தகவல் தொழில்நுட்ப முதல் தமிழ் வலைத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

Friday, June 22, 2012

கணனி தகவல்கள்


நாம் கணினியில் சில மென்பொருட்களை இன்ஸ்டால் செய்திருப்போம். நாளடைவில் அது வேண்டாமென்று Uninstall செய்து விடுவோம். ஆனால் அப்படி செய்யும் போது சில தேவையில்லாத பைல்கள் நம் Registry லேயே தங்கிவிடும். இதனால் தான் நம் கணினி மிகவும் மந்தமாக வேலை செய்யும்.
இந்த பைல்களை அழித்தாலே நம் கணினியின் வேகத்தை கண்டிப்பாக கூட்ட முடியும் என்பதில் ஐயமில்லை. இதுவரை இந்த வேலைக்கு நான் வேறொரு நிறுவனத்தின் மென்பொருள் உபயோகித்து வந்தேன் ஆனால் இந்த மென்பொருள் அதைவிட நன்றாக உள்ளது. ஆதலால் இந்த Sofware அனைவருக்கும் உபயோக படும் என்று பதிவிடுகிறேன். 

4shared.com /file/e2AFNwSK/WRCFree.html

டவுன்லோட் செய்தவுடன் உங்களுக்கு வரும் WDCfree என்ற setup பைலை ரன் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளவும். உங்களுக்கு இரண்டு shortcut keys வந்திருக்கும். அதில் Clear with 1 click என்பதை டபுள் கிளிக் செய்தாலே உங்கள் கணினியின் registry ஸ்கேன் ஆகி அதில் உள்ள தேவையில்லாத பைல்கள் ஸ்கேன் ஆகி தானாகவே பைல்களை delete செய்து விண்டோவும் க்ளோஸ் ஆகிவிடும். 
இந்த வேலைகளை Manual ஆக செய்ய வேண்டுமானால் Wise Registry Cleaner என்ற Shortcut கீயை டபுள் கிளிக் செய்து இயக்கி இடது பக்க மூலையில் மேலே உள்ள Scan என்ற பட்டனை அழுத்தினால் உங்களுடைய கணினி ஸ்கேன் ஆகி வந்ததும் நான்காவதாக உள்ள Fix என்ற பட்டனை அழுத்தி உங்கள் கணினியை கிளீன் செய்து கொள்ளுங்கள்.
முன்னர் உங்கள் கணினி இயங்கியதற்கும் இப்பொழுது இயங்குவதற்கும் நிறைய மாற்றங்கள் கண்டிப்பாக தெரியும்.

மின்னஞ்சல் வழியாக ஃபேக்ஸ்

நம்மில் சிலர் அடிக்கடி ஃபேக்ஸ் அனுப்புவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். ஆனால் பழங்கால ஃபேக்ஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது இன்றைக்கும் சற்று செலவு வைக்கக் கூடிய ஒன்றே. இன்றைய இணைய யுகத்தில் மின்னஞ்சல் ஊடாக ஃபேக்ஸ் அனுப்புவது என்பது சாத்தியப்படுவதுடன், அதிக செலவு வைக்காத சிக்கன நடவடிக்கையாக உருவெடுத்துள்ளது.

சுட்டிகள் : Email to FAX

Monday, June 18, 2012

உங்கள் பழைய கணினியின் அனைத்து தகவல்களையும் புதிய கணினிக்கு சுலபமாக மாற்ற

கணினி என்பது மனிதனுக்கு ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. வளர்ந்து வரும் தொழில் நுட்பத்திற்கு ஏற்ப தினம் ஒரு தொழில்நுட்ப வசதி கணினி சம்பந்தமாக வெளிவருகிறது. நம்முடைய பழைய கணினி பழுதாகினாலோ அல்லது வேறு காரணத்திற்க்காக புதிய கணினியை வாங்குகிறோம். அப்படி வாங்கும் போது நம்முடைய பழைய கணினியில் உள்ள தகவல்கள் மென்பொருட்கள் அனைத்தையும் அப்படியே நம்முடைய புதிய கணினிக்கு மாற்ற மிகுந்த சிரமப்படுவோம். கால நேரமும் அதிகமாகும். இந்த பிரச்சினையை தீர்த்து பழைய கணினியில் உள்ள அணைத்து தகவல்களையும் சுலபமாக புதிய கணினிக்கு மாற்ற இரு இலவச மென்பொருள் உள்ளது.




  • இது முற்றிலும் PickMeApp ஒரு இலவச மென்பொருள் இருந்தாலும் தாங்கள் இந்த தளத்தில் உறுப்பினர் ஆகினால் மட்டுமே இந்த மென்பொருளை உங்கள் கணினியில் டவுன்லோட் செய்ய முடியும்.

