கைப்பேசியின் (Mobile Phone) முன்னெப்போதும் இல்லாத இன்று விரிவடைந்து இருக்கின்றது. காலத்துக்கு ஏற்ப மாறிக்கொண்டிருக்கும் செல்போன் தொழில்நுட்பத்தை தலைமுறை (Generation)என்று அழைக்கப்படுகின்றது.
முதல் தலைமுறைக் கைப்பேசிகள் 1980களின் துவக்கத்தில் ஆரம்பமாகின. இதில் அனலொக் (Analog) சமிக்ஞைகள் பயன் படுத்தப்பட்டன.
இரண்டாம் தலைமுறைக் கைப்பேசிகள் டிஜிட்டலுக்குத் (Digital) தாவியது. இரண்டாம் தலைமுறைக் கைப்பேசிகளில் தான் இன்று நாம் பயன்படுத்தும் ஜி .எஸ்.எம். (GSM) அறிமுகப்படுத்தப்பட்டது. 1982களில் அறிமுகமான இது Global System for Mobile Communications என்பதன் சுருக்கமாகும். எஸ்.எம்.எஸ் வளர்த்ததும், மலிவானதும் இந்தத் தலைமுறையில் தான்.
மூன்றாம் தலைமுறைக் கைப்பேசிகள் ஐப்பானில் 2001 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டன. இது W-CDMA தொழில் நுட்பத்தில் இயங்குகின்றது. மூன்றாம் தலைமுறைக் கைப்பேசிகள் IMI2000எனும் வகையின் கீழ் 3GPP மற்றும் 3GPP2 எனும் புதிய தொழில் நுட்ப அடிப்படையில் இயங்குகின்றன. பேசிக் கொண்டே தகவல் அனுப்புவது இதில் ஸ்பெஷல் அம்சம்.
நான்காம் தலைமுறைக் கைப்பேசிகள் LTE நுட்பத்தின் அடிப்படையிலானவை. 2009 ஆம் ஆண்டின் கடைசிப் பகுதியில் இந்தத் தொழில் நுட்பத்துக்கான ஆரம்ப வேலைகள் ஆரம்பமாகின.
0 comments:
Post a Comment