ஜிமெயிலில் Chat History தன்னிச்சையாகவே அழிவதற்கு
ஜிமெயிலில்
உள்ள Chat வசதியின் மூலம் நண்பர்களுடன் அரட்டை அடித்துக் கொள்ளலாம்.
இவ்வாறு அரட்டை அடிக்கும் விடயங்கள் அதன் History இல் காணப்படும்.
எனவே இன்னொரு தடவை நாம் அரட்டையை திறக்கும் போது பழைய அரட்டைகள் சில
வேளைகளில் அழியாமல் காணப்படுவதுண்டு. இவை சிலருக்கு இடையூறாகக்
காணப்படலாம்.
எனவே இவ் அரட்டைப் பகுதியில் உள்ள பழைய அரட்டைகளை எவ்வாறு தன்னிச்சையாகவே அழித்துக் கொள்ளும்படி வைக்கலாம்.
இதற்கு முதலில் உங்கள் ஜிமெயிலில் Settings பகுதிக்கு செல்லவும், தற்போது
தோன்றும் விண்டோவில் CHAT என்ற tab ஐ கிளிக் செய்து கொள்ளவும்.
தற்போது படத்தில் உள்ள My Chat history: என்பதில் இரண்டு Radio buttons
காணப்படும். இதிலே Never Save Chat History என்பதை கொடுத்து இப்பக்கத்தின்
கீழே உள்ள Save என்பதைக் கொடுத்து சேமித்துக் கொள்ளவும்.
அவ்வளவு தான் இனிமேல் உங்கள் Chat History ஆனது தன்னிச்சையாகவே அழிக்கப்பட்டுவிடும்.
0 comments:
Post a Comment