தகவல் தொழில்நுட்ப முதல் தமிழ் வலைத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

Saturday, July 13, 2013

இணையம்

இணையமென்றால் என்ன?  
தகவல் பரிமாற்றத்திற்காக வலையமைக்கப்பட்ட அல்லது ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட கணினிகளைக்  கொண்ட பரந்த ஒரு முறைமையே இணையமாகும். இது வலையமைப்புகளின் ஒரு வலையமைப்பாகும். இது பங்கிடப்பட்ட உலகலாவிய வளமாக காணப்படுதுடன் எவருக்கும் சொந்தமானதாகவோ மற்றும் எவராலும் ஒழுங்கமைக்கப்படுவதோ இல்லை. அதாவது உலகலாவிய ரீதியிலான கணினி வலையமைப்பு.

இணைய வசதியைப் பெற்றுக்கொள்வதற்கு தேவையானவை எவை?  
  • கணினி
  • Modem / Network card / Router
  • இணையச் சேவை வழங்குனர் (ISP - Internet Service Provider) ரின் இணைய சேவை.
    Eg: Srilankan telicome,  Dialog 
  • இணைய உலாவி (Web Browser).
    Eg: Microsoft internet explore, Mozilla firfox, Safari, Netscape Navicator. 
  • தொலைபேசி இணைப்பு 

நாங்கள் ஏன் இணைய வசதியினைப் பெற்றுக்கொள்ள வேண்டும்? 
  • அறிவினைப் பெற்றுக்கொள்ள
  • தகவல்களைப் பெற்றுக்கொள்ள
  • ஏனையோருடன் தொடர்புக் கொள்வதற்கு
  • பொழுதுபோக்கு அம்சங்களுக்கு
  • பொருட்கள் மற்றும் சேவைகளின் கொள்வனவு, விற்பனைகளில் ஈடுபடுவதற்கு
     


கணினியானது இணையப் பக்கங்களைத் தருகின்றது. ஓவ்வொறு இணைய Server  க்கும் ஒவ்வொறு IPமுகவரியும் மற்றும் ஒரு Domain    பெயரும் உண்டு. உதாரணமாக உங்களின் உலாவியில்http://www.pcwebopedia.com/index.html என்ற URL(“Uniform Resource Locator” )    ஐ Typeசெய்வீர்களாயின் அது உங்களது வேண்டுகோளை pcwebopedia.com என்ற Domain பெயரையுடையServer   க்கு அனுப்பும். பின்னர் அந்த Server ஆனது index.html  என்ற பக்கத்தினை பெற்று அதனை உங்களது உலாவிக்கு அனுப்பும். 
World Wide Web (WWW)  இல் உள்ள ஒரு பக்கம் அல்லது இடம் (Site)  ஒவ்வொறு இணையப் பக்கமும்home page  என்ற ஒரு பக்கத்தினை கொண்டிருக்கும். பயனாளர்கள் ஏதாயினும் ஒரு பக்கத்தினுள் நுழையும் போது இதுவே முதலாவது ஆவணமாக தோன்றும். world wide  web   இல் உள்ள பக்கங்களானது ஒன்றுக்கு மேற்பட்ட ஆவணங்களையும் மற்றும் கோப்புகளையும் கொண்டிருக்கலாம். world wide  web   இல் உள்ள ஒவ்வொறு பக்கமும் ஒரு தனி நபர், கம்பனி அல்லது நிறுவனங்களினால் நிர்வகிக்கப்படுவதுடன் அவர்களுக்கு சொந்தமானதாகவும் காணப்படும். 

world wide  web  (WWW)   
WWW என அழைக்கப்படும் world wide  web ஆனது உலகலாவிய ரீதியில் காணப்படும் Server களில் பதிவு செய்யப்பட்டிருக்கும் ஏராளமான ஆவணங்களின் தொகுப்புகளை உள்ளடக்கு கின்றது. நீங்கள் தேடுபொறியில் ஒரு தேடுதலை மேற்கொள்ளுகின்றீர்கள் என்பது யாதெனில், ஆவணங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ள இணையப்பக்கத்திற்குச் சென்று அங்கிருந்து, வேண்டுகோளின்படி தகவல்களைப்பெற்று, உங்களது கணினித் திரையில் அதனைக் காட்சிப்படுத்தும்படி உங்கள் கணினியின் உலாவியை வழிநடத்துகின்றீர்கள் என்பதேயாகும். 

