தகவல் தொழில்நுட்ப முதல் தமிழ் வலைத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

Wednesday, July 31, 2013

கணினியின் அடிப்படை-3

கணினியின் நன்மைகளும் தீமைகளும் (சிறப்பு இயல்புகள்)
மிக விரைவானது (Speed) 
பல மில்லியன் கணக்கான கணக்குகளை ஒரு செக்கனில் தீர்க்கும் திறன் கொண்டது. இதனது இவ்வேகம் கேட்ஸ்(Hertz - Hz) எனும் அலகில் அளக்கப்படுகிறது. அத்தோடு இவ்வேகம் கணினிக்குக் கணினி மாறுபடுகின்றது.

மிகவும் திருத்தமானது (Accuracy)
இலத்திரனியல் சுற்றுக்கள் பொறியியல் பகுதிகளைப்போன்று இலகு வில் பழுதடைவதில்லை. அத்தோடு, வழங்கப்படும் அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப மிகவும் திருத்தமானவையாகவும் நம்பகமானவையாகவும் வெளியீடுகளை தரும்.
 
நினைவகம் (Storage)
இதில் அதிகளவிலான தரவுகளைச் சேமித்துவைப்பதுடன் உரிய நேரத்தில் அவற்றை மிகவிரைவாகவும் எடுக்கக்கூடியதாகவுள்ளது.
 
உணர்ச்சியின்மை (No Feeling)
கணினியானது ஒரு வகை இயந்திரமாகும். இதற்கு மனிதர்களை போல் தனிமை, களைப்பு, வெறுமை போன்ற உணர்வுகள் இல்லை எனவே கவலையீனமாகவோ இல்லது களைப்பினாலோ மனிதர்கள் விடும் தவறுகளை கணினி ஏற்படுத்தாது.
 
 நுண்மதியின்மை (No Intelligent) 
அறிவுறுத்தல்கள் இல்லாமல் கணினி எதனையும் செய்யாது. கணினியானது மனிதனின் நுண்மதியினால் எழுதப்படும் நிகழ்ச்சித்திட்டத்தின்படியே செயற்படுகின்றது. எனவே, நிகழ்ச்சித் திட்டங்கள் பிழையாக இருப்பின் எப்போதும் பிழையான பெறுபேறுகளையே கணினி தரும்.
தவறான தரவுகளைக் கொடுத்தால் தவறான பெறுபேறுகளே கிடைக்கும். மனிதனின் முக்கியமான திறன்களான சுயமாகச் சிந்திக்கும் ஆற்றல், காரணங்களைக் கண்டறிதல், சுயமாக உருவாக்கல்,போன்றவற்றைக் கணினி கொண்டிருக்கமாட்டாது.


கணினியின் கட்டமைப்பு (Structure of computer)
கணினியின் அடிப்படைக் கட்டமைப்பு (Basic Structure of computer)


எந்தவொரு கணினியும் மேல் உள்ள படம் காட்டுவதனைப்போல், முக்கியமான மூன்று அடிப்படைக் கட்டமைப்புக்களைக் கொண்டிருக்கும். 
கணினியின் இன் தொழிற்பாட்டுக் கட்டமைப்பு (computer Blog Diagram)  

 
கணினியாது பொதுவாக உள்ளீட்டுச் சாதனங்கள் (Input Device), வெளியீட்டுச் சாதனங்கள் (output Device),தேக்கச்சாதனங்கள் (Storage Device) மைய செயற்பாட்டுத் தொகுதி (Central Processing Unit) போன்ற 4 பகுதிகளை உள்ளடக்கியதாக காணப்படும்.

Saturday, July 27, 2013

கணினியின் அடிப்படை-4

உள்ளீட்டுச் சாதனங்கள்
(Input Device)

தரவுகளையும் நிகழ்ச்சித்திட்ட அறிவுறுத்தல்களையும் கணினியினுள் உள்ளீடு செய்வதற்க்கு பயன்படும் சாதனங்கள் யாவும் உள்ளீட்டுச் சாதனங்கள் என அழைக்கப் படுகின்றன.
சில உள்ளீட்டுச்சாதனங்கள் :
1. விசைப்பலகை(Keyboard)
2. சுட்டி(Mouse)
3. நுணுக்குப்பன்னி(Microphone)
4. வருடி(Scanner)
5. ஒளிப்பேனை(Light pen)
6. பட்டைக்குறி வாசிப்பான்(Bar code reader)
7. இயக்கப்பிடி(Joystick)
8. இலக்கமுறைக் கமறா(Digital camera)
9. வலைக் கமரா(Web camera) 

வெளியீட்டுச்சாதனங்கள்
(Output device)

கணினியினால் செயல்லடுத்தப்பட்ட(Processing) பெறுபேறுகளைப் பாவனையாளருக்கு வழங்கப் பயன்படும் சாதனங்கள் யாவும் வெளியீட்டுச் சாதனங்கள் என அழைக்கப்படுகின்றன.
சில வெளியீட்டுச்சாதனங்கள் :
1. Monitor
2. Printer
3. Speaker
4. Projector 

