தகவல் தொழில்நுட்ப முதல் தமிழ் வலைத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

Tuesday, February 4, 2014

ஓங்கி அடிச்சா “5G” வேகம்டா!

grey ஓங்கி அடிச்சா 5G வேகம்டா!
சூர்யா, எதிர்காலத்தில் நடிக்கும் படத்தில் மேற்கூறியது போல வசனம் பேசினால் ஆச்சர்யப்படுவதற்கில்லை grey ஓங்கி அடிச்சா 5G வேகம்டா!  . உலகளவில் இணைய வேகத்தில் தாறுமாறாக இருப்பது தென் கொரியா தான். அண்ணன் அமெரிக்கா உலகிற்கே ராசாவாக இருந்தாலும், இணையத்தில் சிப்பாய் அளவில் தான் தென் கொரியாவிடம் இருக்கிறார். என்ன முக்கினாலும் தென் கொரியாவில் ராணுவத்தைத் தான் மிரட்டிக் கொண்டு இருக்க முடிகிறதே தவிர, இணைய வேகத்தை பிடிக்க முடியவில்லை. Image Credit - www.mrwallpaper.com

உலகளவில் இணையத்தில் தென் கொரியா தான் அசைக்க முடியாத இடத்தில் இருக்கிறது. இந்தியா குறைந்தது 15 – 20 ஆண்டுகளாவது பின் தங்கி இருக்கும் என்றால், கற்பனை செய்து கொள்ளுங்கள். எங்கள் நிறுவனத்தில் ஒரு ப்ராஜக்ட்க்காக தென் கொரியாவில் 10 வருடங்களுக்கு முன் ஒரு வங்கிக்காக பணி புரிந்தார்கள், அப்போதே அங்கே இணைய வேகம் 100 MB இருந்தது என்று கூறுவார்கள். நம்ம ஊரில் தற்போது தான் 25 MB வந்து இருக்கிறது. 100 MB கொடுக்கிறார்கள் ஆனால், அதிக கட்டணத்தால் வெகுஜன பயன்பாட்டிற்கு இன்னும் வரவில்லை.

தென் கொரியா தற்போது மொபைல் இணையத்தில் 5G வேகத்தைக் கொண்டு வர முயற்சி செய்து கொண்டு இருக்கிறார்கள். 1.6 ட்ரில்லியன் பணம் இதற்காக ஒதுக்கி இருக்கிறார்கள். 4G LTE வேகமே செமையாக இருக்கும் இதில் 5G வந்தால்…! 5G வேகம் 4G LTE ஐ விட 1000 மடங்கு அதிகமாக இருக்கப் போவதாக கூறுகிறார்கள். என்னது 1000 மடங்கா!!! எப்படி இருக்கும் பாருங்க. இவர்களின் கணிப்புப் படி 800 MB திரைப்படம் தரவிறக்கம் [Download] ஆக ஒரு நொடி தான் ஆகுமாம்! (தப்பா சொல்லல நிசமாத் தான்) News Credit – Mashable.com
சிங்கப்பூரில் 4G LTE இருக்கிறது. இதுவே வேகமாக இருக்கும் ஆனால், இங்கே அனைவரும் இணையத்தை அதிகம் பயன்படுத்துவதால் Peak நேரங்களில் மெதுவாகத் தான் இருக்கும். எங்க ஊர் கோபியில் Airtel 3G வேகம் சிங்கப்பூர் 4G LTE வேகத்திற்கு இணையாக இருக்கிறது, காரணம் மொபைல் இணையம் பயன்படுத்துபவர்கள் கோபியில் குறைவு என்பதால். சில வினாடிகளில் 30-40 MB தரவிறக்கம் ஆகிறது. இதே சென்னை வந்தால், இந்த வேகம் கிடைக்காது.
இதில் 5G சோதனை அடிப்படையில் 2017 லிலும் அனைவரின் பயன்பாட்டிற்கு 2020 லும் வரும் என்று கூறி இருக்கிறார்கள். ஏன் இவ்வளவு காலம் எடுக்கிறது என்று புரியவில்லை. இதற்கு முன்பு வேகமாக வந்தவர்கள், 5G க்கு ஏன் இவ்வளவு காலம் எடுக்கிறார்கள் என்று தெரியவில்லை. என்னைப் பொருத்தவரை இவர்கள் திட்டமிட்ட காலத்திற்கு முன்பே 5G தொழில்நுட்பம் வந்து விடும் என்று நினைக்கிறேன்.

