தகவல் தொழில்நுட்ப முதல் தமிழ் வலைத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

Saturday, February 22, 2014

Android போனில் Call Record செய்வது எப்படி?

Call Record செய்வது என்பது இன்று பல வழிகளில் பயன்படக்கூடிய ஒன்று. பல பிரச்சினைகளுக்காக Customer Care போன்றவற்றில் பேசும் போது இது நமக்கு கட்டாயம் தேவை. Android போன்களை பயன்படுத்துவர்களுக்கு அதில் Call Record செய்ய முடியவில்லையே என்ற குறை இருக்கும்.  அந்த குறையை போக்க நாம் சில Application களை பயன்படுத்தலாம். 

1. RMC: Advance Call Recorder
RMC Advance Call Recorder
இந்த Application உங்களின் அனைத்து Incoming மற்றும் Outcoming Call களையும் Record செய்து உங்கள் Memory Card – இல் Save செய்திடும். இதன் Record Quality நீங்கள் Loud Speaker பயன்படுத்தும் போது அதிகமாக இருக்கும். Record ஆனவற்றை எப்போது வேண்டுமானாலும் கேட்கலாம். விரும்பினால் Drop Box, Google Drive போன்றவற்றுடன் Sync செய்து கொள்ளலாம். அதே போல Manual Record வசதியும் இதில் உள்ளது.
தரவிறக்க - RMC: Advance Call Recorder

2. Call Recorder
Call Recorder
இதுவும் மேலே சொன்னது போலவே உங்களின் அனைத்து Incoming மற்றும் Outcoming Call களையும் Record செய்து உங்கள் Memory Card – இல் Save செய்திடும். இதில் உள்ள சிறப்பம்சம் ரெகார்ட் ஆனவற்றை நீங்கள் Lock செய்து கொள்ளலாம்.
தரவிறக்க - Call Recorder

3. Automatic Call Recorder
Automatic Call Recorder
இந்த Application மூலம் குறிப்பிட்ட Contact Call களை மட்டும் Record செய்யலாம். இதனால் எல்லாவற்றையும் Record செய்து Save ஆகும் ஆகும் வேலை இருக்காது. Ignore contacts என்ற வசதி மூலம் எந்த Contact Call எல்லாம் Record ஆகவேண்டாம் என்று நாம் செட் செய்து விடலாம்.
தரவிறக்க - Automatic Call Recorder

பின்குறிப்பு: உங்கள் போனில் உள்ள Microphone மூலமே ரெகார்ட் ஆவதால் Loudspeaker – இல் பேசினால் தெளிவாக ரெகார்ட் ஆகும்.

ஆன்ட்ராய்ட் போன்/டேப்லேட்டில் ஃபைல் & ஃபோல்டர்களை மறைப்பது எப்படி ?

File Hide Expert

இன்று ஆன்ட்ராய்ட் போன் பயன்படுத்தும் பெரும்பாலோனோர் நமது அனைத்து தகவல்களையும் அதில் சேமித்து வைக்கின்றோம். அத்தோடு அவை பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் நினைக்கிறோம். இவற்றில் மிக முக்கியமானது நமது பர்சனல் ஃபைல் & ஃபோல்டர்கள்.
நாம் சேமித்து வைத்திருக்கும் நமது பர்சனல்  ஃபைல்/ஃபோல்டரை யாரேனும் பார்த்து மற்றவர்களுடன் பகிர்ந்து விட்டால் அது நமக்கு ஆபத்து தான். அப்படியான பர்சனல்  ஃபைல்/ஃபோல்டரை எப்படி உங்கள் போனில் மறைத்து வைப்பது என்று பார்ப்போம்.

1. முதலில் கூகுள் ப்ளே தளத்தில் File Hide Expert என்ற அப்ளிகேஷனை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

2. இப்போது அதனை ஓபன் செய்தால் கீழே உள்ளது போல வரும்.
Screenshot_2014-01-29-10-27-32
3. இப்போது வலது மேல் மூலையில் உள்ள நீல நிற ஃபோல்டர் ஐகான் மீது கிளிக் செய்யவும். இப்போது கீழே உள்ளது போன்று ஃபோல்டர்களின் லிஸ்ட் உங்களுக்கு கிடைக்கும்.
Screenshot_2014-01-29-10-53-31
4. ஒவ்வொரு ஃபோல்டரின் வலது பக்கமும் ஒரு பிளஸ் சிம்பல் (+) இருக்கும். அதனை கிளிக் செய்தால் குறிப்பிட்ட ஃபோல்டர் மற்றும் அதற்குள் உள்ள ஃபைல்கள் மறைக்கப்பட்டுவிடும். நிறைய ஃபோல்டர்கள் மறைக்கப்பட வேண்டும் என்றால் அவற்றை ஒரே ஃபோல்டருக்குள் மூவ் செய்து கொள்ளலாம். மறைக்கப்பட்டவற்றின் லிஸ்ட் கீழே உள்ளது போன்று இருக்கும்.
Screenshot_2014-01-29-10-48-44

மறைக்கப்பட்ட ஃபைல்களுக்கு பாஸ்வேர்ட் கொடுப்பது எப்படி?
என்னதான் நாம் ஃபைல்களை மறைத்து வைத்தாலும் யாரேனும் இந்த அப்ளிகேஷனை ஓபன் செய்து பார்த்தால் நாம் ஃபைல்களை மறைத்து வைத்துள்ளது தெரிந்துவிடும். அதை தடுக்க இந்த அப்ளிகேஷனுக்கு ஒரு பாஸ்வேர்ட் செட் செய்து விடலாம்.

1. அப்ளிகேஷனை திறந்து உங்கள் போன்/டேப்லெட்டில் ஆப்சன்ஸ்/மெனு பட்டனை கிளிக் செய்தால் செட்டிங்க்ஸ் மெனு கிடைக்கும். (ஆப்சன்ஸ்/மெனு பட்டன் என்பது ஹோம், பேக் பட்டன் இல்லாமல் மூன்றாவதாக இருப்பது. பெரும்பாலும் ஹோம்க்கு இடது புறம் இருக்கும்)
Screenshot_2014-01-29-10-39-36
2. இப்போது செட்டிங்க்ஸ் பகுதியில் Enable Password என்பதை கிளிக் செய்து, பின்னர் Change Password என்பதை கிளிக் செய்து உங்கள் பாஸ்வேர்டை தர வேண்டும்.
Screenshot_2014-01-29-10-40-22
3. அடுத்த முறை அப்ளிகேஷனை திறக்கும் போது பாஸ்வேர்ட் கேட்கும்.

Unhide செய்வது எப்படி ?
மறைக்கப்பட்ட ஃபைல்/ஃபோல்டரை நீங்கள் பார்க்க விரும்பினால் அவற்றை இந்த அப்ளிகேஷனின் மறைக்கப்பட்ட ஃபைல்/ஃபோல்டர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும். அதை செய்ய மறைக்கப்பட்ட ஃபைல்/ஃபோல்டரின் வலது பக்கம் உள்ள எக்ஸ் சிம்பலை (X) கிளிக் செய்ய வேண்டும்.

தங்கள் பர்சனல் ஃபைல்களை பாதுகாப்பாக வைத்திருக்க நினைப்பவர்கள் கட்டாயம் இதை பயன்படுத்த வேண்டும்.

Youtube மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி?

Youtube ஐ நாம் இணையத்தின் டிவி என்று சொல்லலாம். மிகப் பிரபலமான இந்த தளத்தில் கிடைக்காத வீடியோக்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அவ்வளவு வீடியோக்கள் உள்ளன. ஒரு நிமிடத்தில் சராசரியாக 48 மணிநேர வீடியோ Youtube தளத்தில் Upload செய்யப்படுகிறது. இதை ஒரு டிவி சேனல் என்று வைத்தால் இந்தியாவில் அதிகம் பேரால் பார்க்கப்படும் பத்தாவது மிகப் பெரிய சேனல் இது. இவ்வளவு பெரிய தளத்தில் சாதாரணமானவர்களும் பணம் சம்பாதிக்க முடியும் என்றால் நம்புவீர்களா? அது தான் உண்மை.  எப்படி என்று பார்ப்போம்.

Charlie bit my finger என்ற வீடியோவை நீங்கள் பார்த்து இருப்பீர்கள். இரண்டு சிறுவர்கள் இருக்கும் இந்த வீடியோ சேனல் பல கோடிகளை சம்பாதித்து உள்ளது. இதே போல நிறைய பேர் உள்ளார்கள். Digital Inspiration தளத்தின் நிர்வாகி அமித் அகர்வால் சேனல் இது Labnol. இவர் இந்தியாவின் மிகப் பெரிய Tech Blogger. தனது தளம் மட்டும் இன்றி Youtube மூலமும் இவர் வருமானம் பெறுகிறார்.

தனி நபர்கள் மட்டும் இன்றி தொலைக்காட்சி நிறுவனங்கள், மற்ற நிறுவனங்கள் பலவும் Youtube மூலம் பணம் சம்பாதிக்கின்றன. விஜய் தொலைக்காட்சியின் சேனல். STARVIJAY

முதலில் இதற்கு என்ன தேவை என்று சொல்லி விடுகிறேன். 
நடிக்க தெரிய வேண்டும். அவ்வளவு தான். உடன் ஒரு கேமரா இருந்தால் போதும்.

எப்படி சம்பாதிப்பது

Step – 1
ஒரு கேமரா எடுங்கள், உங்களுக்கு விருப்பமானதை எல்லாம் படம் பிடிங்கள். நாய்குட்டி, பூனை குட்டி, உங்கள் குழந்தை செய்யும் சேட்டை, உங்கள் மனைவி செய்யும் சமையலை எப்படி என்ற குறிப்போடு, மிமிக்ரி, நடனம், பாட்டு, இசை என எது வேண்டும் என்றாலும்.

