மனிதர்களை சமூகத்தில் இருந்து தனிமைப்படுத்தும் ஃபேஸ்புக்!
நண்பர்களுடன் தகவல்களை பகிர்ந்து கொள்ளும் சவுகரியத்தினை ஏற்படுத்தி உள்ள ஃபேஸ்புக் மனதளவில் சிறியவர்களையும், பெரியவர்களையும் பாதிப்பதாக செய்திகள் வெளியாகின. ஃபேஸ்புக் பயன்படுத்துபவர்கள் சமூகத்தில் இருந்து விலகி செல்வதாக இன்னொரு பகீர் தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
ஃபேஸ்புக் பயன்படுத்துவோரது மன நிலை, அவர்களிடம் ஏற்படும் மனநல மாற்றங்கள் குறித்து 1.40 கோடி பேரிடம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில், ஃபேஸ்புக் பயன்படுத்துபவர்கள் சமூகத்துடன் நெருங்கி பழகாமல், மற்றவர்களிடம் இருந்து விலகியே இருப்பதாக தெரிய வந்துள்ளது.
எந்த நேரமும் ஃபேஸ்புக் இவர்களை ஆக்கிரமித்து கொள்வதால் உடன் இருப்பவர்களை பற்றி கூட அதிகம் தெரிந்து கொள்ளவதற்கு தவறுவதாக சில தகவல்கள் கூறுகின்றனர். தூரத்தில் இருக்கும் நண்பர்களிடம் தகவல்களை அதிகம் பரிமாறி கொள்ள உருவான ஃபேஸ்புக், இப்போது அருகில் இருப்போரது நெருக்கத்தை குறைத்து கொண்டும் இருக்கிறது.
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுதானே…!
0 comments:
Post a Comment