தகவல் தொழில்நுட்ப முதல் தமிழ் வலைத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

Tuesday, November 4, 2014

தமிழ்,அரபிக் உட்பட 22 மொழியில் டைப் செய்வதற்கு உதவும் Google-இன் அருமையான அப்ளிகேஷன்.Google Input Tools (வீடியோ இணைப்பு)



                                 தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்
பல்வேறு வகையான தொழில்நுட்ப சேவைகளை வழங்கிவரும் கூகுள்  நிறுவனம் தற்போது Google Input Tools எனும் புத்தம் புதிய  அப்ளிகேஷன்னை  அறிமுகப்படுத்தியுள்ளது. Google Input Tools மூலம் கணனியின் எந்த ஒரு இடத்திலும் தமிழ், அரபிக் உட்பட 22 மொழிகளில் எவ்வித சிரமமுமின்றி தட்டச்சு செய்ய முடியும்.

                                                

     
                   Google Input Tools  இந்த லிங்கில் டவுன்லோட் செய்யலாம்

                                            

(வீடியோ இணைப்பு) 
இந்த மென்பொருள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். நண்பர்களுக்கும் தளத்தை அறிமுகம் செய்து வையுங்கள்.

Monday, November 3, 2014

சார்ஜ் தீர்ந்து போய்விடுகிறதா? உங்களுக்கான சூப்பர் டிப்ஸ்

நவீன காலக்கட்டத்தில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரையுமே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது ஸ்மார்ட் போன்கள்.
ஸ்மார்ட் போன் இல்லை என்றால் பொழுதே விடியாது என்ற நிலை தான் உள்ளது.

திடீரென ஸ்மார்ட் போனில் சார்ஜ் குறைந்து போனால் அவ்வளவு தான், அந்த அவஸ்தையை அனுபவித்து பார்த்தவர்களுக்கு தான் தெரியும்.

பற்றரியின் ஆற்றலுக்கு வரம்பு இருந்தாலும் கொஞ்சம் கவனமாக இருந்தால் பற்றரியின் ஆயுளையும், அதன் சார்ஜிங் ஆற்றலையும் அதிகரிக்கலாம்.


1. வெப்பநிலை உங்கள் பற்றரியை பாதிக்கலாம். போனைக் கூடுமானவரை சூரிய ஒளியில் நேரடியாகப் படும்படி வைப்பதைத் தவிர்க்கவும். இது குளிருக்கும் பொருந்தும்.

2. பற்றரியை முழுவதும் சார்ஜ் செய்வது நல்லது. ஆனால், உண்மையில் முழு சார்ஜ் செய்யாமல் பகுதி அளவு சார்ஜ் செய்வது ஏற்றது என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர், அதாவது  40-80 சதவிகிதம் வரை போதுமானதாம்.

3. சார்ஜிங்கில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம், முழுவதும் சார்ஜான பிறகு பிளக் செய்யப்பட்ட நிலையிலேயே விடுவதைத் தவிர்க்கவும். அதிகமாக சார்ஜ் ஆவதும் பற்றரியை பாதிக்கும்.

4. அதே போல அதிவிரைவு சார்ஜர் மற்றும் போலி சார்ஜர்களைப் பயன்படுத்தாமல் இருப்பதும் நல்லது.

Sunday, November 2, 2014

உங்கள் கணனி Password மறந்து போனால்...?