  • இந்த முறையில் நீங்கள் உங்கள் மென்பொருளை புதிய கணினியில் மாற்றும் போது நாம் செய்து வைத்திருந்த செட்டிங்க்ஸ் கூட மாறாமல் வரும் என்பது இதன் இன்னுமொரு சிறப்பம்சம்.

  • இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ததும் இந்த மென்பொருளை இயக்கினால் நீங்கள் புதிய கணினிக்கு மாற்ற வேண்டிய மென்பொருட்களை தேர்வு செய்து கொண்டு அதன் ரெஜிஸ்டரியை அப்படியே புதிய கணினியில் நிறுவினால் அந்த மென்பொருள் உங்களின் புதிய கணினியில் வந்து விடும்..
     
  • Saturday, June 16, 2012

    கம்ப்யூட்டரில் மறைப்பதற்கு ?

    USB PORT அனைவருக்கும் பயனுள்ளதாக இருந்தாலும் பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகம் போன்ற இடங்களில் USBனை பயன்படுத்தவது தடை செய்யப்பட்டு இருக்கும்.கணணியில் வைரசால் பாதிப்பு வந்து விடும் என்பதற்காக USB PORTனாது DISABLE செய்யப்பட்டு இருக்கும்.
    இதனை WINDOWSஇல் DISABLE செய்வதற்கு:


    [ 1 ]  முதலில் REGISTRY EDITOR செல்ல வேண்டும். இங்கு செல்ல RUN----->TYPE "regedit" என டைப் செய்யவும்.
    [ 2 ]  அதன் பின் HKEY_LOCAL_MACHINE->SYSTEM->CurrentControlSet->Services->UsbStor. இந்த PATHக்கு சென்று பின் START என்பதை இரண்டு முறை கிளிக் செய்ய வேண்டும்.
    [ 3 ]  அடுத்து வரும் விண்டோவில் HEXDECMIAL VALUE வை SELECT செய்து VALUE DATA என்ற இடத்தில் "4" என்று மாற்ற வேண்டும்.
    [ 4 ] அதன் பின் OK கொடுத்து கணணியை RESTART செய்ய வேண்டும். இதில் கவனிக்க வேண்டியவை 4 என்ற இடத்தில் மாற்றம் செய்வதற்கு முன் இருந்த எண்ணை நினைவில் கொள்ள வேண்டும். அதுதான் ENABLE செய்ய வேண்டிய எண்.

    Thursday, June 14, 2012

    என்ன செய்யும் இந்த FUNCTION KEYS?

    கணனி விசைப் பலகையின் மேல் வரிசையில் F1, F2 என பெயரிடப்பட்ட 12 விசைகள் இருப்பதை நீங்கள் அறிவீர்கள். இவை (Function Keys) பன்ங்ஷன் கீஸ் எனப்படுகின்றன. இந்த பன்ங்ஷன் விசைகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு தொழிற்பாடுகளைக் கொண்டுள்ளன.


    இந்த பன்ங்ஷன் விசைகள் பயன்படுத்தப்படும் இயங்கு தளத்திலும் எப்லிகேசன் மென்பொருளிலுமே சார்ந்திருக்கின்றன. அதாவது இவை எல்லா எப்லிகேசன்களிலும் எல்லா இயங்கு தளங்களிலும் ஒரே மாதிரியாகத் தொழிற்படுவதில்லை. அதேவேளை சில விசைகள் சில எப்லிகேசன்களில் தனியாக தொழிற்படுவதோடு வேறு சில விசைகள் ALT மற்றும் CTRL விசைகளோடு சேர்த்தே இயக்கப்படும். உதாரணமாக விண்டோஸ் இயங்கு தளத்தில் ALT + F4 விசைகளை அழுத்துவதன் மூலம் இயக்கத்திலிருக்கும் ஒரு எப்லிகேசனை நிறுத்திவிட முடியும்.

    விண்டோஸ் இயங்கு தளத்தில் மேலே குறிப்பிட்டது போல் எல்லா எப்லிகேசன்களும் பங்ஷன் விசைகளை ஆதரிப்பதில்லை. அதேவேளை சில விசைகள் எந்த செயற்பாடுகளும் வழங்கப்படாமலும் உள்ளன.

    பங்க்ஷன் விசைகளில் சில பொதுவான தொழில்கள் கீழே விவரிக்கப்படுகின்றன.


