தகவல் தொழில்நுட்ப முதல் தமிழ் வலைத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

Thursday, May 24, 2012

உங்கள் கணினியை சுத்தமாக்க ஓர் மென்பொருள்

 வளர்ந்து வரும் தொழில்நுட்பதிர்க்கு ஏற்ப நம் கணினியையும் பாதுகாப்பாக வைத்து கொள்வது நல்லது. நம் கணினியில் உள்ள தேவையில்லாத பைல்களை அழிக்க நம்மில் பெரும்பாலானோர் CCleaner என்ற மென்பொருளை உபயோகித்து கொண்டு இருக்கிறோம். உபயோகிப்பதற்கும் மிகவும் சுலபம். 

  புதிய பதிப்பு 64-bit கணினிகளும் உபயோகிக்கும் வரையில் வடிவமைக்க பட்டுள்ளது.இந்த பதிப்பில் ஒரு புதிய வசதிTools - Drive Wiper. இந்த வசதி மூலம் நம்முடைய கணினியில் தேவையற்ற பைல்களை தேடுவதில் அதிக கவனம்.குரோம், IE9 சப்போர்ட் செய்வதில் மேம்படுத்தப்பட்டுள்ளது.அதிவேகமாக இயங்க கூடியது. அதிகபட்சம் 2 நிமிடத்திற்குள் நம் கணினியை சுத்தம் செய்து விடலாம். 


http://www.piriform.com/ccleaner  இந்த லின்கினூடாக மென்பொருளை தரவிறக்கிக் கொள்ளுங்கள் .இன்ஸ்ரோல் செய்து முடித்ததும் விண்டோ ஒன்று வரும். அதில் உள்ளAnalyze என்ற பட்டனை அழுத்தவும். இப்பொழுது உங்கள் கணினியில் உள்ள நீக்க வேண்டிய பைல்கள் அனைத்தும் உங்களுக்கு scan ஆகி வரும். 

இப்பொழுது நீங்கள் அதற்கு அருகில் உள்ள Run Cleaner என்ற பட்டனை அழுத்தியவுடன் உங்கள் கணினியில் உள்ள அனைத்து தேவையில்லாத பைல்களும் அழிந்து விடும். உங்களுக்கு Cleaning Complete என்ற செய்தி வரும். அவ்வளவு தான் உங்கள் கணினி சுத்தம் செய்ய பட்டு விட்டது.இதே முறையில் நீங்கள் உங்கள் Registry சுத்தம் செய்து கொள்ளுங்கள். 

Wednesday, May 23, 2012

உங்கள் கணினி பாஸ்வேர்ட் மறந்து போனால்

விண்டோஸ் எக்ஸ்பி இயங்கு தளத்தில் பயனர் கணக்கை (user account) உருவாக்கி அதனை எவரும் அணுகா வண்ணம் பாஸ்வர்ட் மூலம் பாதுகாப்பளிக்கவும் முடியும் என்பது நீங்கள் அறிந்த விடயமே.


