தகவல் தொழில்நுட்ப முதல் தமிழ் வலைத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

Saturday, November 1, 2014

கணிபொறிக்கு தேவையான அணைத்து டிரைவர்களும் ஒரே இடத்தில் கிடைக்கிறது

நாம் எந்த ஒரு வன்பொருள் ( Hardware ) சாதனங்களை வாங்கினாலும் கூடவே அதற்கூறிய Driver Cd அல்லது Dvd தருவார்கள்.

சில சமயங்களில் நம் Driver Cd (or) Dvd அடிபட்டு விடும் அல்லது தொலைந்து போகக்கூடிய வாய்பு நிறைய உள்ளது.அந்த சமயங்களில் நாம் நமக்கு தேவைப்படும் Driver Cd (or) Dvd-யை எங்கு சென்று வாங்குவது?யாரிடம் கேட்பது?


இந்த கவலையை விட்டு விடுங்கள் இந்த இணையத்தளம் நமக்கு தேவையான அணைத்து Driver Cd (or) Dvd-களையும் தருகிறார்கள்,இங்கு சென்று நாம் நமக்கு தேவையான Driver Cd (or) Dvd-களை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

இங்கு

* PrinterDrivers

* Cdrom Dreivers

* Modem Drivers

* Sound Drivers

* Mouse Drivers

* Monitor Drivers etc.........

அணைத்து Company சாதனங்களும்(Driver) கிடைக்கிறது.பழைய சாதனகளுக்கும் டிரைவர்கள் உள்ளன.

உங்களுக்கு தேவையான Driver Cd (or) Dvd-களை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

தள முகவரி http://members.driverguide.com/index.php

வாசித்தால் நிச்சயமாக உங்களால் நம்ப முடியாது… அதிசயம். ஆனால் உண்மை..