    F1
    இந்த விசை அனேகமாக எந்த எப்லிகேசனிலும் அதற்குரிய உதவிக் குறிப்புகளடங்கிய பைலை வரவழைக்கும். அதேவேளை எந்த எப்லிகேசனும் திறக்கப்படாத நிலையில் இந்த விசையை அழுத்தும் போது விண்டோஸ¤க்குரிய ஹெல்ப் பைல் திறந்து கொள்ளும். எம். எஸ். வர்ட்டில் இந்த விசையை அழுத்த டாஸ்க் பேன் (Task Pane) திறந்து கொள்ளும் அதிலிருந்து உதவிகள் பெறலாம்.


    F2
    விண்டோஸில் தெரிவு செய்யப்பட்டிருக்கும் ஒரு பைலின் அல்லது போல்டரின் பெயரை மாற்ற (rename) இந்த விசை பயன்படும். எம். எஸ். வர்டில் Alt + Ctrl + F2 விசைகளை ஒரே நேரத்தில் அழுத்தும் போது open டயலொக் பொக்ஸ் திறக்கும்.



    F3
    இதனை அழுத்தும் போது கணினியில் பைல் போல்டர்களைத் தேடித்தரும் Search விண்டோ திறந்து கொள்ளும். எம். எஸ். வர்டில் Shift + F3 விசைகளை ஒரே நேரத்தில் அழுத்துவதன் மூலம் வாக்கியமொன்றின் ஆரம்பத்தில் ஆங்கில பெரிய எழுத்தில் (upper case) உள்ளதை சிறிய எழுத்தாகவும் (lower case) சிறிய எழுத்திலுள்ளதை பெரிய எழுத்தாகவும் மாற்றிக்கொள்ளலாம்.


    F4
    விண்டோஸில் எந்த தொழில்பாடையும் செய்வதில்லை. எம். எஸ். வர்டில் இறுதியாகச் செய்த வேலையை மறுபடி செய்யும் Alt + F4 விசைகளை ஒரே நேரத்தில் அழுத்துவதன் மூலம் தற்போது இயக்கத்திலிருக்கும் எப்லிகேசனை நிறுத்தி விடலாம். எப்லிகேசன் எதுவும் திறந்திறாத நிலையில் Alt + F4 விசைகளை அழுத்தி விண்டோஸ் இயக்கத்தையும் நிறுத்த முடியும்.


    F5
    விண்டோஸில் இந்த விசையை அழுத்தி ஒரு விண்டோவின் உள்ளடக்கத்தை Refresh செய்து புதுப்பிக்கலாம். அனேகமான வெப் பிரவுஸர்களில் ஒரு இணைய பக்கத்தைப் புதுப்பிக்கவும் இந்த விசையே பயன்படுகிறது. அதாவது ஒரு குறிப்பிட்ட பக்கத்தை மறுபடி ஆரம்பத்திலிருந்து தோன்றச் செய்யலாம். எம். எஸ். வர்டில் இந்த விசை அழுத்தி Find & Replace டயலொக் பொக்ஸை வரவழைக்கலாம். எம். எஸ். பவர் பொயிண்டில் இந்த விசையை அழுத்தி ஸ்லைட் ஷோவை இயக்க முடியும்.


    F6
    இண்டர் நெட் எக்ஸ்ப்லோரர் மற்றும் மொஸில்லா பயபொக்ஸ் பிரவுசர்களில் கர்சரை எட்ரஸ் பாரை நோக்கி நகர்த்தலாம் Ctrl + Shift + F6 விசைகளை ஒரே நேரத்தில் அழுத்துவதன் மூலம் திறந்து வைத்துள்ள எம். எஸ். வார்ட் ஆவணங்களில் மாறிக்கொள்ள


    F7
    எம். எஸ். வர்ட் மற்றும் பவர்பொயின்ட் மென் பொருள்களில் எழுத்துப் பிழைகளையும் இலக்கணப் பிழைகளையும் கண்டறிந்து சரி செய்யக் கூடிய டயலொக் பொக்ஸ் தோன்றும்.


    F8
    இந்த இசையை விண்டோஸ் இயங்க ஆரம்பிக்கும் முன்னர் அழுத்துவதன் மூலம் விண்டோஸ் ஸ்டாட்-அப் மெனுவை வரவழைக்கலாம். விண்டோஸ் ஆரம்பிப்பதில் சிக்கல் தோன்றும் போது அதனை சேப் மோடில் (Safe Mode) இயக்க இந்த விசையே பயன்படுத்தப்படுகிறது-


    F9
    இந்த விசையை அழுத்தும் போது விண்டோஸில் எந்த இயக்கமும் நடைபெறாது.