இணைய பக்கம் (web page) 
HTML என்ற மொழியில் எழுதப்பட்டதும் இணையத்தின் மூலம் இயங்கச்செய்யக்கூடியதுமான ஒரு ஆவணமே இணையப்பக்கம் எனப்படும். ஒவ்வொறு இணையப்பக்கத்திற்கும் URL என அழைக்கப்படும் ஒரு தனியான முகவரி உண்டு. இணையப்பக்கங்களானது எழுத்துருக்கள் (text) உருவப்படங்கள் (graphics) வேறொரு இணையப்பக்கத்திற்குச் செல்லக் கூடிய இணைப்புக்கள் (hyperling) மற்றும் கோப்புகள் (file) போன்றவாறானவற்றை கொண்டிருக்க முடியும். 
IPமுகவரி என்றால் என்ன? 
இணையத்திலுள்ள ஒவ்வொறு கணினி இயந்திரத்தினையும் இனங்கண்டுகொள்வதற்காக பயன்படுத்தப் படும் ஒரு தனியான இலக்கமே IP முகவரியாகும். அதாவது ஒரு கணினிக்கு ஒரு இலக்கம் மட்டுமே பயன்படுத்த முடியும் 
பொதுவாக IP முகவரியானது பின்வருமாறு காணப்படும். 
216.27.61.137 
இங்கு வழங்கப்படும் எண்கள் 0 - 255 வரையிலான எண்களினையே பயன்படுத்த முடியும். 
Domain name  
ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட IP முகவரிகளை இனங்கண்டுகொள்ளும் பெயரே Domain name ஆகும். குறித்தவொரு இணையத்தளத்தினை இனங்கண்டுக்கொள்ளும் Domain name ஆனது URL என அழைக்கப்படும் முகவரிகளில் பயன்படுத்தப்படுகின்றன. உதாரணமாக http://www.pcwebopedia.com/index.html என்ற URLஇல் pcwebopedia.com   என்பதே Domain பெயராகும்.ஒவ்வொரு Domain பெயரும் ஒரு பிற்சேர்க்கையை (Suffix)கொண்டிருக்கும். இது குறித்த ஒரு முகவரியானது எந்த மேல்மட்ட Domain க்கு(Top Level Domain) சொந்தமானது என்பதை இனங்கண்டுக்கொள்ள உதவுகின்றது.
Top Level Domain [TLD]  க்கு உதாரணம்:- 
  • gov ...........அரச முகவர் நிறுவனங்களைக் குறிப்பதற்கு.
  • edu ............கல்விசார் நிறுவனங்களைக் குறிப்பதற்கு. 
  • org ............இலாப நோக்கமற்ற நிறுவனங்களைக் குறிப்பதற்கு. 
  • mil ............படையணிகளைக் குறிப்பதற்கு . 
  • com ...........வர்த்தக நிறுவனங்களைக் குறிப்பதற்கு. 
  • net ............வலையமைப்பு நிறுவனங்களைக் குறிப்பதற்கு. 
மேலதிகமாக ஒவ்வொறு நாடும் மேல்மட்ட Domain பெயர்களைக் கொண்டுள்ளன. 
உ+ம்:
  • lk  - இலங்கை
  • uk - இங்கிலாந்து
  • au - அவுஸ்திரேலியா
  • us - அமெரிக்கா

Web Server 
இணையப் பக்கங்களையும், இணையப் பிரயோகங்களையும் (Web   Pages   and   Web   Applications)  வழங்குவதற்காக விசேட மென்பொருட்களைக் கொண்ட ஒரு கணினியே Web Server  ஆகும்.

இணைய உலாவி (Web Browser)  
World Wide Web  ஐ பயனாளர்கள் பயன்படுத்துவதற்கு தேவையானவற்றை வழங்கும் மென்பொருளே இணைய உலாவியாகும். இது பயனாளர்களுக்கு உரு/படம் சார்ந்த இடைமுகத்தை (Graphical   Interface)  வழங்குகின்றது. இதனால் பயனாளர்கள் Buttons,  icons  மற்றும் Menu  options   போன்றவற்றை பாவித்து இணையப்பக்கங்களுக்கு நுழையவும் மற்றும் பார்வையிடக் கூடியதாகவும் உள்ளது. Firefox, மற்றும் Microsoft Internet  Explorer போன்றன மிகவும் பிரசித்திப்பெற்ற இணைய உலாவிகளாகும். இந்த இணைய உலாவிகளில் எதனை நீங்கள் அவதானிக்கின்றீர்கனோ அவையே இணையப்பக்கங்களாகும்.
தேடுபொறிகள் (Search Engines)
உ+ம்: 