10445491_840211482664574_2238093476483188812_nதற்செயலாக நடப்பது போல் இருக்கும் சில சம்பவங்களைப் பின் யோசித்துப் பார்த்தால் அது தற்செயல் தானா என்கிற சந்தேகம் நமக்கு வந்து விடும். அறிவியல் அல்லது பகுத்தறிவு விதிகளுக்குப் பொருந்தாதவையாக அவை தோன்றினாலும் கூட நம் அறிவுக்கெட்டாத ஏதோ ஒரு ’விதி’ அந்த நிகழ்வுகளை சீரான முறையில் இயக்கி இருப்பது போல தோன்றும். அப்படிப்பட்ட சில ஆதாரபூர்வமான நிகழ்வுகளை இங்கு பார்ப்போமா?
முதலில் இரண்டு அமெரிக்க ஜனாதிபதிகள் விஷயத்தில் இருந்த மாபெரும் ஒற்றுமைகளைப் பார்ப்போம்-
1. ஆப்ரகாம் லிங்கன் 1860 ஆம் ஆண்டும், ஜான் கென்னடி 1960 ஆம் ஆண்டும் அமெரிக்க ஜானாதிபதியானார்கள். சரியாக நூறு வருட இடைவெளி.
2. இருவரும் வெள்ளிக்கிழமை அன்று, தத்தம் மனைவிகளின் அருகில் இருக்கும் போது சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.
3. இருவர் மனைவிகளும் வெள்ளை மாளிகையில் வாழும் போது பிள்ளை பெற்றனர். பிறந்தவுடன் குழந்தை இறந்தும் போனது.
4. இருவரும் தலையின் பின்பகுதியில் குண்டு துளைத்துச் செத்தார்கள்.
5. இருவரும் இறந்த பின் ஜான்சன் என்ற பெயருள்ளவர்கள் உடனே ஜனாதிபதியாகப் பதவி ஏற்றார்கள். (ஆண்ட்ரூ ஜான்சன், லிண்டன் ஜான்சன்)
6. ஆண்ட்ரூ ஜான்சன் பிறந்தது 1808. லிண்டன் ஜான்சன் பிறந்தது 1908. சரியாக அதே நூறு வருட இடைவெளி.
7. இருவரையும் கொன்றவர்கள் பிறந்த வருடங்கள் கூட நூறு வருட இடைவெளிகள். ஜான் வில்க்ஸ் பூத் பிறந்தது 1839. லீ ஹார்வி ஆஸ்வால்டு 1939.
8. இரு கொலைகாரர்களும் பிடிபட்டு வழக்குத் தொடுப்பதற்கு முன் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.
9. பூத் லிங்கனை ஒரு தியேட்டரில் கொன்று விட்டு ஒரு கிடங்குக்கு ஓடினான். ஆஸ்வால்டு ஒரு கிடங்கிலிருந்து கொன்று விட்டு தியேட்டர் நோக்கி ஓடினான்.
10. லிங்கனின் செயலாளரின் முன் பெயர் ஜான். ஜான் கென்னடியின் செயலாளரின் பின் பெயர் லிங்கன்.
இன்னொரு சம்பவம் Life பத்திரிக்கையில் வெளியான உண்மை சம்பவம். இதனை வாரன் வீவர் என்ற கணித அறிஞர் தன் புத்தகம் ஒன்றிலும் குறிப்பிடுகிறார். அமெரிக்காவில் நெப்ராஸ்கா என்ற மாநிலத்தில் உள்ள Beatrice என்ற சிறிய நகரில் உள்ள ஒரு சர்ச்சில் 1950 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒன்றாம் தேதி 15 பாடகர்கள் சேர்ந்து கூட்டாக சரியாக காலை 07.20 மணிக்குப் பாடுவதாக இருந்தது. ஆனால் அத்தனை பேரும் வேறு வேறு காரணங்களுக்கு சர்ச்சிற்கு வர அதிக தாமதமாகி விட்டது. ஒருத்தி ஒரு ரேடியோ நிகழ்ச்சியில் ஆழ்ந்து போய் கிளம்பத் தாமதமானது. இன்னொருத்தி கணிதப்பாடம் எழுதி முடித்துக் கிளம்பத் தாமதமானது. ஒருவருக்குக் காரை ஸ்டார்ட் செய்வதில் பிரச்சினை…இப்படி ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு காரணம். இவர்கள் சரியான நேரத்திற்குள் வந்து சேராததே இவர்களைக் காப்பாற்றியது என்பது தான் அதிசயச் செய்தி. காலை சரியாக 07.25 க்கு வெடிகுண்டு வெடித்ததில் சர்ச் தரை மட்டமாகியது.
1900 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இத்தாலிய அரசர் உம்பர்டோ (King Umberto I) மோன்ஸா என்ற நகரில் ஒரு பெரிய ஓட்டலில் உணருந்தச் சென்ற போது அதிர்ச்சி அடைந்தார். காரணம் அந்த ஓட்டல் உரிமையாளர் அசப்பில் அவரைப் போலவே இருந்தது தான். அவரிடம் பேசிய போது மேலும் பல ஆச்சரியங்கள் அவருக்குக் காத்திருந்தன. அந்த ஓட்டல் உரிமையாளர் பெயரும் உம்பர்ட்டோ. இருவர் மனைவியர் பெயரும் மார்கரிட்டா. அந்த மன்னர் முடிசூட்டிய அதே நாளில் தான் அந்த ஓட்டல் உரிமையாளர் அந்த ஓட்டலைத் துவக்கினார். இருவர் பிறந்ததும் ஒரே நாள் 14-03-1844. ஆச்சரியத்தோடு அந்த ஓட்டல் அதிபருடன் பேசிக் கொண்டிருந்து விட்டு சென்ற மன்னர் ஒரு மாதம் கழித்து 29-07-1900 அன்று அந்த ஓட்டல் உரிமையாளர் ஒரு துப்பாக்கி சூட்டில் சற்று முன் தான் காலமானார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டார். சில மணி நேரங்களில் மன்னரும் ஒரு வன்முறைக் கும்பலால் கொல்லப்பட்டார்.
ஹென்றி சீக்லேண்ட் (Henry Ziegland) என்பவன் 1883 ஆம் ஆண்டு தன் காதலியுடனான உறவை முறித்துக் கொண்டான். அந்தக் காதலி மன உளைச்சலில் தற்கொலை செய்து கொள்ள அவளுடைய சகோதரர் கடும் கோபமடைந்து சீக்லேண்டைத் தேடிக் கண்டுபிடித்து சுட்டு தானும் தற்கொலை செய்து கொண்டான். ஆனால் அதிர்ஷ்டவசமாக சீக்லேண்ட் சாகவில்லை. அந்தத் துப்பாக்கிக் குண்டு முகத்தை உராய்சிக் கொண்டு சென்று அங்கிருந்த மரத்தில் சென்று பதிந்தது. சில வருடங்கள் கழித்து அந்தப் பெரிய மரத்தை வெட்டி விட சீக்லேண்ட் நினைத்தான். ஆனால் அதை அவ்வளவு சுலபமாக வெட்டி விட முடியவில்லை. எனவே டைனமைட் குச்சிகளை வைத்து மரத்தைப் பிளக்க நினைத்தான். அப்படிச் செய்கையில் அந்த மரம் சுக்கு நூறாகி வெடிக்கையில் அந்தக் குண்டு சீக்லேண்டின் தலையில் பாய்ந்து அந்த இடத்திலேயே சீக்லேண்ட் மரணம் அடைந்தான். பல வருடங்கள் கழித்தும் அந்தக் குண்டு பழி தீர்த்துக் கொண்டது போல அல்லவா இருக்கிறது. இந்த இரு சம்பவங்களும் ரிப்ளியின் நம்பினால் நம்புங்கள் என்ற புத்தகங்களில் விவரிக்கப்பட்டுள்ளன.
Ohioவில் பிறந்த இரட்டையர் வாழ்க்கையின் ஆச்சரியமான குறிப்புகள் 1980 ஜனவரி மாத ரீடர்ஸ் டைஜஸ்டில் வெளி வந்துள்ளன. இருவரும் பிறந்தவுடனேயே பிரிக்கப்பட்டு இருவேறு தொலைதூரக் குடும்பங்களுக்குத் தத்துத் தரப்பட்டனர். இருகுடும்பங்களும் ஒன்றிற்கு ஒன்று தெரியாமலேயே குழந்தைகளுக்கு ஜேம்ஸ் என்று பெயரிட்டனர். இருவரும் சட்ட அமலாக்கப் பிரிவில் வேலைக்கு அமர்த்தப்பட்டனர். இருவருக்குமே பல திறமைகள் ஒன்றாகவே இருந்தன. இருவரும் லிண்டா என்ற பெயருடைய பெண்களையே முதல் திருமணம் செய்து கொண்டனர். இருவருமே தங்கள் மகன்களுக்கு ஜேம்ஸ் ஆலன் என்ற பெயரையே இட்டனர். இங்கே சின்ன வித்தியாசம் சொல்ல வேண்டும் என்றால் ஒருவர் James Alan என்றும் இன்னொருவர் James Allan என்று ஒரு l எழுத்து சேர்த்தும் பெயர் வைத்தனர். இருவரும் முதல் மனைவியை விவாகரத்து செய்து இரண்டாம் திருமணம் செய்து கொண்டது பெட்டி (Betty) என்ற பெயருடைய பெண்களை. இருவரும் தங்கள் நாயிற்கு Toy என்ற பெயரையே வைத்திருந்தனர். நாற்பதாண்டு காலம் கழிந்து இணந்த அந்த இரட்டையர் தங்களை அறியாமல் தங்கள் வாழ்க்கைகளில் இருந்த ஒற்றுமையை எண்ணி அதிசயித்தனர்.
மேஜர் சம்மர்ஃபோர்டு என்ற இங்கிலாந்தைச் சேர்ந்த ராணுவ அதிகாரிக்கும் மின்னலுக்கும் இருந்த தொடர்பு ஆச்சரியமானது. அவர் முதல் உலகப்போர் சமயத்தில் குதிரையில் இருந்து போர் புரிந்து கொண்டிருந்த போது மின்னல் தாக்கி இடுப்பிற்கு கீழ் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். பின் அவர் ஓரளவு குணமாகி கனடா நாட்டில் குடி பெயர்ந்தார். அங்கு ஆறாண்டு காலம் கழித்து மீன் பிடித்துக் கொண்டு இருந்த போது மறுபடியும் மின்னலால் தாக்கப்பட்டார். வலது பக்கம் பக்கவாதம் அவரைப் பாதித்தது. மறுபடி குணமடைந்த அவர் உள்ளூர் பூங்காவில் உலாவிக் கொண்டிருந்த போது மின்னலால் தாக்கப்பட்டு உடம்பு முழுவதும் செயல் இழந்தார். அது நடந்து இரண்டாண்டுகளில் மரணம் அடைந்தார். இறந்த பின்னும் அவரை மின்னல் விடுவதாக இல்லை. நான்காண்டுகள் கழிந்து அவருடைய கல்லறை மின்னலால் தாக்கப்பட்டு சிதிலமாகியது.
இந்த நிகழ்ச்சிகள் நம்மை ஆச்சரியப்பட வைக்கின்றன அல்லவா? இவற்றை எல்லாம் தற்செயல் என்று கண்டிப்பாக நாம் நினைத்து விட முடியாது. இந்த சம்பவங்களைப் படிக்கையில் அவற்றில் முன்பே தீர்மானிக்கப்பட்ட அல்லது விதிக்கப்பட்ட ஒரு அம்சம் இருக்கிறது என்றல்லவா தோன்றுகிறது. ஏன், எதற்கு என்பது விளங்கா விட்டாலும் கூட அந்த ஏதோ ஒரு ‘விதி’யை நம்மால் மறுக்க முடிவதில்லை அல்லவா?