விண்டோஸ் எக்ஸ்பி இயங்கு தளத்தில் பயனர் கணக்கை (user account) உருவாக்கி அதனை எவரும் அணுகா வண்ணம் பாஸ்வர்ட் மூலம் பாதுகாப்பளிக்கவும் முடியும் என்பது நீங்கள் அறிந்த விடயமே.
அப்படி நீங்கள் உருவாக்கும் பயனர் கணக்குக்குரிய பாஸ்வர்ட் ஒருவேளை மறந்து போனால் விண்டோஸில் டிபோல்டாக உருவாக்கப்படும் அட்மினிஸ்ட் ரேட்டர் (administrator) கணக்கு மூலம் லாக் ஓன் செய்து அதனை நீக்க முடியும். இந்த அட்மினிஸ்ட்ரேட்டர் கணக்குக்குப் பாஸ்வர்ட் இட்டுக் கொள்வோரும் உண்டு. இப்போது அந்த அட்மினிஸ்ட்ரேட்டர் கணக்குக்குரிய பாஸ்வர்டும் மற்ந்து போனால் என்ன செய்வது?


அதற்கும் ஒரு தீர்விருக்கிறது. எனினும் இந்த வழிமுறை ஓரளவு சிக்கலானது. விண்டோஸைப் புதிதாக நிறுவும் முறையை அறிந்திருப்போருக்கு இது இலகுவான விடயமே.


முதலில் கணனியை இயக்கி சிடியிலிருந்து பூட் ஆகுமாறு பயோஸ் (BIOS) செட்டப்பில் மாற்றி விடுங்கள். கணனியை மறுபடி இயக்கி விண்டோஸ் எக்ஸ்பீ சிடியை ட்ரைவிலிட Press any key to boot from CD எனும் செய்தி திரையில் தோன்றும். அப்போது ஒரு விசையை அழுத்த சிடியிலிருந்து கணனி பூட் ஆக ஆரம்பிக்கும். இது விண்டோஸை நிறுவும் செயற்பாட்டில் முதற்படியாகும்.


இந்த செயற்பாட்டில் கணனியைப் பரிசோதித்து பைல்கள் லோட் செய்யப்பட்டதும் Licensing Agreement திரை தோன்றும். அப்போது F8 விசையை அழுத்தியதும் வரும் திரையில் புதிதாக விண்டோஸை நிறுவுவதா அல்லது ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளதை சரி செய்வதா (Repair) என வினவும். அப்போது கீபோர்டில் R கீயை அழுத்தி ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள விண்டோஸை சரி செய்வதற்கான விருப்பை தெரிவுசெய்யவும்.



அடுத்து கணனி மறுபடி இயங்க ஆரம்பித்து (restart) ஒரு சில நிமிடங்களில் திரையின் இடது புறத்தில் Installing Devices எனும் செயற்பாடு நடைபெறக் காணலாம். இந்த இடத்தில்தான் நீங்கள் செயற்பட வேண்டியுள்ளது. இங்கு கீபோர்டில் SHIFT + F10 விசைகளை ஒரே நேரத்தில் அழுத்துங்கள். அப்போது திரையில் கமாண்ட் விண்டோ தோன்றும். கமாண்ட் ப்ரொம்டில் NUSRMGR.CPL என டைப் செய்து எண்டர் கீயை அழுத்த கண்ட்ரோல் பேனலிலுள்ள User Accounts விண்டோ திறக்கக் காணலாம். இங்கு நீங்கள் விரும்பும் பயனர் கணக்குக்குரிய பாஸ்வர்டை மாற்றவோ நீக்கவோ முடியும்.



ஒரு யூசர் கணக்கில் நுளையும்போது அதாவது லொக்-ஓன் செய்யும் போது பாஸ்வர்டை வினவாமல் செய்ய அதே கமாண்ட் ப்ரொம்டில் control userpasswords2 என டைப் செய்து எண்டர் கீயை அழுத்துங்கள். அங்கு அட்மினிஸ்ட்ரேட்டர் கணக்குக்குரிய பாஸ்வர்டை மாற்றவோ அல்லது நீக்கவோ (Reset password) ரீசெட் பாஸ்வர்ட் பட்டனில் க்ளிக் செய்து மாற்றிக்கொள்ளலாம்.