Step – 2 
இப்போது எடுத்த வீடியோவை உங்கள் கணினியில் Movie Maker போன்ற வீடியோ எடிட்டிங் மென்பொருளில் போட்டு மெருகேற்ற வேண்டும். ஒன்றும் பெரிய விசயமில்லை, தேவை இல்லாத இடங்களை நீக்க போகிறீர்கள். பின்னணியில் குரல் சேர்க்க வேண்டும் என்றால்  ரெகார்ட் செய்து அதையும் சேருங்கள்.

ஒரு வரியில் சொல்ல வேண்டும் என்றால், “வீடியோவை பார்க்கும் படி எடிட் செய்யுங்கள்”

Step – 3 
இப்போது Youtube தளத்துக்கு செல்லுங்கள். உங்கள் ஜிமெயில் கணக்கை கொண்டு நுழைந்து Upload என்ற பட்டனை கிளிக் செய்து உங்கள் வீடியோவை Upload செய்யுங்கள்.

Step – 4
இப்போது உங்கள் வீடியோ குறித்த தகவல்களை தர வேண்டும். எளிதில் கவரும் வண்ணம் ஆங்கிலத்தில் தலைப்பு வையுங்கள், வீடியோவில் என்ன உள்ளது என Description பகுதியில் சொல்லுங்கள். Tags பகுதில் வீடியோவை தேடுதலுக்கு எளிதாக வார்த்தைகளாக கொடுக்க வேண்டும். எப்படி Tags கொடுப்பது என்று Youtube கொஞ்சம் ரகசியங்கள் என்ற பதிவில் சொல்லி உள்ளேன்.

இப்போது “Public” என்று தெரிவு செய்து Save செய்து விடுங்கள்.

Step – 5 
முதல் நான்கு ஸ்டெப்களை தொடர்ந்து செய்து கொண்டே வாருங்கள்.

Step – 6 
உங்கள் வீடியோக்களுக்கு நிறைய views வந்தால் அல்லது உங்கள் வீடியோ உங்களுக்கு சொந்தமான வீடியோ என்றால் Youtube உங்களுக்கு கீழே உள்ளது போல ”Invitation to earn revenue from your YouTube videos” என்று  ஒரு மின்னஞ்சல் அனுப்பும்.


அதில் உள்ள லிங்க்கில் சென்று உங்கள் தகவல்களை நீங்கள் தரவேண்டும்.
அந்த லிங்க் - YouTube Partner Program: Interest Form
இப்போது Youtube உங்கள் வீடியோக்களை சோதிக்கும், நிறைய வீடியோக்கள் இருக்க வேண்டும், நிறைய பேர் பார்க்க வேண்டும். இதை தான் Youtube எதிர்பார்க்கும். எல்லாம் சரியாக இருப்பின் உங்களுக்கு Partner என்ற அந்தஸ்து வழங்கப்படும்.

பலருக்கு இது நிராகரிக்கப் படலாம்.மீண்டும் Apply செய்ய இரண்டு மாதங்கள் காத்திருக்க வேண்டும். ஆனால் வீடியோ upload செய்யாமல் இருக்காதீர்கள். தொடர்ந்து உங்கள் வேலையை செய்யுங்கள். இரண்டு மாதத்துக்கு பின் இன்னும் அதிக Video, Views உடன் மீண்டும் Apply செய்யுங்கள்.

இடையில் உங்களுக்கு Adsense கணக்கு இருந்தால் அதன் மூலம் சம்பாதிக்கும் வாய்ப்பையும் Youtube வழங்கும். [என் லெவல் இது தான்]. இதில் வீடியோ Upload செய்த உடன் Monetize My Video என்பதை கொடுக்க வேண்டும். இப்போது உங்கள் வீடியோ குறிப்பிட்ட சில நாட்களுக்கு Review செய்யப்படும். வீடியோ உங்களுடையது என்று Youtube உறுதி செய்த உடன், Monetized என்று ஆகி விடும்.

Parter, Adsense இரண்டுக்கும் உள்ள வித்தியாசம். Adsense கணக்கு மூலம் வரும் Earning, Partner ஐ விட குறைவாக இருக்கும். [Partner கணக்குக்கு 1000 Views க்கு 2.50$ என்று சொல்லப்படுகிறது]

இதில் Adsense கணக்கை சேர்க்க, நீங்கள் Youtube கணக்கில் நுழைந்த உடன், Youtube இதை கேட்கும். கேட்கவில்லை என்றால் காத்திருக்கவும்.
இரண்டில் எது உங்களுக்கு கிடைத்தாலும், உங்கள் வீடியோவுக்கு Youtube இரண்டு வகையான விளம்பரங்களை காட்டும்

Overlay in-video ads  - வீடியோவின் கீழே வரும் குட்டி விளம்பரம்
TrueView in-stream ads – வீடியோவுக்கு முன் வரும் சில நொடி விளம்பர வீடியோ 
நீங்கள் எவ்வளவு வீடியோ upload செய்கிறீர்கள் என்பதை பொறுத்து தான் உங்களுக்கு பணம் கிடைக்கும். மிகக் குறைந்த வீடியோ என்றால் அதற்கேற்ப தான் வருமானமும்.

எந்த மாதிரி வீடியோக்களை Upload செய்யலாம்
சமையல் குறிப்புகள், தொழில்நுட்ப விஷயங்கள், திரை விமர்சனங்கள், வீடியோ டுடோரியல்கள், அழகு குறிப்புகள், மிமிக்ரி, சுற்றுலா தள வீடியோக்கள், பாடல்கள், இசைக் கோர்வைகள், வீடியோ ப்ளாக்கிங், அனிமேஷன் முயற்சிகள். போன்றவை.

கொஞ்சம் ஆங்கில அறிவு இருந்தால் இன்னும் அதிகமாக வருமானம் பெற முடியும். தமிழும் கூட பயன்படுத்தலாம்.

ஆனால் சினிமா வீடியோ, பாடல் எதையும் நீங்கள் இதில் பயன்படுத்த முடியாது. வீடியோவானது முழுக்க முழுக்க உங்களுடையதாக உங்களால் உருவாக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.

வீடியோவுக்கு எந்த காரணம் கொண்டும் Youtube தரும் Audio swap வசதியை பயன்படுத்தாதீர்கள். அந்த ஆடியோக்களை பயன்படுத்தினால் அதில் வரும் விளம்பரம் மூலம் வரும் வருமானம் உங்களுக்கு வராது.

உங்கள் முயற்சிகளை பொறுத்து தான் இது ஈமு கோழியா அல்லது, பொன் முட்டை இடும் வாத்தா என்பது தெரிய வரும். 
Youtube குறித்த மற்ற கேள்விகளை கீழே கேளுங்கள். பதில் சொல்கிறேன்.

இலவசமாக Call மற்றும் Message செய்ய உதவும் Line Application


Line
ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தும் பெரும்பாலான நபர்கள் இலவச Message அல்லது Call செய்யும் Application களை பயன்படுத்துவார்கள். பெரும்பாலான Application கள் இவற்றில் ஏதேனும் ஒரு வசதியை மட்டுமே பயனர்களுக்கு வழங்கும். அப்படி இல்லாமல் இரண்டையும் தரும் ஒரு பயனுள்ள Application பற்றி இன்று பார்ப்போம்.

Line என்ற இந்த Application மூலம் உலகம் முழுவதும் உள்ள நண்பர்களுடன் நீங்கள் பேசலாம் அல்லது இலவசமாக மெசேஜ் செய்யலாம். எந்தவிதமான ஒரு லிமிட்டேஷனும் இல்லாமல் 24 மணி நேரமும் இதை செய்யும் வசதியை Line Application உங்களுக்கு வழங்குகிறது. உலகம் முழுவதும் 15 கோடி பயனர்கள் இந்த Application ஐ பயன்படுத்தி வருகிறார்கள்.

free call and message

நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நபர் Offline – இல் உள்ளார் என்றால் நீங்கள் விஷயத்தை பேசி ரெகார்ட் செய்து அனுப்பலாம். வீடியோ/ஆடியோ என இரண்டு வகையிலும் செய்ய முடியும்.

இது எல்லா Smartphone க்கும் உள்ளது. அத்தோடு Windows மற்றும் Mac கணினிகளிலும் இதை நீங்கள் பயன்படுத்த முடியும்.  உங்கள் போனில் இதை இன்ஸ்டால் செய்யும் போது உங்கள் மின்னஞ்சல் முகவரி மூலமும் Register செய்து கொண்டால் உங்கள் கணினியில் இருந்தே நண்பர்களுக்கு call செய்யலாம்.

