தகவல் தொழில்நுட்ப முதல் தமிழ் வலைத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

Friday, November 21, 2014

ஜிமெயிலில் தேவையில்லாத விளம்பரங்களை நீக்குவதற்கு

மின்னஞ்சல் சேவைகளில் முதலிடத்தில் இருக்கும் ஜிமெயில், நாள்தோறும் பயனாளர்களுக்கு புதுப்புது வசதிகளை அளித்துக் கொண்டே இருக்கின்றது.
ஆனால் ஜிமெயிலை ஓபன் செய்தால் விளம்பரங்களும், விட்ஜெட்டுகளும் நிறைய காணப்படுவது பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கவில்லை.
உங்களுக்கு ஜிமெயில் தோற்றம் பிடிக்கவில்லையா, குறிப்பாக ஜிமெயிலில் உள்ள விளம்பர பேனர்கள் போன்று தேவையில்லாதவைகளை நீக்க வேண்டுமா? உங்களுக்காகவே ஒரு பயனுள்ள நீட்சி உள்ளது.
முதலில் இந்த லிங்கில் சென்று Gmelius என்ற நீட்சியை தரவிறக்கம் செய்து உங்கள் இணைய உலாவியில் நிறுவி கொள்ளுங்கள்.
நீட்சியை இணைத்தவுடன் நீட்சியின் Options பகுதிக்கு சென்றால் ஒரு விண்டோ ஓபன் ஆகும். அதில் ஜிமெயிலில் உங்களுக்கு வேண்டாதவைகளுக்கு நேராக உள்ள சிறிய கட்டத்தில் டிக் மார்க் கொடுத்து கீழே உள்ள Save My Settings என்பதை அழுத்தி சேமித்து கொள்ளவும்.
இப்பொழுது ஜிமெயிலை ஓபன் செய்து பாருங்கள் நீங்கள் நீக்கிய பகுதி வந்திருக்காது. இந்த நீட்சியின் மூலம் Ads, People Widget, Chat, Chat availability, chat search box, calender widget போன்றவைகளை ஜிமெயிலில் இருந்து நீக்கலாம்.
மற்றும் உங்கள் மின்னஞ்சலுக்கு ஏதாவது அட்டாச்மென்ட் வந்தால் அதற்கு ஏற்ற ஐகானும் தெரியும். உதாரணமாக PDF கோப்பை அட்டாச் செய்து அனுப்பி இருந்தால் அந்த மின்னஞ்சலில் சாதாரண அட்டாச்மென்ட் ஐகான் தெரியாமல் PDF ஐகான் தெரியும்.
இதன் மூலம் மின்னஞ்சலை ஓபன் செய்யாமலே எந்த வகையான  கோப்பு வந்துள்ளது என அறிந்து கொள்ளலாம் மற்றும் மேலும் பல வசதிகள் இந்த நீட்சியில் உள்ளது.
இந்த நீட்சி தற்பொழுது குரோம், பயர்பொக்ஸ் மற்றும் ஒபேரா உலாவிகளில் வேலை செய்கிறது.

0 comments:

Post a Comment


Blogger Tips and TricksLatest Tips For BloggersBlogger Tricks

சொயற்படுத்துங்கள்

Blog Archive

Total Pageviews