அப்படி நீங்கள் உருவாக்கும் பயனர் கணக்குக்குரிய பாஸ்வர்ட் ஒருவேளை மறந்து போனால் விண்டோஸில் டிபோல்டாக உருவாக்கப்படும் அட்மினிஸ்ட் ரேட்டர் (administrator) கணக்கு மூலம் லாக் ஓன் செய்து அதனை நீக்க முடியும்.
இந்த அட்மினிஸ்ட்ரேட்டர் கணக்குக்குப் பாஸ்வர்ட் இட்டுக் கொள்வோரும் உண்டு. இப்போது அந்த அட்மினிஸ்ட்ரேட்டர் கணக்குக் குரிய பாஸ்வர்டும் மற்ந்து போனால் என்ன செய்வது?
அதற்கும் ஒரு தீர்விருக்கிறது. எனினும் இந்த வழிமுறை ஓரளவு சிக்கலானது. விண்டோஸைப் புதிதாக நிறுவும் முறையை அறிந்திருப்போருக்கு இது இலகுவான விடயமே.
முதலில் கணினியை இயக்கி சிடியிலிருந்து பூட் ஆகுமாறு பயோஸ் (BIOS) செட்டப்பில் மாற்றி விடுங்கள். கணினியை மறுபடி இயக்கி விண்டோஸ் எக்ஸ்பீ சிடியை ட்ரைவிலிட Press any key to boot from CD எனும் செய்தி திரையில் தோன்றும். அப்போது ஒரு விசையை அழுத்த சிடியிலிருந்து கணினி பூட் ஆக ஆரம்பிக்கும். இது விண்டோஸை நிறுவும் செயற்பாட்டில் முதற்படியாகும்.
இந்த செயற்பாட்டில் கணினியைப் பரிசோதித்து பைல்கள் லோட் செய்யப்பட்டதும் Licensing Agreement திரை தோன்றும். அப்போது F8 விசையை அழுத்தியதும் வரும் திரையில் புதிதாக விண்டோஸை நிறுவுவதா அல்லது ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளதை சரி செய்வதா (Repair) என வினவும். அப்போது கீபோர்டில் R கீயை அழுத்தி ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள விண்டோஸை சரி செய்வதற்கான விருப்பை தெரிவு செய்யவும்.
அடுத்து கணினி மறுபடி இயங்க ஆரம்பித்து (restart) ஒரு சில நிமிடங்களில் திரையின் இடது புறத்தில் Installing Devices எனும் செயற்பாடு நடைபெறக் காணலாம். இந்த இடத்தில்தான் நீங்கள் செயற்பட வேண்டியுள்ளது.
இங்கு கீபோர்டில் SHIFT + F10 விசைகளை ஒரே நேரத்தில் அழுத்துங்கள். அப்போது திரையில் கமாண்ட் விண்டோ தோன்றும். கமாண்ட் ப்ரொம்டில் NUSRMGR.CPL என டைப் செய்து எண்டர் கீயை அழுத்த கண்ட்ரோல் பேனலிலுள்ள User Accounts விண்டோ திறக்கக் காணலாம். இங்கு நீங்கள் விரும்பும் பயனர் கணக்குக்குரிய பாஸ்வர்டை மாற்றவோ நீக்கவோ முடியும்.,
ஒரு யூசர் கணக்கில் நுளையும்போது அதாவது லொக்-ஓன் செய்யும் போது பாஸ்வர்டை வினவாமல் செய்ய அதே கமாண்ட் ப்ரொம்டில் control userpasswords2 என டைப் செய்து எண்டர் கீயை அழுத்துங்கள்.
அங்கு அட்மினிஸ்ட்ரேட்டர் கணக்குக்குரிய பாஸ்வர்டை மாற்றவோ அல்லது நீக்கவோ (Reset password) ரீசெட் பாஸ்வர்ட் பட்டனில் க்ளிக் செய்து மாற்றிக் கொள்ளலாம்.
மாற்றங்கல் செய்த பின்னர் அந்த டயலொக் பொக்ஸை மூடிவிட்டு விண்டோஸ் ரிபெயாரிங் செயற்பாடு பூர்த்தியாகும் வரை அதனைத் தொடர வேண்டும்.

Sunday, May 20, 2012

கூகுள் வடிவத்தில் லோகோ உருவாக்க

இணையம் என்றால் முதலில் நமக்கு ஞாபகம் வருவது கூகுள் தான். கூகுள் ஸ்டைலில் நமக்கு வேண்டிய பெயரை உருவாக்கலாம். இதற்காக போட்டோஷோப் போன்ற எடிட் மென்பொருட்கள் தெரிய வேண்டுமென்ற அவசியம் இல்லை. மற்றும் இதை செய்ய வெறும் இரண்டு நிமிடங்களே அதிகம். இது போல் நமக்கு தேவையான பெயரையும் உருவாக்கி கொள்ளலாம்.

