தகவல் தொழில்நுட்ப முதல் தமிழ் வலைத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

Monday, February 6, 2012

ஏடிஎம் திருட்டை ஒழிக்க புதிய தொழில்நுட்பம்

ஏடிஎம் குறீயீட்டு எண் திருட்டை தடுக்கும் வகையில் “டிரை பின்” எனப்படும் புதிய தொழில் நுட்பம் விரைவில் அறிமுகப் படுத்தப்படவுள்ளது.
New ATM anti-fraud system uses colours, symbols and numbers
இந்த தொழில் நுட்பத்தில் வண்ணங்கள், எண்கள் மற்றும் குறியீடுகளை பயன்படுத்தி விசைபலகை உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு முறையும் விசைபலகை மாற்றமடையும் வகையிலும் இது உருவாக்கப்பட்டுள்ளது.
TRI-PIN-Laptops
இதில் பயனாளிகள் தங்களுக்கு பிடித்த நிறம், வடிவம், குறியீடு மற்றும் எண்கள் அடங்கிய கடவுச்சொல்லை தெரிவு செய்யலாம். தற்போது நடைமுறையில் உள்ள நான்கு இலக்க கடவுச்சொல் திருட்டை தடுக்கும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. ஏ.டி.எம் திருட்டால் பாதிக்கப்பட்ட ஒருவரின் நண்பரான கிளைன் ரெனால்ட்ஸ் என்பவர் இந்த புதிய முறையை கண்டறிந்து உள்ளார்.
1
இந்த புதிய முறையானது மிகவும் பாதுகாப்பானதாகவும், மற்றவர்களால் திருட முடியாத வகையிலும் உருவாக்கபட்டு உள்ளது.

Sunday, February 5, 2012

மொபைல் தொழில்நுட்பம்

கைப்பேசியின் (Mobile Phone) முன்னெப்போதும் இல்லாத இன்று விரிவடைந்து இருக்கின்றது. காலத்துக்கு ஏற்ப மாறிக்கொண்டிருக்கும் செல்போன் தொழில்நுட்பத்தை தலைமுறை (Generation)என்று அழைக்கப்படுகின்றது.

முதல் தலைமுறைக் கைப்பேசிகள் 1980களின் துவக்கத்தில் ஆரம்பமாகின. இதில் அனலொக் (Analog) சமிக்ஞைகள் பயன் படுத்தப்பட்டன.

இரண்டாம் தலைமுறைக் கைப்பேசிகள் டிஜிட்டலுக்குத் (Digital) தாவியது. இரண்டாம் தலைமுறைக் கைப்பேசிகளில் தான் இன்று நாம் பயன்படுத்தும் ஜி .எஸ்.எம். (GSM) அறிமுகப்படுத்தப்பட்டது. 1982களில் அறிமுகமான இது Global System for Mobile Communications என்பதன் சுருக்கமாகும். எஸ்.எம்.எஸ் வளர்த்ததும், மலிவானதும் இந்தத் தலைமுறையில் தான்.

      மூன்றாம் தலைமுறைக் கைப்பேசிகள் ஐப்பானில் 2001 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டன. இது W-CDMA தொழில் நுட்பத்தில் இயங்குகின்றது. மூன்றாம் தலைமுறைக் கைப்பேசிகள் IMI2000எனும் வகையின் கீழ் 3GPP மற்றும் 3GPP2 எனும் புதிய தொழில் நுட்ப அடிப்படையில் இயங்குகின்றன. பேசிக் கொண்டே தகவல் அனுப்புவது இதில் ஸ்பெஷல் அம்சம்.

நான்காம் தலைமுறைக் கைப்பேசிகள் LTE நுட்பத்தின் அடிப்படையிலானவை. 2009 ஆம் ஆண்டின் கடைசிப் பகுதியில் இந்தத் தொழில் நுட்பத்துக்கான ஆரம்ப வேலைகள் ஆரம்பமாகின.

