ரோஜக்டர்(projector and portable projector) உருவான கதை..!


புரோஜக்டர் உருவான விதம் மற்றும் அது செயல்படும்விதம் ஆகியவற்றைப் பற்றிப் பார்ப்போம்.
திரைப்படத் தொழில்நுட்பத்திற்கு முக்கிய வசதியே நமது கண்களின் காட்சியை நிலைநிறுத்தும் தன்மை தான். இயற்கையாகவே நாம் பார்க்கின்ற ஒரு காட்சி, பார்த்த பின்னும் சில கணங்கள் அதாவது ஒரு வினாடியில் 20ல் 1 பங்கு நேரம் (1/20th of a second) நம் விழியில் நிற்கிறது. இந்த அறிவியல் அடிப்படை உண்மையே திரைப்படத்திற்கு அடிப்படை ஆதாரம்.
ஒரு படத்தை காட்டிக் கொண்டிருக்கும் போது, வினாடியில் இருபதில் ஒரு பங்கு பகுதி நேரத்திற்குள் அதே போன்ற மற்றொரு படத்தை அதே இடத்தில் காட்டினால் படம் மாறியது கண்களுக்குத் தெரியாது என்ற அடிப்படையில் 1834ம் ஆண்டு வில்லியம் ஜார்ஜ் ஹார்னர்(William George Horner) பேப்பரில் வரைந்த படங்களை ஒரு டிரம்மில்(Drum) உள்பக்கமாக ஒட்டி, படங்களுக்கிடையில் நீள் வடிவில் துளையிட்டு, டிரம்மை சுழல விட்டு வெளியிலிருந்து அந்த துளைகள் வழியாகப் பார்த்தால் அந்த படங்கள் இடைவெளியில்லாமல் தொடர்ந்து வருவது போல் ஒரு கருவி செய்தார்.
இதுவே முதல் ப்ரொஜக்டர்(First Projector) என்று சொல்லலாம். இதற்கு ஜோட்ரோஃப் என்று பெயரிடப்பட்டது. ஆனால் 1891ல் தாமஸ் ஆல்வா எடிசன் கைனடோஸ்கோப்(Kinetoscope) என்ற கருவியை உருவாக்கிய பின் எல்லாமே மாறிவிட்டது. அதில் படச்சுருளை சிறிய மோட்டார் மூலமாக ஒரு விளக்கின் முன் ஓட வைத்தார். இன்றைய ப்ரொஜக்டர்கள் இதே நுட்பத்தை தான் பயன்படுத்துகின்றன.
ப்ரொஜக்டரில் படங்கள்(pictures) வினாடியில் ஒரு பகுதி நேரத்திற்கு விளக்கு வெளிச்சத்தின் முன் நிறுத்தப்படுகிறது. மிக பிரகாசமான வெளிச்சம்(Very bright light) அந்த படத்தை லென்ஸ்(lens) வழியாக திரையில் பெரிதாகக் காட்டுகிறது.
ஒரு அடி நீள பிலிமில் 16 படங்கள் வரும். ஒரு வினாடி நேரத்திற்குள் 24 படங்கள் ப்ரொஜக்டரில் ஓடுகிறது. ஆக திரையில் நாம் பார்க்கும் ஒவ்வொரு வினாடிக்கும் ஒன்றரை அடி படச்சுருள் தேவைப்படுகிறது. ஒரு நிமிடத்திற்கு 90 அடி, ஒரு மணி நேரத்திற்கு 5,400 அடி (கிட்டதட்ட 1.8 கிலோமீட்டர்! )
இரு படங்களுக்கு இடையிலான கருப்பு பட்டை ஓடும் போது ப்ரொஜக்டரில் விளக்கிற்கு முன் ஒரு இறக்கை (ஷட்டர்-shutter) வெளிச்சத்தை மூடி திறக்கிறது. இதுவும் ஒரு வினாடிக்கு 24 முறை இயங்கும். இது இல்லாவிட்டால் படம் குதிப்பது போல இருக்கும்.
தற்போது புதுவிதமான தொழில்நுட்பத்தில் திரையில் காண்பிக்கக்கூடிய வகையில் projector -கள் வந்துவிட்டன. குறிப்பாக சொல்வதென்றால் portable projector கள். இத்தகைய மின்னணு தொழில்நுட்பத்தில் இயங்ககூடிய புரோஜக்டர்கள் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் விற்பனைக்கு வந்துள்ளது.
மின்னணு ஒளிப்படங்களையே இப்போது திரையிட்டுக் காண்பிக்கின்றனர்.
செல்போனில் எடுக்கும் வீடியோ படங்கள், போட்டோக்கள்.. இப்படி உடனுக்குடனேயே திரையில் போட்டுக் காண்பிக்கும் வகையில் கூடிய வசதிகளும் வந்துவிட்டன. ஒரு பொருளின் கண்டுபிடிப்பு தற்போதைய தொழில்நுட்பத்தில் எவ்வளவு எளிமையாகியிருக்கிறது என்று பாருங்கள்.. காலம் வேகமாக, விரைந்து செல்கிறது.. யாருடைய துணையையும் எதிர்பார்க்காமல்...!!!!
தற்போதைய மின்னணு தொழில்நுட்ப புரொஜக்டர்களின் படங்கள் ஒரு சில..!!
பதிவு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள். நன்றி நண்பர்களே..!!
0 comments:
Post a Comment