              இந்த பணியை சுலபமாக செய்ய ஒரு தளம் உள்ளது. www.goglogo.com/இந்த லின்கினூடாக தளம் செல்லவும். இந்த தளம் சென்றவுடன் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.  

ENTER YOUR NAME என்ற இடத்தில் உங்களுக்கு தேவையான பெயரை கொடுத்து விடவும்.அடுத்து அருகில் உள்ள Create My Search Page என்ற பட்டனை அழுத்தவும். அடுத்து உங்களுக்கு வரும் பக்கத்தில் நீங்கள் கொடுத்த பெயர் கூகுள் ஸ்டைலில் வந்திருக்கும்.


இது போன்று நீங்கள் கொடுத்த பெயர் கூகுள் ஸ்டைலில் வந்திருக்கும். அதன் மீது மவுசில் வலது க்ளிக் செய்து SAVE IMAGE AS என்பதை தேர்வு செய்து உங்கள் கணினியில் சேமித்து கொள்ளுங்கள்.இதில் நீங்கள் சேமிக்கும் பொது ஒவ்வொரு எழுத்தாக தான் சேமிக்க முடியும். 

Wednesday, May 16, 2012

கணினி மொழிகள்

கணினி மொழிகள் என்பதை நிரல் ஏற்பு மொழி என தூய தமிழில் அழைக்கிறார்கள். இது கட்டளைகளின் மூலம் கணினியைச் செயல்பட வைப்பதாகும். சிறு கணினியின் ஒரு சின்ன செயற்பாடு முதல் ஒரு எந்திரனின் செயற்பாடு (Robot)வரை நிர்ணயம் செய்வது கணினி மொழிகள்தான்.

கணினி மொழிகளை உருவாக்குபவர்களை மென்பொறியாளர்கள் (software engineer) என அழைக்கிறோம். 

ஓவ்வொரு வருடமும் ஏராளமான புதிய கணினி மொழிகள் பயன்பாட்டிற்கு வருகின்றன. தற்போதைய நிரல் ஏற்பு மொழிகள் பயன்பாட்டு எளிமைக்காக ஆங்கில வாக்கியங்களாகவோ , வார்த்தைகளாகவோ இருக்கின்றன. இந்த நிரல் ஏற்பு மொழிகள் கணினியிலுள்ள இயந்திர மனசுக்குப் புரியும் விதமாக கொம்பைலர் (compiler) மென்பொருட்களால் இயந்திர மொழியாய் மாற்றப்பட்டு கணினியை செயல்பட வைக்கிறது என்பது அடிப்படை செயற்பாடாகும். 

C++, Java போன்றவை இப்போது அதிக அளவில் பயன்பாட்டில் உள்ள கணினி மொழிகளில் சிலவாகும். ஓவ்வொரு இயக்கு தளத்திற்கும் ஏற்பு கணினி மொழிகளும் வேறுபடும். இந்த நிரல் ஏற்பு மொழிகள் இல்லாமல் கணினியே இல்லை எனும் நிலை இருப்பதால்தான் இன்று மென்பொருள் நிறுவனங்கள் பெருமளவு வளர்ச்சியடைந்துள்ளன.

Tuesday, May 15, 2012

டிவி க்களில் ஸ்கைப்...