கூகுள் நிறுவனத்தின் முக்கிய பொறுப்புகள் தமிழரான சுந்தர் பிச்சையிடம் ஒப்படைப்பு!


கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி லார்ரி பேஜ்ஜிடமிருந்த முக்கியமான பொறுப்புகள் பலவும் ஆண்ட்ராய்ட் பிரிவை நிர்வகிக்கும் சுந்தர் பிச்சையிடம் கூடுதலாக அளிக்கப்பட்டுள்ளன. இந்த பொறுப்பு அதிகரிப்பு என்பது, சென்னை மனிதரான சுந்தர் பிச்சையின் கேரியரில் முக்கியமான ஏற்றமாக பார்க்கப்படுகிறது. சென்னையை சேர்ந்த பிச்சை சுந்தர்ராஜன் (42), சுந்தர் பிச்சை என்ற பெயரால் புகழடைந்தவர். ஐஐடி காரக்பூரில் பேச்சிலர் இன் டெக்னாலஜி படிப்பை முடித்த பிச்சை, ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ் படிப்பும், பென்சில்வேனியாவின் வார்டன் பள்ளியில் எம்.பி.ஏவும் படித்தவர்.

முன்னணி நிறுவனமான கூகுளில் இவர் 2004ம் ஆண்டுதான் பணிக்கு சேர்ந்த போதிலும், திறமை காரணமாக வெகு விரைவில் உயர் பதவிகளுக்கு வந்தார். கூகுளின் முக்கியமான தயாரிப்பான ஆண்ட்ராய்டு பிரிவை நிர்வகிக்கும் பொறுப்பு பிச்சையிடம் அளிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி குரோம், கூகுள் ஆப்ஸ் ஆகியவற்றையும் பிச்சைதான் நிர்வகித்து வருகிறார். இந்நிலையில் முக்கிய முடிவு ஒன்றை கூகுள் சி.இ.ஓ லார்ரி பேஜ் எடுத்துள்ளார். அதன்படி, கூகுளின் மேப்ஸ், கூகுள் பிளஸ், ஆய்வு, விளம்பரம் மற்றும் கட்டமைப்பு ஆகிய பிரிவுகளையும் பிச்சையின் பொறுப்பிலேயே கொடுத்துள்ளார் லார்ரி பேஜ்.

சுந்தர் பிச்சையின் பதவியில் எந்த மாற்றமும் அளிக்கப்படவில்லை என்ற போதிலும், கூடுதலான பொறுப்புகள், பிச்சையின் முக்கியத்துவத்தை கூகுள் உணர்ந்துள்ளதன் வெளிப்பாடாகவே பார்க்கப்படுகிறது. புதிதாக தரப்பட்டுள்ள பிரிவுகளில் பணியாற்றும் ஊழியர்கள், இனிமேல் சுந்தர் பிச்சையின் கட்டுப்பாட்டில் வருகிறார்கள். இப்பொறுப்புகளில் இருந்து விடுபட்டுள்ள லார்ரி பேஜ், கூகுளின் வர்த்தகம், செயல்பாடு, கூகுள் எக்ஸ், நிர்வாக மேம்பாடு, சட்டம், நிதி மற்றும் வர்த்தகம் போன்றவற்றில் மட்டும் கவனம் செலுத்த உள்ளார்.

கூகுளை அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்ல லார்ரி பேஜ் முழு நேரத்தையும் செலவிட இந்த மாற்றங்கள் உதவும் என்கிறது கூகுள் தரப்பு. சுந்தர் பிச்சை, 2012ல் கூகுள் ஆப்ஸ் பிரிவுக்கும், 2013ல் ஆண்ட்ராய்டு பிரிவுக்கும் பொறுப்பாளராக பதவி உயர்வுகளை பெற்றார் என்பது நினைவிருக்கலாம். கூகுளில் இணையும் முன்பாக, அப்ளைய்ட் மெட்டீரியல்ஸ் மற்றும் மெக்கின்சே அன்ட் கோ ஆகிய நிறுவனங்களில் சுந்தர் பிச்சை பணியாற்றியுள்ளார். சென்னை மனிதரின் பெயர் இப்போது உலகின் ஜாம்பவான் நிறுவனங்களான டுவிட்டர், மைக்ரோசாப்ட் நிறுவனங்களில் முக்கிய பதவிகளுக்கான தேடுதல் பட்டியலில் இடம் பெற்றிருப்பது பெருமையே.

இந்தியாவில் வேற்றுக்கரகவாசிகள் - அதிர்ச்சியூட்டும் ஆய்வுகள்..!