மையச்செயற்பாட்டுத் தொகுதி
(Micro processor)

கணினியின் மூளை அல்லது இதயம் என இது அழைக்கப்படுகின்றது. இதன்மூலம் கணித(Arithmetic), மற்றும் தர்க்கரீதியான(Logical) தீர்வுகளை எடுப்பதுடன், கணினியின் சகல பாகங்களையும் கட்டுப்படுத்துகின்றது(Control).
 நமது பாவனையில் உள்ள சில Micro processor  :
1. Intel
2. AMD



கணினியின் நினைவகம்
(Computer Memory)
தரவுகள், தகவல்கள், அறிவுறுத்தல்கள் போன்றவற்றை சேமித்துவைக்கப் பயன்படும் கணினியின் பகுதி நினைவகம் (Memory) என அழைக்கப்படுகின்றது. கணினிகள் இலத்திரனியல் முறையில் தரவுகளைச் சேமிக்கின்றன. இது இருவகைப்படும்
1.  பிரதான நினைவகம். (Main Memory/Internal Storage)
  •  பதுக்கு நினைவகம் - Cash Memory
  • தற்போக்கு அணுகு நினைவகம் - Random Access Memory(RAM)
    வாசிப்பதற்கும் பதிவதற்குமான நினைவகமாகும். இங்கு கணினியானது Off ஆகும்போது இந்த நினைவகத்தில் பதிந்துவைத்திருந்தவை யாவும் அழிந்துவிடும். இதனால் இதனை அழிதகு நினைவகம்(Volatile Memory) எனவும் அழைப்பர்.
  • வாசிப்பு மட்டும் நினைவகம் - Read Only Memory(ROM)
    இந்நினைவகத்தில் பதிந்துள்ளவற்றை வாசிக்கமட்டுமே முடியும். இதிலுள்ளவற்றை அழிக்கவோ அல்லது மாற்றம் செய்யவோ முடியாது. இதனால் இதனை அழிதகா நினைவகம் (non Volatile Memory)எனவும் அழைப்பர்.
2. துனை நினைவகம்.(Secondary Storage/External Storage/Baking Storage )
  • வன்தட்டு (Hard Disk)
  • இறுவெட்டு (Compact Disk - CD)
  • பளிச்சீட்டு நினைவகம் (Flash Memory)
  • Digital Versatile Disk - DVD

Wednesday, July 24, 2013

கணினியின் அடிப்படை- 5

தகவல் ​தொடர்பாடல் தொழில் நுட்பம் (Information and Communication Technology - IT )
கணினிகளுடன் தகவல்களை ஒழுங்கமைப்பு செய்தல் அதாவது கணினி,இலத்திரனியல்,தொலைத்தொடர்பு போன்ற தொழில் நுட்பங்களை பயன்படுத்தி தகவல்களை ஒரு செய்முறைக்கு உட்படுத்தி ஒழுங்கமைப்பு செய்தல், பரிமாற்றம் செய்தல் போன்ற செயற்பாடுகளை உள்ளடக்கியது தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம் எனப்படும்.

கணினிக்கு உரித்தான இயல்புகள்
  1. வேகம் (Speed)
  2. திருத்தம் (Accuracy)
  3. நம்பக தன்மை (Reliability)
  4. சேமித்தல் தன்மை (Storage)
  5. குறைச்த கட்டனம் (Reduced Cost )
  6. இணையம் (Internet)

தரவு (Data)
ஒழுங்கமைப்பு செய்யக் கூடியதும் சேமிக்கக் கூடியதுமான தன்மையைக் கொண்ட எழுத்துக்கள், சத்தங்கள் ,குறியிடுகள் என்பன தரவாகும்.

இயல்புகள் :
  1. ஒழுங்கமைப்பு செய்யக் கூடிய தன்மையைக் கொண்டிருத்தல் வேண்டும்.
  2. செய்முறைக்கு உட்படுத்தி (Process) தகவலாக (Information) மாற்றக் கூடியதாக இருத்தல் வேண்டும்.
தகவல் (Information)
தரவுகளை (Data) ஒரு செய்முறைக்கு உட்படுத்தி அதிலிருந்து பெற்றுக்கொள்ளப்படுவது தகவல்லாகும்.

இயல்புகள்:
  1. கருத்துள்ளதாக இருத்தல் வேண்டும்.
  2. பெறுமதி மிக்கதாக இருத்தல் வேண்டும்.
  3. முழுமையாக இருத்தல் வேண்டும்.
  4. பொருத்தமான நேரத்தில் பெற்றுக்கொண்டதாக இருத்தல் வேண்டும்.