வாழ்த்துச் செய்தியை அனிமேஷனில் சொல்ல வேண்டுமா

வாழ்த்து செய்தியை வழக்கமான முறையில் அல்லாமல் கொஞ்சம் வித்தியாசமாக அசத்தலான அனிமேஷனில் சொல்ல வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதற்கு உதவுவதற்காக ஒரு இணையதளம் இருக்கிறது. வொண்டர்சே என்னும் தளம் எதையுமே அனிமேஷ‌னில் சொல்ல கைக்கொடுக்கிறது.

அதாவது இணையத்தின் மூலம் பரிமாறிக் கொள்ள விரும்பும் எந்த ஒரு வாசகத்தையும் இந்த தளத்தில் சமர்ப்பித்தால் அதனை அழகான அனிமேஷனாக மாற்றித்தருகிறது.

அனிமேஷன் என்றதும் கார்ட்டுன் சித்திரம் போல வண்ணமயமான தோற்றத்தை கற்பனை செய்து கொள்ள வேண்டாம். இது வார்த்தை விளையாட்டின் வடிவம் போல வார்த்தைகளையே அனிமேஷனாக்கும் அழகான முறை.

சில நேரங்களில் திரைப்படங்களில் பெய‌ர் போடும் போது ஒவ்வொரு பெயரும் ஒவ்வொரு விதமாக வந்து போகும் அல்லவா?அதே போல இந்த சேவை நீங்கள் சமர்ப்பிக்கும் வாசகத்தில் உள்ள வார்த்தைகளை அனிமேஷன் முறையில் அங்கும் இங்கும் திரையில் தோன்றச்செய்து கவனத்தை ஈர்க்கிறது.

அதேபோல இமெயிலில் ஒற்றை வரியில் ஒரு விஷயத்தை சொல்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அதை அப்ப‌டியே அனிமேஷ‌ன் தொடராக்கி அனுப்பி வைக்கலாம். இதே போல டிவிட்டரில் பகிர்ந்து கொள்ளும் கருத்துக்களையும் இங்கே சமர்ப்பித்து அதன் அனிமேஷன் வடிவை டிவிட்டரில் பகிர்ந்து கொள்ளலாம்.பேஸ்புக்கிலும் பகிர்ந்து கொள்ளலாம்.

பொன்மொழி போன்ற கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் வழக்கம் கொண்டவர்கள் மேதைகளின் மேற்கோள்களை இப்படி அனிமேஷனாக உயிரோட்டத்தோடு பகிர்ந்து கொள்ளலாம்.

கொஞ்சம் விஷேசமான வாழ்த்து செய்தியை அனுப்பி வைக்கலாம்.இன்னும் எத்தனையோ வழிகளில் பயன்படுத்துக் கொள்ளலாம்.ஆசிரியர்கள் பாடம் நடத்தும் போது பாடங்களை சுவாரஸ்யமாக்க இந்த வழியை பயன்படுத்தாலாம்.

இவ்வளவு ஏன் தினம் ஒரு திருக்குறளை அல்லது கம்பனின் காவிய வரிகளை இதில் பகிர்ந்து கொண்டு இலக்கியம் வளர்க்கலாம்.திரையில் தோன்றும் எழுத்துருவும் வண்ணங்களும் பிடிக்காவிட்டால் அவற்றை நமது விருப்பத்திற்கு ஏற்ப மாற்றியமைத்து கொள்ளலாம்.

வாழ்க்கையில் எதுவுமே வண்ணமயமாக இருந்தால் அதன் அழகே தனி தான்.அனிமேஷன் கலை இந்த வண்ணத்தை அளிக்ககூடும்.அனிமேஷன் தெரியாவிட்டாலும் அதனை பயன்படுத்திக் கொண்டு வார்த்தைகளுக்கும் வாசகங்களூக்கும் புது பொலிவு தர இந்த தளம் உதவுகிற‌து.

http://www.wondersay.com/ என்ற தளம் செல்லுங்கள்.

FORMAT செய்வதற்க்கு Driver CD தடையாய் இருக்கின்றதா?