அமெரிக்காவின் கலிப்போர்னியா மாகாணத்தில், மனிதனுக்கு அப்பாற்ப்பட்ட சக்தியுடனும், உடல் மொழியுடனும், மனிதர்களோடு மனிதனாக வாழ்வதாக ஹாலிவுட் சினிமாக்களால் வர்ணிக்கப்பட்ட ஏலியன்ஸ், இந்தியாவில் இருந்ததாகச் சொல்கிறது மேலை நாட்டு மீடியாக்கள்.

ஆனால், அவர்கள் ஏலியன்ஸ் என்று கைகாட்டுவது குப்பனையோ, சுப்பனையோ அல்ல.. நாம் வணங்கும் கடவுள்களை. அதற்கு ஆதாரமாக அவர்கள் சமர்பிப்பது நமது புராணங்களை...அதாவது, இந்து புராணங்களின்படி, கடவுள் என்பவர் மனித ரூபத்திலேயே இருந்ததில்லை. ஆறு முகங்கள், நாலைந்து கைகள், நீல நிற உடல் என மனிதர்களிடம் இருந்து வேறுபட்டே காணப்பட்டனர். அவர்கள் மந்திரங்கள் சொல்லி சாதாரண வில்லை எடுத்துவிட்டால் கூட வானில் மின்னல்கள் எழும்பின.

இன்று நாசா எந்த எரிபொருளும் இல்லாமல் பறக்கும் இயந்திரம் கண்டுப்பிடிக்க, அது விமானங்கள் என்ற பெயரில் இந்து கடவுள்களிடம் அப்போதே இருந்தது. அதைத்தான், ‘ஏலியன்ஸின் பறக்கும்தட்டு’ என்கிறோம்.

இப்படி, இன்றைய அறிவியலின் மூலம் மனிதன் கண்டுப்பிடித்த சாதனங்கள் பல ஆயிரம் வருடங்கள் முன்பே அவர்கள் பயன்படுத்தியிருக்கின்றனர். அவர்கள் மழையை வர வைத்தார்கள், மலையைக் கையால் தூக்கினார்கள், தூர தேசத்தில் நடப்பவற்றை, இருந்த இடத்திலேயே பார்த்தார்கள். என்பவர்கள் ஒரு படி மேலே போய், அவர்கள் அணு ஆயுதத்தைவிட மேம்பட்ட ஆயுதத்தைப் பயன்படுத்தினார்கள் என்கிறார்கள்.

ராமாயணத்தில், ராவணன் வாழ்ந்ததாகச் சொல்லப்படுவது, கடல் மட்டத்தில் இருந்து 600-அடிக்கு மேல் இருக்கும் சிஜிரியா மலையில். இதை இலங்கை அரசு சுற்றுலாத் தளமாக அறிவித்துள்ளது. இந்த மலையில் உள்ள ஒவியங்களில்

பெண்கள் சிலர் அரை நிர்வாணத்துடன், மேகங்களிடையே பறப்பது போல் உள்ளன. இதை, பத்துத் தலைக்கொண்ட ராவணன் விண்ணுலகத்துக்கும், பூவுலகத்துக்கும் பிறர் வந்து செல்ல துறைமுகமாக இருக்க நினைத்து எழுப்பியதாகச் சொல்கிறார்கள்.

மகாபாரதத்துக்குப் பல யுகங்களுக்கு முன்னால் நடந்த ராமயணத்தில் சீதையைக் கடத்த, ராவணன் பறக்கும் விமானத்தையே பயண்படுத்தியாகப் புராணங்கள் எடுத்துரைக்கிறது. தமிழகத்தில் உள்ள பல கோவில்கள், ‘அரசரின் கனவில் இறைவன் கோயில் எழுப்பச் சொன்னார், அரசர் வைத்த போட்டிகளில் பங்கேற்றார்’ என்பது போன்ற குறிப்புகள் உள்ளன.

பழங்கால அரசருடன் கடவுள்கள் தொடர்பு வைத்தாகவே நம்பப்படுகிறது. அந்த வகையில் தமிழகக் கோயில்கள் கடவுளின் வழிகாட்டுதலின் பெயரிலேயே கட்டப்பட்டுள்ளதாகக் கருதுக்கின்றனர். இந்து கடவுள்களை மட்டுமல்லாமல்... இயேசு, புத்தர், டாவின்சி, போப் எனச் சகலரையும் இந்த விஷயத்தில் இழுக்கிறார்கள். இயேசுவை சித்தரிக்கும் பல பழமைவாய்ந்த ஒவியங்களில் பறக்கும் தட்டுக் காட்சியளிக்கிறது.

‘வாடிகன் சிட்டியில் ஏலியன்ஸின் பிணங்கள் உள்ளன, புத்தர் ஆற்றின் மேல் நடந்தது ஏலியன்ஸூடன் வைத்த தொடர்பால்தான், டாவின்சி வரைந்த ஒவியங்கள் நாம் இன்று உபயோகிக்கும் ஆயுதங்களைப் பற்றியுள்ளன’ என்று ஒவ்வொன்றும் இருக்கிறது.
ஆனால் இவர்களை எல்லாம் ஏலியன்ஸுடன் தொடர்பு வைத்துள்ளவர்கள் லிஸ்டில் சேர்த்து, இந்து கடவுள்களை மட்டும் ஏலியன்ஸ் என்கிறார்கள். இப்படிக் கடவுள்களை ஏலியன்ஸாக வரையறுப்பதை இந்தியாவில் பலர் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.

‘அவர்களிடம் பறக்கும் தட்டு இருந்தும் அவர்கள் ஏன் இந்தியாவைவிட்டு மற்ற நாட்டுக்கு செல்லவில்லை? அவர்கள், இப்போது எங்கு இருக்கிறார்கள்? எங்கிருந்து வந்தார்கள்? மீண்டும் வருவார்களா? வந்தால் எப்போது வருவார்கள்? இப்போது அவர்களிடம் இன்னும் மேம்பட்ட அதி நவீன ஆயுதங்கள் இருக்கக்கூடுமா, அவர்கள் வேறு எதையாவது விட்டு சென்றிருக்கிறார்களா, அவர்களுக்கு என்று ஒரு கிரகம் இருக்கிறதா, அவர்கள் ஏன் நம்முடன் தொடர்பு வைத்துக்கொள்ள ஆசைப்பட்டார்கள்’ இப்படிப் பல கேள்விகளுக்குப் பதில் தெரியாமல் நம்மால் எந்தச் சார்ப்பு நிலைக்கும் வர முடியாது.