    F10
    விண்டோஸில் திறந்திருக்கும் எந்த எப்லிகேசனிலும் மெனுபாரை இயக்க நிலைக்கு மாற்றி (activate) அதன் மூலம் கீபோர்டைக் கொண்டே மேலும் தெரிவுகளை மேற்கொள்ளலாம். அத்தோடு Shift + F10 விசைகளை ஒரே நேரத்தில் அழுத்துவதன் மூலம் ரைட் க்ளிக் செய்யும் போது தோன்றும் கண்டெக்ஸ்ட் மெனுவை வரவழைக்கலாம்.


    F11
    அனேகமான இணையை உலாவிகளில் (வெப் பிரவுஸர்) முழுத் திரையைத் தோன்றச் செய்யும்.


    F12
    எம். எஸ். வர்டில் ஷிavலீ as விண்டோவை வர வழைக்கும். அத்தோடு Shift + F12 விசைகளை அழுத்தும் போது வர்டில் ஆவணமொன்று சேமிக்கப்படும். Ctrl + Shift + F12 விசைகளை அழுத்தி Print டயலொக் பொக்ஸை வரவழைக்கும்.

    விண்டோஸில் எல்லா பங்க்ஷன் விசைகளும் பயன்படுவதில்லை என்பதை இப்போது நீங்கள் புரிந்திருக்கலாம். (உதாரணம் F9) எனவே இதனை சாதகமாகப் பயன்படுத்தி நீங்கள் விரும்பும் ஒரு எப்லிகேசனுக்கு அந்த விசையை ஒதுக்கிவிட முடியும். அதன் மூலம் குறிப்பிட்ட அந்த பங்ஷன் விசையை அழுத்தி ஒரு எப்லிகேசனைத் திறந்து கொள்ளலாம். அதற்குப் பின்வரும் வழிமுறைகளைக் கையாளுங்கள்.

    டெஸ்க் டொப்பில் அல்லது ஸ்டார்ட் மெனுவில் இருக்கும் நீங்கள் விரும்பிய எப்லிகேசனுக்குரிய ஐக்கன் மேல் ரைட் க்ளிக் செய்து வரும் மெனுவில் Properties தெரிவு செய்யுங்கள். அப்போது தோன்று டயலொக் பொக்ஸில் Shortcut டேபில் க்ளிக் செய்யுங்கள். அங்கு Shortcut Key எனுமிடத்தில் நீங்கள் விரும்பிய பங்க்ஷன் கீயை அழுத்தி ஒகே செய்து விடுங்கள்

    Tuesday, June 12, 2012

    நமது கம்ப்யூட்டர் முழுவதையும் ஸ்கேன் செய்யும் சாப்ட்வேர் ?

    நமது கணணியில் உள்ள டிரைவ் எதுவாக இருந்தாலும் சரி அது எந்த அளவு உபயோகிக்கப்பட்டுள்ளது, ஒவ்வொரு கோப்புகளின் அளவு என்ன என தெளிவாக அறிய இந்த மென்பொருளால் முடியும்.

    மேலும் இதிலிருந்தே ரீ-சைக்கிள் பின்னை சுத்தம் செய்யலாம். Control Panelல் உள்ள Add Removeல் உள்ள கோப்புகளை நீக்கலாம். வன்தட்டை ஸ்கேன் செய்து காலியிடங்களை பார்க்கலாம்.
    இந்த மென்பொருளை தரவிறக்கியதுடன் தோன்றும் விண்டோவில் Download Scanner கிளிக் செய்யவும். அதில் உங்கள் வன்தட்டின் மொத்த விவரம் தெரிய வரும். அந்த விண்டோவில் தோன்றும் எதாவது ஒரு நிறத்தின் மீது கர்சரை வைத்தால் அந்த டிரைவின் பெயர், அதில் உள்ள கோப்பறை, அதில் உள்ள கோப்புகளின் அளவு விவரம் மேல் புறத்தில் தெரிய வரும்.
    இதைப் போலவே நீங்கள் உங்கள் வசம் உள்ள அனைத்து டிரைவ்களின் விவரத்தை நொடியில் அறிந்து கொள்ளலாம். வலப்புறம் மேலே உள்ள கட்டத்தை கிளிக் செய்வது மூலம் நேரடியாக Add/Remove Programs சென்று அதில் உள்ளவைகளை நீக்கி பின் ஸ்கேன் டிக்ஸ் செய்து காலியிடங்களை பார்வையிடலாம்.
    அதிலேயே கீழே உள்ள ரீ-சைக்கிள் பின் கிளிக் செய்து அதில் உள்ள குப்பைகளை நீக்கலாம்.

