எதற்கு இந்த System Restore ?
புதிதாக
ஒரு பயன்பாட்டு மென்பொருளை நிறுவும்போது (install) அல்லது அதனை
புதுப்பிக்கும் (update) போது உங்கள் கணினியை ஒரு மாற்றத்யதிற்கு
உட்படுத்துகிறீர்கள். இந்த மாற்றம் சில வேளைகளில் கணினியின் இயக்கத்தில்
பாதிப்பை உண்டாக்கி கணினி முன்னர் போல் செயற்பாடாமல் போகவும் இடமுண்டு. இது
போன்ற நிலைமைகளில் உங்களுக்குக் கை கொடுக்கிறது விண்டோஸிலுள்ள சிஸ்டம்
ரீஸ்டோர் எனும் வசதி. இதன் மூலம் கணினியில் மாற்றத்தை ஏற்படுத்த முன்னர்
இருந்த நிலைக்கு கணினியை மறுபடியும் மாற்றி கணினியை சீராக்கி விடலாம்.
சிஸ்டம்
ரீஸ்டோர் என்பது மைக்ரோஸொப்ட் வர்ட், எக்ஸல் மற்றும் ஏனைய பயன்பாட்டு
மென்பொருள்களில் உள்ள Undo எனும் கட்டளை போன்றதே. கணினியில் செய்த
மாற்றத்தை இல்லாமல் செய்து கடைசியாக கணினி முறையாக இயங்கிக் கொண்டிருந்த
நிலைக்கு மறுபடியும் சீரமைத்து விடுகிறது இந்த சிஸ்டம் ரீஸ்டோர் எனும்
வசதி.
கணினி
வைரஸ் தாக்குதலுக்குட்படும் சந்தர்ப்பங்கDலும் கூட இந்த சிஸ்டம் ரீஸ்டோர்
மூலம் சில வேளைகளில் வைரஸை விரட்டி விடலாம். எனினும் சில கணினி வைரஸ் இந்த
சிஸ்டம் ரீஸ்டோரயே இயங்காமல் (disable) செய்து விடுவதுமுண்டு.
சிஸ்டம்
ரீஸ்டோர், விண்டோஸ் இயங்கு தளத்தில் செய்த மாற்றத்தையே இல்லாமல் செய்து
விடுகிறது தவிர நீங்கள் முன்னர் பணியாற்றி சேமித்த எந்த ஒரு பைலையும்
பாயதிப்பதில்லை. உதாரணமாக எம்.எஸ்.வர்ட் கொண்டு உருவாக்கிய ஒரு ஆவணம்,
இண்டநெட் எக்ஸ்ப்லோரர் கொண்டு பார்த்த இணைய தளங்கள், உங்களுக்கு வந்த
மின்னஞ்சல் என எதனையும் இல்லாமல் செய்து விடாது. அதாவது சிஸ்டம் ரீஸ்டோர்
செய்வதனால் உங்கள் தனிப்பட்ட பைல்களுக்கு எந்த வித ஆபத்தும் நேர்ந்து
விடாது.
விண்டோஸ்
எக்ஸ்பீ இயங்கு தளம், கணினியில் நீங்கள் செய்யும் மாற்றங்களை முறையாக
அவதானித்து அவ்வப்போது அவை பற்றிய விவரங்களை அதாவது என்ன திகதியில் என்ன
நேரத்தில் என்ன மாற்றம் செய்யப்பட்டது போன்ற விவரங்களை பதிந்து வைக்கிறது.
எடுத்துக் காட்டாக ஒரு பயன்பாட்டு மென்பொருளை நிறுவுதல் அல்லது ஒரு ட்ரைவர்
மென்பொருளை நிறுவுதல் போன்ற கணினியில் ஒரு முக்கிய மாற்றத்தைச்
செய்யும்போது அவை பற்றிய விவரங்களைப் பதிவு செய்து விடுகிறது. இந்த
விவரங்கள் அடங்கிய குறிப்புகளை ரீஸ்டோர் பொயின்ட் (Restore Point)
எனப்படும்.
இந்த ரீஸ்டோர் பொIன்டை நீங்களாகவே கூட கணினியில் ஏதும் மாற்றத்தை செய்வதற்கு முன்னர் உருவாக்Bக் கொள்ளலாம்.
நீங்கள்
நிறுவிய ஒரு மென்பொருள் கணினியில் பாதிப்பை உண்டாக்கியிருந்தால் சிஸ்டம்
ரீஸ்டோரை இயக்கி அதிலிருந்து ஒரு ரீஸ்டோர் பொயின்டைத் தெரிவு செய்து
கணினியை மறுபடியும் முன்னர் இருந்தவாறு சீராக இயங்கிய நிலைக்குக் கொண்டு
வரலாம். சிஸ்டம் ரீஸ்டோரை இயக்கியதும் ஒரு கலண்டர் தோன்றுகிறது.
