உலகிலேயே பணியாற்ற சிறந்த நிறுவனம் எது தெரியுமா ? கூகுள் தானாம்!!
மனித வள பிரிவில் சிறந்த நிறுவனங்கள் பற்றி ஆய்வு செய்யும் சர்வதேச நிறுவனம் யுனிவர்சம். அதன் ஆய்வின்படி இந்த ஆண்டில் ஊழியர்கள் அதிக மனநிறைவுடன் பணியாற்றும் உலகின் முன்னணி 50 நிறுவனங்கள் பட்டியலை அது தயாரித்தது.
அதில் தொடர்ந்து 3வது ஆண்டாக முதலிடம் பிடித்தது கூகுள். பணியாற்ற
ஏற்ற சூழல், திறமைக்கு மதிப்பு, உழைப்புக்கேற்ற அங்கீகாரம், ஊதியம் என எல்லா வகையிலும் திருப்தி அளிப்பதாக கூகுள் பற்றி இந்தியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், ரஷ்யா, ஸ்பெயின், இங்கிலாந்து, அமெரிக்கா நாடுகளை சேர்ந்த 1.6 லட்சம் ஊழியர்கள் தெரிவித்தனர்.
திறமை இருந்தால் உங்களுக்கு முதல் இடம்
பிரபல தணிக்கை நிறுவனமான கேபிஎம்ஜி, பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. மேலாண்மை கல்வி நிறுவனங்களில் பட்டம் பெற்றவர்கள் பணியாற்ற விரும்பும் நிறுவனமாக அது உள்ளது. பொறியியல் பட்டதாரிகளின் தேர்வாக ஐபிஎம் உள்ளது. பொறியியல் பட்டதாரிகள் பணியாற்ற விரும்பும் நிறுவனமாக மைக்ரோசாப்ட் 3வது இடத்தில் உள்ளது. கார் நிறுவனமான பிஎம்டபிள்யூ (4), சிப் தயாரிப்பாளர் இன்டெல் (5), மின்னணு நிறுவனம் சோனி (6), தொழில் நுட்ப நிறுவனம் ஆப்பிள் (7), ஜிஇ (8), சீமன்ஸ் (9), பி அண்ட் ஜி (10) என முதல் 10 இடங்களில் உள்ளன.
சில கூகுள் ஆபீஸ் படங்களை தருகிறேன் :
0 comments:
Post a Comment