 நாம் பல காரணங்களுக்காக எமது வன்தட்டைFormat செய்ய வேண்டியுள்ளது. உதாரணமாக கணினியின் வேகம் குறைந்து விட்டது, System file கோளாறு, வைரஸ் அல்லது மால்வேர் தாக்குதல், வன்தட்டின் பார்ட்டிஷன் அளவை மாற்ற போன்ற பல காரணங்கள்.
ஆனால் அப்படி முடிவு செய்துவிட்ட பின்னர், அந்த முடிவிலிருந்து பின் வாங்குவதற்கு முக்கியமாக ஒரே ஒரு காரணம் மட்டுமே இருக்கக்கூடும். அது Devise driver CD கையில் இல்லையே? என்பதாக இருக்கலாம். காரணம் மிக சரியானதே. ஏனெனில் புதியதாக நீங்கள் இயங்குதளத்தை(OS) நிறுவிய பிறகு, உங்கள் Graphic card, Sound card, Web cam, Printer, Scanner போன்ற சாதனங்கள் முறையாக வேலை செய்வதற்கு, அந்தந்த கருவிகளுக்கான பிரத்தியேகமான Devise driver உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் அந்த Devise driver CD உங்களிடம் இல்லாத பொழுது, உங்கள் கணினியில் புதியதாக இயங்குதளத்தை நிறுவ அல்லது ஒரே Configuration கொண்ட உங்கள் நண்பரின் கணினிக்கு உங்கள் கணினியில் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள Devise driverஐ Copy எடுத்து கொடுக்க, மிகவும் பயனுள்ள Driver backup மற்றும் Restore மென்பொருள் Double driverஐப் பயன் படுத்தலாம்.

    இதிலுள்ள Scan button ஐ சொடுக்கியவுடன், உங்கள் கணினியில் நிறுவப்பட்டுள்ள அனைத்து டிவைஸ் ட்ரைவர்களும் பட்டியலிடப்படும்.

இந்த பட்டியலிலிருந்து நமக்கு தேவையான டிவைஸ் ட்ரைவர்களையோ, அல்லது எல்லாவற்றையுமோ தேர்வு செய்து Backup button ஐ அழுத்தி, பிறகு திறக்கும் Backup Drivers வசனப் பெட்டியில், இதனை எங்கு சேமிக்க வேண்டும் (பென் ட்ரைவிலும்) என்பதை கொடுத்து விட்டால் போதும்.

நீங்கள் தேர்வு செய்திருந்த அனைத்து Driverகளும் அதற்கான குறிப்பிட்ட Folderகளில்Backup ஆகியிருப்பது தனிச் சிறப்பு.

இயங்குதளத்தை மறுபடியும் நிறுவிய பிறகு இந்த Backup Folderக்குச் சென்று இங்குள்ளDouble driver அப்ளிகேஷனை ரன் செய்து ட்ரைவர்களை மறுபடியும் எளிதாக Restoreசெய்து கொள்ளலாம். 

Wednesday, February 1, 2012

பாதுகாப்பான கடவுச்சொல் எப்படி அமைக்கலாம்



altநமது கடவுச்சொல் திருட்டு போவது நமது கையில் தான் இருக்கிறது எனது கடவுச் சொல்லைக் கண்டுபிடியுங்கள்’ பார்க்கலாம் என்று உங்களிடம் சொன்னால் முதலில் என்ன செய்வீர்கள்?
எனது பெயர், என் அப்பா பெயர், என் ஊர், என் வயது அல்லது 123456 , abcdef இந்த மாதிரிதானே முயற்சி செய்வீர்கள்? இதுபோன்ற பெயர்களை கொண்டு கடவுச்சொல் உருவாக்குவதை நாம் முற்று முழுதாக தவிர்த்துக்கொள்ளவேண்டும் .

இதுமாதிரி அர்த்தம் தரும் வேறு எந்த பெயரையும் பயன்படுத்துவது பாதுகாப்பானதல்ல இதற்கென சில திருட்டு மென்பொருட்கள் உள்ளன அதில் இதுபோன்ற கடவுச்சொல் சேமித்து வைக்கும் கோப்பைக் கொடுத்தால் போதும் உடனே உங்கள் கடவுச்சொல்லை கண்டுபிடித்துவிடும்.

