தகவல் தொழில்நுட்ப முதல் தமிழ் வலைத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

Thursday, July 30, 2015

கணினியின் வேகத்தைக் கூட்ட எளிய வழிகள் – 6

கணினியைப் பற்றி சற்று விவரம் அறிந்தவர்கள் நேரடி அணுகு நினைவகம் "RAM" (Random Access Memory) என்னும் கணினிப் பாகத்தைப் பற்றியும் அதன் அளவு அதிகமாக இருப்பின் கணிணியின் வேகமும் கூடுதலாக உதவும் என்பதையும் அறிவர். நே.அ.நி. (‘RAM’) என்பது ஒரு வன்பொருள் (Hardware), எனவே இதன் அளவைக் கூட்ட வேண்டுமாயின், கூடுதல் நே.அ.நினைவகத்தை இணைக்க வேண்டும் அல்லது அதிக திறனுள்ள நே.அ.நினைவகத்தைக் கொண்டு மாற்ற வேண்டும். இன்றைய சூழலில் நே.அ.நினைவகத்தின் விலை சற்றே குறைவு, ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு இதன் விலை அதிகம். நாம் இப்போது பார்க்கவுள்ள குறிப்பு, எப்படி இந்த  நே.அ.நினைவகத்தைஅதிகப்படுத்தாமலேயே மென்பொருள் (Software) வழியாக கணினிக்குக் கூடுதல் நே.அ.நி. ஐ அளித்து கணினியின் வேகத்தைக் கூட்டுவது என்பது பற்றித் தான்!

பின்புலம்:
நே.அ.நி. என்பது கணினி கணக்கிடும் போது பயன்படுத்திக்கொள்ளும் தற்காலிக நினைவகப் பகுதி. இதைப் புரிந்து கொள்ள எடுத்துக்காட்டு ஒன்றைப் பார்ப்போம். நாம் எப்போதாவது மளிகைக் கடைக்குச் சென்று பொருள் வாங்கிய பின் மொத்த பொருள்களுக்கான விலையைக் கணக்குப் போட்டு கொடுப்போம். வாங்கிய பொருள்கள் இரண்டோ மூன்றோ என்றால் மனக்கணக்குப் போட்டுவிடுவோம், பொருள்களின் எண்ணிக்கை கூடுதல் என்றால் ஒரு சிறிய தாளை எடுத்து அதில் விலைகளை எழுதி எளிதாகக் கூட்டிவிடுவோம். எப்படி நம்மால் நினைவில் வைத்துக்கொள்ள முடியாததைத் தாளின் துணையுடன் கணக்கிட்டோமோ அதேபோல் கணினியின் கணக்கீட்டுப் பகுதி இந்த நே.அ.நி. ஐத் தாள் போல் தற்காலிக நினைவிடமாகப் பயன்படுத்துகிறது. நாம் வாங்கிய பொருள்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருப்பின் தாள் அளவு கொள்ளாது, அப்போது நாம் மற்றொரு தாளையோ வேறு ஏதேனும் முறையையோ பயன்படுத்திக் கணக்கிடுவோம், ஆனால் இம்முறை சற்று கூடுதல் நேரம் எடுத்திருப்போம், அதாவது வேகம் குறைந்திருக்கும். இது போலவே தான் கணினியும்! நே.அ.நினைவகத்தில் இடம் இல்லாதபோது வன்வட்டை (Hard Disk) நே.அ.நி. போலக் கணினி பயன்படுத்தத் தொடங்கும்.
*****
உங்கள் கணினியின் நே.அ.நினைவக அளவைத் தெரிந்துகொள்ள Start --> Run என்பதைச் சொடுக்கி "dxdiag" என்று தட்டச்சிடவும். அப்போது ஓர் உரையாடல் பெட்டி தோன்றி ஆம்‌/இல்லை எனக்கேட்டால், ஆம் என்று கொடுங்கள். கீழே உள்ளது போலத் திரை தோன்றும். அதில் நே.அ.நி. அளவைக் காணலாம். (1024 MB என்பது 1 GB.) Exit கொடுத்து வெளியே வந்துவிடுங்கள்.
system_1நாம் இப்போது "Virtual Memory" (இணைய நினைவகம்) அமைப்பைப் பயன்படுத்திக் கணினிக்குக் கூடுதல் நே.அ.நி. போன்ற பகுதியைக் கணினிக்கு அளிக்கலாம்.
உங்கள் நே.அ.நி. அளவு 1 GBக்கும் குறைவு எனில் நீங்கள் இம்முறையைப் பயன்படுத்தலாம்.
Start --> Control Panel --> System என்பதைத் தேர்வு செய்யுங்கள். இப்போது கீழே உள்ளதைப் போல "System Properties" என்ற உரையாடல் பெட்டி தோன்றும் அதில் Advanced என்ற தத்தலைத் தேர்வு செய்து பின்னர் Performance என்பதன் கீழ் உள்ள Settingsஐச் சொடுக்குங்கள்.  "Performance Options"  என்ற உரையாடல் பெட்டி தோன்றும். அதில் Advanced என்ற தத்தலைத் தேர்ந்து பின்னர் Virtual memory என்பதன் கீழ் உள்ள Changeஐத் தேர்ந்து கொள்ளுங்கள். "Virtual memory" என்ற உரையாடல் பெட்டி தோன்றும். அதில் Custom Size, Initial Size, Maximum Size ஆகியவற்றை உங்கள் நே.அ. நினைவக அளவைக் காட்டிலும் ஒன்றரை மடங்கு தட்டச்சிட்டு செட்(Set) கொடுங்கள்.
system_2
குறிப்பு : உங்கள் நே.அ.நினைவகத்தின் அளவு 2 GBக்கும் அதிகம் எனில் No Paging file என்ற தேர்வு உங்கள்  கணினியின் வேகத்தைக் கூட்டும்.