மாற்றங்கள் செய்த பின்னர் அந்த டயலொக் பொக்ஸை மூடிவிட்டு விண்டோஸ் ரிபெயாரிங் செயற்பாடு பூர்த்தியாகும் வரை அதனைத் தொடரவேண்டும்.

கணனி வேகமாக start செய்ய ...!

நம்ம கணனி நல்ல Configuration-ல இருந்தாலும், அது Boot ஆக ரொம்ப நேரம் எடுத்துக்கும். சில நேரங்கள்ல நம்மளே கடுப்பாயி அணைச்சு போட்டுட்டு போய்டுவோம். கீழ குறிப்பிட்டுறுக்கிற மாதிரி வழிமுறைகள்ல பின்பற்றினா… உங்க கணனி வேகமா Boot ஆகும்.




வழிமுறைகள்


1. நோட்பேட் (Notepad) திறந்து, “del c:\windows\prefetch\ntosboot-*.* /q” (கொட்டேஷன் இல்லாம) தட்டச்சு செய்யுங்க, பின்னர் “ntosboot.bat” – னு
c:\ – ல சேமிச்சு (Save) வையுங்க.
2. Start menu போய், “Run…” செலக்ட் பண்ணுங்க, “gpedit.msc”-னு தட்டச்சு செய்யுங்க.

3. இப்ப “Computer Configuration” – ன, டபுள் கிளிக் பண்ணுங்க, உள்ள “Windows Settings” டபுள் கிளிக் பண்ணி உள்ள போங்க, “Shutdown” – னு இருக்குற ஆப்சன கிளிக் பண்ணுங்க.
4. ஒரு புதிய விண்டோ ஓப்பன் ஆகும், கிளிக் “add”, “Browse”-ல போய், முன்ன சேவ் பண்ணFile, ஓப்பன் பண்ணுங்க.
5. கிளிக் “OK”“Apply” & “OK”,

6. திரும்பவும் “Run…” வந்து, “devmgmt.msc” தட்டச்சு செய்யுங்க.

7. டபுள் கிளிக் “IDE ATA/ATAPI controllers”.

8. “Primary IDE Channel” – ல, Right click பண்ணி, “Properties” செலக்ட் பண்ணுங்க.

9. “Advanced Settings” tab கிளிக் பண்ணி, ‘none’ கொடுங்க.

10. “Secondary IDE channel”Right click பண்ணி “Properties” போய் 9த் ஸ்டெப்ல பண்ண மாதிரி “OK”கொடுங்க.
11. கடைசியா உங்க கணனிய ரீபூட் (Reboot) செச்சு Check பண்ணுங்க.

Saturday, November 1, 2014

சேதமடைந்த கோப்புகளை மீட்டெடுக்க

சில முக்கியமான கோப்புகளை மிகவும் கவனமாக பாதுகாப்போடு வைத்திருப்போம். சில நேரங்களில் அந்த கோப்புகள் பழுதடைந்து விடும். அவ்வாறு பழுதடைந்த கோப்புகளை மீட்டெடுப்பது என்றால் சாதாரண விஷயம் அல்ல. அலுவல் சம்பந்தப்பட்ட கோப்புகள் மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது போர்ட்டபிள் டிவைஸ் பெண்ட்ரைவ், சீடி/டிவீடி மற்றும் ப்ளாஷ் ட்ரைவ்களில் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு எடுத்து செல்வோம். இவ்வாறு கோப்புகளை இடமாற்றம் செய்யும் சேதமடைய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு சேதமடையும் கோப்புகளை மீட்டெடுக்க File Repair என்னும் மென்பொருள் உதவுகிறது.