அடுத்து நீங்கள் கடவுச்சொல்லை தட்டச்சு செய்யும் போது யாரும் பின்னால் இருந்து பார்க்கின்றனரா? என உறுதி செய்துகொள்ளுங்கள் பக்கத்தில் யாரும் இருந்தால் கடவுச்சொல் இடுவதை நிறுத்துங்கள் பல இடங்களில் 6 இலக்கமே போதும் எனச் சொல்வார்கள் ஆனால் நீங்கள் நீளமான கடவுச்சொல்லை அமைத்துக் கொள்ளுங்கள் கடவுச்சொல் இடும் கட்டம் தாண்டியும் நீளமாக கடவுச்சொல்லை அமைத்துக் கொள்ளலாம்.

ஸ்பைவேர், மால்வேர் போன்ற வைரஸ்கள் நமது கணினியில் இருந்து தகவல்களை சிலருக்கு அனுப்பிக் கொண்டிருக்கலாம். இச் சந்தர்ப்பத்தில் நமது கடவுச்சொல்லும் போக வாய்ப்புண்டு. எனவே நீங்கள் கணினித்திரையின் கீழ்ப் பக்கம் வலது சொடுக்கி Task Manager திறந்து பாருங்கள் உங்களுக்குத் தெரியாத ஏதேனும் பின்புலத்தில் ஓடிக் கொண்டிருக்கிறதா? என்று இம்மாதிரி மென்பொருட்கள் நீங்கள் தட்டச்சு செய்பவனவற்றை உடனுக்குடன் தனது முதலாளிக்கு அனுப்பும் வல்லமை வாய்ந்தவை. மற்றவர்களின் கணினியில் புகுந்து திருடுவது சேதம் விளைவிப்பது என்பது ஒரு சிலரால் மட்டும்தான் முடியும் எதோ நானும் செய்தேன் என்று சும்மாவேனும் சிலர் பொய் சொல்லக் கூடும் அதற்கு Hack மற்றும் Crack போன்ற துறைகளில் நல்ல தேர்ச்சி வேண்டும் எனவே மற்றவர் உங்கள் கணினியில் நுழையாமல் தடுக்க நல்ல வைரஸ் பாதுகாப்பு மென்பொருளை நிறுவிக்கொள்ள வேண்டும்.

முடிந்தவரை ஜிமெயில், யாஹூ மற்றும் கொட்மெயில் போன்ற தளங்களில் தானாக உள்ளே நுழைவதை (auto login) தவிருங்கள். அதேபோல ஒவ்வொரு முறையும் மின்னஞ்சல் அல்லது கடவுச்சொல் இட்ட தளங்களில் இருந்து வெளியேறும் போது லாக்கவுட் செய்து வெளியேறுங்கள்.

அடுத்து முக்கியமாக நாம் கடவுச்சொல் தேர்வு செய்யும்போது எண்கள் மற்றும் எழுத்துகளுக்கு இடையிடையே சிம்போல் (symbol) :- ! . , * - + `~ @ # $ % ^ & ( ) _ = : ; / போன்றவைகளையும் உள்ளடக்கி கடினமான கடவுச் சொல்லாக தேர்வு செய்வது மிக மிக பாதுகாப்பானது.

Saturday, January 28, 2012

ஸ்மார்ட் போன் மற்றும் டேப்லட்களை சுத்தம் செய்வது எப்படி?

Friday, January 27, 2012

கூகுள் தேடலில் முழுமையான பலனை அறிந்துகொள்ள

                   நமக்குத் தேவையான இணையத்தளங்கள், பாடல்கள், படங்கள் போன்ற எந்தத் தகவல்களையும் இணையத்தில் இருந்து பெற்றுக் கொள்ள நாம் Google, Yahoo, Bing போன்ற தேடியியந்திரங்களையே பயன்படுத்துகின்றோம்.

இவற்றுள் நாம் பொதுவாக கூகுளையே பயன்படுத்துவதுண்டு. இத் தேடியியந்திரங்களில் நாம் தேடவேண்டியவற்றை சரியாகக் கொடுக்க தவறும் பட்சத்தில் நமது தேடுதலில் முழுமையான பலனை அடைய முடியாது.