தகவல் தொடர்பாடல் தொழில் நுட்ப உபகரணம் (ICT Tools)


தகவல் தொடர்பாடல் தொழில் நுட்ப செயல்பாடுகளுக்கு பயன்படும் சாதனங்கள் அனைத்தும் ICT toolsஎனப்படும்.
  1. கணினியும் அதனுடன் பயன்படுத்தப்படும் உபகரணங்களும்
    Eg: Microphone, scanner, digital camera, web camera....  
  2. தொடர்பாடல் உபகரணம்.
    Eg: Fax, Phone, Modem....
கணினியின் வரலாறு (History of Computer)
1. மனிதனால் பயன்படுத்தப்பட்ட முதலாவது கணித்தல் உபகரணம் அபாக்கஸ் (Abacus)ஆகும்.
2. முதலாவது கணக்கிடும் இயந்திரத்தினை பிளேயஸ் பஸ்கால் (Blaise Pascal) என்பவர் 1642 இல் கண்டுபிடித்தார்.
3. 1882 இல் சால்ஸ் பாபேஜ் (Charls Babage) என்பவர் நவீன கணினியின் அடிப்படை தத்துவத்தை உருவாக்கினார் இவரே கணினியின் தந்தை எனவும் அழைக்கப்படுகிறார்.
4. 1947 இல் முதலாவது இலத்திரனியல் கணினியான ENIAC (Electronic Numerical Integrated and Computer ) உருவாக்கப்பட்டது.
          a. Vacuum taupe பயன்படுத்தப்பட்டது.
          b. வேகம் 5000 Calculation/second
          c. 1500 சதுர அடி இடம் தேவைப்பட்டது.

5. முதலாவது வர்தக ரீதியான கணினி 1951 இல் உருவாக்கப்பட்டது இதன் பெயர் UNIVAC (Universal Automatic Computer ) இதில் Storage Memory பயன்படுத்தப்பட்டது.


Note : முதலாம் தலை முறைக்கணினிகளில் (Fist generation Computer) பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் வெற்றுக்குழாய் (Vacuum taupe) தொழில் நுட்பம் ஆகும்.


6. 1956 இன் பிற்பகுதியில் Transistor  தொழில் நுட்பத்திலான இலத்திரனியல் கணினிகள் பயன்படுத்தப்பட்டது. பொதுவாக இவற்றில் Punch card, Magnetic storage device என்பனவும் பயன் படுத்தப்பட்டதன. இவை இரண்டாம் தலை முறைக்கணினிகள் ஆகும்.


8. 1964 இன் பிற்பகுதியில் IC (Integrated Circuits  ) இனைப்பயன் படுத்தி இலத்திரனியல் கணினிகள் உருவாக்கப்பட்டது. இதில் Key board, Moniter, Storage device, Operating system (Command Line Interface - CLI)  என்பன பயன்படுத்தப்பட்டது. இவை 3ம் தலை முறைக்கணினிகள் ஆகும்.


8. 1971 இன் பிற்பகுதியில் Micro processor எனப்படும் Silicon Chip களைப் பயன்படுத்தி தற்பொழுது பாவனையில் உள்ள நவீன கணினிகள் உருவாக்கம் பெற்றன. பல்லாயிரக்கணக்கான IC க்களை சுருக்கி ஒருMicro chip இல் உள்ளடக்க தக்கதாக இப்புதிய தொழில் நுட்பம் உருவாக்கப்பட்டது. இத்தொழில் நுட்பம் காரனமாக உருவத்தில் சிறிய வேகம் கூடிய கணினிகள் உருவாக்கம் பெற்றது. இது 4ம் தலைமுறைக்கணினியாகும்.


9.  fifth generation computer தற்பொழுதும் ஆய்வில் உள்ள Artificial Intelligent (AI) எனப்படும் தர்க்க ரீதியாக சிந்திக்க கூடியதும் மனித உத்தரவுக்கு கட்டுபடக்கூடியதுமான கணினிகளை உருவாக்குதல் ஆகும்.  

Saturday, July 20, 2013

கணினியின் அடிப்படை- 6

System unit

System unit என்பது கணினியின் power system, mother board, CPU chip, specialized chip, RAM, ROM, expansion boards ( sound card, VGA card, net work card ) , data bus என்பவற்றை உள்ளடக்கிய பகுதி.

Mother board கணினியில் காணப்படும் பிரதான circuit board இதுவாகும். இதில் கணினியின் சகல பாகங்களும் பொருத்தப்படும்.
Eg:- 
  • CPU chip
  • Hard disk
  • Floppy drive
  • CD / DVD ROM
  • RAM
  • Expansion board/card (VGA, sound card, net work card…)
  • Peripheral devices ( monitor, mouse, printer, scanner, …)

Mother board இல் பல sockets  காணப்படும் இதனை expansion slots  என அழைப்பர். இதில்Expansion board/card பொருத்தப்படும். Mother board  இன் மற்றுமொரு பிரதான தொழில் பாடு எல்லாexpansion card   க்கும் மின்சாரம் வழங்குதல் ஆகும்.
Expansion slots  க்கு உதாரணம்:
  • DIM slot – RAM
  • AGP slot – VGA card, PCI 16 slot – PCI express card
  • PCI slot – sound card,  network card, internal modem
  • floppy connecter – floppy
  • IDE connecter – hard disk( IDE hard disk / PATA hard disk )
  • SATA connecter – hard disk ( SATA hard disk)

