தகவல் தொழில்நுட்ப முதல் தமிழ் வலைத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

Friday, January 17, 2014

சாட் ரூம்ஸ் சில வழிகாட்டுதல்கள்


 
 
 
 
 
 
 
 
 
 
 
1. இன்டர்நெட் என்னும் போது நாம் சதிகாரர்களை அடையாளம் காண்பது மிகவும் கடினம். நமக்குக் கிடைப்பதெல்லாம் அவர்களின் இமெயில் முகவரியும் முகம் தெரியாத நபரும் அவரின் சர்க்கரை கலந்த பாலியியல் சொற்களுமே. எனவே உண்மையான நட்பு காரணமாக நீங்கள் அரட்டை அறைகளில் பேச விரும்பினாலும் உங்களுடைய உண்மையான பெயர், இமெயில் முகவரி, இருப்பிட முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றைத் தரக் கூடாது.



2. உங்களுடைய வருமானம் போன்றவற்றைக் கேட்டுவிட்டு அதன்பின்  நீங்கள் நாள்தோறும் பத்திரிக்கை படிப்பீர்களா என்ற சாதாரண தகவல்களைக் கேட்டுவிட்டு அதன் பின்னர் உங்களின் அன்றாட வாழ்க்கை முறைகளை இவர்கள் கேட்பார்கள். இதில் உங்கள் நடவடிக்கைகளைக் கண்காணிக்க அவர்களுக்கு எளிதாகிவிடும். எனவே எந்த நிலையிலும் பெர்சனல் தகவல்கள், வாழ்க்கை நடைமுறை இவற்றைப் பங்கிட்டுக் கொள்ளாதீர்கள். கடைந்தெடுத்த கிரிமினல் குற்றவாளிகள் இவற்றைச் சரியாகப் பயன்படுத்தி
நம்மை மாட்டி விடுவர்கள்.


3. சிறிது நாட்கள் சென்ற பின்னர் இவர்கள் நேரில்  குறிப்பிட்ட இடத்திற்கு ஆசை காட்டி வரச் சொல்வார்கள். இதனைத் தவிர்க்கவும். உங்களுடைய அன்றாட வாழ்வும் இன்டர்நெட்டில் நீங்கள் காட்டும் வாழ்வும் வெவ்வேறாக
இருக்க வேண்டும். இரண்டையும் குழப்ப வேண்டாம். அப்படியே ஒரு துறை நண்பர் அரட்டை வழி கிடைத்து அவரைப் பார்ப்பது உங்கள் வாழ்க்கைக்கு, அல்லது வேலைகளுக்கு உதவியாய் இருப்பார் என்றால் பலர் கூடும் இடங்களில் உங்களின் உற்ற நண்பர்கள் மத்தியில் சந்திப்பை வைத்துக் கொள்ளுங்கள். யாராவது தனியாக வா என்று ஆசை காட்டினால் உடனே அந்த பழக்கத்திற்கு முடிவு கட்டி விடுங்கள். உங்களை வீழ்த்த அங்கே பெரிய சதி உள்ளது என்பதின் ஆரம்பமே அது.


4. இது போன்ற அரட்டை அறைகளுக்கென யாரேனும் மாடரேட்டர் என்னும் ஒருங்கிணைப்பாளர் இருந்தால் அது போன்ற சாட் ரூம் களையே நாடுங்கள். இது முழுமையான பாதுகாப்பு இல்லை என்றாலும் ஓரளவிற்கு மூன்றாவது நபர் ஒருவருக்கு உங்கள் இருவரையும் தெரிகிறதல்லவா? இதனால் பிற்காலத்தில் பிரச்னை ஏற்படுகையில் சிக்கலைத் தீர்க்க உதவும். இருப்பினும் இது முழுமையான பாதுகாப்பு என்றும் கூற முடியாது. நீங்கள் அளிக்கும் தகவல்களுக்கும் பாதுகாப்பு கிடைக்கும்.