மென்பொருளை தரவிறக்கம் சுட்டி 



மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். அதில் எந்த கோப்பினை மீட்டெடுக்க வேண்டுமோ அதை தேர்வு செய்யவும். பின் Start Repair என்னும் பொத்தானை அழுத்தி இழந்த கோப்பினை மீண்டும் பெற முடியும். இந்த மென்பொருளின் மூலமாக சேதமடைந்த பல்வேறு பைல் பார்மெட்டுடைய கோப்புகளை மீட்டெடுக்க முடியும்.


    corrupted Word documents (.doc, .docx, .docm, .rtf)
    corrupted Excel spreadsheets (.xls, .xla, .xlsx)
    corrupted Zip or RAR archives (.zip, .rar)
    corrupted videos (.avi, .mp4, .mov, .flv, .wmv, .asf, .mpg)
    corrupted JPEG, GIF, TIFF, BMP, PNG or RAW images (.jpg,      .jpeg, .gif, .tiff, .bmp, .png)
    corrupted PDF documents (.pdf)
    corrupted Access databases (.mdb, .mde, .accdb, .accde)
    corrupted PowerPoint presentations (.ppt, .pps, .pptx)
    corrupted music (.mp3, .wav) 



மேலே குறிப்பிட்ட பைல் பார்மெட்டுடைய சேதமடைந்த பைல்களை மீட்டெடுத்து கொள்ள முடியும்.

உங்களது படங்களை எழுத்துகளாக மாற்றுவதற்கு

குறிப்பிட்ட பக்கத்தை நீங்கள் இணையத்தில் பகிர்ந்து கொள்ள வேண்டுமெனில் அதில் இருக்கும் ஒவ்வொரு எழுத்தையும் type செய்தாக வேண்டும் அல்லது அந்த நூலை ஓர் படமாக ஸ்கேன் செய்து வெளியிடலாம்.

ஆனால் OCR என்னும் தொழில்நுட்பம் மூலம் நீங்கள் எந்த ஒரு கோப்பை / படத்தை எளிதாக type செய்யாமலே எழுத்துருக்களாக மாற்றி அமைக்க முடியும்(இதனை image to text converter என்றும் கூறுவர்).

OCR மென்பொருள் கீழ்க்கண்ட வசதிகளை உங்களுக்கு வழங்குகிறது

1. நீங்கள் சேமித்து வைத்திருக்கும் பல்வேறு விதமான கோப்புகளை(தாள், PDF கோப்புகள், டிஜிட்டல் புகைப்படங்கள்) எளிதாக கையாள மற்றும் திருத்த முடியும், மேலும் திருத்தப்பட ஆவணங்களை எளிதாக மாற்றவும் அனுமதிக்கிறது.

2. மீண்டும் மீண்டும் தட்டச்சு செய்ய பல மணி நேரம் ஆகும் ஆவணங்களை ஒரு நொடியில் உருமாற்றி விடும் வல்லமை படைத்தது.

3. எந்த நிலையில் இருக்கும் ஆவணங்களையும் 23% முதல் 99% வரை தரத்தை உயர்த்தும் வாதிகள் உள்ளது.

4. 200% தொடக்க வேகம்.

5. ஐபோன், 2 மெகாபிக்சல் தொலைபேசி கேமராக்கள் போன்றவற்றுடனும் எளிதாக வேலை செய்யக் கூடியது மற்றும் அமேசான் கின்டெல் ஆதரவு.

6. OCR Scanner பெரும் நன்மைகளை தன்னகத்தே வைத்திருக்கும் ஒரு மென்பொருள். நீங்கள் எந்த விதமான ஸ்கேநேர் மூலமும் இந்த மென்பொருளை எளிதாக உபயோகிக்கலாம்.
தரவிறக்க  சுட்டி 

கட்டண மென்பொருட்களை இலவசமாக தரவிறக்குவது எப்படி?