இவற்றோடு புதிய Status, Photos போன்றவற்றை Timeline என்ற பகுதியில் பகிர்ந்து கொள்ளலாம். இந்த பகுதி Social Network போல இயங்கும்.
இதற்கெல்லாம் ஒரே தேவை உங்கள் நீங்களும் உங்கள் நண்பரும் Line – ஐ பயன்படுத்த வேண்டும். அத்தோடு இணைய இணைப்பு இருக்க வேண்டும்.
சிறப்பம்சங்கள்: 
  • இலவசமாக Call செய்யும் வசதி. 
  • மிக வேகமான செயல்பாடு. ஒரு சில நொடிகளில் Call/Message சென்றடைகிறது.
  • Chat மூலம் படங்கள், ஆடியோ, வீடியோ அனுப்பும் வசதி
  • Group Chat வசதி
  • கணினிகளிலும் இயங்கும் வசதி
  • முழுக்க முழுக்க இலவசம்.
voice and video message

Android பயனர்கள்: 
முதலில் Line Application பக்கத்திற்கு செல்லுங்கள். அதில் Install என்பதை கிளிக் செய்யுங்கள். ஏற்கனவே Google Play தளத்தில் உங்கள் ஜிமெயில் ஐடி மூலம் Sign in ஆகி இருந்தால் அடுத்தும் Install என்று கொடுக்க வேண்டும். இல்லை என்றால் உங்கள் போனில் பயன்படுத்தும் மின்னஞ்சல் முகவரியை இங்கே கொடுத்து Sign in செய்து பின்னர் இன்ஸ்டால் என்பதை கிளிக் செய்யுங்கள்.  இப்போது உங்கள் போனில் GPRS/Wifi – ஐ Enable செய்தால் App தானாக Download ஆகிவிடும். உங்கள் மொபைலில் இன்ஸ்டால் ஆன பிறகு உங்கள் நம்பர் கொடுத்து உங்கள் Line கணக்கை தொடங்கி விடலாம். நீங்கள் விரும்பினால் உங்கள் மின்னஞ்சல் முகவரி மூலமும் Register செய்து கொள்ளலாம்.

Windows Phone, iPhone, Blackberry மற்றும் Nokia Asha பயனர்கள்:
உங்கள் போனில் App Market சென்று Line என்று தேடி டவுன்லோட் செய்யுங்கள் பின்னர் உங்கள் மொபைல் நம்பர் கொடுத்து Register செய்யுங்கள்.
தரவிறக்க:
  • மொபைல்
    • Android [**Android பயனர்கள்இந்த இணைப்பில் கிளிக் செய்து வரும் பக்கத்தில் Install என்பதை கிளிக் செய்யவும். பின்னர் உங்கள் போனில் GPRS/Wifi - ஐ Enable செய்து தானாக Download செய்யலாம்**]
    • iPhone
    • Windows Phone 8
    • Blackberry
    • Nokia Asha
டவுன்லோட் செய்து பயன்படுத்துபவர்கள் More >> Add Friends மூலம் புதிய நண்பர்களை சேர்க்கலாம். என்னை சேர்க்க Search By ID என்பதில் prabukrishna என்று தேடுங்கள்.

Friday, February 21, 2014

மின்சாரம் தேவையில்லை செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதுமாம் ஆட்டோ டிரைவரின் அபார கண்டுபிடிப்பு



1468724_564730253595070_1704505791_n அரச இலை இருந்தால் போதும். செல்போன் பேட்டரியை நொடிப்பொழுதில் சார்ஜ் செய்துவிடலாம். ஆந்திராவைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் இந்த அரிய விஷயத்தை கண்டுபிடித்துள்ளார்.
 
நீண்ட தூர பயணம் மேற்கொள்பவர்கள், மின் வசதி இல்லாத இடங்களில் வசிப்பவர்கள் செல்போனை சார்ஜ் செய்ய முடியாமல் அவதிப்படுவதுண்டு. அந்தக் கவலையே இனி வேண்டாம். காட்டுப்பகுதியில்கூட செல்போனை ஈஸியாக சார்ஜ் செய்யலாம். அதற்கு ஒரு அரச இலை இருந்தால் போதும்.
ஆந்திர மாநிலம் வாரங்கல் மாவட்டம், மானுகோட்டா கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி. ஆட்டோ டிரைவர். இவர், 2 நாட்களுக்கு முன்பு சவாரியை முடித்துக் கொண்டு இரவில் வீடு திரும்பினார். அப்போது ஒரு பள்ளத்தில் ஆட்டோ இறங்கி ஏறியதில் இவரிடம் இருந்த செல்போன் தவறி விழுந்தது. செல்போனில் இருந்த பேட்டரி தனியாக பிரிந்து விழுந்தது. சார்ஜ் முழுவதும் தீர்ந்துவிட்டதால் அவரால் செல்போனை பரிசோதித்துக்கூட பார்க்க முடியவில்லை.

அப்போது மழை தூறியதால் நனையாமல் இருப்பதற்காக செல்போனை அரச இலைகளால் சுற்றி பாக்கெட்டில் வைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தார். வீட்டில் வந்து பார்த்தபோது அவருக்கு ஒரே ஆச்சரியம். செல்போன் முழுவதுமாக சார்ஜ் ஆகி இருந்தது. செல்போன் பேட்டரிக்கு இடையே ஒரு அரச இலை சிக்கியிருந்தது. அதை எடுத்ததும் சார்ஜ் போய்விட்டது. மீண்டும் அரச இலையின் காம்பை பேட்டரியின் இடையில் வைத்து 10 நிமிடம் கழித்து பார்த்தபோது முழுமையாக சார்ஜ் ஆகி இருந்தது.

அரச இலை காம்பை பேட்டரிக்கும் செல்போனில் உள்ள பின்னுக்கும் இடையில் சொருகி பல முறை ரவி சோதித்துப் பார்த்தார். காம்பு வைக்கப்பட்ட 10 நிமிடத்தில் பேட்டரி சார்ஜ் ஆனது. இதுபற்றி தனது நண்பர்கள், உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்களிடம் ரவி தெரிவித்தார். அதை யாரும் நம்பவில்லை. அதன்பிறகு செல்போன் வைத்திருந்தவர்கள் சிலர் அரச இலையை வைத்து பரிசோதித்து பார்த்தனர். அவர்களது செல்போனிலும் சார்ஜ் ஆனதை கண்டு ஆச்சரியமடைந்தனர்.

பசுமையாக உள்ள அரச இலைகளை பயன்படுத்தினால் மட்டுமே சார்ஜ் ஆகிறது. இலையின் காம்பை செல்போனின் பின்பக்க மூடியை திறந்து பேட்டரி பின்னுக்கு இடையில் வைத்து 10 நிமிடம் ஆனதும் செல்போன் முழுமையாக சார்ஜ் அடைந்து விடுகிறது. மின்சார சார்ஜர் மூலம் சார்ஜ் செய்தால் அதற்கான அடையாளம் தெரியும்.

\அரச இலை மூலம் செய்தால் சார்ஜ் ஆவது நமக்கு தெரியாது. 10 நிமிடம் கழித்து பார்த்தால் பேட்டரி முழுமையாக சார்ஜ் ஆகிவிடும். அரச இலை செல்போனில் இருக்கும்வரைதான் சார்ஜ் இருக்கும். இலையை எடுத்துவிட்டால் சார்ஜ் முழுவதும் போய்விடும்.

வெளியிலோ அல்லது வெளியூர்களுக்கோ செல்லும்போது சார்ஜர் எடுத்துச் செல்ல மறந்து விடுபவர்கள், அந்த பகுதியில் பசுமையாக உள்ள அரச இலையை பயன்படுத்தி செல்போனை சார்ஜ் செய்து பேசலாம் என்கிறார் ரவி.

உங்களின் WEBSITE GOOGLE SEARCH ENGINE TOP 10 இல் கொண்டுவரணுமா

பிளாக்கர் ,DOMAINE SITE ஆரம்பிச்சிருப்பாங்க ஆனால் இணையதளதிற்கு வருகை தரும் VISITORS இன் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருக்கும் .இதற்கு என்ன காரணம் ?...சரியான KEYWORDS நீங்க தேர்ந்தெடுக்கவில்லை என்றே அர்த்தம் ..K இதற்கு என்ன செய்தா உங்க இணையதளத்திற்கு VISITORS வருவாங்க அப்டின்னு இப்ப பார்ப்போம் ..அதுக்கு முன்னால ஒரு சின்ன EXAMPLE :
GOOGLE ENGINE இல் கம்ப்யூட்டர் டிப்ஸ் KEYWORD கொண்டு SEARCH பண்ணுங்க ...கீழே படத்தை பாருங்க 
google

www.raghuvarman.co.cc இந்த இணையதளம் தான் first இடத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளது . இது நீங்களும் keyword select செய்து உங்களின் blogger or domain site build செய்ய்ங்கள் கண்டிப்பாக visitors அதிகாமாக வருவாங்க ..traffic அதிகமாகும் ..

உங்களின் ப்ளாகரில் design->html இல்  <head>க்கு கீழே இந்த meta tag ஐ copy செய்து சிவப்பு கலரில் உள்ள பகுதியை மட்டும் நீங்கள் edit செய்து save செய்து கொள்ளுங்கள் ..
<b:include data='blog' name='all-head-content'/><meta content=' your description ' name='description'/><meta content='your keywords' name='keywords'/><meta content='your name' name='author'/>

ஒன்று அல்லது இரண்டு மாதங்களில் உங்களின் இணையதளமும் top 10 இல் வரும் .
கீழே உள்ள ஒட்டுப்பட்டையில் உங்களின் ஓட்டை பதிவு செய்ய மறந்திடாதிங்க..நன்றி ..