உங்கள் கணினியின் இயக்க மென்பொருள் (Operating System) C: வட்டில் நிறுவப்பட்டிருப்பின், Page file-ஐ வேறு வட்டில் வைப்பது நல்லது.

கணினியின் வேகத்தைக் கூட்ட எளிய வழிகள் – 5

கணினியின் நினைவகத்தை ஒருங்கமைப்பதன்(‘Defragment’) மூலம் நம்முடைய கணினியின் செயல் வேகத்தைக் கூட்ட முடியும்.
நினைவக ஒருங்கமைப்பு என்றால் என்ன?
நூறு பேர் அமரும் அளவில் ஓர் அரங்கம் இருக்கிறது.  அதில் முதலில் வரும் பத்து, இருபது பேர் வரிசையாகவா உட்கார்வார்கள்?  தங்களுக்குப் பிடித்த இடத்தில் உட்கார்ந்து கொள்வார்கள் அல்லவா?  கடைசியில் இருபது பேர் வருகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அவ்விருபது பேரும் ஒன்றாக உட்கார முடியாமல் தவிக்க நேரிடும்.  இதே போல் தான் கணினியிலும்! கணினியில் சேமிக்கப்படும் ஒவ்வொரு கோப்பும் கணினியின் நினைவகத்தில் சென்று வெவ்வேறு இடங்களில் உட்கார்ந்து கொள்ளும்.  இதனால் காலப் போக்கில் ஒரு (திரைப்படம் போன்ற) பெரிய கோப்பைக் கணினியில் சேமிக்க நினைக்கும் போது சிக்கல் வரும்.
இச்சிக்கலைத் தீர்ப்பதற்காக அவ்வப்போது நினைவகத்தை ஒழுங்குபடுத்திக் கோப்புகள் அருகருகே இருக்குமாறு நினைவகத்தை மாற்றுவதே நினைவக ஒருங்கமைப்பு(‘Disk Defragmentation’) ஆகும்.
எப்படிச் செய்வது?
கணினியின் ‘My Computer’ பகுதிக்குச் சென்று கொள்ளுங்கள்.  அங்கு ‘C:\, D:\’ எனப் பல அடைவுகள் இருக்கும்.  தேவைப்படும் அடைவின் மீது வலப்புறம் சொடுக்கி ‘Properties’ என்பதைத் தேர்ந்துகொள்ளுங்கள்.
பின்னர் வரும் மேல்மீட்புப் பெட்டியில் கீழுள்ளதைப் போல் ‘Tools’ என்னும் தத்தலைத் தேர்ந்து ‘Defragment now’ என்று கொடுத்து விடுங்கள்.
இப்படி ஒருங்கமைப்பதை இரண்டு மாதங்களுக்கு ஒரு முறையோ மூன்று மாதங்களுக்கு ஒரு முறையோ செய்தால் கூடப் போதும்.
எல்லா அடைவுகளுக்கும் சேர்த்துச் செய்வது எப்படி?
‘Start’ பொத்தானை அழுத்தி வரும் பட்டியலில் இருந்து ‘All Programs -> Accessories’ என்பதைத் தேர்ந்து அதில் ‘System Tools’ என்று தேர்ந்துகொள்ளுங்கள்.