வாய்ஸ் ஓவர் புரோட்டோகால் தொழில் நுட்பத்தின் உதவியுடன் இன்டர்நெட் இணைப்பில் உள்ள இருவர், தங்களின் பெர்சனல் கம்ப்யூட்டர், மொபைல் போன், கார்ட்லெஸ் போன், வீடியோ போன் ஆகியவற்றின் மூலம் திரையில் ஒருவரை ஒருவர் பார்த்து உரையாடிக் கொள்ளலாம். இதனால் ஆயிரக்கணக்கான மைல்கள் தள்ளி இருப்பவர்கள் கூட ஒரே அறையில் அமர்ந்து பேசுவது போன்ற நிலை ஏற்பட்டு வருகிறது. இந்த வகையில் இலவச அப்ளிகேஷன் புரோகிராம்களைப் பல நிறுவனங்கள் அளித்து வந்தாலும், ஸ்கைப் இதில் முன்னணி இடம் பிடித்துள்ளது.
இனி இந்த வகைத் தொடர்பினை, "டிவி'க்கள் வழியாகவும் தருவதற்கு ஸ்கைப் முன்வந்துள்ளது. முதன் முதலாக "டிவி'க்களில் இந்த தொழில் நுட்பத்தினை ஸ்கைப் கொண்டு வருகிறது.
இதற்கான ஒப்பந்தத்தினை எல்.ஜி. மற்றும் பானாசோனிக் நிறுவனங்களுடன் மேற் கொண்டுள்ளது. இந்த இரு நிறுவனங்களும் இன்டர்நெட் வசதி இணைந்த "டி.வி'க்களைத் தயாரித்து வழங்கி வருகின்றன.
இணையத் தொடர்பினை மேற்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்படும் தொலைக் காட்சிப் பெட்டிகள் மூலம் வீடியோ அழைப்புகளை மேற்கொள்ளலாம். இதற்கான புரோகிராமினை ஸ்கைப் வழங்குகிறது. பானாசோனிக் நிறுவனம் இது பற்றிக் கூறுகையில் தங்களின் 2010 Viera Castenabled HDTV செட்களை வைத்திருப் பவர்கள் இந்த தொழில் நுட்பத்தை எளிதில் பயன்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளது.
வர்த்தக ரீதியாகப் பொது மக்களுக்கு இந்த வகை "டிவி'க்கள் வரும் மாதங்களில் கிடைக்கும். எல்.ஜி. நிறுவனம் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் Netcast Entertainment Access தொழில் நுட்பம் உள்ள தங்கள் நிறுவனத்தின் 26 மாடல் எல்.இ.டி., எல்.சி.டி. மற்றும் பிளாஸ்மா டிவிக்களில் ஸ்கைப் புரோகிராமினைப் பயன்படுத்தி வீடியோ கால்களை மேற்கொள்ளலாம் என்று கூறியுள்ளது.
வீடியோ அழைப்புகளை இந்த "டிவி'க்கள் மூலம் மேற்கொள்ள, இந்த இரு நிறுவனங்களும், மைக்ரோபோன் இணைந்த வீடியோ கேமராக்களை "டிவி'க்களில் இணைக்கும் வகையில் வடிவமைத்துத் தர இருக்கின்றன. இன்டர்நெட் இணைப்பு குறித்துக் கூறுகையில் குறைந்தது விநாடிக்கு 1 மெகா பிட் வேகம் உள்ள இணைப்பு வேண்டும் என ஸ்கைப் அறிவித்துள்ளது.
ஸ்கைப் இணைக்கும் வகையில் உள்ள டிவிக்களை எல்.ஜி. வரும் ஏப்ரல் மாதத்திற்குள்ளும், ஸ்கைப் இணைந்த எச்.டி.டி.விக்களை வரும் மார்ச் மாதத்திற்குள் பானாசோனிக்கும் தருவதாக உறுதி அளித்துள்ளன.
இதுவரை உயர் தொழில்நுட்ப ஆய்வு மையங்கள், சில சிறப்பு கருத்தரங்க அமைப்புகளில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த இந்த தொழில் நுட்பம் மக்களுக்காக வர்த்தக ரீதியில் கிடைக்கப் போகிறது என்பது, தொலை உணர்வு வசதியை மக்களுக்கு அளிப்பதில் நாம் இன்னும் ஒரு படி உயர்கிறோம் என்பதைக் காட்டுகிறது.
இனி பல்லாயிரக்கணக்கான மைல் தொலைவில் வசிக்கும் தங்கள் பிள்ளைகளை, பெற்றோர்கள் தங்கள் டிவி திரைகள் மூலம் தங்களின் வீடுகளுக்கே கொண்டு வந்து பார்த்துப் பேசி மகிழலாம்.