நமது WEBSITEஇல் VISITOR இன் எண்ணிக்கையை அதிகமாக்க (SEO TIPS)

உங்கள் வலைபூவை பிரபலப்படுத்த, அனைவரும் பார்க்கும் வண்ணம் கிடைக்க செய்ய நிறைய தொழில்நுட்ப வழிகள் உள்ளன, கீழே நான் கூறி இருக்கும் வழிகளை பின்பற்றீனால், உங்கள் வலைபூவை மேலும் பிரபலப்படுத்தலாம்,
1. Search Engine Optimization or SEO என்பது பற்றி உங்களுக்கு தெரிந்து இருக்கலாம். அதாவது உங்கள் வலைபூவை தமிழிஸ், தமிழ்மணம் போண்ற இணையதளங்களில் சேர்த்தால் மட்டும், அனைவருக்கும் காண கிடைத்துவிடாது. அது தவிர Google,Yahoo மற்றும் Bing போண்ற பெரிய Search Engine –களிலும், உங்கள் வலைதளத்தை இணைக்க வேண்டும். அப்படி இணைத்தால் தான் நிறைய பேர், Keyword கொண்டு இத்தளத்தில் தேடும் போது, உங்கள் தளம் கண்ணில் சிக்கும்.
இதில் நிறைய தொழில்நுட்ப விஷயங்கள் இருக்கின்றன, ஆனால் அனைத்துமே எளிதானதுதான், இப்போது நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் வலைபூவின் பக்கத்தை, Google,Yahoo மற்றும் Bing  போண்ற இணையத்தில் இணைக்க வேண்டும். இதனால் உங்கள் வலைபூவின் பார்வையாளர்கள் பலமடங்கு உயருவார்கள்.
முதலில் Google Webmaster Tools –ல் உங்கள் வலைபூவை இணைப்பதை பற்றி பார்ப்போம்…
  • Google Web Master Tools –எனும் தளத்திற்கு செல்லுங்கள்.
  • இதில் உங்களுடைய Google Account-யை வைத்து, பதிவு செய்து கொள்ளுங்கள்,
  • உள்ளே சென்றீர்கள் என்றால் Add a site எனும் Option இருக்கும் அதில் உங்கள் வலைபூவின் பெயரை கொடுத்து Cotinue கொடுங்கள்,add site
  •   உங்கள் வலைபூவின் பெயரை கொடுத்த பிறகு, உங்கள் வலைபூவை Verify பண்ண சொல்லி கேட்கும்
  •   இதற்கு இரண்டு வழிகள் உள்ளன.
  • ஒன்று File Upload Method – இதற்கு நீங்கள் ஒன்றுமே செய்ய வேண்டாம், இந்த Option –யை மட்டும் கொடுத்து விடுங்கள்,   Google தானாக File-யை உங்கள் தளத்தில் Upload செய்துவிடும்,
  •   இரண்டு - Meta Tag Verification method இந்த முறையானது, கீழே காட்டப்பட்டுள்ள கோடிங்கை, Copy செய்து உங்கள் வலைபூவில் Edit HTML சென்று இணைக்க வேண்டும்,
<meta name="google-site-verification" content="verificationkey" />


  • இந்த கோடிங்கை இணைக்க Layout >Edit HTML செல்லவும்,

  •  எனும் Tag-யை Ctrl+F கொடுத்து தேடவும்,

  • கிடைத்தவுடன் இந்த  Tag-ற்கு மேல் அந்த கோடிங்கை இணைக்கவும்.

  • இதை செய்த பிறகு, உங்கள் Google Webmaster Tools தளத்திற்கு செல்லவும்,

  • அதில் Site Configuration > Sitemap –க்கு செல்லவும்,

sitemap











  • இதில் கீழே உள்ள கோடிங்கை கொடுத்து Submit கொடுக்கவும்,

atom.xml?redirect=flase&max-results=100





உங்கள் வலைபூவானது 100-க்கும் அதிக பதிவுகளை கொண்டு இருந்தால் கீழே உள்ள கோடிங்கை, பயன்படுத்தவும்.

atom.xml?redirect=false&start-index=101&max-results=100



200 – பதிவுக்கும் அதிகமாக இருந்தால்,

atom.xml?redirect=false&start-index=201&max-results=100



300 – பதிவுக்கும் அதிகமாக இருந்தால்,

atom.xml?redirect=false&start-index=301&max-results=100


2. Adding Meta Tag – என்பது உங்கள் வலைபூவிற்கு முக்கியமான ஒன்றாகும், எப்படியெனில் உங்கள் வலைபூவானது தொழில்நுட்பம் சார்ந்ததெனில் (அ) வேறு ஏதாவது குறிபிட்ட Content-யை பற்றியது எனில், உதாரணமாக, தேடுபவர்கள் Google-யில் “தொழில்நுட்பம்” என Type செய்து தேடுகிறார்கள் எனில், நீங்கள் Meta Tag தொழில்நுட்பம் சார்ந்த Keyword கொடுத்துள்ளீர்கள் எனில், அது உங்கள் வலைதளத்தை, முதலில் காட்டும்.


  • கீழே உள்ள கோடிங்கை காப்பி செய்து கொள்ளவும்,



<b:if cond='data:blog.url == data:blog.homepageUrl'>
<meta content="Your keywords separated by commas"
name="keywords"/>
<meta content="Your Site Description" name="description"/>
</b:if>



  • Your keywords separated by commas – ல் உங்கள் வலைபூ பற்றிய Keyword –களை, கமா கொடுத்து டைப் செய்யவும், தமிழிலே கொடுக்கலாம், ஆனா ரொம்ப கொடுக்காதீங்க,

  • Your Site Description – என்ற இடத்தில் எழுதிக்கொள்ளுங்கள், ஆனால் இரண்டு வரிக்கு மேல் வேண்டாம்.

  • description - 150 characters மட்டுமே இருக்க வேண்டும்,

  • keyword - 200 characters இதனை Count செய்ய Character count tool இத் தளத்திற்கு செல்லவும்,

  • பின்னர் பழைய கதை போலவே, Layout >Edit HTML சென்று,Ctrl+F கொடுத்து, கீழே உள்ள கோடை தேடவும்,

<title><data:blog.pageTitle/>title>


  • இதன் பின்னர் அந்த கோடிங்கை இணைத்து விடவும்.

  • உங்கள் வலைபூவை பிரபலமாக்க இவை போதும். உங்கள் வலைபூவின் பக்கத்தை Google-காட்ட கொஞ்சம் நேரம் எடுத்துக் கொள்ளும். 24 மணி நேரம் கழித்து, Google-யில் Search செய்து பாருங்கள். உங்கள் வலைபூதான் முதலில் இருக்கும்.

BLUETOOTH வழியாக நண்பனின் MOBILE PHONE ஐ நீங்கள் பயன்படுத்தலாம்



ஒவ்வொரு நாளும் வித்தியாசமான் படைப்புகளை நம் தமிழ் நண்பர்களுக்கு பகிர்தல் வேண்டும் என்று ஆசை எபொழுதும எனக்கு உண்டு .இன்றைய  தகவல் ஒரு மாறுப்பட்டதாக இருக்கும் என நம்புகிறேன் .உங்கள நண்பரின் உதவியோடு மட்டுமே இதை செய்ய  முடியும் ஏனென்றால் உங்கள் நண்பரின் PERMISSIN நிச்சயம் தேவை  .

இந்த MOBILE மென்பொருளின் பயன்பாடு

1) Call from his phone. It includes all call functions like hold etc.
2) Read his messages
3) Read his contacts
4) Change profile
5) Play his ringtone even if phone is on silent
6) Play his songs
7) Restart the phone
8) Switch off the phone
9) Restore factory settings
10) Change ringing volume

இந்த மாதிரியான வேலையை உங்கள் நண்பனின் MOBILE PHONE இல் செய்யலாம் .இதற்கு BLUETOOTH என்று அழைக்கப்பட்டு கம்பியில்லா தொடர்பு தேவை .JAVA SOFTWARE INSTALL செய்ய கூடிய MOBILE HANDSET தேவைப்படும் .இந்த மென்பொருளை இங்கே பதிவிறக்கம் செய்து கொள்ளவும் .இந்த FILE ZIP FORMAT இல் இருக்கும் .இதை EXTRACT செய்து உங்களின் மொபைல் PHONIL INSTALL செய்து  கொள்ளுங்கள் நண்பரே .இதில் 0000 DEVICE CODE ஆக பயன்படுத்தவும் .

Thursday, February 20, 2014

மொபைல் நம்பர் நண்பர்களுக்குத் தெரியாமல் மறைக்க...!


 ஒரு மொபைல் நம்பரிலிருந்து  நண்பர்களின் மொபைல்களுக்கு அல்லது மற்றவர்களின் அலைப்பேசிக்கு அழைக்கும்பொழுது அந்த மொபைல் நம்பர் நண்பர்களுக்குத் தெரியாமல் மறைப்பதற்கு இப்போது டெக்னிக் (Mobile Number Hiding Technical) வந்துவிட்டது.

அதாவது நீங்கள் உங்கள் நண்பரின் மொபைல் போனுக்கு அழைக்கும்போது அவரின் மொபைல் போனில் உங்களுடைய மொபைல் நம்பர் தெரிவதற்குப் பதில் Private Number என்று மட்டும் வரும்.  உங்களுடைய மொபைல் நம்பர் அவருடைய செல்போனில் தெரியாது.


உங்களுடை மொபைல் நம்பர் 9865072896 எனில் அதனுடன் *67 என்ற எண்ணையும் உங்கள் மொபைல் எண்ணுடன் சேர்த்து டயல் செய்யுங்கள்.

இது ஒரு யுனிவர்சல் கோட். அதனால் உங்களது மொபைல் எண்  *67 9865072896 என்று டயல் செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் போது எண்களுக்கிடையே இடைவெளி விடாது  இருக்க வேண்டும். அவ்வாறு இடைவெளி விடாமல் சரியாக உள்ளிட்டு டயல் செய்யும்போது உங்களுடைய எண் ஏற்றுக்கொள்ளப் படமாட்டார்கள்.