எனவே கூகுளில் தேடும் போது முழுமையான பலனை அடைவதற்காக உங்களுக்கென்றே ஒரு இணையத்தளம் உள்ளது. இதில் கூகுள் தேடலானது பலவகையாகப் வகைப் படுத்தப்பட்டுள்ளது.

எதை பற்றி தேடப்போகின்றோமோ அதற்குரிய இடத்தில் தேடுவதன் மூலம் நாம் தேடும் காலத்தைக் குறைக்கலாம். மேலும் தேடலில் முழுமையான பலனையும் எதிர்பார்க்கலாம். 

http://www.soople.com/soople_int.php இந்த இணையத்தளத்திற்கு சென்று உங்களுக்கு வேண்டியதை இலகுவாக தேடிக்கொள்ளுங்கள் 

Saturday, January 21, 2012

இணையப் பக்கங்களை பி.டி.எப் ஆக மாற்ற

பல வேளைகளில் , நாம் பார்க்கும் போது பக்கங்களை அவை தரும் தகவல்களுக்காக, சேவ் செய்திட விரும்புவோம். அனைத்துப் பிரவுஸ்சர்களும் இதற்கான வசதியைத் தருகின்றன. பிரவுசரின் எடிட் மெனுவில் க்ளிக் செய்து கிடைக்கும் மெனுவில், சேவ் அல்லது சேவ் ஆஸை தேர்ந்தெடுத்து பைலை பதிந்திடலாம். ஆனால் இது எச்.டி.எம்.எல். பைலாகத் தான் இருக்கும். அவ்வாறு பதிவது நமக்கு உகந்ததாக இருக்காது. ஏனென்றால் தேவையற்ற பல விஷயங்களுடன், பைல்களுடன் அந்தப் பைல் பதிவாகும். ஒரு டொக்கியுமென்டாக பதிவாகாது. ஆனால் இதனையே ஒரு பி.டி.எப் பைலாக பதிந்தால், ஒரே பைலாக அனைத்துத் தகவல்களுடன் கூடிய பைல் ஒன்று கிடைக்கும். இதனை மற்றவர்கள் பெற்றுப் பயன்படுத்துவதும் எளிதாகும்.

சரி, இணையத்தளப் பக்கத்தினை எப்படி பி.டி.எப் பைலாக மாற்றுவது? இதற்கு உதவிடும் வகையில் கிடைப்பது Joliprint bookmarklet என்னும் புரோகிராம் ஆகும். புக்மார்க்குகள் பயன்படுத்தும் அனைத்து பிரவுசர்களிலும் இது இயங்கும்.

புக்மார்க்லெட் என்பதும் ஒருவகை புக்மார்க் தான். புக் மார்க்குகள் அனைத்தும் ஏதேனும் ஒரு இணையத்தளத்தின் சுருக்கு வழிகளாக அமையும். ஆனால் இந்த புக்மார்க்லெட் ஜாவா ஸ்கிரிப்ட் குறியீடுகள் அமைந்ததாக இருக்கும்.

இவை இயக்கப்பட்டவுடன், குறிப்பிட்ட இணையத் தளத்துடன் இணைந்து இயங்கும். தானாகவே இணையத் தளத்தினை ஒரு பி.டி.எப் பைலாக மாற்றும். இந்த புக்மார்க்லெட்டில் க்ளிக் செய்து விட்டு, அது மாற்றப்பட்டு கிடைப்பதனை நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கலாம்.

இதன் இயக்கத்தில் இன்னொரு சிறப்பு என்னவெனில், இணையப் பக்கத்தில் உள்ள தேவையற்ற மெனு, விளம்பரங்களை இது தானாகவே நீக்கி விடுகின்றது. போர்மட்டிங், லிங்க்ஸ், கட்டுரைக்கான படங்கள் ஆகியவற்றை மட்டும் தக்கவைத்துக் கொள்கிறது.

இந்த புரோகிராம் இயங்கும் போது, கணினியுடன் இணைந்த இன்டர்நெட் இணைப்பு இயங்கிக் கொண்டிருக்க வேண்டும். ஜோலிபிறின்ட் புரோகிராமினை,நாம் கணினியில் இன்ஸ்டோல் செய்திடத் தேவையில்லை.

