ஜிமெயிலில் தேவையில்லாத மின்னஞ்சல்களை Automatic Delete செய்வதற்கு
கூகுள் வழங்கும் அற்புத சேவையான ஜிமெயிலில் வசதிகள் ஏராளம். முற்றிலும் இலவசமான இந்த மின்னஞ்சல் சேவையை அனைவரும் பயன்படுத்துகிறோம்.
நாம் இணையத்தில் ஏதாவது ஒரு தளத்திலோ அல்லது வேறு எங்கோ நம் மின்னஞ்சல் ஐடியை கொடுத்து உறுப்பினர் ஆகிவிடுவோம்.
நாம் இணையத்தில் ஏதாவது ஒரு தளத்திலோ அல்லது வேறு எங்கோ நம் மின்னஞ்சல் ஐடியை கொடுத்து உறுப்பினர் ஆகிவிடுவோம்.
இப்படி இணையத்தில் நம்முடைய மின்னஞ்சல் ஐடியை பகிர்வதால் இதை பல Spam நிறுவனத்தினர் கண்டறிந்து தேவையில்லாத
மின்னஞ்சல்களையும், ஆபத்தான மின்னஞ்சல்களையும் நமக்கு அனுப்பி கொண்டு இருப்பார். அதுபோன்ற Spam மின்னஞ்சல்களை எவ்வாறு வரும் பொழுதே Automatic Delete செய்வது என காணலாம்.
Follow Steps:
1. உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழைந்து Settings பகுதிக்கு செல்லுங்கள்.
2. Filters என்ற வசதியை கிளிக் செய்யுங்கள்.
3. Create a new filter என்பதை கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு இன்னொரு விண்டோ திறக்கும்.
4. அதில் Has the Words பகுதியில் is:spam என்று டைப் செய்யுங்கள். மற்ற கட்டங்களை காலியாக விட்டு விடுங்கள்.
5. அடுத்து கீழே உள்ள Next Step என்ற பட்டனை அழுத்துங்கள். உங்களுக்கு ஒரு சிறிய விண்டோ வரும் அதில் OK கொடுக்கவும்.
6. அடுத்து இன்னொரு விண்டோ திறக்கும் அதில் Delete it என்பதற்கு நேராக உள்ள கட்டத்தில் டிக் மார்க் இடவும்.
7. அடுத்து கீழே உள்ள Create Filter என்பதை கிளிக் செய்யுங்கள். அவ்வளவு தான் Filter உருவாகிவிட்டது. இனி உங்கள் ஜிமெயில் முகவரிக்கு வரும் Spam மின்னஞ்சல்கள் தானாக Delete ஆகிவிடும்.
Note: கூகுள் கொடுத்து இருக்கும் Unlimited Space சேவையில் இதை delete செய்ய வேண்டிய அவசியமில்லை மற்றும் ஸ்பாம் போல்டருக்கு வரும் சில நல்ல மின்னஞ்சல்களும் அழிந்து விடும்
0 comments:
Post a Comment