இவ்வாறு செய்யும்பொழுது உங்களுடைய எண் நீங்கள் அழைக்கும் நபருக்கு டிஸ்பிளே (Display) ஆகாது.  மீண்டும் உங்களுடைய எண் மற்றவர்களுக்குத் தெரிய வேண்டும் எனில் *82 என்ற எண்ணைச் சேர்த்து டயல் செய்தால் போதுமானது. பிறகு உங்களுடைய மொபைல் நம்பர் (Android Mobile Number) மீண்டும் பழையபடி மற்றவர்களின் மொபைல்களில் டிஸ்பிளே ஆகும்.

இதே முறையை இப்படியும் செய்யலாம்.

நீங்கள் பயன்படுத்தும் மொபைல் நெட்வொர்க்கின் கஸ்டமர் கேர்க்கு (Customer Care) போன் செய்து லைன் பிளாக் பிளாக் (line) வசதியை நீங்கள் பயன்படுத்த விரும்புகிறீர்கள் என சொன்னால் போதுமானது. அவர்கள் அந்த வசதியை உங்களுக்கு ஏற்படுத்தித் தருவார்கள்.

மீண்டும் இந்த வசதி உங்களுக்கு வேண்டாமென நினைத்தால் , மீண்டும் கஸ்டமர் கேருக்கு போன் செய்து அவர்களிடம் இந்த லைன் பிளாக் வசதி எனக்கு வேண்டாம் என நீங்கள் கூறி, அந்த வசதியை நீக்கிவிடலாம்.

முக்கிய குறிப்பு: 

இந்த வசதியின் மூலம் உங்களுடைய மொபைல் நம்பரானது மற்றவர்களின் மொபைல்களில் தோன்றால் பிரைவேட் நம்பர் (Private Number) என்று மட்டுமே தோன்றும்.. மற்றபடி நீங்கள் இந்த வசதியின் மூலம் பேசுவது யார்.. எந்த எண்ணிலிருந்து பேசுகிறார்கள்.. எங்கிருந்து பேசுகிறார்கள் என்பதையெல்லாம் மறைக்க முடியாது. எனவே இந்த வசதியைப் பயன்படுத்தி தவறான நடவடிக்கைகளில், தவறான வழிமுறைகளில் செல்ல நினைத்தால் நிச்சயம் சட்டத்தின் பிடியில் சிக்கிக்கொள்வீர்கள்.

பெரிய பெரிய நிறுவனம் அல்லது வியாபார நிமித்தமாக (Business Related Calls), உங்களுடைய எண் மற்றவர்களுக்குத் தெரியக்கூடாது என்று நினைப்பவர்கள் இந்த வசதியைப் பயன்படுத்தலாம்.

Thursday, February 13, 2014

இரண்டு இயங்குதளங்களைக் கொண்ட முதலாவது ஸ்மார்ட் கைப்பேசி



ஸ்மார்ட் கைப்பேசி உலகில் முதன் முறையாக இரண்டு இயங்குதளங்களைக் கொண்ட கைப்பேசியினை Geeksphone Revolution நிறுவனம் அறிமுகம் செய்கின்றது.
இக்கைப்பேசியில் கூகுளின் Android இயங்குதளம் மற்றும் Mozilla Firefox இயங்குதளம் ஆகியன நிறுவப்பட்டுள்ளன.
இதன் மூலம் விரும்பிய இயங்குதளத்தில் குறித்த கைப்பேசியினை இயக்கும் வாய்ப்பு காணப்படுகின்றது.

இதில் Dual Core Intel Atom Z560 1.6GHz Processor, 1GB RAM மற்றும் 4GB சேமிப்பு நினைவகம் என்பன காணப்படுகின்றன.
மேலும் 4.7 அங்குல தொடுதிரையினை உடைய இக்கைப்பேசியில் 8 மெகாபிக்சல்களைக் கொண்ட பிரதான கமெரா, 1.3 மெகாபிக்சல்களைக் கொண்ட வீடியோ அழைப்புக்கான கமெரா என்பனவும் தரப்பட்டுள்ளது.
இம்மாதம் 20ம் திகதி வெளியிடப்படவுள்ள இக்கைப்பேசியின் பெறுமதியானது 289 யூரோக்கள் ஆகும்.

ஆபத்து காலத்தில் கைகொடுக்கும் செல்போன் செயலிகள்.

செல்போன் செயலிகள் உடல் இளைக்கவும், புகைப்படங்களை பகிர்ந்து கொள்ளவும், ஆங்க்ரி பேர்ட்ஸ் போன்ற கேம்கள் விளையாடவும் தான் என்று நினைத்து கொண்டிருந்தால் மாற்றிக்கொள்ளுங்கள் . நடைமுறை வாழ்க்கையில் பயன் தரகூடிய செயலிகளும் பல இருக்கின்றன. அது மட்டுமா ஆபத்து காலத்தில் உதவிக்கான கோரிக்கை விடுக்க உதவும் செயலிகளும் இருக்கின்றன. செல்போன் செயலிகளில் ஆர்வம் இல்லாதவர்கள் கூட இந்த உயிர்காக்கும் செயலிகள் பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.
 
எப்படியும் பெரும்பாலானோர் கைகளில் செல்போன் வைத்திருக்கின்றனர். ஆபத்து என வரும் போது இந்த செல்போன்கள் மூலமே ஒரு கிளிக்கில் உதவி கோர வழிசெய்யும் ஆபத்பாந்தவனாக  உயிர் காக்கும் செயலிகள் அமைந்துள்ளன.
 
ஆபத்து என தெரிந்தால் , செல்போனில் வேண்டியவர்களுக்கு தகவல் தெரிவித்து உதவி கோரலாம் தான். ஆனால் சில நேரங்களில் செல்போனில் உள்ள எண்களில் வேண்டியவர்களின் எண்ணை தேடி கண்டுபிடித்து அவர்களை அழைத்து உதவி தேவை என சொல்ல முடியாத அளவுக்கு நெருக்கடியில் சிக்கி கொள்ளலாம். அதோடு ஆபத்து சூழ்ந்திருக்கும் போது பயத்திலும் பதட்டத்திலும் செல்போனில் உரியவர்களை அழைத்து உதவி கோருவது கடினமாக இருக்கலாம். எதிர்பாரமால் விபத்து ஏற்படும் சூழல், உடனடி மருத்துவ உதவி தேவையான் நிலை மற்றும் வன்செயலாளர்களிடம் சிக்கி கொள்ளும் ஆபத்தான நிலைகளில் இந்த செயலிகள் உதவிக்கு வருகின்றன. பெண்கள், குழ்ந்தைகள், வயதானவர்கள் என அனைத்து தரப்பினருக்கும் இவை ஆபத்து காலத்தில் கைகொடுக்கும்.

ஹெல்ப் மீ ஆன் மொபைல்
ஹெல்ப் மீ ஆன் மொபைல் செயலி பாதுகாப்பை விரல் நுனியில் கொண்டு வருகிறது. ஆண்ட்ராய்டு போனுக்கான இந்த செயலியின் மூலம் ஆபத்தான நேரங்களில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு தகவல் தெரிவித்து உதவி கோரலாம். இந்த செயலியை பயன்படுத்துவதும் எளிதானது. ஆண்ட்ராய்டு போனில் இவற்றை டவுண்லோடு செய்து கொண்டால் போதுமானது.  இந்த செயலியில் உள்ள பாதுகாவலர் பகுதியில் பயனாளிகள் வீட்டில் அறியப்படும் பெயரை குறிப்பிட வேண்டும். அதன் பிறகு பாதுகாவலர்களின் செல்போன் எண்களை குறிப்பிட வேண்டும். தந்தை, சகோதரர், மாமா, நண்பர் ஆகியோரது செல்போன் எண்களை குறிப்பிடலாம். ஆபத்தில் சிக்கி கொள்ளும் நிலை ஏற்பட்டால் , இந்த செயலியின் உதவி தேவை பகுதியை கிளிக் செய்தால் போதும் , அதில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களுக்கு அந்த கோரிக்கை குறுஞ்செய்தியாக போய் சேர்ந்துவிடும். மேலும், பயனாளியின் இருப்பிடம்  ஜிபிஎஸ் மூலம் சுட்டிக்காட்டப்பட்டிருக்கும். அது மட்டும் அல்லாமால் , செல்போனில் இருந்து ஆபத்து எச்சிரிக்கை ஒலி கேட்டிக்கொண்டே இருக்கும். இதில் அருகே உள்ளவர்களை உதவிக்கு அழைக்கும் அபயக்குரலாக செயலபடும்.
 