ஜோலிபிறின்ட் இணையத்தளத்தில் இதன் ஐகனைக் க்ளிக் செய்து, இழுத்து புக்மார்க்காக அமைந்துவிட்டால் போதும். பின் தேவைப்படுகையில் இந்த புக்மார்க்கில் க்ளிக் செய்து, இணையத்தளங்களை பி.டி.எவ்.பைலாக மாற்றலாம்.

இந்த ஜோலிபிறிண்ட் புரோகிராமினைப் பெற நீங்கள் செல்ல வேண்டிய இணையத்தள முகவரி http://joliprint.com/bookmark-instructions/

Thursday, January 19, 2012

போலியான கோப்புகளை அழிக்க இலவச மென்பொருள்

ஒரே மாதிரி ஒன்றுக்கு மேற்பட்ட கோப்புகள் MP3, Image வடிவில் காணப்படும். அவைகள் உங்கள் கணணியின் இடத்தை அடைத்து விடும்.
இதனால் உங்கள் கணணியின் வேகம் குறைய காரணமாக இருக்கலாம். இந்த பிரச்சனையை தீர்க்க ஒரு அருமையான மென்பொருள் உள்ளது.

இந்த மென்பொருளை வைத்து மிகவும் சுலபமாக தேடி கண்டுபிடித்து போலியான கோப்புகளை அழித்து விடலாம். இவற்றை உபயோகிப்பது மிகவும் சுலபம்.

IMAGES, AUDIO FILES, VIDEO FILES, ARCHIVES, APPLICATIONS போன்ற கோப்புகளை இந்த மென்பொருள் மூலம் அழிக்கலாம். இது ஒரு முற்றிலும் இலவசமான மென்பொருள் ஆகும்.  
       http://www.auslogics.com/en/software/duplicate-file-finder/ இந்த லிங்கினூடாக மென்பொருளை தரவிறக்கிக் கொள்ளுங்கள். 

Wednesday, January 18, 2012

பிளாக்கரில் Read More Option தானாக கொண்டு வர எளிய வழி…


1பிளாக்கரில் Read more (அ) மேலும் வாசிக்க என்ற Option கொண்டு வர பல வழிகள் உள்ளன. ஆனால் நாம் எந்த Editing-ம் செய்யாமல் தானாகவே Readmore option முறையை கொண்டுவர வைக்க முடியும். மேலும் வாசிக்க.. எனும் வசதி பற்றி உங்களுக்கு முன்கூட்டியே தெரியும் என்று நினைக்கிறேன். அதாவது ஒரு பெரிய பதிவை சிறிய பத்திகளாக ஆக்கி சுவாரசியமாக படிக்க வைக்க இது உதவும், மேலும் உங்கள் வலைபூவில் ஒரே பக்கத்தில் ஏழு பதிவினை (அ) அதற்கும் மேல் சிறு சிறு பத்திகள் விளக்கத்துடன் கொண்டுவர இயலும். இதன் காரணமாக உங்கள் வலைபூவிற்கு வரும் நண்பர்கள், அடுத்த அடுத்த பக்கம் சென்று நேரத்தை வீணாக்காமல் ஒரே பக்கத்தில் அனைத்து பதிவினை பார்த்துகொள்ளலாம்.

