தகவல் தொழில்நுட்ப முதல் தமிழ் வலைத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

Monday, October 29, 2012

Tமொபைல் தொழில்நுட்பம்









கைப்பேசியின் (Mobile Phone) முன்னெப்போதும் இல்லாத இன்று விரிவடைந்து இருக்கின்றது. காலத்துக்கு ஏற்ப மாறிக்கொண்டிருக்கும் செல்போன் தொழில்நுட்பத்தை தலைமுறை (Generation)என்று அழைக்கப்படுகின்றது.

முதல் தலைமுறைக் கைப்பேசிகள் 1980களின் துவக்கத்தில் ஆரம்பமாகின. இதில் அனலொக் (Analog) சமிக்ஞைகள் பயன் படுத்தப்பட்டன.

இரண்டாம் தலைமுறைக் கைப்பேசிகள் டிஜிட்டலுக்குத் (Digital) தாவியது. இரண்டாம் தலைமுறைக் கைப்பேசிகளில் தான் இன்று நாம் பயன்படுத்தும் ஜி .எஸ்.எம். (GSM) அறிமுகப்படுத்தப்பட்டது. 1982களில் அறிமுகமான இது Global System for Mobile Communications என்பதன் சுருக்கமாகும். எஸ்.எம்.எஸ் வளர்த்ததும், மலிவானதும் இந்தத் தலைமுறையில் தான்.

      மூன்றாம் தலைமுறைக் கைப்பேசிகள் ஐப்பானில் 2001 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டன. இது W-CDMA தொழில் நுட்பத்தில் இயங்குகின்றது. மூன்றாம் தலைமுறைக் கைப்பேசிகள் IMI2000எனும் வகையின் கீழ் 3GPP மற்றும் 3GPP2 எனும் புதிய தொழில் நுட்ப அடிப்படையில் இயங்குகின்றன. பேசிக் கொண்டே தகவல் அனுப்புவது இதில் ஸ்பெஷல் அம்சம்.

நான்காம் தலைமுறைக் கைப்பேசிகள் LTE நுட்பத்தின் அடிப்படையிலானவை. 2009 ஆம் ஆண்டின் கடைசிப் பகுதியில் இந்தத் தொழில் நுட்பத்துக்கான ஆரம்ப வேலைகள் ஆரம்பமாகின.
 

Monday, October 22, 2012

கணினியிலிருந்து எமது தடயங்களை அழிப்பது எப்படி?









இன்றைய கணினி மயமான உலகிலே நாம் எமது கணினியில் மட்டுமல்ல, வேறொருவரின் கணினியிலோ அல்லது பொதுக் கணினியிலோ பணி செய்ய வேண்டிய சில சந்தர்ப்பங்கள் ஏற்படலாம். இவ்வாறு நாம் பயன்படுத்தும் போது மின்னஞ்சல் அனுப்புதல், Credit card மூலம் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுவது போன்ற பல தனிப்பட்ட, இரகசிய வேலைகளை செய்ய வேண்டி யிருக்கும். இவ்வாறு நாம் பாவித்து முடித்த பின்னர் இக்கணினியைப் பாவிப்பவர்கள் எமது தனிப்பட்ட விபரங்களை அறிய வாய்ப்பு உள்ளது.
இதற்காக I.Evidence finder போன்ற பல Softwareகள் உள்ளன. நாம் cache, history, cookies, போன்றவற்றை அழித்தாலும்கூட எமது கடவுச்சொற்கள், chat history, முக்கிய தரவுகள் திருடுபோக வாய்ப்புள்ளது. இப்பிரச்சனைக்குத் தீர்வாக எமது தடயங்களை அழிக்கCleanAfterMe எனும் இலவச மென்பொருள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

இது ஒரு மிகச்சிறிய மென்பொருள், பயன்படுத்துவதும் சுலபமானது. இது ஒரு portable Software என்பதால் கணினியில் நிறுவவேண்டிய அவசியமில்லை. Pendriveஇல் எடுத்துச் சென்று பயன்படுத்தமுடியும். 

