இன்றைய கணினி மயமான உலகிலே நாம் எமது கணினியில் மட்டுமல்ல, வேறொருவரின் கணினியிலோ அல்லது பொதுக் கணினியிலோ பணி செய்ய வேண்டிய சில சந்தர்ப்பங்கள் ஏற்படலாம். இவ்வாறு நாம் பயன்படுத்தும் போது மின்னஞ்சல் அனுப்புதல், Credit card மூலம் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுவது போன்ற பல தனிப்பட்ட, இரகசிய வேலைகளை செய்ய வேண்டி யிருக்கும். இவ்வாறு நாம் பாவித்து முடித்த பின்னர் இக்கணினியைப் பாவிப்பவர்கள் எமது தனிப்பட்ட விபரங்களை அறிய வாய்ப்பு உள்ளது.
இதற்காக I.Evidence finder போன்ற பல Softwareகள் உள்ளன. நாம் cache, history, cookies, போன்றவற்றை அழித்தாலும்கூட எமது கடவுச்சொற்கள், chat history, முக்கிய தரவுகள் திருடுபோக வாய்ப்புள்ளது. இப்பிரச்சனைக்குத் தீர்வாக எமது தடயங்களை அழிக்கCleanAfterMe எனும் இலவச மென்பொருள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
இது ஒரு மிகச்சிறிய மென்பொருள், பயன்படுத்துவதும் சுலபமானது. இது ஒரு portable Software என்பதால் கணினியில் நிறுவவேண்டிய அவசியமில்லை. Pendriveஇல் எடுத்துச் சென்று பயன்படுத்தமுடியும்.
இதனைத் தரவிறக்கி cleanafterme.exe என்ற fileஐ run செய்யவும்.
பின்னர் நீக்கவேண்டிய விபரங்களை திரையில் தேர்வு செய்து clean selected items என்றbutton ஐ click செய்வதன் மூலம் உங்கள் தடயங்களை அழிக்கலாம்.
Advanced option இற்குச் சென்று Fill the file with zero bytes, and then deleteஎன்பதற்கு மாற்றி அழிப்பதன் மூலம் எந்தவொரு Recovery softwareஐக் கொண்டும் மறுபடியும் மீட்டெடுக்க முடியாது என்பது இதன் சிறப்பம்சம் ஆகும்.
0 comments:
Post a Comment