5. சிலர் உங்களின் கம்ப்யூட்டருக்குள் திருட்டுத்தனமாக  ஊடுருவுதலுக்கும் இந்த வழியைக் கடைப்பிடிக்கின்றனர். இவர்கள் உங்களுக்கு ஆசை காட்டி இந்த இணைய தள முகவரியில் சென்றால் இதனைப் பார்க்கலாம். உடனடியாக லட்சம் லட்சமாகச் சம்பாதிக்கலாம் என்று ஆசை காட்டுவார்கள். இப்படிப்பட்ட தளங்களைத் திறந்து பார்த்தால் நீங்கள் அறியாமலேயே வைரஸ் அல்லது மால்வேர் என்னும் திருட்டு புரோகிராம் உங்கள் கம்ப்யூட்டருக்குள் வந்துவிடும். எனவே கவனமாக இருக்கவும். அல்லது அந்த தளங்களை எந்த கம்ப்யூட்டர் வழியாகத் திறப்பதையும் தவிர்க்கவும்.


6. மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டியது உங்கள் போட்டோ குறித்துத்தான். பழகிய கொஞ்சம் காலத்திலேயே உங்கள் போட்டோவை அனுப்புங்கள் என்று கேட்பார்கள். உங்களுக்கு நம்பிக்கை ஏற்பட ஏற்கனவே உங்களுக்கு அவர்களின் போட்டோவை அனுப்பி வைப்பார்கள். இதில் சிக்க வேண்டாம். ஏனென்றால் அவர்கள் அனுப்பிய போட்டோ வேறு ஒரு பெண் அல்லது ஆணின் போட்டோவாகக் கூட இருக்கலாம். அதே போல உங்கள் போட்டோவையும் தப்பான செயல்களுக்கு அவர்கள் பயன்படுத்தலாம். எனவே எந்த நிலையிலும் போட்டோவை அனுப்ப வேண்டாம்.


7. அப்படியானால் இன்டர்நெட் வழியில் சென்று அரட்டை அறைகளில் நண்பர்களைத் தேடவே கூடாதா? என்று நீங்கள் கேட்கலாம். தாராளமாக நண்பர்களைப் பெறலாம். ஆனால் சில எச்சரிக்கை வழிகளைப் பின்பற்றினால் மோசமான விளைவுகளைத் தவிர்க்கலாம் அல்லவா? அப்போ என்னதான் செய்யலாம் என்று கேட்கிறீர்களா!  ஏற்கனவே உங்களுக்கு நேரில் பழக்கமான உற்ற நண்பர்கள் யார் மூலமாவது புதிய நண்பர்களைப் பழக்கிக் கொள்ளவும். நட்பின் பழக்கத்தை ஏன் மற்றவர்களிடம் மறைக்க வேண்டும். வீட்டில் உள்ள அண்ணன், அக்கா மற்றும் பெற்றோர்களிடம் இது பற்றிக் கூறவும். அவர்கள் நிச்சயம் இதில் உங்களை வழி நடத்துவார்கள். நல்ல நட்பாக இருந்தால் கை கொடுத்து உதவுவார்கள்.


அதே போல புதிய நண்பர்கள் கிடைத்தால் சற்று தூரத்தில் வைத்தே பழகுங்கள். ஒரே நாளில் உடனேயே உங்களைப் பற்றிய அனைத்து தகவல்களையும் சொல்லிவிடாதீர்கள். எல்லாருக்கும் இந்த தீங்கு ஏற்படும் என்று இங்கு சொல்ல வரவில்லை. நாட்டில் இன்று நடக்கும் பாலியியல் மோசடிகள் மற்றும் தீவிரவாதிகளின் நடவடிக்கைகளைப் பார்க்கையில் நாம் கவனமாக இருப்பது நல்லதல்லவா?

Thursday, January 16, 2014

Animation வாழ்த்து அட்டைகளை உருவாக்குவதற்கு...!

வாழ்த்து செய்தியை அனிமேசனுடன் கூடிய அழகான வாழ்த்து அட்டையாக ஓன்லைன் மூலம் நமக்கு தேவையான வடிவில் இருந்து எளிதாக உருவாக்கி அனுப்பலாம். நாளுக்கு நாள் வாழ்த்துச் செய்திகளை புதுமையாக சொல்லும் தளம் வந்து கொண்டு இருக்கிறது.

அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருக்கும் இந்தத்தளம் மூலம் மல்டிமீடியா வாழ்த்து அட்டை ஓன்லைன் மூலம் எளிதாக சில நிமிடங்களில் உருவாக்கலாம். 


