திறக்க முடியாத பைல்கள்
தான் பயன்படுத்தி வந்த கம்ப்யூட்டர் சிறிது சிறிதாகப் பிரச்னை கொடுத்துப் பின் மொத்தமாய் செயல் இழந்து முடங்கிப் போனதால் புதிய கம்ப்யூட்டருக்கு மாறிய ஒரு வாசகர் தன்னால் பழைய இரு வகை பைல்களை புதிய கம்ப்யூட்டருக்கு மாறிய பின் திறக்க முடியவில்லை என எழுதியுள்ளார். அந்த பைல்கள் .odt மற்றும் .ods என துணைப் பெயருடன் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த இரண்டு பைல்களையும் திறக்க ஓப்பன் ஆபீஸ் என்னும் புரோகிராம்...