இப்போதே இந்துக்களின் புராணங்களான வேதங்களை அமெரிக்காவின் நாசா ரகசியமாக ஆராய்ச்சி செய்வதாகச் சிலர் இணையதளங்களில் குரல் கொடுத்து வருகின்றனர். எது எப்படியோ இன்னும் சில வருடங்களில்  ஏலியனைதான் கடவுள் என்கிறோம் என்று  சைன்ஸ் ஃபிக்‌ஷன் படங்கள் வெளிவர தொடங்கிவிடும்.

நியூயார்க்கில் ஏலியன்ஸுடன் சண்டைப்போட்டுக் கொண்டிருந்த ‘வில் ஸ்மித்தும், டாம் க்ரூஸும்’, இந்தியாவில் உள்ள ஏலியன்ஸுக்கு எதிராகத் துப்பாக்கி தூக்குவார்கள் என்பது மட்டும் நிச்சயம்!

‘‘2001-ல் ‘கல்ப் ஆப் கம்பாட்’ பகுதியில் அகழ்வாராய்ச்சியில் ஈடுப்பட்டபோது கடலுக்குள் ஒரு பெரிய நகரத்தைக் ஆராய்ச்சியாளர்கள் கண்டுப்பிடித்தனர். கண்டுப்பிடிக்கப்பட்ட அந்த நகரமானது, பெரிய துறைமுகமாகச் செயல்பட்டிருக்க வேண்டும். சிதைந்து கிடக்கும் அந்த நகரத்தின் மீது பல வான் வழி தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. அங்குச் சிதைக்கப்பட்டிருக்கும் கட்டடங்கள், நம்மைவிட டெக்னாலஜியில் மேம்பட்டவர்களால் கட்டப்பட்டுள்ளது.

அந்த டெக்னாலஜியை, மனிதன் கண்டுப்பிடிக்க இன்னும் பல ஆயிரம் வருடங்கள் பிடிக்கும்” என்று அறிக்கை வெளியிட்டுள்ளனர். அவர்கள் அறிக்கையில் குறிப்பிட்டிருந்த அந்த நகரம்.. துவாரகை மைந்தன் கிருஷ்ணன் ஆண்ட துவாரகா! இன்று நாம் துவாரகை என்று அழைக்கும் நகரத்துக்கும் கிருஷ்ணர் ஆண்ட தூவாரகைக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை என்பது கூடுதல் செய்தி.
உலகப்போரில்தான் மனிதன் வான் வழி தாக்குதலில் ஈடுபட்டான். ஆனால், அதற்குப் பல கோடி வருடங்கள் முன்னரே, இது நடந்தது என்றால் அது ஏலியன் டெக்னாலஜி மூலமே சாத்தியமாகும் என்றும் சொல்கின்றனர்

செல்ஃபி எடுப்பவர்களது வாழ்க்கை பாதிப்பு - திடுக்கிடும் தகவல்.


செல்ஃபி எடுப்பவர்களது வாழ்க்கை பாதிப்பு - திடுக்கிடும் தகவல்.!செல்ஃபி நம் அன்றாட வாழ்வின் பிரிக்க முடியாத அங்கமாகி இருக்கிறது. எந்தவொரு கொண்டாட்டமாக இருந்தாலும் அதை செல்ஃபிக்கள் இல்லாமல் யாரும் இப்போது கொண்டாடுவதில்லை. சந்தோஷமாக இருந்தாலும் செல்ஃபி, சோகமாக இருந்தாலும் செல்ஃபி, குழப்பத்தில் இருந்தாலும் செல்ஃபி, சிரித்தாலும் செல்ஃபி, அழுதாலும் செல்ஃபி என செல் முழுக்க நம் செல்ஃபிக்களால் நிரம்பி வழிகிறது.

ஆனால், பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் வெளியிட்டிருக்கும் செல்ஃபி பற்றிய ஆய்வு முடிவுகள் நம்முடைய செல்ஃபி பழக்கத்தைப் பரிசீலிக்கச் சொல்கிறது. சமூக வலைதளங்களில் அதிகமாக செல்ஃபி பகிர்பவர்களுக்கு நெருங்கிய உறவுகளிடம் பிரச்சினை வருவதாக அந்த ஆய்வு சொல்கிறது. பேஸ்புக்கில் அதிகமான லைக்குகளை அள்ளும் செல்ஃபிக்களால் நிஜ வாழ்க்கை உறவுகள் பாதிக்கப்படுவதாக அந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

“தொடர்ந்து செல்ஃபி பகிர்பவர்களைச் சுற்றி இருப்பவர்களால் அவ்வளவு எளிதில் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை” என்கிறார் பர்மிங்கம் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர் டேவிட் ஹாஃப்டன். எந்தளவுக்கு அதிகமாக செல்ஃபிக்கள் பகிரப்படுகின்றனவோ, அந்தளவுக்குச் சுற்றி இருப்பவர்களின் ஆதரவை அது குறைப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியிருக்கின்றனர்.

“நாம் நம் நண்பர்களுக்காக ஃபேஸ்புக்கில் பகிரும் படங்கள் பல தரப்பினரைச் சென்றடைகின்றன என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். அதனால் உங்கள் ஃபேஸ்புக்கில் இருக்கும் பல்வேறு குரூப்பில் இருப்பவர்களுடன் அந்தப் படங்கள் பகிரப்படுகின்றன என்பதை மறந்துவிடக் கூடாது” என்கிறார் ஹாஃப்டன்.

அதே மாதிரி, குடும்பத்தினருடன் இருக்கும் செல்ஃபிக்களைவிட நண்பர்களுடன் இருக்கும் செல்ஃபிக்கள் அதிகமாகப் பகிரப்படும்போது, அது தம்பதிகளின் உறவை அதிகளவில் பாதிக்கிறது. “இளம்பெண்களின் செல்ஃபிக்களுக்கு ஃபேஸ்புக்கில் கிடைக்கும் வரவேற்பு, ஆண்களுக்கும், மற்ற வயதினருக்கும் கிடைப்பதில்லை” என்று அந்த ஆய்வு முடிவு சொல்கிறது.