இதனைத் தரவிறக்கி cleanafterme.exe என்ற fileஐ run செய்யவும்.


பின்னர் நீக்கவேண்டிய விபரங்களை திரையில் தேர்வு செய்து clean selected items என்றbutton ஐ click செய்வதன் மூலம் உங்கள் தடயங்களை அழிக்கலாம்.

Advanced option இற்குச் சென்று Fill the file with zero bytes, and then deleteஎன்பதற்கு மாற்றி அழிப்பதன் மூலம் எந்தவொரு Recovery softwareஐக் கொண்டும் மறுபடியும் மீட்டெடுக்க முடியாது என்பது இதன் சிறப்பம்சம் ஆகும்.

Friday, October 19, 2012

உபுந்து படிக்கலாம் வாங்க – இலவச மின்புத்தகம்

லினிக்ஸ் என்ற சொல்லே ஏதோ கணினியில் கரைகண்டவர்களுக்கு மட்டும்தான் என்ற நினைப்பை பெருமளவில் மாற்றி உதவியது உபுந்து லினிக்ஸ் வெளியீடு. அதேபோல நீண்டகாலமாக வின்டோஸை நம்பி மட்டுமே கணினிகளை வெளியிட்டு வந்த HP, Dell நிறுவனங்களும் உபுந்துவுடன் கணினிகளை வெளியிட ஆரம்பித்தது. நோட்புக் கணினிகளுக்கு சிறந்தது உபுந்துதான் என்று பலரும் கருதுமளவிற்கு சிறப்பான வசதிகளுடன் தன்னை காலத்துக்குகாலம் மேம்படுத்தி இலவசமான சிறந்த இயங்குளமாக உபுந்து வளர்ந்து வருகிறது.
நீங்கள் உபுந்துவுக்கு மாற விரும்பினால் அல்லது உபுந்து பயன்படுத்துபவராக இருந்தால், உங்களுக்கு இந்த “Ubuntu pocket guide and reference” என்கின்ற இந்த புத்தகம் பயனுள்ளதாக இருக்கும். இதன் அச்சடிக்கப்ட்ட பிரதி 10 அமெரிக்க டொலர்களாக விற்பனை செய்யப்பட்டாலும் மின்புத்தகம் இலவசமானது.
இங்கே சென்று தரவிறக்கி கற்றுக்கொள்ளுங்கள்.

Monday, October 15, 2012

FORMAT செய்வதற்க்கு Driver CD தடையாய் இருக்கின்றதா?





நாம் பல காரணங்களுக்காக எமது வன்தட்டைFormat செய்ய வேண்டியுள்ளது. உதாரணமாக கணினியின் வேகம் குறைந்து விட்டது, System file கோளாறு, வைரஸ் அல்லது மால்வேர் தாக்குதல், வன்தட்டின் பார்ட்டிஷன் அளவை மாற்ற போன்ற பல காரணங்கள்.

ஆனால் அப்படி முடிவு செய்துவிட்ட பின்னர், அந்த முடிவிலிருந்து பின் வாங்குவதற்கு முக்கியமாக ஒரே ஒரு காரணம் மட்டுமே இருக்கக்கூடும். அது Devise driver CD கையில் இல்லையே? என்பதாக இருக்கலாம். காரணம் மிக சரியானதே. ஏனெனில் புதியதாக நீங்கள் இயங்குதளத்தை(OS) நிறுவிய பிறகு, உங்கள் Graphic card, Sound card, Web cam, Printer, Scanner போன்ற சாதனங்கள் முறையாக வேலை செய்வதற்கு, அந்தந்த கருவிகளுக்கான பிரத்தியேகமான Devise driver உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும். 

ஆனால் அந்த Devise driver CD உங்களிடம் இல்லாத பொழுது, உங்கள் கணினியில் புதியதாக இயங்குதளத்தை நிறுவ அல்லது ஒரே Configuration கொண்ட உங்கள் நண்பரின் கணினிக்கு உங்கள் கணினியில் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள Devise driverஐ Copy எடுத்து கொடுக்க, மிகவும் பயனுள்ள Driver backup மற்றும் Restore மென்பொருள் Double driverஐப் பயன் படுத்தலாம்.