3G சேவை பயன்படுத்தினால் சிங்கப்பூரில் 12 GB Data இலவசமாக கொடுத்த தொலைபேசி நிறுவனங்கள் 4G வந்த பிறகு 3 GB தான் கொடுக்கிறார்கள். காரணம், 4G வேகமாக இருப்பதால், வழக்கமாக இணையத்தை பயன்படுத்துவதை விட அதிகம் பயன்படுத்துவோம். உதாரணத்திற்கு இணையத்தில் நீங்கள் பார்க்கும் திரைப்படம் Buffer ஆகாமல் வந்தால் இரண்டு படம் கூட பார்ப்பீர்கள் ஆனால், அதே முக்கிக் கொண்டு இருந்தால், பாதிலேயே நிறுத்தி விடுவீர்கள். தற்போது புரிகிறதா ஏன் குறைவான வேகத்திற்கு அதிக GB யும் அதிகமான வேகத்திற்கு குறைவான GB யும் இலவசமாகக் கொடுக்கிறார்கள் என்று. முன்பு 12 GB இருந்தாலும் அதில் நான் 1.5 GB தான் பயன்படுத்தி இருப்பேன். 4G வந்த பிறகு 3 GB கூட போதவில்லை.
5G வந்து இணையம் செலவு குறைவாக மாறினால் எதிர்காலத்தில் Wifi Router ஒவ்வொருவரும் வாங்குவார்களா என்றே சந்தேகமாக இருக்கிறது! ஏனென்றால் தற்போதே என்னுடைய ஒரு நண்பன் அவனுடைய 4G LTE இணைப்பைத் தான் அவனுடைய வீட்டு இணையத்திற்க்கும் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறான். இனி 5G வந்தால், Wifi வாங்காமல் இதிலேயே வேண்டும் என்றால் [Hotspot] பயன்படுத்திக்கொள்ளும் படி ஆகி விடும் என்று நினைக்கிறேன். இவை இரண்டையும் தனித் தனியாக பாவிப்பவர்கள் மட்டும் Wifi வாங்கிக் கொள்வார்கள்.

Hotpost : நம்முடைய மொபைலையே 3G / 4G LTE இணையத்தின் உதவியால் ஒரு Wifi router போல மாற்றி விடலாம். இதற்கு பெயர் தான் “Hotspot”. என்னடா எதோ ஹாட் ஸ்பாட், கோல்டு ஸ்பாட்ன்னு கொளுத்திப் போடுறாங்களே என்று இது பற்றி தெரியாதவங்க மிரண்டுடாதீங்க! grey ஓங்கி அடிச்சா 5G வேகம்டா!  சப்பை மேட்டர்.
இனி எதிர்காலத்தில் மொபைலின் பங்கு தற்போது இருப்பதை விட அபரிமிதமாக இருக்கும். நம்முடைய அனைத்துப் பணிகளையும் மொபைல் மூலமே முடித்து விட முடியும். தற்போதே அப்படித்தான் இருக்கிறது. இந்த நிலையில் 4G LTE யை விட 1000 மடங்கு வேகத்தில் இணைய வேகம் இருந்தால், என்னால் கற்பனையே செய்ய முடியவில்லை. இணையத்தில் Buffer என்றால் என்ன? அது எப்படி இருக்கும்? என்று தான் எதிர்கால சந்ததியினர் கேட்பார்கள். “56 KBPS” வேகத்தில் இருந்து பயன்படுத்திக்கொண்டு இருக்கும் எனக்கு இதன் வளர்ச்சிகளில் கூடவே வருவது ஒரு சந்தோசமான பயணமே! தற்போது 100 MB Fiber வேகம் வரை வந்து இருக்கிறேன் grey ஓங்கி அடிச்சா 5G வேகம்டா!  .


