கணினியின் வேகத்தைக் கூட்ட எளிய வழிகள் – 4
உங்கள் கணினியின் திரையில் அதிக எண்ணிக்கையில் சின்னங்களை (‘Icon’) வைத்திருப்பது கணினியின் வேகத்தை மட்டுப்படுத்தும்.
எப்படி?
கணினித் திரையில் உள்ள சின்னங்கள் அனைத்தையும் பயனர் அடிக்கடி பயன்படுத்துவார் என்பதால் கணினி தொடங்கும்போது இச்சின்னங்களின் நினைவக முகவரிகளைத் தேடிச் சென்று அதுவே எடுத்து வந்து விடும். இப்படி எடுத்து வந்து, பயனர் அச்சின்னத்தைச் சொடுக்கும்போது அம்மென்பொருள் இயங்குவதற்கான ஆயத்த நிலையில் கணினி எப்போதுமே இருக்கும். இப்படிப் பல சின்னங்கள் இருக்கும்போது ஒவ்வொரு சின்னத்தின் நினைவக முகவரியையும் தேடி எடுத்து ஆயத்த நிலையில் இருக்கக் கணினிக்கு நேரம் பிடிக்கும். எனவே தான் அச்சூழலில் கணினி மெதுவாக இயங்கும்.
இதைத் தவிர்க்கத் தேவையான சின்னங்கள் தவிர, பிற சின்னங்களை நீங்கள் திரையில் இருந்து நீக்கிவிட்டால் கணினியின் வேகம் மீண்டும் பழைய நிலைக்கு வரும்.
0 comments:
Post a Comment