எங்கள் எல்லோரிடமும் கணினி இருக்கும். ஆனால் எங்கள் தேவைக்கேற்ற மென்பொருட்கள் எல்லோரிடமும் இருக்குமா? மென்பொருட்களை அவற்றிற்குரிய கட்டணத்தை செலுத்தி பெற்றுக்கொள்ளவேண்டியிருப்பதால் பலர் பல மென்பொருட்களை உபயோகப்படுத்தாமலேயே விடுகிறார்கள்.
மென்பொருட்கள் மாத்திரமன்றி கணினி விளையாட்டுக்களும் இந்த வகைக்குள்ளேயே அடங்கும். இவ்வாறு அல்லாமல் எந்த கட்டண மென்பொருளையும் பணம் செலுத்தாமல் இலவசமாக பெற்றுக்கொள்ளமுடியுமா? ஆம். அதற்கு உதவி செய்கிறது Torrent என்ற முறை.
Torrent மூலம் எவற்றை தரவிறக்கம் செய்யலாம்?
Torrent மூலம் உங்களுக்கு தேவையான எதனையும் தரவிறக்கிக்கொள்ளலாம். Movies, Videos, TV Programs மற்றும் அனைத்து இயங்குதளங்களுக்குமான (Windows, Mac, Linux) மென்பொருட்கள், Games, அனைத்து தொலைபேசிகளுக்குமான மென்பொருட்கள் (iOS, Android) , Audio, E books, Photos என அனைத்துமே Torrent இல் இலவசமாக கிடைக்கும்.
Torrent மூலம் எப்படி இலவசமாக தரவிறக்கம் செய்வது?
இதற்கு முதலில் Torrent File களை தரவிறக்கம் செய்யக்கூடிய மென்பொருள் ஒன்றை தரவிறக்கி நிறுவவேண்டும். Bittorent அல்லது Utorrent இதற்கு பொருத்தமான மென்பொருள். இவற்றில் ஏதாவது ஒன்றை தரவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள். அடுத்து தரவிறக்கவேண்டிய மென்பொருளிற்கான Torrent file ஐ தரவிறக்கவேண்டும்.
இணையத்தில் Torrent தளங்கள் ஏராளமாக இருக்கின்றன. இவற்றில் ஏதாவது ஒன்றிற்கு செல்வதன் மூலம் தரவிறக்கலாம். அல்லது http://torrentz.eu/ என்ற தளத்திற்கு செல்லுங்கள். இது ஒரு Torrent தேடுபொறியாகும். இதில் சென்று உங்களுக்கு தேவையானவற்றை ரைப் செய்து தேடுங்கள்.
தேடியதும், நீங்கள் தேடிய மென்பொருள் என்னென்ன வகைகளில் உள்ளது என்று காண்பிக்கும். உதாரணமாக Windows 7 என்று தேடினால் windows 7 இல் உள்ள Business, Home Premium, Ultimate போன்ற version களை காண்பிக்கும்.
அதில் உங்களுக்கு தேவையானதை கிளிக் செய்ததும், அதற்குரிய Torrent இணைப்பு எந்தெந்த தளங்களில் உள்ளது என்று பட்டியல்படுத்தும். விரும்பிய தளம் ஒன்றை கிளிக் செய்து சென்று அதில் உள்ள Torrent File ஐ தரவிறக்கிக்கொள்ளவேண்டும். இதன் அளவு Kb அளவுள்ள மிகச்சிறிய File ஆக இருக்கும்.
இதை தரவிறக்கிய பின்னர் Open செய்யுங்கள். இப்போது Bittorent மென்பொருளுடன் நீங்கள் தரவிறக்கவேண்டிய மென்பொருள் தரவிறங்க ஆரம்பிக்கும்.

மென்பொருள் Serial, Keygen இலகுவாக பெறுவது எப்படி ?



