தகவல் தொழில்நுட்ப முதல் தமிழ் வலைத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

Sunday, January 5, 2014

ஸ்க்ரீன் சேவர் உருவாக்கலாம் வா!

ஓளிப்படங்களைக் கொண்டு ஸ்க்ரீன் சேவர்களை உருவாக்கக் கூடிய மென்பொருள்தான் சைபர்லின்க் மீடியாஷோ. இது Cyberlink PowerDVD மென்பொருளடங்கிய சீடீயுடன் இணைந்து வருகிறது.


மீடியாஷோ மென்பொருள் மூலம் அழகிய ஸ்க்ரீன் சேவர்களை இலகுவாக உருவாக்கலாம். மைக்ரோஸொப்ட் பவபொயின்டில் பணியாற்றுவது போன்ற அனுபவம் மீடியாஷோவில் கிடைக்கிறது. அனேகமாக எல்லாவிதமான மல்டிமீடியா பைல் வகைகளையும் மீடியாஷோவில் கையாளலாம். ஒளிப்படங்கள், வீடியோ க்ளிப்ஸ், பவபொயின்ட் ப்ரசன்டேசன், ஒலிப்பகுதிகள் எனப் பல்வேறுபட்ட பைல் போமட்டுக்களை மீடியாஷோவுக்கு இம்போட் செய்து அவற்றை விரும்பிய விதத்தில் ஒழுங்கு படுத்தலாம். அத்துடன் அவற்றிற்கு 100 க்கு மேற்பட பலவிதமான டெக்ஸ்ட் இபெக்ட்ஸ் (effects), 2D (Two Dimensional) , 3D ட்ரான்ஸிஸன் இபெக்ட்ஸ், மாஸ்கிங் இபெக்ட்ஸ், மற்றும் சவுன்ட் இபெக்ட்ஸ் என்பவற்றைப் பிரயோகித்து ஒரு மல்டிமீடியா கலவையுடனான ஸ்க்ரீன் சேவராக மாற்றிக் கொள்ளலாம். ஸ்க்ரீன் சேவராக மட்டுமன்றி, .exe பைலாகவோ அல்லது HTML பைலாகவோ கூட மாற்றிக் கொள்ளலாம்.

ஒளிப்படங்க¨ளை நேரடியாக ஸ்கேனரிலிருந்து அல்லது டிஜிட்டல் கேமராவிலிருந்து இம்போட் செய்யும் வசதி ஒலிப்பதிவு (sound recording) செய்யும் வசதி மற்றும் வீடியோ கேப்ச்சர் (capture) செய்யும் வசதியையும் கொண்டுள்ளது மீடியா ஷோ. இன்டனெட் எக்ஸ்ப்ளோரர் போன்ற வெப் பிரவுஸர்களிலிருந்து ட்ரேக் அன்ட் ட்ரொப் முறையில் படங்களை இலகுவாக இழுத்துப் போடக்கூடிய வசதியையும் கொண்டுள்ளது.

அனைத்துப் பணியையும் பட்டன்கள் மூலமாகவே செய்யக் கூடிய வித்தியாசமான இடைமுகப்பைக் கொண்ட மீடியாஷோவை இயக்கியதுமே ஒரு விசர்ட் தோன்றி நம்மை வழி நடத்துகிறது. மீடியாஷோவுக்குப் புதியவர்களுக்கு இந்த விசர்ட் பெரிதும் உதவும். காட்சிகளைத் தொகுத்தல் (compiling), ஒழுங்குபடுத்தல் (sorting), அவற்றில் தேவையான effects ஐப் பிரயோகித்தல், ஸ்க்ரீன் சேவராகவோ அல்லது .exe பைலாகவோ மாற்றிக் கொள்ளல் என நான்கு கட்டங்களில் நமது பணி நிறைவுபெறுகிறது.

மீடியாஷோ மூலம் ஸ்க்ரீன் சேவர் உருவாக்குவதெப்படி? மீடியாஷோவை ஆரம்பித்ததுமே தோன்றும் விசர்ட் மூலம் முதலில் ஒளிப்படங்களையோ வீடியோ காட்சிகளையோ மீடியாஷோ விண்டோவுக்கு கொண்டு வர (import) வேண்டும். அல்லது மீடியாஷோ வின்டோவின் இடது பக்கத்தில் மவுஸை நகர்த்தும் போது தோன்றும் கன்ட்ரோல் பேனலில் இம்போட் பட்டனில் க்ளிக் செய்ய தோன்றும் சிறிய மெனுவிலிருந்து Import Media Files தெரிவு செய்து தேவையான ஒளிப்படங்களை அல்லது வீடியோ க்ளிப்புகளை இம்போட் செய்து கொள்ள வேண்டும். அவை மீடியாஷோ விண்டோவில் சிறிய படங்களாக (Thumbnail pictures) வந்து உட்காரும். அவற்றிலிருந்து விருப்பம்போல் படங்களைத் தெரிவு செய்து கீழுள்ள படச்சுருள் (film) போன்ற அமைப்பிலுள்ள பகுதிக்கு ட்ரேக் அன்ட் ட்ரொப் செய்து படங்களை ஒழுங்கு படுத்த வேன்டும்.

அடுத்து Film அமைப்பிலிருக்கும் முதல் படத்தில் இரட்டை க்ளிக் செய்வதன் மூலம் எடிட் மோடுக்குச் செல்லலாம். எடிட் மோடில் வைத்து விண்டோவின் வலது பக்கத்திலுள்ள பட்டன்கள் ஒவ்வொன் றாகத் தெரிவு செய்து transition , text, sound மற்றும் masking effects என்பவற்றை ஒன்றன் பின் ஒன்றாக பிரயோகிக்க வேண்டும். இதே முறையில் film பகுதிலுள்ள ஒவ்வொரு படத்தையும் தனித்தனியாகத் தெரிவு செய்து effects பிரயோகிக்க வேன்டும். இறுதியாக இடது பக்க மூலையிலுள்ள வீடியோ கேமரா போன்ற ஐக்கனில் க்ளிக் செய்து இதனை ஒரு ஸ்லைட் ஷோவாக இயக்கிப் பார்க்கலாம்.

அடுத்து இதனை ஒரு ஸ்க்ரீன் சேவராக மாற்றுவதற்கு மீடியா ஷோ கன்ட்ரோல் பேனலில் எக்ஸ்போட் பட்டணில் க்ளிக் செய்ய வேண்டும். அப்போது தோன்றும் சிறிய மெஸ்ஸேஜ் பொக்ஸில் Screen Saver தெரிவு செய்து எக்ஸ்போட் க்ளிக் செய்ய save as டயலொக் பொக்ஸ் தோன்றும். இங்கு (.scr) பைலாக அதனை சேமித்துக் கொள்ள வேன்டும். சேமிக்கப் பட்ட இந்த பைலை திறக்கும் போது ஸ்க்ரீன் சேவராகத் தொழிற்படும். அத்துடன் அதன் மீது ரைட் க்ளிக் செய்து வரும் கன்டெக்ஸ்ட் மெனுவிலிருந்து நீங்கள் உருவாக்கிய ஸ்க்ரீன் சேவரை கணினியில் இன்ஸ்டோல் செய்து கொள்ளலாம்.


0 comments:

Post a Comment


Blogger Tips and TricksLatest Tips For BloggersBlogger Tricks

சொயற்படுத்துங்கள்

Blog Archive

Total Pageviews