flame) வைரஸ் எச்சரிக்கை
புதிய வைரஸ் ஒன்று வேகமாகப் பரவி வருவதனை, வைரஸ் குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் காஸ்பெர்ஸ்கி நிறுவனம் கண்டறிந்து எச்சரிக்கை வழங்கியுள்ளது.
ஈரான் நாட்டில் பரவியுள்ள இந்த வைரஸ் விரைவில் மற்ற நாடுகளிலும் பயன்படுத்தப்படும் கம்ப்யூட்டர்களில் பரவலாம் என ஐக்கிய நாடுகள் சபையின் பன்னாட்டு தொலைதொடர்பு அமைப்பு அறிவித்துள்ளது.
(http://in.reuters.com/ article/ 2012/05/29/cyberwar-flame- idINDEE84S0 EU20120529) இந்த வைரஸ் இதுவரை தாங்கள் சந்திக்காத ஒரு குழப்பமான குறியீட்டினைக் கொண்டு இயங்குவதாக காஸ்பெர்ஸ்கி அறிவித்துள்ளது. இது குறித்து மேலும் சில தகவல்களை இங்கு பார்க்கலாம்.
ப்ளேம் வைரஸ், கம்ப்யூட்டரை நேரடியாகத் தாக்காமல், ட்ரோஜன் வைரஸ் போலவே நுழைகிறது. பெரும்பாலும் பாதிக்கப்பட்ட இணைய தளங்களிலிருந்து, அவற்றை அணுகும் கம்ப்யூட்டர்களுக்குச் செல்கிறது. பின்னர், யு.எஸ்.பி. ப்ளாஷ் ட்ரைவ், லோக்கல் நெட்வொர்க் ஆகியவற்றின் மூலம் மற்ற கம்ப்யூட்டர்களை அடைகிறது.
பாதிப்பை ஏற்படுத்த கம்ப்யூட்டரை அடைந்த பின்னர், பாஸ்வேர்ட் தகவல்களைத் திருடுதல், மைக் மூலம் அனுப்பப் படும் ஆடியோ தகவல்களைப் பதிந்து அனுப்புதல், முக்கிய புரோகிராம் இயக்கங்களின் ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்புதல், இன்ஸ்டண்ட் மெசேஜ் விண்டோக்களில் உள்ள தகவல்களை எடுத்து அனுப்புதல் போன்ற அனைத்து திருட்டு வேலைகளை யும் நாசூக்காக மேற்கொள்கிறது.
கம்ப்யூட்டருடன் புளுடூத் முறையில் இணைக்கப்படும் சாதனங்களிலிருந்தும் தகவல்களைத் திருடுகிறது இந்த வைரஸ். திருடப்படும் தகவல்கள் அனைத்தும், உலகின் பல நாடுகளில் இயங்கும் இதன் சர்வர்களுக்கு அனுப்பப்படுகின்றன.
2010 ஆம் ஆண்டில், ஈரான் நாட்டில் பெரும் சேத விளைவுகளை ஏற்படுத்திய ஸ்டக்ஸ்நெட் (Stuxnet worm) போல இது செயல்படுகிறது. ஆனால், அதனைக் காட்டிலும் குழப்பமான குறியீட்டில் இந்த வைரஸ் எழுதப்பட் டுள்ளது.
எனவே இதனைக் கண்டறிந்து கட்டுப்படுத்துவது சிரமமாக இருக்கிறது. இந்த வைரஸ் பைல் 20 எம்பி இடத்தை எடுத்துக் கொள்ளும் அளவிற்குப் பெரியதாக உள்ளது.
இந்த வைரஸ், வங்கி இணையக் கணக்கிலிருந்து பணம் மாற்றும் வழியைக் கொண்டிருக்கவில்லை என்பது சற்று ஆறுதலான விஷயம் தான். ஈரான் எண்ணை வள நிறுவனங்களில் குழப்பத்தினை உண்டு பண்ண இது தயாரிக்கப்பட்டி ருக்கலாம் என்றும் ஒரு கோணத்தில் ஆய்வு நடக்கிறது.
அப்படி இருந்தால், மற்ற நாடுகளின் அடிப்படைக் கட்டமைப்பில் நாச வேலைகளை மேற்கொள்ள இந்த வைரஸ் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
0 comments:
Post a Comment