புகைப்பிடித்தலை விட ஆபத்தான செயல் டிவி பார்ப்பதாம்..!!

புகைப்பிடித்தலை விட ஆபத்தான செயல் டிவி பார்ப்பதாம்..!!
ஒரு நாளைக்கு 6 மணித்தியாலங்கள் தொலைக்காட்சி பார்ப்பது 5 வருடங்களைக் குறைக்குமென்று ஓர் ஆய்வு கூறுகின்றது. 25 வயதிற்குப் பின்னர் ஒருவர் தொலைக்காட்சி பார்க்கும் ஒவ்வொரு மணித்தியாலமும் வாழ்நாளில் 22 நிமிடங்களைக் குறைக்குமென ஓர் அவுஸ்திரேலிய ஆய்வு கூறுகின்றது. இது புகைத்தலைப் போல ஆபத்தானது. ஆனால் புகைத்தல் வீதங்கள் குறையுமளவிற்குத் தொலைக்காட்சி பார்க்கும் வீதம் குறையவில்லை என்பதுதான் உண்மை. கடந்த வருடம் இடம்பெற்ற இன்னோர் ஆய்வில் ஒரு மணித்தியாலம் தொலைக்காட்சி பார்ப்பது 8% ஆயுளைக் குறைக்குமென்றது. அவுஸ்திரேலியர்கள் ஒரு நாளைக்கு 2 மணித்தியாலங்கள் பார்க்கின்றனர்.

இதனால் ஆண்களிற்கு அவர்களது ஆயுட்காலத்திலிருந்து 1.8 வருடங்களும் பெண்களுக்கு 1.5 வருடங்களும் குறைகின்றதென்கின்றனர். பிரித்தானியர்களோ நாளொன்றிற்கு 3 மணித்தியாலம் தொலைக்காட்சி பார்க்கின்றனர் என்கின்றது இந்த ஆய்வு. உடற்பயிற்சியின்றி ஒரேயிடத்தில் இருப்பதால் இது இதய நோய்களைக் கொண்டுவருகின்றது. வழமையாகவே உடற்பயிற்சியின்றி இருப்பது எமது சுகாதாரத்திற்குக் கேடு என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இந்த அறிக்கையானது, 1999-2000 இற்குமிடையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வை அடிப்படையாகக் கொண்டு 25 வயதிற்கு மேற்பட்டவர்களில் இன்னும் 11,000 பேரை உட்படுத்தி மீளச் செய்தபோதே கிடைத்தது.

இணையத்தில் இருந்து தரமான (தமிழ்) திரைப்படங்களை தரவிறக்குவது எப்படி?

இன்று திரைப்படம் திரையரங்கிற்கு சென்று பார்ப்பது குறைந்து விட்டது. இதற்கு பிரதான காரணங்கள்

  • நேரம் இன்மை
  •  இணையத்தில் உலாவும் ஏராளமான விமர்சனங்கள்.
  • அனைவருக்கும் கிடைத்திருக்கும் மலிவான / இலவச இணைய வசதி
  • திரையரங்க அடாவடிகள்
  • தினமும் ஏராளமான படங்கள் வெளியாகின்றமை.
இன்று திரையரங்கம் காதல் ஜோடிகளுக்கு என்று ஆகி விட்டது. தனியாக திரையரங்கங்களுக்கும் செல்ல முடிவதில்லை. நாம்போனால் வேற்று கிரக ஜந்தை பார்ப்பது போல பார்க்கிறார்கள். ஜோடியாக போவதென்றால் இந்த ஜென்மத்துக்கு தியேட்டர் பக்கம் போக முடியாது.
சாதாரணமாக 250 Rs கட்டி ஒரு படம் நாம் மட்டும்  பார்ப்பதை விட 20 Rs Reload போட்டு 2 படம் Download செய்து நாமும் பார்த்து நம் நண்பர்களுக்கும் கொடுத்து பார்ப்பது தானே நட்புக்கு மரியாதை. 20Rs  என்பது வேலைக்கு போகதவர்களுக்கு. வேலைக்கு போகும் இடங்களில் கட்டாயம் இணைய இணைப்பு இருக்கும். அங்கு எல்லாமே free தானே.

கட்டுரை எழுதுவதன் நோக்கம்

அண்மையில் சமூக தளங்களில் தொலைதூர நண்பர்களுடன் கதைத்த போது தான் பலருக்கு இணையத்தில் இருந்து தரமான  திரைப்படங்களை தரவிறக்குவது எப்படி? என்று தெரியவில்லை. பலர் அரச நிறுவனங்களில் வேலை செய்கிறார்கள். காலை வேளை கணனியில் இருந்தால் பின்னேரம் வரை ஆக குறைந்தது 2 படமாவது தரவிறக்கலாம்.
இப்பதிவில் நேரடியாக Torrent Client மூலம் எப்படி தரவிறக்குவது என்பது பற்றி பார்க்கலாம். சில நிறுவனங்கள், Torrent Clients இயக்கத்தை தடுக்கின்றன. அந்த இடங்களில் இதை எப்படி செய்வது என்று அடுத்த பதிவில் பார்ப்போம்.

Streaming : Online Watch ன் தீமைகள் என்ன?

online இல் திரைப்படங்களை பார்க்க பல தளங்கள் உண்டு. ஆனால் அவற்றில் Youtube தான் சிறந்தது. ஆனால் நாம் தேடும் படங்கள் அதில் இல்லை. Youtube தவிர்ந்த தளங்களில் 2 மணி நேர படத்தை 4 மணி நேரத்தில் பார்க்க வேண்டி ஏற்படும். அடிக்கடி Loading ஆகிய படி இருக்கும்.

டோர்றேன்ட்டில் தரவிறக்கும் போது கவனிக்க வேண்டியவை

இது இரண்டு பகுதிகளை கொண்டது. 
முதலாவது தரமான திரைப்படத்தை தெரிவு செய்வது. அடுத்து விரைவான தரவிறக்கத்துக்கு பொருத்தமான Torrent Client இனை தெரிவு செய்வது.