அதில் ‘Disk Defragmenter’ என்பதைத் தேர்ந்து கொள்ளுங்கள்.
 இடப்பக்கம் உள்ளது போல் ஒரு மேல்மீட்புப் பெட்டி தோன்றும்.
 அப்பெட்டியில் வலப்பக்கம் உள்ள ‘Configure Schedule’ என்பதைச் சொடுக்குங்கள்.  இப்போது கீழுள்ளது போல ஒரு மேல்மீட்புப் பெட்டி தோன்றும்.




எப்போதெல்லாம் நினைவக ஒருங்கமைப்பைச் செய்ய வேண்டும் (மாதத்திற்கு ஒரு முறையா, இரண்டு மாதங்களுக்கு ஒரு முறையா) என்பதை ‘Frequency’ என்பதைச் சொடுக்கியும் எந்தெந்த அடைவுகளை ஒருங்கமைக்க வேண்டும் என்பதை ‘Select disks…’ என்பதைச் சொடுக்கியும் கொடுத்து விட்டால் போதுமானது.  அதன் பிறகு உங்களுடைய உள்ளீட்டுக்கு ஏற்றவாறு சீரான இடைவெளியில் கணினி தன்னைத் தானே ஒருங்கமைத்துக் கொள்ளும்.  இப்படி ஒருங்கமைப்பது கணினியின் வேகத்தைக் கூட்டப் பயன்படும்.  

கணினியின் வேகத்தைக் கூட்ட எளிய வழிகள் – 4

உங்கள் கணினியின் திரையில் அதிக எண்ணிக்கையில் சின்னங்களை (‘Icon’) வைத்திருப்பது கணினியின் வேகத்தை மட்டுப்படுத்தும்.
எப்படி?
கணினித் திரையில் உள்ள சின்னங்கள் அனைத்தையும் பயனர் அடிக்கடி பயன்படுத்துவார் என்பதால் கணினி தொடங்கும்போது இச்சின்னங்களின் நினைவக முகவரிகளைத் தேடிச் சென்று அதுவே எடுத்து வந்து விடும்.  இப்படி எடுத்து வந்து, பயனர் அச்சின்னத்தைச் சொடுக்கும்போது அம்மென்பொருள் இயங்குவதற்கான ஆயத்த நிலையில் கணினி எப்போதுமே இருக்கும்.  இப்படிப் பல சின்னங்கள் இருக்கும்போது ஒவ்வொரு சின்னத்தின் நினைவக முகவரியையும் தேடி எடுத்து ஆயத்த நிலையில் இருக்கக் கணினிக்கு நேரம் பிடிக்கும்.  எனவே தான் அச்சூழலில் கணினி மெதுவாக இயங்கும்.
இதைத் தவிர்க்கத் தேவையான சின்னங்கள் தவிர, பிற சின்னங்களை நீங்கள் திரையில் இருந்து நீக்கிவிட்டால் கணினியின் வேகம் மீண்டும் பழைய நிலைக்கு வரும்.