இந்த செயலியை பெண்கள் விஷமிகள் மத்தியில் சிக்கி கொண்டால் அல்லது முன்பின் தெரியாதவர்களால் பின் தொடர்ப்பாட்டால் பயன்படுத்தலாம். மேலும் விபத்து நேரங்களிலும் பயன்படுத்தலாம்.
அதே போல, எங்காவது சென்றிருக்கும் போது எதிர்பார்த்ததை விட கூடுதல் நேரம் ஆகிவிட்டால் , இதில் உள்ள நான் இங்கிருக்கிறேன் வசதி மூலமாக பயனாளிகள் தங்கள் இருப்பிடத்தை பாதுகாவலர்களுக்கு தெரிவிக்கலாம். செல்போன் சார்ந்த மதிப்புகூட்டப்பட்ட சேவைகளை வழ்ங்கி வரும் ஆன்மொபைல் நிறுவனம் இந்த செயலியை உருவாக்கி உள்ளது. நிறுவன இணையதளம் மற்றும் கூகிள் பிலே ஸ்டோரில் தரவிறக்கம் செய்யலாம்.
இணையதள முகவரி; http://www.helpme-onmobile.com/

 
நிர்பயா செயலி.
ஆபத்தில் சிக்கி கொள்ளும் பெண்களுக்கு உதவுவதற்காகவே உருவாக்கப்பட்டுள்ள செயலி இது. கடந்த ஆண்டு தில்லியில் வன்செயலாலர்களின் கொடுரத்துக்கு பலியான இளம்பெண் நிர்பயா பெயரில் உருவாக்கப்பட்டுள்ளது. நிர்பயாவுக்கு நேர்ந்த கதி இனி வேறு எந்த பெண்ணுக்கும் ஏற்படாமல் தடுக்க உதவும் வகையில் இந்த செயலியை ஸ்மார்ட் கிலவுட் இன்போடெக் நிறுவனம் வடிவமைத்துள்ளது. நிர்பயா – பி பியர்லெஸ் எனும் பெயரிலான இந்த செயலியில் உதவி தேவை எனும் செய்தியை குடும்பத்தினர் மற்றும் தெரிந்தவர்களுக்கு அனுப்பி வைக்கலாம். அதே போல உதவி தேவை எனும் தகவலை பேஸ்புக் பக்கத்திலும் நண்பர்கள் மத்தியில் பகிர்ந்து கொள்ள இந்த செயலி வழி செய்கிறது. விஅப்த்து மற்றும் மருத்துவ அவசர நிலைகளிலும் இந்த செயலியை பயன்படுத்தலாம். குடும்பத்தினர் தவிர காவல்தூறையினர் , மருத்துவமனை மற்றும் அவசர உதவி எண்கள் ஆகியவற்றுக்கும் உடனயாக தகவல் அனுப்ப முடியும். ஆண்ட்ராட்யு, ஐபோன் விண்டோஸ் போன் என எல்லாவற்றிலும் பயன்படுத்தலாம். ஆங்கில் மொழியிலானது.
இணையதள முகவரி; http://www.smartcloudinfotech.com/nirbhaya.html

ஆறு பேர் வட்டம்.
சர்கில் ஆப் 6 செயலி , ஆபத்து காலத்தில் மட்டும் அல்லாது சிக்கலான எந்த சூழலிலும் உதவி கிடைக்கசெய்கிறது. இந்த செயலியில், உங்கள் உதவி வட்டத்தில் ஆறு நபர்களின் தொடர்பு எண்களை குறிப்பிடலாம். உதவி தேவைப்படும் சூழலில் இந்த ஆறு பேருக்கும் பயனாளியின் இருப்பிடம் பற்றிய விவரத்துடன் தகவல் தெரிவிகக்ப்படும். மூன்று விதமான உதவிகளை கோரலாம். ஆபத்து இல்லை ஆனால் அச்சமூட்டும் சூழலில் இருந்தால் , உடனே வந்து அழைத்து செல்லுமாறு செய்தி அனுப்பலாம். இதற்காக கார் ஐகானை கிளிக் செய்தால் போதும். பெரும் ஆபத்து என்றால் , உதவி தேவை என்னும் தகவல் தெரிவிக்கலாம். இதே போலவே மிகவும் அறுவையான ஆசாமிகளிடம் மாட்டிக்கொண்டால் வந்து காப்பற்றுங்கள் எனும் செய்தியையும் அனுப்பலாம். குடும்ப சிக்கல் அல்லது காதல் விவகாரம் போன்றவ்ற்றால் மன் உளைச்சலுக்கு ஆளாகி இருந்தால் ஆலோச்னை மற்றும் ஆறுதல் தேவை என்றும் செய்தி அனுப்பலாம். அவசர எண்களை தொடர்பு கொள்ளும் வசதியும் இருக்கிறது. சர்வதேச அலவிலான செயலி இது. ஆங்கிலம் தான் பிரதான மொழி என்றாலும் இப்போது இந்தி மொழி வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராட் ,ஐபோன் இரண்டிலும் செயல்படுகிறது.
 
அமெரிக்காவில் பயனுள்ள செயலிகளுக்காக வெள்ளை மாளிகை நடத்திய போட்டியில் தேர்வான செயலி இது,.
இணையதள முகவரி; http://www.circleof6app.com/

கணினி ரகசியத் தன்மையை பாதுகாப்பது எப்படி

DES Data Encryption Standard: மிகவும் பிரபலமான என்கிரிப்ஷன் முறை. இது 56-பிட் கீ மற்றும் பிளாக் சைபர் (Block Cypher Method) வழியினைப் பயன்படுத்தி டேட்டாவினை 64 – பிட் அடங்கிய தொகுப்புகளாக மாற்றுகிறது. அதன் பின் அதனை என்கிரிப்ட் செய்கிறது.

Cryptography: தொடர்புகளின் ரகசியத் தன்மையைப் பாதுகாப்பதில் இதுவும் ஒரு வழி. இந்த என்கிரிப்ஷன் முறையில் டேட்டா முற்றிலும் மாறான வழியில் அமைக்கப்படுவதாகும். புரிந்து கொள்ள முடியாத பார்மட்டில் டேட்டா பதியப்படும். இதனை மீண்டும் பெற மிகவும் எளிதில் புரிந்து கொள்ளமுடியாத ரகசியமாகத் தயாரிக்கப்படும் கீ கொண்டே முடியும்.

அதிவேக இணையத்தை முறையாக பயன்படுத்துவது எப்படி?

நம் வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ இணையத்தை பயன்படுத்த நினைப்போம். அதிவேக இணையம் என்ற விளம்பரத்தில் மயங்கி, புதிய இணைப்பு ஒன்று வாங்கி விடுவோம். ஆனால் வாங்கிய பிறகு நடப்பது வேறு. இணையத்தில் ஒரு வலைத்தளத்தை கிளிக் செய்துவிட்டு, சாப்பாடு சாப்பிட்டு விட்டு வரலாம் என்று தோன்றும். அவ்வளவு மெதுவாக இணையம் வேலை செய்யும்.

எந்த விதமான வேகத்தடையும் இல்லாமல் அதிவேகமாக இணையத்தைப் பயன்படுத்து குறித்து இப்போது பார்ப்போம்.

இணைய இணைப்பு கிடைக்கும் முன்பு வரை நமக்கு இணைப்பின் வேகம் என்றால் பெரிதாக ஏதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் பயன்படுத்திய சில நாட்களில் அல்லது சில மாதங்களில் பிறகுதான் நமக்கு தெரியும். நாம் தேர்ந்தெடுத்து இருக்கும் இணையத்தின் பிளான் அன்லிமிடட் என்றால் அதற்கு தகுந்தாற் போல் குறைவான வேகமே இருக்கும் இந்தப் பிரச்சனையை நீக்கி முழு இணைய வேகத்தையும் பெற செய்யும் வழி முறையை இன்று பார்க்கலாம்.

இணைய இணைப்பின் வேகம் நாடுகளுக்கு நாடு வேறுபட்டாலும் ஒரு சில நாடுகளில் இணையத்தின் வேகம் எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. இதற்காக நாம் பெரிதாக எதையும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. நம் கணினியில் ஒரு சிறிய மாற்றம் செய்து இணையத்தின் முழு வேகத்தையும் எந்தத் தடையும் இல்லாமல் பயன்படுத்தலாம்.

சாதாரணமாக அன்லிமிடெட் இணைய (Unlimited Internet) இணைப்பு தான் எல்லோருக்கும் கொடுக்கப்பட்டிருக்கும். இதில் இணைப்பு வேகம் குறைந்தபட்சமாக (Limited Speed) இருக்கும். பல மணி நேரம் செலவு செய்துதான் பெரிய அளவிளான கோப்புகளை டவுன்லோட் செய்ய முடியும். இதைத் தவிர்த்து அதிவேகமாக இணையத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் பற்றி பார்க்கலாம்.

விண்டோஸ் எக்ஸ்பி ( Windows XP ) கணினி வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே இந்த முறை வேலை செய்யும். முதலில் Start Button -ஐ சொடுக்கி Run என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்க வேண்டும், Run விண்டோவில் gpedit.msc என்று தட்டச்சு செய்த்து Ok பொத்தானை அழுத்த வேண்டும். அடுத்து வரும் திரையில் இணையத்தின் அபார வளர்ச்சி Computer Configuration என்ற மெனுவிற்கு அடியில் இருக்கும் Administrative Templates என்பதை தேர்ந்தெடுத்து அதில் வரும் sub menu -வில் Network என்பதை தேர்ந்தெடுத்து அதில் வரும் Sub menu வில் QoS Packet Scheduler என்பதை அழுத்த வேண்டும். இதில் Limit Reservable Bandwidth என்பதை அழுத்தி, Enabled என்பதை தேர்ந்தெடுத்து அதற்கு அடியில் இருக்கும் Band width Limit என்பதில் 4% கொடுத்து Ok பொத்தானை அழுத்தி சேவ் செய்து வெளியே வரவேண்டும். அடுத்து கணினியை ஒரு முறை restart செய்து பாருங்கள். இணைய இணைப்பின் வேகம் இப்போது முழுமையாகத் தெரியும்.