  • www.yahoo.com 
  • www.google.com 
  • www.msn.com 
கோடிக்கனக்கான இணையப் பக்கங்களிலிருந்து பயனாளர்களுக்கு அவசியமான பக்கங்களைத் தேடிக்கொடுப்பதே தேடுபொறியின் பிரதான செயற்பாடாகும். உங்கள் தேடுதலுக்கு பொருத்தமான சில சொற்களைக் கொடுத்து Search என்ற Button ஐ அழுத்துகின்ற போது உங்கள் தேடுதலோடு தொடர்பான இணையப்பக்கங்களைக் கொண்ட ஒரு பட்டியலை நீங்கள் பெறலாம். தேடுபொறியானது இணையப் பக்கங்களிலிருந்து மட்டுமல்லாது 'News Groups”, File Server  மற்றும் ஏனைய பல வளங்களிலிருந்தும் தகவல்களைச் சேகரிக்கின்றது. 

மின்னஞ்சல் அறிமுகம் (E mail) 

Digital  வடிவிலமைந்த செய்தியொன்றை ஒரு கணினி பயனாளரினால் கணினி வலையமைப்பினூடாக அனுப்புவதற்கும், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பயனாளர்களினால் அச்செய்தியை பெற்றுக்கொள்வதற்குமாக பயன்படுத்தப்படும் ஒரு வசதியே மின்னஞ்சல் என்ற சொல் விளக்குகின்றது. மின்னஞ்சலை, ஒரு நிறுவனத்தினுள் உள்ள கணினி வலையமைப்பினூடாக அந்நிறுவனத்தின் உறுப்பினர்களினால் பரிமாறிக்கொள்ளமுடியும். அல்லது வெளியில், உலகின் எப்பாகத்தில் உள்ளோர்களுக்கிடையேயும் இணையத்தினூடாக பரிமாறிக்கொள்ள முடியும்.  மின்னஞ்சலொன்றை அனுப்ப அல்லது பெற்றுக்கொள்ள அவசியமானவை.
  • இணைய இணைப்பினுடனான கணினி அதாவது மொடம், தொலைபேசி இணைப்பு போன்ற அடிப்படையான வன்பொருட்களைக் கொண்ட கணினி. 
  • ஒரு மின்னஞ்சல் கணக்கு. ( Gmail, Hotmail, Yahoo போன்ற மின்னங்சல் சேவை வழங்குனரிடம் இருந்து) 

மின்னஞ்சல் முகவரி 
ஒரு மின்னஞ்சல் முகவரியானது இரு பகுதிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டதாக காணப்படும்.  

  • பயனாளர் பெயர். (User name)
  • Domainபெயர்.
இவை இரண்டும் “@” என்ற ஒரு அடையாளத்தைக்கொண்டு வேறுபடுத்தப்பட்டிருக்கும். 
உதாரணம்:- Prasad@yahoo.com 

இணையத்தின் நன்மைகள்.  
  • விரைவான,செலவு குறைந்ததுமான தகவல் பரிமாற்றம். ( E.mail, net to phone)
  • எமக்கு தேவையான தகவல்களை விரைவாகவும் சுலபமாகவும் பெறக்கூடிய வசதி.
  • வர்த்தகதுறையில் விரைவான பணபரிமாற்றம் ( E-commerce, E-banking)
  • உலகமயமாதலுக்கான(Globalisation)உதவிகள்.
இணையத்தின் தீமைகள். 
  • சமுதாயத்துக்கு ஊறுவிளைவிக்கும் தகவல் பரிமாற்றம்.
  • கணினியை செயல் இழக்க செய்யும் மென்பொருட்களின் பதிவிறக்கம். (Computer virus)
  • வேறு நபர்கல் கணினியின் செயல்பாடுகளில் ஊடுருவல், கண்கானித்தல். ( Hacking)

0 comments:

Post a Comment


Blogger Tips and TricksLatest Tips For BloggersBlogger Tricks

சொயற்படுத்துங்கள்

Blog Archive

Total Pageviews