Peripheral device :  கணினியின் main casing க்கு வெளியாக பொருத்தப்படும் கணினியின் சகல பாகங்களும் Peripheral device   எனப்படும். இதனை mother board  உடன் இணைக்கும் பகுதி port என அளைக்கப்படும்.
  • PS/2 mouse port
  • PS/2 key boar port
  • VGA port – monitor (15 துளைகளைக் கொண்டது)
  • Parallel port/ female port – Scanner, printer (25 துளைகளைக் கொண்டது)
  • serial port / male port/com port - old model mouse, External modem ( 9/25 pin களைக் கொண்டது)
  • USB port ( Universal Serial Bus ) – தற்பொழுது பாவனையில் உள்ள எல்லா External devices களும் பொருத்தக்கூடியவாறு 1997 ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட port இதுவாகும்.

Wednesday, July 17, 2013

கணினி வைரஸ்

குறிப்பிட்ட கணினி மென்பொருள் ஆனது கணினியின் செயல்பாட்டினை பாதிப்பதாகவோ அல்லது கணினியின் செயல்பாட்டில் தடங்கள் ஏற்படுத்துவதினை நோக்காக கொண்டிரிப்பின் அவ்வகையான மென்பொருட்கள் கணினி வைரஸ் எனப்படுகின்றது. இவை மனிதனாலேயே உருவாக்கப்படுகின்றன.
பண்புகள்:
  • இவை பொதுவாக தம்மைதாமே பிரதி செய்யக் கூடியவை.
  • எல்லா கணினி வைரஸ்களும் மனிதனாலேயே உருவாக்கப்படுகிறது.
  • இவை வன்தட்டில் (Hard disk)  உள்ள கோப்புக்களை (File) அழிக்கும் தன்மை உடையது.
  • நினைவகத்தினை பாதிப்படய செய்யக்கூடியது.
  • பொதுவாக இவை கணினி வலைப்பின்னல் ஊடாகவே பதிவிறக்கம் செய்யப்படுகிறது.
கணினி வைரஸ் பரவும் முறைகள்:
  • இலத்திரனியல் அஞ்சல் (e-mail)  மூலம்.
  • இணையத்தின் ஊடாக தகவல்களை பதிவிறக்கம்(down load) செய்யும்போது.
  • பாதுகாப்பற்ற துனை நினைவக(secondary storage)பாவனையின் போது. இவ்வகை நினைவகமாக CD, DVD, flash memory, floppy, … போன்றவற்றினை கூறலாம்.


பாதுகாத்தல்:
  • வைரஸ் எதிர்ப்பு நிகழ்ச்சி நிரல்களை (Anti virus )  நிறுவுதல்.
  • வைரஸ் எதிர்ப்பு நிகழ்ச்சி நிரல்களை குறிப்பிட்ட காள இடைவெளிகளில் புதுப்பித்தல் (Update)
  • துனை நினைவங்களை virus scan  செய்த பின் பயன்படுத்துதல்.
  • பாதுகாப்பற்ற துனை நினைவங்களை பயன்படுத்துதலை தவிர்தல்.
  • பதிவிறக்கம் செய்யப்பட்ட கோப்புக்களை அல்லது தரவுகளை virus scan செய்தல்.
  • கணினியை குறிப்பிட்ட கால இடைவெளிகளில் virus scan செய்தல்.

Antivirus:
virus program  கள் கணினியில் பதிவிறக்கம் செய்யப்படுவதினை தடுக்கவும் ஏற்கனவே பதிவிறக்கம் செய்யப்பட்ட virus program  களை கண்டுபிடித்து அழிப்பதுக்காகவும் உருவாக்கப்பட்ட கணினி மென்பொருட்கள் வைரஸ் எதிர்ப்பு மென்பொருட்கள் ( Anti virus software) எனப்படும்.
Eg:
  • AVG anti virus
  •  MacAfee anti virus
  • Norton  anti virus
  • Avast
  • Hasper sky

Firewall :
கணினியை தாக்க இரு வகை விரோதிகள் உள்ளனர்
  • virus
  • hackers

hackers

கணினி பயனாலர்கள் பொதுவாக தமது கணினியை இணையத்தின் ஊடாக பயன்படுத்தும் பொழுது அவர்களை அறியாமலே அவர்களது கணினியில் உள்ள தரவுகளை, தகவல்களை, கோப்புக்களை கண்கானித்தல், திருடுதல், மாற்றம் செய்தல் Hacking எனப்படும்.இதனை  செய்பவர்கள் குறும்பர் (hackers) என அழைக்கப்படுவர். இதனை தடுப்பதுக்கு பயன் படும் மென்பொருட்கள் Firewall software   அழைக்கப்படும்.
Firewall software  க்கு உதாரணம்:
  • Norton internet security
  • MacAfee internet security
  • Avast internet security
  • Zone alarm security suit
  • Norman internet control

வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட கணினியின் இயல்புகள்

  • Program கணினியில் load ஆவதுக்கு அதிக நேரம் எடுக்கும்.
  • Hard disk  உள்ள free space  இன் அளவு வேகமாக குறைவடையும்.
  • floppy drive, pen drive  என்பன பாதுகாப்பான முறையில் remove  பண்ன முடியாமல் இருத்தல்.
  • தேவையற்ற file , folder  இனை அழிக்கும்போது அவை மீண்டும் தோன்றுதல்.
  •  கணினியில் தேவையற்ற out put  கள் தோன்றுதல். (message , sound )


பொதுவான கணினி வைரஸ்கள்

Boot sector virus:  
hard disk  உள்ள boot sector  இனை இவை பாதிக்கும்.
File virus:
application package  உள்ள file களை இவை பாதிப்பதுடன் அதனை செயல்படுத்தும் பொழுது ஏனைய பகுதிக்கும்பரவும்.
Macro virus:
இது பொதுவாக micro soft package  உள்ள கோப்புக்களை பாதிக்கும்.
Worm virus:
இவை தம்மை தாமேபெரிக்கி கொள்ளக்கூடிய மிக அபாய கரமான வைரஸ்கள் ஆகும்.
Trojan horse:
virus program  இனை ஒவ்வோரு பகுதிக்கும் எடுத்துச்செல்லக் கூடியது. Credit card number, pass word போன்றவற்றை இதனை உருவாக்கியவர் mail க்கு அனுப்பி வைக்ககூடியது. பயனுள்ள மென்பொருள் போல் காணப்பட்டாலும் இது ஒரு Hacking மென்பொருள் ஆகும். இவை பொதுவாக கணினிக்கு தீமை பயப்பது இல்லை.

Saturday, July 13, 2013

இணையம்

இணையமென்றால் என்ன?  
தகவல் பரிமாற்றத்திற்காக வலையமைக்கப்பட்ட அல்லது ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட கணினிகளைக்  கொண்ட பரந்த ஒரு முறைமையே இணையமாகும். இது வலையமைப்புகளின் ஒரு வலையமைப்பாகும். இது பங்கிடப்பட்ட உலகலாவிய வளமாக காணப்படுதுடன் எவருக்கும் சொந்தமானதாகவோ மற்றும் எவராலும் ஒழுங்கமைக்கப்படுவதோ இல்லை. அதாவது உலகலாவிய ரீதியிலான கணினி வலையமைப்பு.

இணைய வசதியைப் பெற்றுக்கொள்வதற்கு தேவையானவை எவை?  
  • கணினி
  • Modem / Network card / Router
  • இணையச் சேவை வழங்குனர் (ISP - Internet Service Provider) ரின் இணைய சேவை.
    Eg: Srilankan telicome,  Dialog 
  • இணைய உலாவி (Web Browser).
    Eg: Microsoft internet explore, Mozilla firfox, Safari, Netscape Navicator. 
  • தொலைபேசி இணைப்பு 

நாங்கள் ஏன் இணைய வசதியினைப் பெற்றுக்கொள்ள வேண்டும்? 
  • அறிவினைப் பெற்றுக்கொள்ள
  • தகவல்களைப் பெற்றுக்கொள்ள
  • ஏனையோருடன் தொடர்புக் கொள்வதற்கு
  • பொழுதுபோக்கு அம்சங்களுக்கு
  • பொருட்கள் மற்றும் சேவைகளின் கொள்வனவு, விற்பனைகளில் ஈடுபடுவதற்கு
     


கணினியானது இணையப் பக்கங்களைத் தருகின்றது. ஓவ்வொறு இணைய Server  க்கும் ஒவ்வொறு IPமுகவரியும் மற்றும் ஒரு Domain    பெயரும் உண்டு. உதாரணமாக உங்களின் உலாவியில்http://www.pcwebopedia.com/index.html என்ற URL(“Uniform Resource Locator” )    ஐ Typeசெய்வீர்களாயின் அது உங்களது வேண்டுகோளை pcwebopedia.com என்ற Domain பெயரையுடையServer   க்கு அனுப்பும். பின்னர் அந்த Server ஆனது index.html  என்ற பக்கத்தினை பெற்று அதனை உங்களது உலாவிக்கு அனுப்பும். 
World Wide Web (WWW)  இல் உள்ள ஒரு பக்கம் அல்லது இடம் (Site)  ஒவ்வொறு இணையப் பக்கமும்home page  என்ற ஒரு பக்கத்தினை கொண்டிருக்கும். பயனாளர்கள் ஏதாயினும் ஒரு பக்கத்தினுள் நுழையும் போது இதுவே முதலாவது ஆவணமாக தோன்றும். world wide  web   இல் உள்ள பக்கங்களானது ஒன்றுக்கு மேற்பட்ட ஆவணங்களையும் மற்றும் கோப்புகளையும் கொண்டிருக்கலாம். world wide  web   இல் உள்ள ஒவ்வொறு பக்கமும் ஒரு தனி நபர், கம்பனி அல்லது நிறுவனங்களினால் நிர்வகிக்கப்படுவதுடன் அவர்களுக்கு சொந்தமானதாகவும் காணப்படும். 