இது கொஞ்சம் வித்தியாசமான பதிவு தான். எப்படி திருடுவது என்பது  விலை உயந்த மென்பொருட்களை எப்படி இலவசமாக பயன்படுத்தலாம் .சட்டரீதியாக மென்பொருட்களை எவரும் பணம் கொடுத்து வாங்குவது கிடையாது. காரணம் இணையத்தில் பரவிகிடக்கின்ற திருட்டுகள். இலகுவாக எந்த மென்பொருளுக்கும் உரிய Activation Key இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். ஆனால் இந்த செயற்பாடு சட்டரீதியாக ஏற்றுக்கொள்ளபடாதவை, இருந்தும் இதை தடுக்க எந்தவொரு வழியும் தற்சமயம் கிடையாது. என்ன செய்வது நானும் இந்த முறையைத்தான் பின்பற்றி ஒரு திருட்டு வழி முறையை கற்றுத்தர போகிறேன்
  • முதலாவதாக கூகிள் இணையதளத்திற்கு செல்லுங்கள் - Google.com
  •     பின்னர் கூகிள் தேடலில் “94fbr” இடைவெளிவிட்டு மென்பொருள்  பெயரை எழுதுங்கள். உதாரணமாக 94fbr windows 8
  •     அதன் பிறகு கூகிள் keygen’s உரிய பட்டியலை காட்டும்.
அவ்வளவு தான் இனி எல்லாமே இலவசம் நீங்க விரும்பியதை தரவிறக்கி  கொள்ளலாம் ...

கணணியில் தகவல்களை மறைத்து வைப்பதற்கு


உங்களது கணணியில் சேமித்து வைத்திருக்கும் தகவல்களை மற்றவர்களிடமிருந்து எளிதில் மறைக்கலாம்.

இச்செயலை மேற்கொள்ள பல்வேறு சிறிய அப்ளிகேஷன் புரோகிராம்கள் கிடைக்கின்றன. இவற்றை தேர்ட் பார்ட்டி புரோகிராம் என அழைக்கிறார்கள். இவற்றைப் பயன்படுத்துவது நூறு சதவிகிதம் பாதுகாப்பு எனச் சொல்ல முடியாது.



எனவே விண்டோஸ் இயக்கம் தரும் பாதுகாப்பு வழியை இங்கு காணலாம். இதற்கு கீழ்க்காணும் வழிகளை பின்பற்ற வேண்டும்.
1. முதலில் உங்கள் கணணியில் நீங்கள் Administratorஆக லொகின் செய்திருக்க வேண்டும்.
2. இனிமேல் மறைத்து வைக்க வேண்டிய தகவல் உள்ள கோப்புகள் அனைத்தையும் ஒரு புதிய கோப்பறையில் போட வேண்டும். எடுத்துக்காட்டாக  D ட்ரைவில் Data என ஒரு கோப்பறையை உருவாக்கலாம்.
3. அதன் பின் Start பட்டனை அழுத்தி ரன் பாக்ஸில் CMD என டைப் செய்திடவும். பின் Ok அழுத்த உங்களுக்கு டாஸ் இயக்க கட்டளைப் புள்ளி(command prompt) கிடைக்கும்.
4. இங்கு நீங்கள் மறைத்து வைக்க வேண்டிய கோப்பறையின், அதற்கான பாத் உடன் பின்வருமாறு டைப் செய்திட வேண்டும். உதாரணமாக attrib+s+h D:Data என இருக்க வேண்டும். இதன்பின் உங்கள் கோப்பறை மறைக்கப்படும். உடனே நீங்கள் விண்டோஸ் எக்ஸ்புளோரரைத் திறந்து சோதித்துக் கொள்ளலாம்.
மறைத்து வைத்துள்ள கோப்பறைகள் என்றாவது ஒருநாள் அல்லது ஒருநேரம் இதனை வெளியே தெரியும் படி வைக்க எண்ணலாம் அல்லது மேலும் சில கோப்புகளை இதன் பின் மறைத்து வைக்க எண்ணி இந்த கோப்பறையில் போட்டு வைக்க திட்டமிடலாம். அப்போது attrib s h D:Data என டைப் செய்திட வேண்டும்

Blogger Tips and TricksLatest Tips For BloggersBlogger Tricks

சொயற்படுத்துங்கள்

Blog Archive

Total Pageviews