கொசுறு – தென் கொரியாவில் இருந்து வந்த நம்ம சிங்கக் குட்டி (அட! பதிவர் 
 பேரு தான்.. பயந்துடாதீங்க) சியோல் (தென் கொரியா தலைநகரம்) ஒளி வெள்ளத்தில் இருக்கும், இரவே பகல் மாதிரி தான் இருக்கும். சிங்கப்பூர் எல்லாம் தள்ளித் தான் நிற்க வேண்டும் என்று கூறினார். சிங்கப்பூரே அருமையாகத் தான் இருக்கு! இதை விட அங்கே அருமை என்றால், எப்படி இருக்கும்!! தென் கொரியா எனக்குப் பிடிக்க ஒரு முக்கியக் காரணம் இருக்கு. அங்கே இருந்து தான் நிறைய ஹாரர் படங்கள் தயாராகி வருது grey ஓங்கி அடிச்சா 5G வேகம்டா!  ஆனால், இவங்க பக்கத்து நாட்டுல நிஜமாலுமே திரைப்படங்களை மிஞ்சும் ஒரு ஹாரர் நபர் இருக்கிறார். அவர் யார் தெரியுமா?

One Drive
Google Drive போல மைக்ரோசாப்ட் SkyDrive என்று வைத்து இருந்தது ஆனால், ஏற்கனவே இந்தப் பெயரில் இருந்த நிறுவனம் வழக்கு தொடர்ந்ததால், வேறு வழியில்லாமல் தங்கள் பெயரை மாற்றிக்கொள்வதாக மைக்ரோசாப்ட் அறிவித்து இருந்தது. அதன் படி தற்போது SkyDrive என்பதில் இருந்து OneDrive என்று மாற்றி விட்டது. இனி இதை பிரபலப்படுத்த விளம்பரங்கள் செய்ய வேண்டும். எனக்கென்னவோ Sky Drive என்பதை விட One Drive என்பது Professional ஆக இருப்பதைப் போல தோன்றுகிறது. இந்த One Drive என்பதற்கு “அனைத்தும் இதில் அடக்கம்” என்பதை குறிப்பதாக மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. இந்தப் பெயருக்கு யாரும் இது என்னுடைய “பெட்ரோமாக்ஸ் லைட்” என்று சண்டைக்கு வராமல் இருந்தால் சரி grey ஓங்கி அடிச்சா 5G வேகம்டா!  .

கொசுறு 
இது தான் ரொம்ப முக்கியம் grey ஓங்கி அடிச்சா 5G வேகம்டா!  என்னோட Blog குறித்த எதிர்கால விருப்பங்களை / திட்டங்களை ஒரு பக்கமாக என்னுடைய தளத்தில் எழுதி இருக்கிறேன். இது என்னுடைய தளத்தின் முகப்பு பக்கத்தில் நிரந்தரமாக இருக்கும். தற்போது என்னுடைய தளத்தில் இதை படித்துக் கொண்டு இருப்பவர்கள் மேலே (அல்லது இந்த சுட்டி) “Future Plan” என்பதை க்ளிக் செய்து படிக்கலாம். இவ்வளவு நாளாக (வருடங்களாக!) என்னுடைய தளத்திற்கே வராமல் ரீடர் மற்றும் மின்னஞ்சலில் மட்டுமே படித்து மங்களம் பாடிட்டு இருப்பவர்களுக்கு ரீடரில் / மின்னஞ்சலில் இது வராது ஹா ஹா. நீங்க இதைப் படிக்க என்னுடைய தளத்திற்கே வந்தே ஆக வேண்டும் வேறு வழியே இல்லை grey ஓங்கி அடிச்சா 5G வேகம்டா!  .

0 comments:

Post a Comment


Blogger Tips and TricksLatest Tips For BloggersBlogger Tricks

சொயற்படுத்துங்கள்

Blog Archive

Total Pageviews