கணினியின் வேகத்தைக் கூட்ட எளிய வழிகள் – 3

அடிக்கடி இணையத்தைப் பயன்படுத்துபவரா நீங்கள்?  உங்கள் கணினியின் வேகம் நாளுக்கு நாள் குறைந்து வருவதாக உணர்கிறீர்களா?  அதன் வேகத்தைக் கூட்ட இதோ ஓர் எளிய வழி:
  1. ‘Start’ பொத்தானை அழுத்தி ‘Run’ என்னும் சுட்டியைத் தேர்ந்துகொள்ளுங்கள்.
  2. அதில் உள்ள வார்த்தைப் பெட்டியில் ‘%tmp%’ எனத் தட்டச்சிட்டு ‘Ok’ எனக் கொடுத்துவிடுங்கள்.
  3. இப்போது தோன்றும் திரையில் பல கோப்புகளையும் அடைவு(‘Folder’)களையும் பார்க்கலாம். இவை எல்லாம் நீங்கள் இணையத்தைப் பார்க்கும் போது கணினியில் தேங்கிய தற்காலிகக் கோப்புகளும் அடைவுகளும் தாம்! இவை உங்கள் கணினியின் நினைவகத்தை வீணடித்துக் கொண்டிருக்கும்.
  4. temp_1
தேவையற்ற இக்கோப்புகளையும் அடைவுகளையும் நீக்குவதன் மூலம் கணினியின் வேகத்தை ஓரளவு நம்மால் கூட்ட முடியும்.

கணினியின் வேகத்தைக் கூட்ட எளிய வழிகள் – 2

‘நன்றாக இயங்கிக் கொண்டிருந்த என்னுடைய கணினியின் வேகம் இப்போது வெகுவாகக் குறைந்துவிட்டது.  கணினியைத் தொடங்குவதற்கே நான் சில மணித்துளிகள் காத்திருக்க வேண்டியிருக்கிறது’ என்று கவலைப்படுகிறீர்களா?  கவலையை விடுங்கள். 
உங்கள் கணினி தொடங்க எடுத்துக்கொள்ளும் நேரத்தை நாம் எளிதாகக் குறைத்து விடலாம். 
  1. ‘Start’ பொத்தானை அழுத்தி ‘Run’ என்னும் சுட்டியைத் தேர்ந்துகொள்ளுங்கள். அதில் உள்ள வார்த்தைப் பெட்டியில் ‘msconfig’ எனத் தட்டச்சிட்டு ‘Ok’ எனக் கொடுத்துவிடுங்கள்.
  2. கீழுள்ளவாறு பெட்டி தோன்றும்.  அதில் படத்தில் உள்ளது போல ‘Startup’ என்னும் தத்தலைத் தேர்ந்துகொள்ளுங்கள். 
 computer_503
  1. அதில் உள்ள பட்டியலைப் பாருங்கள்.  இப்பட்டியலில் உள்ள ‘✓’ என்னும் குறியிடப்பட்டுள்ள ஒவ்வொரு மென்பொருளையும் கணினி தொடங்கும்போது தானாகவே தொடக்கிவிடும்.  இது தான் உங்கள் கணினி தொடங்க நீண்ட நேரம் எடுத்துக்கொள்வதன் காரணமாகும். 
  2. இப்பட்டியலில் இருந்து நீங்கள் அடிக்கடி பயன்படுத்தாத மென்பொருள்களின் பெயர்களுக்கு நேரே உள்ள ‘✓’ என்னும் குறியை நீக்கி விடுங்கள்.  (எ.கா. நீங்கள் ‘Google Talk’ மென்பொருளை எப்போதும் பயன்படுத்த மாட்டீர்கள்.  இணையத்தில் இருக்கும்போது மட்டும் தான் பயன்படுத்துவீர்கள் எனில் அதற்கு நேர் உள்ள ‘✓’ என்னும் குறியை நீக்கிவிடலாம்) பின்னர் ‘Apply’, ‘OK’ என்பனவற்றைக் கொடுத்து விடுங்கள். 
  3. இப்படித் தேவையில்லாத மென்பொருள்களை இப்பட்டியலில் இருந்து நீக்குவது அம்மென்பொருள்களுக்கு எவ்விதச் சிக்கலையும் ஏற்படுத்திவிடாது.  தேவைப்படும்பொழுது அம்மென்பொருள்களை வழக்கம் போல் நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.  அதே சமயம் உங்கள் கணினியின் இயக்க வேகம் கூடியிருக்கும். 