Wednesday, May 9, 2012

கூகுலின் புதிய சமூக வலைப்பின்னல் வசதி









ஒரு பக்கம் ஃபேஸ்புக் வளர்ந்த் கொண்டே போகிற‌து .இன்னொரு புறம் டிவிட்டர் சக்கைபோடு போடுகிறது.இரண்டுமே சமூக வலைப்பின்னல் தளங்கள்.பகிர்வும் ,சக இணையவாசிகளோடு கைகோர்ப்பதுமே இவற்றின் பலமாக இருக்கிறது. இந்த இரண்டுமே போட்டிபோட்டுக்கொண்டு பிரபலமாகி வருகின்றன.இதனால் தேடல் கொஞம் பின்னுக்குத்தள்ளப்பட்டது போல தோன்றுகிறது. இவ்வளவு ஏன் ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டர் பயன்பாடு காரணமாக் இமெயிலை பயன்படுத்துவதே குறைந்து வருவதாக கூற‌ப்படுகிற‌து.

தேடல் முதல்வன் கூகுலுக்கு இதைவிட கவலை தரக்கூடியது வேறில்லை. ஃபேஸ்புக் ம‌ற்றும் டிவிட்ட‌ர் ச‌வாலை ச‌மாளிக்கும் வ‌கையில் கூகுல் த‌ன‌து ஜிமெயில் சேவை வாடிக்கையாள‌ர்க‌ளுக்கான‌ ச‌முக வ‌லைப்புன்ன‌ல் வ‌ச‌தியை அறிமுக‌ம் செய்துள்ள‌து.

கூகுல் பஸ் என்னும் இந்த சேவையின் மூல‌ம் ஜிமெயில் ப‌ய்னாளிக‌ள் புகைப்ப‌ட‌ம் செய்தி ம‌ற்றும் இணைப்புக‌ளை ம‌ற்ற‌வ‌ர்க‌ளோடு சுல‌ப‌மாக் ப‌கிர்ந்து கொள்ள‌லாம்.அத‌வ‌து ஜிமெயிலை விடவெளியேறாம‌லேயே ஃபேஸ்புக் ,டிவிட்ட‌ர் த‌ரும் வ‌ச‌தியை ப‌ய‌ன்ப‌டுத்திக்கொள்ள‌லாம். முத‌ல் க‌ட்ட‌மாக‌ தேர்ந்தெடுக்க‌ப்ப‌ட்ட‌ ப‌ய‌னாளிக‌ளுக்கு இந்த‌ சேவைக்கான‌ அழைப்பு அனுப்ப‌ ப‌ட்டுள்ள‌து.அடுத்த‌ க‌ட்ட‌மாக‌ அனைவ‌ருக்கும் விரிவு ப‌டுத்த‌ப்ப‌டும் என‌ எதிர்பார்க்க‌ப்ப‌டுகிற‌து.

இத‌ற்கான‌ ப‌க்க‌ம் அழ‌காக‌வே உள்ள‌து. ஐபோனுக்கான‌ த‌னி செய‌லியும் அறிமுக‌மாகியுள்ள‌து.இந்த‌ சேவை மூல‌ம் கூகுல் இண்டெர்நெட் உல‌கில் த‌ன‌து முன்ன‌ணி இட‌த்தை த‌க்க‌ வைத்துக்கொள்ள‌ முய‌ற்சி செய்துள்ள‌து.