தரமான திரைப்படத்தை தெரிவு செய்தல்

திரைப்படத்தை "Download Ya Ya movie Online Torrent" என்று கூகுளில் தேடி பெற முடியாது. கூகிள் பெரும்பாலும் டோர்றேன்ட் இணைப்புக்களை தேடலில் மறைத்து விடும். இதற்கு அதன் Panda Algorithm விசேடமாக வடிவமைக்க பட்டுள்ளது.
திரைப்படங்களை தேட பல டோர்றேன்ட் தளங்கள் உள்ளன. அதில் எல்லாவற்றையும் சொல்வது தேவை அற்றது. 
மிகவும் பொருத்தமான தளமாகிய ThePiratebay.sx பற்றி இப்பதிவில் காணுங்கள். இப்பதிவில் எப்படி சில தினங்களுக்கு முன் வந்த "யா யா" என்ற ஒரு தமிழ் நகைச்சுவை படத்தை நீங்களாகவே தரவிறக்குவது என்று பார்ப்போம்.
  1. முதலில் ThePiratebay.sx க்கு செல்லுங்கள்.
  2. அடுத்து விரும்பிய படத்தின் சரியான ஆங்கில பெயரை கொடுங்கள். கூகுளை போல இங்கு எழுத்து பிழைகள் இருந்தால் தேட முடியாது. சரியான எழுத்தை கண்டு பிடிக்க கூகுளில் தேடினால் அதுவாகவே spelling proof பார்த்து தரும் சொல்லை copy செய்து ThePiratebay.sx இல் பிரதி செய்யுங்கள்.
  3. அடுத்து Movies(சாதாரண தர காணொளிகள். இதுவே பெரும்பாலும் தமிழ் படங்களுக்கு விரும்ப தக்கது.) அல்லது Movies DVDR (உயர் தரம் மிக்க ஆங்கில படங்கள். பெரும்பாலும்4 GB அளவில் இருக்கும்.) இல் இனை தெரிவு செய்து மீள தேடுங்கள்.
  4. தேடல் முடிவுகளை Seeds எண்ணிக்கைக்கு ஏற்ப ஒழுங்கு படுத்துங்கள் (இதன் எண் கூடும் போது  விரைவாக தரவிறங்கும். அல்லது நீண்ட நாட்கள் செல்லும்).
  5. seeds கூடிய 2 / 3 தளங்களை புதிய Tab களில் திறந்து அவற்றின் Description,Comment ஆகியவற்றை வாசியுங்கள். 
  6. நீங்களாகவே முடிவெடுத்து பொருத்தமான ஒரு படத்தை தெரிவு செய்து Download பகுதியினை தெரிவு செய்யுங்கள். தானாக Client open ஆகி தரவிறங்கும்.
அடுத்து Download நேரடியாக Internet Download Manager மூலமாகவோ, அல்லது Google Chrome மூலமோ ஆரம்பிக்கிறது. இதற்கு Torrent Client ஒன்று தேவை.

பொருத்தமான Torrent Downloader னை தெரிவு செய்தல்

இதை பற்றி பெரிதாக விவாதிக்க முடியும். இங்கு அது தேவை இல்லை. அனைவரும் பொதுவாக விரும்பி பயன்படுத்துவது µTorrent எனும் மென்பொருள். இங்கு இதை தரவிறக்கி கொள்ளுங்கள்.

வர கூடிய பிழைகள்

  1. தானாக Torrent Client Open ஆகாமை
  2. Connecting Peers என்ற நிலையை தாண்டி Download ஆகாமை.
  3. இடையில் Download Speed 0 KBPS ஆகுதல்.
  4. Firewall , Antivirus போன்றவை Torrent Client இனை முடக்கவா / அழிக்கவா என தொடர்ந்து கேட்டல்
இந்த பிரச்சனைகளுக்கு தீர்வுகளை அடுத்த பதிவில் காணுங்கள். மேலும் சந்தேகங்கள், உதவிகள், ஆலோசனைகளுக்கு, Comment Box மூலம் அல்லது இங்கு சென்று அல்லது Email மூலம் கேளுங்கள். 
நேற்று இரவு Chrome 29 ம் பதிப்பு வெளியான பின்பு Tamilcc.com பலருக்கு உருக்குலைந்து தெரிகிறதாக புகார் வந்தது. இது தொடர்பாக எம் Development Team விரைவில் ஆய்வுகளை மேற்கொள்ளும். அதுவரை பொறுத்திருங்கள்.

Download VBA for MS Excel & Access Learner's Guide Books

Microsoft Access 2010 VBA Macro Programming 2012

Perfect for power users, Microsoft Access 2010 VBA Macro Programmingreveals how to maximize the features and functionality of Access 2010. You'll get in-depth details on Access VBA programming and application development followed by 20 real-world projectsΓÇôcomplete with source code that show you how to set up specific subroutines and functions. This practical resource then explains how to include the subroutines in the Access menu system and transform a set of interrelated VBA macros into an Access add-in package. Create your own Access 2010 VBA macros right away with help from this hands-on guide.



Excel Programming with VBA Starter

Do you have repetitive tasks that you would like to get rid of for good? Would you like to integrate Office Applications in order to streamline some of your tasks? Then look no further. This compact book will provide you with the knowledge to get your VBA programming off the ground and up to a comfortable cruising speed.

Excel Programming with VBA Starter was born out of the need to have a short, but yet all-encompassing book that would give you a solid foundation in programming with Visual Basic for Applications. This book will enable you to harness the power of VBA in Excel and put it to good use throughout the course of your working day.




மொபைலிலிருந்து இணையத்துக்கு நேரடி வீடியோ ஒளிபரப்பு

கேமரா வசதியுடைய மொபைலிலிருந்து இனையத்துக்கு நேரடி வீடியோ ஒளிபரப்பு செய்யலாம். இந்த வசதியை நமக்கு bambuser என்ற இணையதளம்வழங்குகிறது.இத்தளத்திற்கு சென்று ஒரு கணக்கை உருவாக்கவும்.Mobile-க்குரிய மென்பொருளை உங்கள் Mobile-ல் Install செய்யவும்.பிறகு அந்த மென்பொருளை திறந்து உங்களது ஒளிபரப்பை ஆரம்பிக்கவும். இதன் மூலம் எந்த நிகழ்ச்சிகளை நம் Mobile-லில் இருந்தே உலகத்திற்குநேரடியாக உங்கள் வீடியோவை ஒளிபரப்பு செய்யலாம்.

