கணினியின் வேகத்தைக் கூட்ட எளிய வழிகள் – 2
‘நன்றாக இயங்கிக் கொண்டிருந்த என்னுடைய கணினியின் வேகம் இப்போது வெகுவாகக் குறைந்துவிட்டது. கணினியைத் தொடங்குவதற்கே நான் சில மணித்துளிகள் காத்திருக்க வேண்டியிருக்கிறது’ என்று கவலைப்படுகிறீர்களா? கவலையை விடுங்கள்.
உங்கள் கணினி தொடங்க எடுத்துக்கொள்ளும் நேரத்தை நாம் எளிதாகக் குறைத்து விடலாம்.
- ‘Start’ பொத்தானை அழுத்தி ‘Run’ என்னும் சுட்டியைத் தேர்ந்துகொள்ளுங்கள். அதில் உள்ள வார்த்தைப் பெட்டியில் ‘msconfig’ எனத் தட்டச்சிட்டு ‘Ok’ எனக் கொடுத்துவிடுங்கள்.
- கீழுள்ளவாறு பெட்டி தோன்றும். அதில் படத்தில் உள்ளது போல ‘Startup’ என்னும் தத்தலைத் தேர்ந்துகொள்ளுங்கள்.
- அதில் உள்ள பட்டியலைப் பாருங்கள். இப்பட்டியலில் உள்ள ‘✓’ என்னும் குறியிடப்பட்டுள்ள ஒவ்வொரு மென்பொருளையும் கணினி தொடங்கும்போது தானாகவே தொடக்கிவிடும். இது தான் உங்கள் கணினி தொடங்க நீண்ட நேரம் எடுத்துக்கொள்வதன் காரணமாகும்.
- இப்பட்டியலில் இருந்து நீங்கள் அடிக்கடி பயன்படுத்தாத மென்பொருள்களின் பெயர்களுக்கு நேரே உள்ள ‘✓’ என்னும் குறியை நீக்கி விடுங்கள். (எ.கா. நீங்கள் ‘Google Talk’ மென்பொருளை எப்போதும் பயன்படுத்த மாட்டீர்கள். இணையத்தில் இருக்கும்போது மட்டும் தான் பயன்படுத்துவீர்கள் எனில் அதற்கு நேர் உள்ள ‘✓’ என்னும் குறியை நீக்கிவிடலாம்) பின்னர் ‘Apply’, ‘OK’ என்பனவற்றைக் கொடுத்து விடுங்கள்.
- இப்படித் தேவையில்லாத மென்பொருள்களை இப்பட்டியலில் இருந்து நீக்குவது அம்மென்பொருள்களுக்கு எவ்விதச் சிக்கலையும் ஏற்படுத்திவிடாது. தேவைப்படும்பொழுது அம்மென்பொருள்களை வழக்கம் போல் நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். அதே சமயம் உங்கள் கணினியின் இயக்க வேகம் கூடியிருக்கும்.
0 comments:
Post a Comment