    இதிலுள்ள Scan button ஐ சொடுக்கியவுடன், உங்கள் கணினியில் நிறுவப்பட்டுள்ள அனைத்து டிவைஸ் ட்ரைவர்களும் பட்டியலிடப்படும். 

இந்த பட்டியலிலிருந்து நமக்கு தேவையான டிவைஸ் ட்ரைவர்களையோ, அல்லது எல்லாவற்றையுமோ தேர்வு செய்து Backup button ஐ அழுத்தி, பிறகு திறக்கும் Backup Drivers வசனப் பெட்டியில், இதனை எங்கு சேமிக்க வேண்டும் (பென் ட்ரைவிலும்) என்பதை கொடுத்து விட்டால் போதும். 

நீங்கள் தேர்வு செய்திருந்த அனைத்து Driverகளும் அதற்கான குறிப்பிட்ட Folderகளில்Backup ஆகியிருப்பது தனிச் சிறப்பு. 

இயங்குதளத்தை மறுபடியும் நிறுவிய பிறகு இந்த Backup Folderக்குச் சென்று இங்குள்ளDouble driver அப்ளிகேஷனை ரன் செய்து ட்ரைவர்களை மறுபடியும் எளிதாக Restoreசெய்து கொள்ளலாம். 

Monday, October 8, 2012

லிங்க்ட்இன் (Linkedin)



  சமூக வலையமைப்புக்களில் லிங்க்ட்இன் கொஞ்சம் வித்தியாசமானது. மற்றவலையமைப்புக்கள் எல்லாம் நட்பு, கலாட்டா என சுவாரஸ்யமாய் இருக்க இந்தத் தளம் கொஞ்சம் பிஸ்னெஸ் தேவைகளை முன்னிறுத்தி இயங்குகின்றது. ரொய்ட் ஹாஃப்மேன் என்பவர்தான் இந்த தளத்தை உருவாக்கியவர். 

இதில் இணைகின்ற நபர்கள் தங்களுக்குத் தெரிந்த நம்பிக்கைக்குரிய, வேலையில் கெட்டிக்காரர்களை இணைத்துக் கொள்கின்றார்கள். படிப்பு, அனுபவம், தகுதி போன்ற விஷயங்கள் இங்கே கவனிக்கப்படுகின்றது.

இதிலுள்ள பயன் பாட்டாளர்கள் பிரபல நிறுவனங்களுடனும் இணைய இணைப்பு உருவாக்கிக் கொள்ள முடியும். இதனால் அந்த நிறுவனங்களில் ஆட்கள் தேவைப்படும் போதேல்லாம் தகவல் நமது தளத்திலும் வந்து விழுகின்றது.அமெரிக்காவில் மிகப்பிரபல்யமாக இருக்கும் இந்த வலை அமைப்பிலுள்ள திறமைசாலிகளுக்கு ஏகப்பட்ட வேலை வாய்ப்புக்கள் தானாகவே வந்து சேர்கின்றன. சுமார் 20 மில்லியன் லாபக் கணக்குடனும் 75 மில்லியன் உறுப்பினர்களுடனும் வலுவாகப் பயணிக்கின்றது லிங்க்ட்இன்.

http://www.linkedin.com/ என்ற லிங்கினூடாக இந்த தளம் சென்று ஓர் உறுப்பினராகுங்கள்

Wednesday, October 3, 2012

அழிந்த file களை மீட்க உதவும் Top 10 மென்பொருட்கள்

  நாம் தவறுதலாக விடும் சின்ன சின்ன பிழைகளால் எமது கணனியில் உள்ள சில முக்கியமான file அழித்து விடுகிறோம். அல்லது வைரஸ் தாக்குதல்களால் அவற்றை இழக்கவேண்டி ஏற்படலாம். அது சிலவேளை முக்கியமான files ஆகவும் இருக்கும். இவற்றை மீளப்பெற நாங்கள் உடனடியாக பயன்படுத்தும் முறைதான் System Restore. ஆனால் அது எவளவு தூரம் வேலை செய்யும் என சொல்ல முடியாது