world wide  web  (WWW)   
WWW என அழைக்கப்படும் world wide  web ஆனது உலகலாவிய ரீதியில் காணப்படும் Server களில் பதிவு செய்யப்பட்டிருக்கும் ஏராளமான ஆவணங்களின் தொகுப்புகளை உள்ளடக்கு கின்றது. நீங்கள் தேடுபொறியில் ஒரு தேடுதலை மேற்கொள்ளுகின்றீர்கள் என்பது யாதெனில், ஆவணங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ள இணையப்பக்கத்திற்குச் சென்று அங்கிருந்து, வேண்டுகோளின்படி தகவல்களைப்பெற்று, உங்களது கணினித் திரையில் அதனைக் காட்சிப்படுத்தும்படி உங்கள் கணினியின் உலாவியை வழிநடத்துகின்றீர்கள் என்பதேயாகும். 

இணைய பக்கம் (web page) 
HTML என்ற மொழியில் எழுதப்பட்டதும் இணையத்தின் மூலம் இயங்கச்செய்யக்கூடியதுமான ஒரு ஆவணமே இணையப்பக்கம் எனப்படும். ஒவ்வொறு இணையப்பக்கத்திற்கும் URL என அழைக்கப்படும் ஒரு தனியான முகவரி உண்டு. இணையப்பக்கங்களானது எழுத்துருக்கள் (text) உருவப்படங்கள் (graphics) வேறொரு இணையப்பக்கத்திற்குச் செல்லக் கூடிய இணைப்புக்கள் (hyperling) மற்றும் கோப்புகள் (file) போன்றவாறானவற்றை கொண்டிருக்க முடியும். 
IPமுகவரி என்றால் என்ன? 
இணையத்திலுள்ள ஒவ்வொறு கணினி இயந்திரத்தினையும் இனங்கண்டுகொள்வதற்காக பயன்படுத்தப் படும் ஒரு தனியான இலக்கமே IP முகவரியாகும். அதாவது ஒரு கணினிக்கு ஒரு இலக்கம் மட்டுமே பயன்படுத்த முடியும் 
பொதுவாக IP முகவரியானது பின்வருமாறு காணப்படும். 
216.27.61.137 
இங்கு வழங்கப்படும் எண்கள் 0 - 255 வரையிலான எண்களினையே பயன்படுத்த முடியும். 
Domain name  
ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட IP முகவரிகளை இனங்கண்டுகொள்ளும் பெயரே Domain name ஆகும். குறித்தவொரு இணையத்தளத்தினை இனங்கண்டுக்கொள்ளும் Domain name ஆனது URL என அழைக்கப்படும் முகவரிகளில் பயன்படுத்தப்படுகின்றன. உதாரணமாக http://www.pcwebopedia.com/index.html என்ற URLஇல் pcwebopedia.com   என்பதே Domain பெயராகும்.ஒவ்வொரு Domain பெயரும் ஒரு பிற்சேர்க்கையை (Suffix)கொண்டிருக்கும். இது குறித்த ஒரு முகவரியானது எந்த மேல்மட்ட Domain க்கு(Top Level Domain) சொந்தமானது என்பதை இனங்கண்டுக்கொள்ள உதவுகின்றது.
Top Level Domain [TLD]  க்கு உதாரணம்:- 
  • gov ...........அரச முகவர் நிறுவனங்களைக் குறிப்பதற்கு.
  • edu ............கல்விசார் நிறுவனங்களைக் குறிப்பதற்கு. 
  • org ............இலாப நோக்கமற்ற நிறுவனங்களைக் குறிப்பதற்கு. 
  • mil ............படையணிகளைக் குறிப்பதற்கு . 
  • com ...........வர்த்தக நிறுவனங்களைக் குறிப்பதற்கு. 
  • net ............வலையமைப்பு நிறுவனங்களைக் குறிப்பதற்கு. 
மேலதிகமாக ஒவ்வொறு நாடும் மேல்மட்ட Domain பெயர்களைக் கொண்டுள்ளன. 
உ+ம்:
  • lk  - இலங்கை
  • uk - இங்கிலாந்து
  • au - அவுஸ்திரேலியா
  • us - அமெரிக்கா

Web Server 
இணையப் பக்கங்களையும், இணையப் பிரயோகங்களையும் (Web   Pages   and   Web   Applications)  வழங்குவதற்காக விசேட மென்பொருட்களைக் கொண்ட ஒரு கணினியே Web Server  ஆகும்.