Tuesday, February 4, 2014

ஓங்கி அடிச்சா “5G” வேகம்டா!

grey ஓங்கி அடிச்சா 5G வேகம்டா!
சூர்யா, எதிர்காலத்தில் நடிக்கும் படத்தில் மேற்கூறியது போல வசனம் பேசினால் ஆச்சர்யப்படுவதற்கில்லை grey ஓங்கி அடிச்சா 5G வேகம்டா!  . உலகளவில் இணைய வேகத்தில் தாறுமாறாக இருப்பது தென் கொரியா தான். அண்ணன் அமெரிக்கா உலகிற்கே ராசாவாக இருந்தாலும், இணையத்தில் சிப்பாய் அளவில் தான் தென் கொரியாவிடம் இருக்கிறார். என்ன முக்கினாலும் தென் கொரியாவில் ராணுவத்தைத் தான் மிரட்டிக் கொண்டு இருக்க முடிகிறதே தவிர, இணைய வேகத்தை பிடிக்க முடியவில்லை. Image Credit - www.mrwallpaper.com

உலகளவில் இணையத்தில் தென் கொரியா தான் அசைக்க முடியாத இடத்தில் இருக்கிறது. இந்தியா குறைந்தது 15 – 20 ஆண்டுகளாவது பின் தங்கி இருக்கும் என்றால், கற்பனை செய்து கொள்ளுங்கள். எங்கள் நிறுவனத்தில் ஒரு ப்ராஜக்ட்க்காக தென் கொரியாவில் 10 வருடங்களுக்கு முன் ஒரு வங்கிக்காக பணி புரிந்தார்கள், அப்போதே அங்கே இணைய வேகம் 100 MB இருந்தது என்று கூறுவார்கள். நம்ம ஊரில் தற்போது தான் 25 MB வந்து இருக்கிறது. 100 MB கொடுக்கிறார்கள் ஆனால், அதிக கட்டணத்தால் வெகுஜன பயன்பாட்டிற்கு இன்னும் வரவில்லை.

தென் கொரியா தற்போது மொபைல் இணையத்தில் 5G வேகத்தைக் கொண்டு வர முயற்சி செய்து கொண்டு இருக்கிறார்கள். 1.6 ட்ரில்லியன் பணம் இதற்காக ஒதுக்கி இருக்கிறார்கள். 4G LTE வேகமே செமையாக இருக்கும் இதில் 5G வந்தால்…! 5G வேகம் 4G LTE ஐ விட 1000 மடங்கு அதிகமாக இருக்கப் போவதாக கூறுகிறார்கள். என்னது 1000 மடங்கா!!! எப்படி இருக்கும் பாருங்க. இவர்களின் கணிப்புப் படி 800 MB திரைப்படம் தரவிறக்கம் [Download] ஆக ஒரு நொடி தான் ஆகுமாம்! (தப்பா சொல்லல நிசமாத் தான்) News Credit – Mashable.com
சிங்கப்பூரில் 4G LTE இருக்கிறது. இதுவே வேகமாக இருக்கும் ஆனால், இங்கே அனைவரும் இணையத்தை அதிகம் பயன்படுத்துவதால் Peak நேரங்களில் மெதுவாகத் தான் இருக்கும். எங்க ஊர் கோபியில் Airtel 3G வேகம் சிங்கப்பூர் 4G LTE வேகத்திற்கு இணையாக இருக்கிறது, காரணம் மொபைல் இணையம் பயன்படுத்துபவர்கள் கோபியில் குறைவு என்பதால். சில வினாடிகளில் 30-40 MB தரவிறக்கம் ஆகிறது. இதே சென்னை வந்தால், இந்த வேகம் கிடைக்காது.
இதில் 5G சோதனை அடிப்படையில் 2017 லிலும் அனைவரின் பயன்பாட்டிற்கு 2020 லும் வரும் என்று கூறி இருக்கிறார்கள். ஏன் இவ்வளவு காலம் எடுக்கிறது என்று புரியவில்லை. இதற்கு முன்பு வேகமாக வந்தவர்கள், 5G க்கு ஏன் இவ்வளவு காலம் எடுக்கிறார்கள் என்று தெரியவில்லை. என்னைப் பொருத்தவரை இவர்கள் திட்டமிட்ட காலத்திற்கு முன்பே 5G தொழில்நுட்பம் வந்து விடும் என்று நினைக்கிறேன்.

3G சேவை பயன்படுத்தினால் சிங்கப்பூரில் 12 GB Data இலவசமாக கொடுத்த தொலைபேசி நிறுவனங்கள் 4G வந்த பிறகு 3 GB தான் கொடுக்கிறார்கள். காரணம், 4G வேகமாக இருப்பதால், வழக்கமாக இணையத்தை பயன்படுத்துவதை விட அதிகம் பயன்படுத்துவோம். உதாரணத்திற்கு இணையத்தில் நீங்கள் பார்க்கும் திரைப்படம் Buffer ஆகாமல் வந்தால் இரண்டு படம் கூட பார்ப்பீர்கள் ஆனால், அதே முக்கிக் கொண்டு இருந்தால், பாதிலேயே நிறுத்தி விடுவீர்கள். தற்போது புரிகிறதா ஏன் குறைவான வேகத்திற்கு அதிக GB யும் அதிகமான வேகத்திற்கு குறைவான GB யும் இலவசமாகக் கொடுக்கிறார்கள் என்று. முன்பு 12 GB இருந்தாலும் அதில் நான் 1.5 GB தான் பயன்படுத்தி இருப்பேன். 4G வந்த பிறகு 3 GB கூட போதவில்லை.
5G வந்து இணையம் செலவு குறைவாக மாறினால் எதிர்காலத்தில் Wifi Router ஒவ்வொருவரும் வாங்குவார்களா என்றே சந்தேகமாக இருக்கிறது! ஏனென்றால் தற்போதே என்னுடைய ஒரு நண்பன் அவனுடைய 4G LTE இணைப்பைத் தான் அவனுடைய வீட்டு இணையத்திற்க்கும் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறான். இனி 5G வந்தால், Wifi வாங்காமல் இதிலேயே வேண்டும் என்றால் [Hotspot] பயன்படுத்திக்கொள்ளும் படி ஆகி விடும் என்று நினைக்கிறேன். இவை இரண்டையும் தனித் தனியாக பாவிப்பவர்கள் மட்டும் Wifi வாங்கிக் கொள்வார்கள்.

Hotpost : நம்முடைய மொபைலையே 3G / 4G LTE இணையத்தின் உதவியால் ஒரு Wifi router போல மாற்றி விடலாம். இதற்கு பெயர் தான் “Hotspot”. என்னடா எதோ ஹாட் ஸ்பாட், கோல்டு ஸ்பாட்ன்னு கொளுத்திப் போடுறாங்களே என்று இது பற்றி தெரியாதவங்க மிரண்டுடாதீங்க! grey ஓங்கி அடிச்சா 5G வேகம்டா!  சப்பை மேட்டர்.
இனி எதிர்காலத்தில் மொபைலின் பங்கு தற்போது இருப்பதை விட அபரிமிதமாக இருக்கும். நம்முடைய அனைத்துப் பணிகளையும் மொபைல் மூலமே முடித்து விட முடியும். தற்போதே அப்படித்தான் இருக்கிறது. இந்த நிலையில் 4G LTE யை விட 1000 மடங்கு வேகத்தில் இணைய வேகம் இருந்தால், என்னால் கற்பனையே செய்ய முடியவில்லை. இணையத்தில் Buffer என்றால் என்ன? அது எப்படி இருக்கும்? என்று தான் எதிர்கால சந்ததியினர் கேட்பார்கள். “56 KBPS” வேகத்தில் இருந்து பயன்படுத்திக்கொண்டு இருக்கும் எனக்கு இதன் வளர்ச்சிகளில் கூடவே வருவது ஒரு சந்தோசமான பயணமே! தற்போது 100 MB Fiber வேகம் வரை வந்து இருக்கிறேன் grey ஓங்கி அடிச்சா 5G வேகம்டா!  .


கொசுறு – தென் கொரியாவில் இருந்து வந்த நம்ம சிங்கக் குட்டி (அட! பதிவர் 
 பேரு தான்.. பயந்துடாதீங்க) சியோல் (தென் கொரியா தலைநகரம்) ஒளி வெள்ளத்தில் இருக்கும், இரவே பகல் மாதிரி தான் இருக்கும். சிங்கப்பூர் எல்லாம் தள்ளித் தான் நிற்க வேண்டும் என்று கூறினார். சிங்கப்பூரே அருமையாகத் தான் இருக்கு! இதை விட அங்கே அருமை என்றால், எப்படி இருக்கும்!! தென் கொரியா எனக்குப் பிடிக்க ஒரு முக்கியக் காரணம் இருக்கு. அங்கே இருந்து தான் நிறைய ஹாரர் படங்கள் தயாராகி வருது grey ஓங்கி அடிச்சா 5G வேகம்டா!  ஆனால், இவங்க பக்கத்து நாட்டுல நிஜமாலுமே திரைப்படங்களை மிஞ்சும் ஒரு ஹாரர் நபர் இருக்கிறார். அவர் யார் தெரியுமா?

One Drive
Google Drive போல மைக்ரோசாப்ட் SkyDrive என்று வைத்து இருந்தது ஆனால், ஏற்கனவே இந்தப் பெயரில் இருந்த நிறுவனம் வழக்கு தொடர்ந்ததால், வேறு வழியில்லாமல் தங்கள் பெயரை மாற்றிக்கொள்வதாக மைக்ரோசாப்ட் அறிவித்து இருந்தது. அதன் படி தற்போது SkyDrive என்பதில் இருந்து OneDrive என்று மாற்றி விட்டது. இனி இதை பிரபலப்படுத்த விளம்பரங்கள் செய்ய வேண்டும். எனக்கென்னவோ Sky Drive என்பதை விட One Drive என்பது Professional ஆக இருப்பதைப் போல தோன்றுகிறது. இந்த One Drive என்பதற்கு “அனைத்தும் இதில் அடக்கம்” என்பதை குறிப்பதாக மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. இந்தப் பெயருக்கு யாரும் இது என்னுடைய “பெட்ரோமாக்ஸ் லைட்” என்று சண்டைக்கு வராமல் இருந்தால் சரி grey ஓங்கி அடிச்சா 5G வேகம்டா!  .