 அது எவளவு தூரம் வேலை செய்யும் என சொல்ல முடியாது. சில வேளை system restore இன் பின்பு அழிந்த file ஐ நீங்க பார்க்கலாம். ஆனால் திறக்க முடியாது. நான் கிழே தந்த மென்பொருட்களின் சிறப்பு என்ன என்று சொன்னால் உங்கள் OS / Hard-disk ஐ முழுமையாக format செய்து புதிதாக OS பதிந்தாலும் பழைய files ஐ மீளப்பெறலாம். இந்த மென்பொருட்களை Full Version ஆக download செய்ய இந்த தளங்களை பயன்படுத்தவும்.
#1 . Digital rescue Premium
#2 . Advanced Disk Recovery
#3 . Recover my Files
#4 . Data Recovery Wizard
#5 . Total Recall
#6 . Handy Recovery
#7 . Windows Data Recovery
#8 . R-Studio
#9 . Quick recovery
#10 . Data recovery Pro

Monday, October 1, 2012

ஹெச்.ரி.எம்.எல்









                        ஹைப்பர் ரெக்ஸ் மார்க்கப் லாங்குவேஜ் (Hyper Text Markup Language) என்பதன் சுருக்கம் தான் HTML. எண் 5 என்பது அதன் ஐந்தாவது முக்கிய பதிப்பு என்பதைக் குறிக்கின்றது. இணையத்தளத்தில் பக்கங்களை வடிவமைக்கப்படும் கணனி மொழிதான் ஹெச்.ரி .எம்.எல்.

Tim Berners Lee என்பவர் தான் இந்த மொழியை வடிவமைத்தவர். இவர் உருவாக்கிய ENQUIRE எனும் கணனிமொழிதான் இதன் அடிப்படை. அது பின்னர் ஹெச்.ரி.எம்.எல். ஆனது. அதன் ஐந்தாம் முக்கியமான பதிப்பு இப்போது உருவாகன்கப்பட்டு வருகின்றது. பழைய பதிப்புக்களில் இல்லாத சில அம்சங்களை இதில் சேர்த்திருக்கின்றார்கள் என்பதுதான் இதன் சிறப்பைக் கூட்டுகின்றது.

குறிப்பாக வீடியோக்களை இயக்குவது, drag and drop எனப்படும் இணையப்பக்கத்தில் உள்ளவற்றை மாற்றி வடிவமைக்கும் வசதி போன்றவற்றை இந்தப் பதிப்புக் கொண்டிருக்கின்றது. இதனால் இனிமேல் இணையப்பக்கத்தை இணைக்கும் போது வேறு எந்த கூடுதல் மென்பொருட்களின் (add ens) தேவையும் இல்லாமல் இந்த ஹெச்.ரி .எம்.எல். எல்லாவற்றையும் காட்டிவிடும் என்பது சிறப்பம்சம்.


             WHATWG எனப்படும் Web Hypertext Application Technology இதில் பயன்படுத்தப்படுகின்றது. 2011 ஆம் ஆண்டு இது M W3C (World Wide Web Consertium) இன் ஒப்புதலுடன் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. W3Cதான் உலகலாவிய இணையப்பக்கங்கள், கட்டமைப்பு, சேவைகள், ஹெச்.டி.எம்.எல். போன்றவற்றுக்கான விதிமுறைகளையும் தர நிலைகளையும் நிர்ணயம் செய்கின்றது. இதை ஆரம்பித்தவர் ஹெச்.ரி.எம்.எல்.ஐ உருவாக்கிய Tim Berners Lee என்பவர்தான். இந்தப் பதிப்பு ஹெச்.ரி.எம்.எல்.  வரலாற்றின் மைல் கல்லாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Blogger Tips and TricksLatest Tips For BloggersBlogger Tricks

சொயற்படுத்துங்கள்

Blog Archive

Total Pageviews