இணைய உலாவி (Web Browser)  
World Wide Web  ஐ பயனாளர்கள் பயன்படுத்துவதற்கு தேவையானவற்றை வழங்கும் மென்பொருளே இணைய உலாவியாகும். இது பயனாளர்களுக்கு உரு/படம் சார்ந்த இடைமுகத்தை (Graphical   Interface)  வழங்குகின்றது. இதனால் பயனாளர்கள் Buttons,  icons  மற்றும் Menu  options   போன்றவற்றை பாவித்து இணையப்பக்கங்களுக்கு நுழையவும் மற்றும் பார்வையிடக் கூடியதாகவும் உள்ளது. Firefox, மற்றும் Microsoft Internet  Explorer போன்றன மிகவும் பிரசித்திப்பெற்ற இணைய உலாவிகளாகும். இந்த இணைய உலாவிகளில் எதனை நீங்கள் அவதானிக்கின்றீர்கனோ அவையே இணையப்பக்கங்களாகும்.
தேடுபொறிகள் (Search Engines)
உ+ம்: 

  • www.yahoo.com 
  • www.google.com 
  • www.msn.com 
கோடிக்கனக்கான இணையப் பக்கங்களிலிருந்து பயனாளர்களுக்கு அவசியமான பக்கங்களைத் தேடிக்கொடுப்பதே தேடுபொறியின் பிரதான செயற்பாடாகும். உங்கள் தேடுதலுக்கு பொருத்தமான சில சொற்களைக் கொடுத்து Search என்ற Button ஐ அழுத்துகின்ற போது உங்கள் தேடுதலோடு தொடர்பான இணையப்பக்கங்களைக் கொண்ட ஒரு பட்டியலை நீங்கள் பெறலாம். தேடுபொறியானது இணையப் பக்கங்களிலிருந்து மட்டுமல்லாது 'News Groups”, File Server  மற்றும் ஏனைய பல வளங்களிலிருந்தும் தகவல்களைச் சேகரிக்கின்றது. 

மின்னஞ்சல் அறிமுகம் (E mail) 

Digital  வடிவிலமைந்த செய்தியொன்றை ஒரு கணினி பயனாளரினால் கணினி வலையமைப்பினூடாக அனுப்புவதற்கும், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பயனாளர்களினால் அச்செய்தியை பெற்றுக்கொள்வதற்குமாக பயன்படுத்தப்படும் ஒரு வசதியே மின்னஞ்சல் என்ற சொல் விளக்குகின்றது. மின்னஞ்சலை, ஒரு நிறுவனத்தினுள் உள்ள கணினி வலையமைப்பினூடாக அந்நிறுவனத்தின் உறுப்பினர்களினால் பரிமாறிக்கொள்ளமுடியும். அல்லது வெளியில், உலகின் எப்பாகத்தில் உள்ளோர்களுக்கிடையேயும் இணையத்தினூடாக பரிமாறிக்கொள்ள முடியும்.  மின்னஞ்சலொன்றை அனுப்ப அல்லது பெற்றுக்கொள்ள அவசியமானவை.
  • இணைய இணைப்பினுடனான கணினி அதாவது மொடம், தொலைபேசி இணைப்பு போன்ற அடிப்படையான வன்பொருட்களைக் கொண்ட கணினி. 
  • ஒரு மின்னஞ்சல் கணக்கு. ( Gmail, Hotmail, Yahoo போன்ற மின்னங்சல் சேவை வழங்குனரிடம் இருந்து) 

மின்னஞ்சல் முகவரி 
ஒரு மின்னஞ்சல் முகவரியானது இரு பகுதிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டதாக காணப்படும்.  

  • பயனாளர் பெயர். (User name)
  • Domainபெயர்.
இவை இரண்டும் “@” என்ற ஒரு அடையாளத்தைக்கொண்டு வேறுபடுத்தப்பட்டிருக்கும். 
உதாரணம்:- Prasad@yahoo.com 

இணையத்தின் நன்மைகள்.  
  • விரைவான,செலவு குறைந்ததுமான தகவல் பரிமாற்றம். ( E.mail, net to phone)
  • எமக்கு தேவையான தகவல்களை விரைவாகவும் சுலபமாகவும் பெறக்கூடிய வசதி.
  • வர்த்தகதுறையில் விரைவான பணபரிமாற்றம் ( E-commerce, E-banking)
  • உலகமயமாதலுக்கான(Globalisation)உதவிகள்.
இணையத்தின் தீமைகள். 
  • சமுதாயத்துக்கு ஊறுவிளைவிக்கும் தகவல் பரிமாற்றம்.
  • கணினியை செயல் இழக்க செய்யும் மென்பொருட்களின் பதிவிறக்கம். (Computer virus)
  • வேறு நபர்கல் கணினியின் செயல்பாடுகளில் ஊடுருவல், கண்கானித்தல். ( Hacking)