அதிலிருந்து ரீஸ்டோர் பொயின்ட் எனப்படும் நிலைகளைத் தெரிவு செய்யலாம்.
தினமும் கணினியை உபயோகிக்காமலிருந்தால் சில தினங்களில் ரீஸ்டோர் பொயின்ட்
உருவாகியிருக்காது. மாறாக கணினியை அடிக்கடி உபயோகித்திருந்தால் அனேகமாக
தினமும் ரீஸ்டோர் பொயின்ட் உருவாவதோடு ஒரே தினத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட
ரீஸ்டோர் பொயின்டுகளும் உருவாகியிருப்பதைக் காணலாம்.
ரீஸ்டோர்
செய்யும் பணி முடிந்ததும் கணினி ரீஸ்டார்ட் ஆக ஆரம்பித்து விடுவ தால்
சிஸ்டம் ரீஸ்டோரை இயக்குவதற்கு முன்னர் கணினியில் திறந்து வைத்துப்
பணியாற்றிக் கொண்டிருக்கும் அனைத்து எப்லிகேசன்களையும் மூடி விடுதல்
வேண்டும்.
கணினியில்
நீங்கள் செய்யவிருக்கும் ஒரு மாற்றம் கணினியில் ஸ்திரத்த தன்மையைப்
பாதிக்கும் என நினைத்தால் அந்த மாற்றத்தைச் செய்வதற்கு முன்னர் ஒரு
ரீஸ்டோர் பொயின்டை உருவாக்கிக் கொள்வது உங்களுக்கு நன்மை யளிக்கும்.
இந்த
சிஸ்டம் ரீஸ்டோரை Start / All Programs / Accessories / System Tools
மற்றும் Start / Help and Support / Pick a Task / Undo changes to your
computer with System Restore என இரண்டு வழிகளில் அணுகலாம்.
ரீஸ்டோர் செய்வது எப்படி?
சிஸ்டம்
ரீஸ்டோர் செய்வது ஒரு எளிமையான செயற்பாடு. சிஸ்டம் ரீஸ்டோரை இயக்கிய
பின்னர் ஒரு விசர்ட் தோன்றும். இங்கு Restore your computer to an earlier
time (படம்-1) தெரிவு செய்து அடுத்த கட்டத்திற்குச் செல்ல (படம்-2) ல்
உள்ளது போல் ஒரு விண்டோ தோன்றும். இங்கு நீங்கள் விரும்பும் ரீஸ்டோர்
பொயின்டைத் தெரிவு செய்யுங்கள். தேவையானால் இடப் பக்கமுள்ள கலண்டரில்
க்ளிக் செய்து ரீஸ்டோர் பொயின்டைத் தெரிவு செய்து கொள்ளலாம். அடுத்து
ரீஸ்டோர் பட்டனில் க்ளிக் செய்ய ரீஸ்டோர் செய்யும் பணி ஆரம்பித்து விடும்.
ஒரு சிஸ்டம் ரீஸ்டோர் பொயின்டை உருவாக்குவது எப்படி?
அவ்வாறே
புதிதாக ஒரு ரீஸ்டோர் பொயின்டை உருவாக்கிக் கொள்ள ரீஸ்டோர் விசர்டில்
வரும் முதல் கட்டத்தில் Create a restore point (படம்-1) தெரிவு செய்து
Next க்ளிக் செய்ய வரும் திரையில் (படம்-3) உருவாக்கயிருக்கும் ரீஸ்டோர்
பொயின்டுக்கு ஒரு பொருத்தமான ஒரு பெயரை டைப் செய்து Create பட்டனில் க்ளிக்
செய்ய புதிதாக ஒரு ரீஸ்டோர் பொயின்ட் உருவாக்கப்பட்டு விடும்.
அதேபோல்
சிஸ்டம் ரீஸ்டோர் விசர்டில் முதல் திரையில் System Restore Settings எனும்
இணைப்பில் க்ளிக் செய்ய படம்-4 ல் உள்ளது போல் ஒரு டயலொக் பொக்ஸ்
தோன்றும். (இதனை வேறு வழி முறைகளிலும் வரவைக் கலாம்) இதன் மூலம் ஹாட்
டிஸ்கில் எந்த ட்ரைவிலும் சிஸ்டம் ரீஸ்டோர் வசதியை இல்லாமல் செய்யவும்,
ஏற்கனவே இல்லாமல் செய்திருந்தால் அதனை மீள அமைக்கவும் முடியும். அத்துடன்
இந்த டயலொக் பொக்ஸில் Settings பட்டனில் க்ளிக் செய்து ஒவ்வொரு ட்ரைவவிலும்
சிஸ்டம் ரீஸ்டோர் செய்வதற்கென ஒதுக்கப்பட்டிருக்கும் வெற்றிடத்தை
அதிகரித்துக் கொள்ளவும் குறைத்து கொள்ளவும் முடியும்.
0 comments:
Post a Comment