Friday, April 27, 2012

பேஸ்புக்கில் உள்ள புகைப்படங்களை பதிவிறக்கம் செய்வதற்கு


பேஸ்புக் தளமானது நண்பர்களிடம் தகவல்களை பரிமாறிக் கொள்ள உதவும் தளம் ஆகும்.
இந்த தளத்தில் நம்முடைய கருத்துக்கள், புகைப்படங்கள், வீடியோக்கள், சுயதகவல்களை உள்ளிட்டு அதனை நண்பர்களிடம் பரிமாறிக் கொள்ள முடியும். இதில் உள்ள தகவல்களை நாம் தரவிறக்கி பயன்படுத்தி கொள்ள முடியும்.
ஆனால் நாம் தரவிறக்கம் செய்வதற்கான வழிகள் யாவும் பேஸ்புக் தளத்தில் நேரிடையாக கொடுக்கப்பட்டிருக்காது. எனவே பேஸ்புக் தளத்தில் உள்ள வீடியோ, புகைப்படங்களை தரவிறக்கம் செய்ய வேண்டுமெனில் மூன்றாவது வழியை மட்டுமே நாட வேண்டும்.
புகைப்படங்களை தரவிறக்கம் செய்ய வேண்டுமெனில் அதற்கும் பல்வேறு வழிகள் இணையத்தில் உள்ளன. அதில் ஒன்று தான் கூகுள் குரோம் உலவியை பயன்படுத்தி பேஸ்புக் புகைப்படத்தினை தரவிறக்கம் செய்தல் ஆகும்.
கூகுள் குரோம் உலவியினை திறந்து இந்த நீட்சியை பதிந்து கொள்ளவும். பின் ஒருமுறை கூகுள் குரோம் உலவியினை மறுதொடக்கம் செய்து கொள்ளவும். பின் பேஸ்புக் கணக்கை திறந்து எந்த புகைப்படங்களை பதிவிறக்கம் செய்ய வேண்டுமோ அந்த இடத்திற்கு செல்லவும்.
உதாரணமாக உங்களுடைய நண்பரின் புகைப்படங்களை தரவிறக்கம் செய்ய வேண்டுமெனில் அவருடைய பேஸ்புக் கணக்கிற்கு சென்று அவருடைய புகைப்பட பட்டியை அழுத்தி புகைப்பட மெனுவிற்கு செல்லவும். இப்போது Download Facebook album's photos என்னும் ஐகானை அழுத்தவும்.
அடுத்ததாக தோன்றும் விண்டோவில் "Ctrl+S" ஐகான்களை ஒருசேர அழுத்தி படங்களை கணணியில் சேமித்துக் கொள்ள முடியும். முழு வலைப்பக்கமும் சேமிக்கப்பட்டு விடும். இந்த நீட்சியானது பேஸ்புக் படங்களை மிக துல்லியமாக தரவிறக்கம் செய்ய உதவுகிறது. மேலும் உங்களுடைய நண்பர்களுடைய புகைப்படங்களை மிக எளிதாக தரவிறக்கம் செய்ய இந்த நீட்சி உதவும்.

பயன் தரும் தளங்கள்

இன்றைய நமது செய்தியாக உங்களுக்கு பயன் தரக்கூடிய தளங்கள் சில 


1) அனைத்து முக்கிய மென்பொருள்களினதும் பழைய தொகுப்புக்களினை தரவிறக்கம் செய்து கொள்ளக்கூடிய ஓர் தளம் 
இணையதள முகவரி : http://www.oldversion.com 2) இணையத்தில் நமது புகைப்படங்களை இலக்கங்களாக மாற்றும் ஓர் தளம் 

இணையதள முகவரி : http://www.picascii.com 

3) 3D-ல் படம் வரையக்கற்றுத்தரும் ஓர் தளம் 

இணையதள முகவரி : http://www.3dtin.com 

4) கார்களை பழுதுபார்க்கக் கற்றுத்தரும் ஓர் தளம் 

இணையதள முகவரி http://www.vehiclefixer.com 
5) இணையத்தில் யுனிட் கன்வர்டர் செய்யக்கூடிய ஓர் தளம் 