மேலும் கணினி Web Camera-விலிருந்தும் நேரடியாக ஒளிபரப்பு செய்யலாம். உங்களது ஒளிபரப்பினை உங்கள் Blog-ல் Gadjet-ஆக பொருத்தி உங்கள் நண்பர்களுக்கும், சொந்தங்களுக்கும் காட்டலாம் என்பது கூடுதல் வசதி.


தேவை:
            1.உங்கள் செல்பேசியில் அதிவேக இணைய இணைப்பு.

            2.உங்கள் செல்பேசி Android,Apple,bada,meamo 5,Symbian 2nd Edition,Symbian 3rd Edition,Symbian 5th Edition,Symbian^3,Symbiam UIQ3,Windows Mobile போன்ற Applicationகளை Support செய்யும் Mobile-ஆக இருக்க வேண்டும்.
         
           3.இந்த தளத்திற்கு சென்று உங்கள் மொபைல் போனை கிளிக் செய்து உங்களுக்கான Application-ஐ தறவிறக்கி கொள்ளவும்.தளத்திற்க்கு செல்ல சுட்டி


           4.பின் அந்த Application-ஐ திறந்து உங்களது ஒளிபரப்பை ஆரம்பிக்கவும்

Wednesday, July 30, 2014

HTML கற்போம் - 8

Styling HTML with CSS

CSS ஆனது  HTML 4 இலே அறிமுகப்படுத்தப்பட்டது, HTML ஆவனம் ஒன்றினை அழகு படுத்துவதற்காக பயன்படுத்தப்படும் ஒரு முறையாகும்.
CSS ஆனது பின்வரும் வளிமுறைகளில் HTML ஆவனம் ஒன்றினுல் உள்ளடக்க முடியும்.
  • Inline - style attribute இனை HTML ஆவனத்தில் பயன்படுத்தப்படும் tagஇனுல் பயன்படுத்துதல்.
  • Internal -  <style> tag இனை  <head> tag பகுதியினுல் பயன்படுத்துதல்.
  • External - external CSS file ஒன்றினை HTML ஆவனத்தில் பயன்படுத்தப்படுத்துதல்.
Inline Styles
<p style="color:blue;margin-left:20px;">This is a paragraph.</p>   இங்கு style attributeஆனது <p> tag இனுல் பயன்படுத்தப்படும் விதம் காட்டப்பட்டுள்ளது.

HTML Style Example - Background Color
கீழ் வரும் உதாரணம் ஊடாக bodyHeadingParagraph போன்ற பகுதிகளுக்கு பின்னுட்டல் நிறம் வழங்கும் முறைகாட்டப்பட்டுள்ளது.

Example
<html>
            <body style="background-color:yellow;">
                        <h2 style="background-color:red;">This is a heading</h2>
                        <p style="background-color:green;">This is a paragraph.</p>
            </body>
</html>

HTML Style Example - Font, Color and Size
Example
<html>
            <body>
                        <h1 style="font-family:verdana;">A heading</h1>
                        <p style="font-family:arial;color:red;font-size:20px;">A paragraph.</p>
            </body>
</html>

HTML Style Example - Text Alignment
Example
<html>
            <body>
                        <h1 style="text-align:center;">Center-aligned heading</h1>
                        <p>This is a paragraph.</p>
            </body>
</html>

Internal Style Sheet
குறிப்பட்ட ஒரு HTML document ஒன்றினுல் குறிப்பட்ட ஒரு தனித்துவமான style இனை பயன்படுத்துவதற்கு இம்முறை பயன் படுத்தப்படும்.  இதனை  HTML page ஒன்றினுல் <head> பகுதியினுல்  <style> tag இனை பயன்படுத்தி வரையறை செய்யப்படும்.
Example
<head>
            <style type="text/css">
                        body {background-color:yellow;}
                        p {color:blue;}
            </style>
</head>
இங்கு body இன் பின்புற நிறத்தினையும், paragraph இன் எழுத்தின் நிறமும் வரையறை செய்யப்பட்டுள்ளது.

External Style Sheet
இம் முறையின் கீழ் ஒரு style sheet ஆவனத்தினை வெவ்வேறான HTML page இனுல் இணைப்பினை ஏற்படுத்தும் முறையாகும். இதன் நன்மைகள் என்னவெனில்
·         ஒவ்வரு ஆவனத்துக்கும் style எழுதுவதக்கான நேர விரையம் குறைக்கப்படும்
·         குறிப்பிட்ட ஒருமைப்படுத்தப்பட்ட  style ஆனது வெவ்வேறு ஆவனங்களில் பயன்படுத்த முடியும்.
·         ஒரு external style sheet இல் மாற்றத்தினை ஏற்படுத்துவதன் ஊடாக ஒரு இணைய தளத்தில் உள்ள (Web site)  எல்ல பக்கங்களிலும் மாற்றத்தினை ஏற்படுத்த முடியும்.
 ஒரு style sheet ஆவனத்தினை HTML page  இனுல் இணைப்பதற்கு <link> tagபயன்படுத்தப்படும்இது <head> tag பகுதியினுல் உள்ளடக்கப்படும்.
<head>
            <link rel="stylesheet" type="text/css" href="mystyle.css">
</head>
இங்கு mystyle.css என்பது stylesheet ஆவனம் ஆகும்.
Example
Exstyle.css file
body
            {
            background-color:#c0f2d9;
            }
h1
            {
            color:orange;
            text-align:center;
            }
p
            {
            font-family:”arial”;
            font-size:20px;
            }




HTML file

<html>
            <head>
                        <link rel=”stylesheet” type=”text/css” href=”Exstyle.css”/>
            </head>
            <body>
                        <h1> Our School </h1>
                        <p> My School is 1AB School </p>
            </body>
</html>

Blogger Tips and TricksLatest Tips For BloggersBlogger Tricks

சொயற்படுத்துங்கள்

Blog Archive

Total Pageviews