கணினியின் வேகத்தைக் கூட்ட எளிய வழிகள் – 1
பல செயலிகளை ஒரே நேரத்தில் கணினியில் பயன்படுத்துபவரா நீங்கள்? கணினியின் வேகம் வெகுவாகக் குறைந்து விட்டது; அதன் செயல் வேகத்தைக் கூட்ட என்ன செய்யலாம் என்று நினைக்கிறீர்களா? கவலையை விடுங்கள். கீழுள்ள படிநிலைகளைக் கையாண்டு உங்கள் கணினியின் வேகத்தை எளிதாகக் கூட்டி விடலாம். இப்பதிவில் உள்ள படங்கள் ‘விண்டோசு ஏழு’ இயங்குதளத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன. பிற இயங்குதளங்களுக்கும் வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
‘Start’ பொத்தானை அழுத்தி வரும் பட்டியில் ‘Computer’ (பிற இயங்கு தளங்களில் My Computer) என்பதன் மேல் வலப்புறம் சொடுக்குங்கள்.
அப்பட்டியலில் ‘Properties’ என்பதைத் தேர்ந்துகொள்ளுங்கள். வரும் பக்கத்தின் கீழ் இடப்புறத்தில் ‘Performace Information and Tools’ என்னும் சுட்டி இருக்கும். அதைத் தேர்ந்து கொள்ளுங்கள். (பிற தளங்களுக்கு: ‘Properties’ என்பதன் பின் ‘System Properties’ என்பதைத் தேர்ந்துகொள்ளுங்கள்.)
இப்போது நீங்கள் பார்க்கும் பக்கத்தின் மேல் இடப்புறத்தில் ‘Adjust visual effects’ என்னும் இணைப்பு இருக்கும். (பிற தளங்களுக்கு: ‘System Properties’ பெட்டியில் ‘Advanced Tab’ என்னும் தத்தலைத் தேர்ந்து கொள்ளுங்கள். அதில் ‘Performance’ -> Performance Options -> Visual Effects’ என்பதைத் தேர்ந்துகொள்ளுங்கள்.)
இப்போது கீழுள்ளது போலப் பெட்டி தோன்றும். அதில் படத்தில் இருப்பது போல ‘Adjust for best performance’ என்பதைத் தேர்ந்தெடுத்து ‘Apply’ மற்றும் 'Ok' கொடுத்து விடுங்கள்.
பிறகென்ன உங்களுடைய கணிப்பொறியின் வேகத்தை ஓரளவு இப்போது நாம் கூட்டிவிட்டோம்.
0 comments:
Post a Comment