இணையதள முகவரி : http://www.digitaldutch.com/unitconverter/ 
6) இணையத்தினூடாக பி.டி.எப் பைல்களை எக்செல் பைல்களாக மாற்ற உதவும் ஓர் தளம் (PDF to Excel) 

இணையதள முகவரி : http://www.pdftoexcelonline.com 
7) இணையத்தினூடாக உங்கள் புகைப்படத்தை முப்பரிமாணமாக (3D) மாற்ற ஓர் தளம் 

இணையதளமுகவரி : http://3d-pack.com 
8) உங்கள் ஓவியப்படைப்புகளை விற்பனை செய்ய ஓர் தளம் 

இணையதள முகவரி : http://www.artflock.com 9) யுடியூப் வீடியோவினை எம்.பி.3 (MP 3 ) பாடலாக மாற்றுவதற்கான ஓர் தளம் 

இணையதள முகவரி : http://www.listentoyoutube.com 
10) கணனியின் அனைத்து மென்பொருட்களிற்குமான சோர்ட்கட்களை கற்றுத்தரும் ஓர் தளம். 

இணையதள முகவரி : http://www.shortcutworld.com ___

Thursday, April 19, 2012

கணணியை முழுவதுமாக ஸ்கேன் செய்வதற்கு


 




நமது கணணியில் உள்ள டிரைவ் எதுவாக இருந்தாலும் சரி அது எந்த அளவு உபயோகிக்கப்பட்டுள்ளது, ஒவ்வொரு கோப்புகளின் அளவு என்ன என தெளிவாக அறிய இந்த மென்பொருளால் முடியும்.
மேலும் இதிலிருந்தே ரீ-சைக்கிள் பின்னை சுத்தம் செய்யலாம். Control Panelல் உள்ள Add Removeல் உள்ள கோப்புகளை நீக்கலாம். வன்தட்டை ஸ்கேன் செய்து காலியிடங்களை பார்க்கலாம்.
இந்த மென்பொருளை தரவிறக்கியதுடன் தோன்றும் விண்டோவில் Download Scanner கிளிக் செய்யவும். அதில் உங்கள் வன்தட்டின் மொத்த விவரம் தெரிய வரும். அந்த விண்டோவில் தோன்றும் எதாவது ஒரு நிறத்தின் மீது கர்சரை வைத்தால் அந்த டிரைவின் பெயர், அதில் உள்ள கோப்பறை, அதில் உள்ள கோப்புகளின் அளவு விவரம் மேல் புறத்தில் தெரிய வரும்.
இதைப் போலவே நீங்கள் உங்கள் வசம் உள்ள அனைத்து டிரைவ்களின் விவரத்தை நொடியில் அறிந்து கொள்ளலாம். வலப்புறம் மேலே உள்ள கட்டத்தை கிளிக் செய்வது மூலம் நேரடியாக Add/Remove Programs சென்று அதில் உள்ளவைகளை நீக்கி பின் ஸ்கேன் டிக்ஸ் செய்து காலியிடங்களை பார்வையிடலாம்.
அதிலேயே கீழே உள்ள ரீ-சைக்கிள் பின் கிளிக் செய்து அதில் உள்ள குப்பைகளை நீக்கலாம்.