கொசுறு 
இது தான் ரொம்ப முக்கியம் grey ஓங்கி அடிச்சா 5G வேகம்டா!  என்னோட Blog குறித்த எதிர்கால விருப்பங்களை / திட்டங்களை ஒரு பக்கமாக என்னுடைய தளத்தில் எழுதி இருக்கிறேன். இது என்னுடைய தளத்தின் முகப்பு பக்கத்தில் நிரந்தரமாக இருக்கும். தற்போது என்னுடைய தளத்தில் இதை படித்துக் கொண்டு இருப்பவர்கள் மேலே (அல்லது இந்த சுட்டி) “Future Plan” என்பதை க்ளிக் செய்து படிக்கலாம். இவ்வளவு நாளாக (வருடங்களாக!) என்னுடைய தளத்திற்கே வராமல் ரீடர் மற்றும் மின்னஞ்சலில் மட்டுமே படித்து மங்களம் பாடிட்டு இருப்பவர்களுக்கு ரீடரில் / மின்னஞ்சலில் இது வராது ஹா ஹா. நீங்க இதைப் படிக்க என்னுடைய தளத்திற்கே வந்தே ஆக வேண்டும் வேறு வழியே இல்லை grey ஓங்கி அடிச்சா 5G வேகம்டா!  .

பேஸ்புக்கிற்கு இன்றுடன் 10 வயது

சமூக வலைத்தளத்தில் ஆதிக்கம் செலுத்தி வரும் பேஸ்புக் இணையத்தளமானது தனது 10ஆவது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறது.
 
பேஸ்புக்கி ஸ்தாபகரான அமெரிக்காவைச் சேர்ந்த மார்க் ஸூகர்பேர்க் சக நண்பர்களுடன் சேர்ந்து ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் ஒரு சிறிய அறையில் 2004ம் ஆண்டு பெப்ரவரி 4ஆம் திகதி பேஸ்புக் இணையதளத்தைத் தொடங்கினார்.
 
அப்போது பல்கலைக்கழக மாணவராக இருந்த மார்க், சக மாணவர்களுக்கிடையே ஓர் இணைப்பை ஏற்படுத்த இந்த இணையதளத்தை உருவாக்கினார்.
 
இப்போது பேஸ்புக் உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கை 120 கோடியைத் கடந்து விட்டது.
 
கடந்த 2012ஆம் ஆண்டில் பேஸ்புக்கின் ஆண்டு நிகர வருமானம் 53 மில்லியன் டொலராக இருந்தது. 2013-ம் ஆண்டில் அதன் வருமானம் இருமடங்கு அதிகரித்து 1.5 பில்லியன் டொலராக உயர்ந்துள்ளது.
 
பேஸ்புக்கின் ஸ்தாபகர் மார்க் ஸூகர்பேர்க் கடந்த மே மாதம் தனது 30அவது பிறந்த நாளைக் கொண்டாடுகையில், இந்த இணையதளம் உலக கோடீஸ்வரர்களில் ஒருவராக என்னை உயர்த்தும் என்று கனவில் கூட நினைத்துப் பார்க்கவில்லை என்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Monday, February 3, 2014

Sim Card இல் அழிந்து போன தகவலகளை மீட்பது எப்படி?

சிம் cardல் அழிந்து போன தரவுகளை மீண்டும் பெற வேண்டுமா? நாம் சேமித்து வைத்திருந்த ( Phone Book Numbers, Call History, Sms போன்றவற்றை பெற்றுக்கொள்ள இதோ சிறிய மென்பொருள் ஒன்று. Sim Card Recovery 3.0 என்ற மென்பொருளின் மூலம் நமது தரவுகளை மீட்டிக்கொள்ள முடியும். இந்த மென்பொருளை இலவசமாக தரவிறக்க Trile Verision ஆகதான் தரவிறக்க முடியும். இதன் மூலம் எமது தரவுகளை மீட்டிக்கொள்ள முடியும். இதை பணம் கொடுத்து வாங்கினால் நாம் sim வாங்கியதிலிருந்து அழிந்த தரவுகளை மீளப்பெற முடியும்.
அதன் லின்க்
மென்பொருளை தரவிறக்க கீழுள்ள link மூலம் செல்லுங்கள்.

FAX இயந்திரம் தேடி அலைய தேவையில்லை - இலவசமாக பேக்ஸ்(FAX) அனுப்ப இணையதளங்கள் தயார்!

நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் Fax அனுப்பலாம். இப்போது fax இயந்திரம் தேடி அலைய தேவையில்லை. ஆன்லைன் மூலம் எளிதாக அனுப்பலாம். குறிப்பிட்ட கோப்பை இணைப்பாக இணைத்து அனுப்பிவிடலாம். இதனை சில தளங்கள் வழங்குகின்றன. இவைகளில் விளம்பரங்கள்இணைக்கப்பட்டு அனுப்பபடுகின்றன அல்லது ஒரு நாளைக்கு இரண்டு முறை மட்டும் என்ற நிபந்தனைகளுடன் உங்களுக்கு கொடுக்கிறார்கள் கீழே உள்ள உள்ள இணையத்தளசேவையினர்.
அவை

செயற்கை மதிநுட்ப மென்பொருள் மூலம் ஓர் இரவில் மாபெரும் கோடீஸ்வரர்

மனிதர்களைப் போன்று கணினிகள் சிந்திப்பதற்கு வழிவகை செய்யக்கூடிய செயற்கை மதிநுட்ப மென்பொருளை விருத்தி செய்வதற்காக தன்னால் உருவாக்கப்பட்ட கம்பனியை கூகுள் நிறுவனத்திற்கு விற்றதன் மூலம் பிரித்தானியாவைச் சேர்ந்த கணினி மேதையொருவர் ஒரு நாளில் மாபெரும் கோடீஸ்வரராகியுள்ளார்.


நரம்பியல் விஞ்ஞானியான டெமிஸ் ஹஸ்ஸபிஸ், (37 வயது) இரு வருடங்களுக்கு முன் கணினிகள் மனிதர்களைப் போன்று சிந்திப்பதற்கு உதவும் முகமாக டீப்மைன்ட் டெக்னோலொஜிஸ் நிறுவனத்தை பிறிதொருவருடன் இணைந்து ஸ்தாபித்தார்.
லண்டனை தளமாகக் கொண்டு செயற்படும் அவரது கம்பனி வர்த்தக ரீதியாக எதனையும் உற்பத்தி செய்யாத செயற்கை மதிநுட்பத்துறையில் முன்னோடியாக அது கொண்டுள்ள நிபுணத்துவ ஆற்றலை கவனத்திற் கொண்டு அக் கம்பனியை 242 மில்லியன் ஸ்ரேலிங் பவுண் விலைக்கு கூகுள் வாங்கியுள்ளது.
இது கூகுளால் ஐரோப்பாவில் மேற்கொள்ளப்பட்ட மிகப் பெரிய தனியொரு உள்வாங்கல் நடவடிக்கையாக கருதப்படுகிறது.
இது தொடர்பில் ஹஸ்ஸபிஸ் விபரிக்கையில், ''கூகுளுடன் இணைவது குறித்து நாம் பெரிதும் பரவசம் அடைந்துள்ளோம்'' என்று கூறினார்.
75 ஊழியர்களுடன் செயற்படும் டீப்மைன்ட் டெக்னோலொஜிஸ் கம்பனியை பேஸ்புக் இணையத்தள நிறுவனமும் கொள்வனவு செய்யத் திட்டமிட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.


Saturday, February 1, 2014

பவர்பாய்ன்ட் கோப்புகளை வீடியோவாக மாற்ற


நம்மில் பலர் மைக்ரோசாப்ட்டின் ஆபீஸ் தொகுப்பில் உள்ள பவர்பாய்ன்ட் செயலியை பயன்படுத்தி வருவோம். எளிய முறையில் தகவல்களை தொகுத்து அனிமேஷன் வேலைகளுடன் வழங்க உதவும். இதன் பயன்பாடுகள் விரிவானவை.

இவ்வாறு பவர்பாய்ன்ட் மூலம் உருவாக்கிய கோப்புகளை மற்ற கணினிகளில் வேலை செய்ய வைக்க அந்த கணினிகளில் பவர்பாய்ன்ட் அல்லது பவர்பாய்ன்ட் வியுவர் தேவைப்படும். இவற்றை வீடியோ கோப்புகளாக மாற்றுவது பவர்பாயிண்ட்டில் இயலாத காரியம். வீடியோவாக மாற்றினால் கணினி, மொபைல் டிவிடி பிளேயர் என்று பயன்படுத்தி கொள்ளலாம்.

Leawo PowerPoint to Video Free. இந்த இலவச மென்பொருள் மூலம் மேற்சொன்ன வேலையை செய்ய வைக்க முடியும். பவர்பாய்ன்ட் கோப்புகளை ASF, WMV, 3PG, 3G2 வீடியோ கோப்புகளாக மாற்றிக் கொள்ளலாம். இந்த மென்பொருளை இந்த சுட்டியை கிளிக் செய்து தரவிறக்கி நிறுவி கொள்ளுங்கள்.


PPT, POT, PPTX, PPS என்று அனைத்து விதமான பவர்பாயிண்ட் கோப்புகளையும் ஆதரிக்கும். அனைத்து அனிமேஷன்களும் வேலை செய்யும். வீடியோவிற்கு இசையை தனி டிராக்காக சேர்த்து கொள்ளலாம். இவ்வாறு உருவாக்கப்பட்ட வீடியோக்களை யுடியுப் மாதிரியான தளங்களிலும் பகிர்ந்து கொள்ள முடியும்.

Blogger Tips and TricksLatest Tips For BloggersBlogger Tricks

சொயற்படுத்துங்கள்

Blog Archive

Total Pageviews