இதில் தலைப்புடன் கூடிய, மேலும் வசதி வந்துள்ளது. அதை நீங்கள் நீட்டித்து மீதமுள்ள கட்டுரையை படித்துக் கொள்ளலாம். இந்த வசதி உங்கள் வலைபூவில் கொண்டுவர செய்ய வேண்டியது,
    1. Login to Blogger Go to Layout > Edit HTML சென்று "expand widget templates" box-யை கிளிக் செய்யவும்.
    2. </head> tag யை கண்டுபிடிக்க, Ctrl+F பட்டனை உபயோகித்து தேடி கொள்ளவும்.
    3. அதன் பின்னர் கீழே உள்ள கோடிங்கை அதன் முன்னர் இணைக்கவும்.
<script type='text/javascript'>var thumbnail_mode = "no-float" ;
summary_noimg = 430;
summary_img = 340;
img_thumb_height = 100;
img_thumb_width = 120;
</script>
<script type='text/javascript'>
//<![CDATA[
function removeHtmlTag(strx,chop){
if(strx.indexOf("<")!=-1)
{
var s = strx.split("<");
for(var i=0;i<s.length;i++){
if(s[i].indexOf(">")!=-1){
s[i] = s[i].substring(s[i].indexOf(">")+1,s[i].length);
}
}
strx = s.join("");
}
chop = (chop < strx.length-1) ? chop : strx.length-2;
while(strx.charAt(chop-1)!=' ' && strx.indexOf(' ',chop)!=-1) chop++;
strx = strx.substring(0,chop-1);
return strx+'...';
}
function createSummaryAndThumb(pID){
var div = document.getElementById(pID);
var imgtag = "";
var img = div.getElementsByTagName("img");
var summ = summary_noimg;
if(img.length>=1) {
imgtag = '<span style="float:left; padding:0px 10px 5px 0px;"><img src="'+img[0].src+'" width="'+img_thumb_width+'px" height="'+img_thumb_height+'px"/></span>';
summ = summary_img;
}
var summary = imgtag + '<div>' + removeHtmlTag(div.innerHTML,summ) + '</div>';
div.innerHTML = summary;
}
//]]>
</script>
</head> tag –க்கும் முன்னாடி மேலே உள்ள கோடிங்கை இணைத்தவுடன், உங்களுக்கு தேவைபட்டால் சில Editing செய்து கொள்ளலாம்.
summary_noimg = 430; is post cut height without image
summary_img = 340; is post cut height with image
img_thumb_height = 100; is thumbnail image height
img_thumb_width = 120; is thumbnail image width
இவற்றின் மதிப்பை, உங்கள் அளவுக்கு தக்க மாற்றிகொள்ளுங்கள்.
4. இப்போது <data:post.body/> என்ற கோடிங்கை Ctrl+F மூலம் கண்டுபிடியுங்கள்,
5. கீழே உள்ள கோடிங்கை கொண்டு <data:post.body/> –யை Replace செய்யுங்கள்.
<b:if cond='data:blog.pageType != "item"'>
<div expr:id='"summary" + data:post.id'><data:post.body/></div>
<script type='text/javascript'>createSummaryAndThumb("summary<data:post.id/>");
</script> <span class='rmlink' style='float:right;padding-top:20px;'><a expr:href='data:post.url'> read more "<data:post.title/>"</a></span>
</b:if>
<b:if cond='data:blog.pageType == "item"'><data:post.body/></b:if>
இப்போது உங்கள் வலைபூவில் Preview பாருங்கள். பத்தி பத்தியாக உங்கள் பதிவு மாறியிருக்கும்.
பதிவாளர் tvs50 எழுதியுள்ள பதிவில் http://tvs50.blogspot.com/2010/02/blogger-read-more-in-tamil.html இதே முறைதான் சொல்லி இருக்கார். ஆனால் அது நேரடியாக Blogger-ல் எழுதுபவர்கலுக்கு சரிவரும். Windows Live Writer போண்று தனி மென்பொருள் பயன்படுத்தி எழுதுபவர்களுக்கு அது சரிவராது. மேலும் அந்த முறையில் ஒவ்வொரு முறையும் நீங்கள் பத்தியை பிரிக்க வேண்டும்.
இங்கே குறிப்பிடப்பட்டுள்ள முறை தானாகவே, பத்தியாக பிரிந்து கொள்ள கூடியது. இன்னும் எளிமையானது.
கொஞ்சம் கோடிங் குழப்பும் என்று நினைக்கிறேன். முதல் பதிவு என்பதால் கொஞ்சம் குழப்பம் அவ்வளவுதான்.
உபயோகித்து பார்த்துவிட்டு உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்.

Blogger Tips and TricksLatest Tips For BloggersBlogger Tricks

சொயற்படுத்துங்கள்

Blog Archive

Total Pageviews