Tuesday, April 17, 2012

கணினியில் பிறர் பார்க்கமுடியாதவாறு டிரைவ்வை மறைக்க

ஸ்டார்ட் பட்டன் கிளிக் செய்து ஸ்டார்ட் ரன் என்பதை தேர்வு செய்யவும்
<இப்பொழுது ரன் பாக்ஸ்-ல் cmd என்று டைப் செய்து எண்டர் அழுத்தவும்
(கமாண்ட் பிராம்ட் (command prompt) வரும்)
இப்பொழுது diskpart என்று டைப் செய்து எண்டர் அழுத்தவும்
) இப்பொழுது list volume என்று டைப் செய்து எண்டர் அழுத்தவும்
இப்பொழுது கணினியில் உள்ள அனைத்து தகவல்கள் வரும் இது பற்றி ஒன்றும் யோசிக்க வேண்டியது இல்லை நீங்கள் செய்யவேண்டியது
உங்களுக்கு எந்த டிரைவ் மறைக்க விரும்புகிறீர்களோ அந்த டிரைவ்-ன் எழுத்தை உள்ளீடவும்
உதாரணமாக: volume F என்றால் Select Volume F என்று உள்ளீட்டு எண்டர் அழுத்தவும்
இப்பொழுது இதன் கீழே Volume 0 is the selected volume என்று வரும்
remove letter F என்று உள்ளீட்டு எண்டர் அழுத்தவும்.இப்பொழுது கணினியை ரீ ஸ்டார்ட் செய்யவும் இப்பொழுது டிரைவ் மறைந்திருக்கும்.
மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவர முன் கூறியபடியே முதல் நான்கு நிலைகளையும் செய்து Select Volume F என்று உள்ளீட்டு எண்டர் அழுத்தவும்
அடுத்து assign letter F என்று உள்ளீடவும்
இப்பொழுது கணினியை ரீ ஸ்டார்ட் செய்யவும் மறைந்திருந்த டிரைவ் மீண்டும் கணினியில் இருக்கும்
பின்குறிப்பு :இதனால் உங்கள் கணினியில் உள்ள தகவல்கள் இழக்கபடுவதில்லை

வழிமுறை -2
1) ஸ்டார்ட் பட்டனை கிளிக் செய்து ரன் கமாண்ட் தேர்வு செய்யவும்
2) ரன் கமாண்டில் regedit என்று டைப் செய்யவும் (இப்பொழுது ரிஜிஸ்டரி எடிட்டர் திறக்கும்)
3) இதில் தாங்கள் செல்லவேண்டிய பகுதி
HKEY_CURRENT_USERSoftwareMicrosoftWindowsCurrentVersionPoliciesExplorer
4) Explorer-கிளிக் செய்தவுடன் இதன் வலப்புறம் ஒரு சிறிய விண்டோ தோன்றும்
5) இதில் ஏதேங்கிலும் ஒரு வெற்று இடத்தில் வலது கிளிக் செய்து New என்பதனை தேர்வு செய்து DWORD Value என்பதை தேர்வு செய்யவும் பின்னர் அதை Rename செய்து NoDrives என்று பெயரிடவும்
Drive Value
A: 1
B: 2
C: 4
D: 8
E: 16
F: 32
G:64
H:128
I:256
J:512
K:1024
Z: 33554432

இப்படியாக கூடி கூடி போகும்
6) தங்களுக்கு எந்த டிரைவ் மறைக்க விரும்புகிறீர்களோ அந்த எண்னை NoDrives கிளிக் செய்து Modify என்பதை செலக்ட் செய்து C டிரைவ் என்றால் 4 என்று உள்ளீட்டு
Decimal என்பதை செலக்ட் செய்து OK கொடுக்கவும்

(கணினியை ரீ ஸ்டார்ட் செய்யவும் டிரைவ் மறைந்து போயிருக்கும்)
மீண்டும் மறைத்த டிரைவ் வரவைப்பதற்கு முதல் 5 நிலைகள் சென்று தாங்கள் உண்டாக்கிய NoDrive என்பதை டெலீட் செய்துவிடவும்
(கணினியை ரீ ஸ்டார்ட் செய்யவும் டிரைவ் மீண்டும் வரும்)

Blogger Tips and TricksLatest Tips For BloggersBlogger Tricks

சொயற்படுத்துங்கள்

Blog Archive

Total Pageviews