    ஸ்கேன் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.

    Friday, June 8, 2012

    Home களஞ்சியம் இணையதளம் உருவாக்க About me ஆன்லைன் மூலம் டைப்ரைட்டிங் (Typewriting) எளிதாக கற்கலாம்.

    ஒன்லைன் மூலம் எளிதாக வீட்டில் இருந்தபடியே நாம் டைப்ரைட்டிங் வகுப்புக்கு செல்லாமலே டைப்ரைட்டிங் கற்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது. 

    கணினி பயன்படுத்தும் அனைவரும் விரும்பும் பொதுவான ஒன்று நாம் கணினியில் தட்டச்சு செய்யும் வேகம் அதிகரிக்க வேண்டும் என்பது தான். 

    டைப்ரைட்டிங் வகுப்புக்கு கூட செல்ல நேரம் இருக்காது இந்தநிலையில் நாம் ஆன்லைன் மூலம் டைப்ரைட்டிங் கற்கலாம் நமக்கு உதவத்தான் இந்தத்தளம் உள்ளது. 

    இணையதள முகவரி : http://www.keybr.com

    இந்தத் தளத்திற்கு சென்றவுடன் முகப்பிலேயே டைப்ரைட்டிங் கீபோர்டு தெரியும். இதில் நாம் தட்டச்சு செய்யும் வேகத்தை மட்டும் கொடுத்து விட்டு Type செய்ய தொடங்கலாம். ஒவ்வொரு எழுத்தாக மேலே கொடுக்க நாம் தட்டச்சு செய்ய வேண்டியது தான்.

    தினமும் சராசரியாக 1 மணி நேரம் செலவு செய்தால் 40 நாட்களுக்குள் நாம் கணினியில் தட்டச்சு செய்வதில் வல்லவர்கள் ஆகலாம். முதலில் வேகம் குறைவாக தட்டச்சு செய்ய ஆரம்பித்து அதன் பின் நாட்கள் செல்ல செல்ல நாம் தட்டச்சு செய்யும் வேகத்தை கூட்டலாம். 

    தட்டச்சு பழக விரும்பும் அனைவருக்கும் இந்தச் செய்தி பயனுள்ளதாக இருக்கும்.

    Saturday, June 2, 2012

    இணைய Browserகளுக்கு கடவுச்சொல்(password) கொடுத்து பாதுகாக்க வேண்டுமா?

    இவ் Internet lock மென்பொருளின் மூலம் Firefox,internet Explorer,Opera,Chrome,Flockபோன்ற பிரவுசர்களுக்கு கடவுச்சொல்(Password) கொடுத்து மற்றவர்கள் உபயோகிக்காமல் பாதுகாக்கலாம்.
     இவ் Internetமென்பொருளை Install செய்வதற்கான படிமுறைகள் பின்வருமாறு.
    • கீழுள்ள லிங்கின் மூலம் மென்பொருளை பதிவிறக்கிக் கொள்ளவும்.
    • பின்னர் பதிவிறக்கிய போலடரினை பண்ணவும்.
    • அதற்குள் Internet lock.exeஎனும் பைலை Double clickசெய்து Installசெய்யவும். இறுதியில் இவ் மென்பொருளை வாங்கவா அல்லது Trial Virsionனை பயன்படுத்தப் போகின்றீர்களா எனக் கேட்டும்.
    • அதற்கு எமது Unzipசெய்த போல்டரினுள் இருக்கு Keygenனை திறந்து அதில் Generateபண்ணியுள்ள Serial Keyயினை Copyபண்ணி Pasteபண்ணவும்.
    • அதன் பின்னர் Registerஎன்பதை கொடுக்கவும்.
    சரி தற்போது இவ் மென்பொருள் செயற்படுவதற்கு தயார். மென்பொருளை திறந்து வரும் Windowவில் நாம் கடவுச் சொல் கொடுக்க வேண்டிய பிரவுசர்களை தெரிவு வெய்து எமது தேவைக்கெற்ப Optionகளை கொடுத்தால் சரி. நீங்கள் இவ் மென்பொருளை Installசெய்யும் போது ஓர் admin password கொடுக்கச் சொல்லி கேட்டும். நீங்கள் கொடுத்த admin passwordனை நீங்கள் கொடுத்தால் தான் இவ் மென்பொருளிற்குள் நீங்கள் உள் நுளையலாம்.

    Blogger Tips and TricksLatest Tips For BloggersBlogger Tricks

    சொயற்படுத்துங்கள்

    Blog Archive

    Total Pageviews