Friday, July 12, 2013

Ubuntu tamil manual



Ubuntu பற்றி அறிய விருப்பம் உடயவர்களுக்கு மிகசிறந்த ஒரு மின்புத்தகம் இதுவாகும். இதில் Ubuntuபற்றிய உதவிக்குறிப்புக்கள், வரலாறு, எவ்வாறு பதிவிறக்கம் செய்வது நிறுவுவது என்பது பற்றிய தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.
http://www.ubuntu-manual.org என்ற இணையதளம் ஊடாக பிந்திய பதிப்பின் Manual இனை பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கம்.
Ubuntu 10.04 manual link

Tuesday, July 9, 2013

பிரதான கணனி நினைவகம் - 1


கணனி நினைவகம் என்னும் போது எமக்கு நினைவில் வருவது Hard Disk, CD, DVD போன்ற துனை நினைவங்கள் ஆகும். எனினும் கணனியில் பலதரப்பட்ட நினைவகங்கள் பயன்பாட்டில் உள்ளன
1. நிலையற்ற நினைவகம் (Volatile Memory)
மேலே கூறப்பட்ட துனை நினைவகங்கள் மின் இணைப்பு தூண்டிக்கப்படும்போதும் அதில் உள்ள தரவுகள் அழிவுற மாட்டாது இவை நிலையான நினைவகங்கள் ஆகும்(Non Volatile Memory).  நிலையற்ற நினைவகங்களில் மின் இணைப்பு தூண்டிக்கப்படும்போதும் அதில் உள்ள தரவுகள் அழிந்து விடும் இவ்வாறான நினைவகங்கள் நிலையற்ற நினைவகங்கள்(Volatile Memory) என அழைப்பர். கீழ்கானும் நினைவகங்கள் இவ்வகையினை சேரும்
1. எழுமாறு அணுகல் நினைவகம் (Random Access Memory - RAM)
2. பதிவகங்கள் ( Register)
3. பதுக்கு நினைவகம் ( Cash memory)


எழுமாறு அணுகல் நினைவகம் (Random Access Memory - RAM)
இவ் நினைவகத்தினை கணினியின் பிரதான நினைவகம்(Main memory) என அழைப்பர்.  கணினியின் மத்திய செயற்பாட்டு அலகிற்கு(Central Processing Unit – CPU) எதாவது ஒரு செயற்பாட்டை செய்வதற்கு தேவையான தரவுகளை அதாவது முறமை மென்பொருள், பிரையோக மென்பொருள், மற்றும் ஏனைய தரவுகளை களஞ்சியப்படுத்தி வைப்பது இவ் நினைவகம் ஆகும். இதன் சிறப்பம்சம் என்னவென்றால் செயற்பாட்டு அலகிற்கு இதில் உள்ளவகைகளை நேரடியாக பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பு உள்ளமயாகும். இதன் பிரவேச காலம் மிகக்குறைவு ஆகையாள் செயற்பாடுகளை மிகவும் வேகமாக செய்ய முடியும்.
இன் நினைவகத்தின் எதாவது ஒரு இடத்தில் இருந்து தரவுகளை CPUபெற்றுக்கெள்வதனால் இதற்கு ஒரு ஒழுங்குமுறையொன்று தேவையில்லை. இதனால் இன்னினைவகத்ததை எழுமாறு அணுகல் நினைவகம் என அழைப்பர்.
இவ் எழுமாறு அணுகல் நினைவகங்கள் இருவகைப்படும்
1. இயக்கவியல் எழுமாறு அணுகல் நினைவகம் (DRAM)
2. நியைியல் எழுமாறு அணுகல் நினைவகம் (SRAM)
இயக்கவியல் எழுமாறு அணுகல் நினைவகம் (DRAM)
நவீன கணினியில் காணப்படும் நினைவக வகை அசைவு எழுமாறு அனுகல் நினைவகம் ஆகும்.( Eg DDR1, DDR2, DDR3 போன்றன – Dynamic Data RAM) இவ் நினைவக கலன்களில் வைக்கப்பட்டு இருக்கும் தரவுகள் செக்கனுக்கு மில்லியன் அளவு மின்துடிப்புக்களை அனுப்பி மீண்டும் மீண்டும் புத்துனர்வூட்டும்.


 Dynamic Data RAM
நியைியல் எழுமாறு அணுகல் நினைவகம் (SRAM)
இவ் நினைவக கலன்களில் வைக்கப்பட்டு இருக்கும் தரவுகள் அடிக்கடி புத்துனர்வு ஊட்டப்படமாட்டாது. இதனால் இதில் உள்ள தரவுகள் மேல் இன்னும்மொரு தரவு எழுதப்படும்வரை அல்லது மின் இணைப்பு தூண்டிக்கப்படும்வரை தரவகள் நிலையாக இருக்கும். அத்துடன் இவ் நினைவக சிப்கள் மெல்லியனவாகவும், அசைவு எழுமாறு அனுகல் நினைவகத்தின விட வேகம் குறைவானதாகவும் காணப்பட்டது.

Statics Data RAM

Blogger Tips and TricksLatest Tips For BloggersBlogger Tricks

சொயற்படுத்துங்கள்

Blog Archive

Total Pageviews