கணினியின் வேகத்தைக் கூட்ட எளிய வழிகள் – 1

பல செயலிகளை ஒரே நேரத்தில் கணினியில் பயன்படுத்துபவரா நீங்கள்?  கணினியின் வேகம் வெகுவாகக் குறைந்து விட்டது;  அதன் செயல் வேகத்தைக் கூட்ட என்ன செய்யலாம் என்று நினைக்கிறீர்களா?  கவலையை விடுங்கள்.  கீழுள்ள படிநிலைகளைக் கையாண்டு உங்கள் கணினியின் வேகத்தை எளிதாகக் கூட்டி விடலாம். இப்பதிவில் உள்ள படங்கள் ‘விண்டோசு ஏழு’ இயங்குதளத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன.  பிற இயங்குதளங்களுக்கும் வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
‘Start’ பொத்தானை அழுத்தி வரும் பட்டியில் ‘Computer’ (பிற இயங்கு தளங்களில் My Computer) என்பதன் மேல் வலப்புறம் சொடுக்குங்கள். 
windows_373

அப்பட்டியலில் ‘Properties’ என்பதைத் தேர்ந்துகொள்ளுங்கள்.  வரும் பக்கத்தின் கீழ் இடப்புறத்தில் ‘Performace Information and Tools’ என்னும் சுட்டி இருக்கும்.  அதைத் தேர்ந்து கொள்ளுங்கள்.  (பிற தளங்களுக்கு: ‘Properties’ என்பதன் பின் ‘System Properties’ என்பதைத் தேர்ந்துகொள்ளுங்கள்.)
windows_151
இப்போது நீங்கள் பார்க்கும் பக்கத்தின் மேல் இடப்புறத்தில் ‘Adjust visual effects’  என்னும் இணைப்பு இருக்கும்.  (பிற தளங்களுக்கு: ‘System Properties’ பெட்டியில் ‘Advanced Tab’ என்னும் தத்தலைத் தேர்ந்து கொள்ளுங்கள்.  அதில் ‘Performance’ -> Performance Options -> Visual Effects’ என்பதைத் தேர்ந்துகொள்ளுங்கள்.)
இப்போது கீழுள்ளது போலப் பெட்டி தோன்றும்.  அதில் படத்தில் இருப்பது போல ‘Adjust for best performance’ என்பதைத் தேர்ந்தெடுத்து ‘Apply’ மற்றும் 'Ok' கொடுத்து விடுங்கள்.  
windows_358
பிறகென்ன உங்களுடைய கணிப்பொறியின் வேகத்தை ஓரளவு இப்போது நாம் கூட்டிவிட்டோம்.

Monday, July 13, 2015

FREE SMS Service:
*Tips
*GK
&
etc...
F KANANITIPS
Send to > >
SL-40404
Pak-40404
Bahrain-88000
UAE-8080
Kuwait-89887
Qatar-92828
Oman-91200
UK-86444
IND-83000
iraq-71117
Saudi -840404
Ulaham Poorahavum:

Blogger Tips and TricksLatest Tips For BloggersBlogger Tricks

சொயற்படுத்துங்கள்

Blog Archive

Total Pageviews