இணையதளப் பெயரே Easy Hi என்று எளிதான முகவரியுடன் இருக்கிறது. இத்தளத்திற்கு சென்றவுடன் தோன்றும் விண்டோவில் Get Started Now என்ற பொத்தானை சொடுக்கி வாழ்த்து அட்டை உருவாக்க ஆரம்பிக்கலாம்.


வாழ்த்து சொல்ல வசதியாக பல தரப்பட்ட அழகான படங்கள், அழகான எழுத்துருக்கள், கண்ணைக்கவரும் அனிமேசன் என அனைத்துமே சிறப்பாக இருக்கிறது. விரும்பிய படங்களையும் அனிமேசனையும் சேர்த்து அழகான வாழ்த்து அட்டை நாமே உருவாக்கி விரும்பிய நபர்களுடன் அதை பகிர்ந்து கொள்ளலாம்.


இணையதள முகவரி :   Easyhi.com

கணினியில் மவுஸின் தொடுதிறனை (Sensitivity ) கட்டுப்படுத்துவதற்கு

AutoSensitivity கணினியில் மவுஸின் தொடுதிறனை (Sensitivity ) கட்டுப்படுத்துவதற்கு உதவுகிறது இந்த மென்பொருள். Touchpad உள்ள டிவைஸ்களையும் இதன் மூலம் கட்டுப்படுத்தலாம். கணினியில் இந்த டூலை நிறுவுவதற்கு .NET Framework 3.5 or 4.0. தேவையாகும்.
டவுண்லோட் இணைப்பு: AutoSensitivity

உங்கள் கணனி Password மறந்து போனால்...?




விண்டோஸ் எக்ஸ்பி இயங்கு தளத்தில் பயனர் கணக்கை (user account) உருவாக்கி அதனை எவரும் அணுகா வண்ணம் பாஸ்வர்ட் மூலம் பாதுகாப்பளிக்கவும் முடியும் என்பது நீங்கள் அறிந்த விடயமே.
அப்படி நீங்கள் உருவாக்கும் பயனர் கணக்குக்குரிய பாஸ்வர்ட் ஒருவேளை மறந்து போனால் விண்டோஸில் டிபோல்டாக உருவாக்கப்படும் அட்மினிஸ்ட் ரேட்டர் (administrator) கணக்கு மூலம் லாக் ஓன் செய்து அதனை நீக்க முடியும். இந்த அட்மினிஸ்ட்ரேட்டர் கணக்குக்குப் பாஸ்வர்ட் இட்டுக் கொள்வோரும் உண்டு. இப்போது அந்த அட்மினிஸ்ட்ரேட்டர் கணக்குக்குரிய பாஸ்வர்டும் மற்ந்து போனால் என்ன செய்வது?


அதற்கும் ஒரு தீர்விருக்கிறது. எனினும் இந்த வழிமுறை ஓரளவு சிக்கலானது. விண்டோஸைப் புதிதாக நிறுவும் முறையை அறிந்திருப்போருக்கு இது இலகுவான விடயமே.


முதலில் கணனியை இயக்கி சிடியிலிருந்து பூட் ஆகுமாறு பயோஸ் (BIOS) செட்டப்பில் மாற்றி விடுங்கள். கணனியை மறுபடி இயக்கி விண்டோஸ் எக்ஸ்பீ சிடியை ட்ரைவிலிட Press any key to boot from CD எனும் செய்தி திரையில் தோன்றும். அப்போது ஒரு விசையை அழுத்த சிடியிலிருந்து கணனி பூட் ஆக ஆரம்பிக்கும். இது விண்டோஸை நிறுவும் செயற்பாட்டில் முதற்படியாகும்.


இந்த செயற்பாட்டில் கணனியைப் பரிசோதித்து பைல்கள் லோட் செய்யப்பட்டதும் Licensing Agreement திரை தோன்றும். அப்போது F8 விசையை அழுத்தியதும் வரும் திரையில் புதிதாக விண்டோஸை நிறுவுவதா அல்லது ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளதை சரி செய்வதா (Repair) என வினவும். அப்போது கீபோர்டில் R கீயை அழுத்தி ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள விண்டோஸை சரி செய்வதற்கான விருப்பை தெரிவுசெய்யவும்.



அடுத்து கணனி மறுபடி இயங்க ஆரம்பித்து (restart) ஒரு சில நிமிடங்களில் திரையின் இடது புறத்தில் Installing Devices எனும் செயற்பாடு நடைபெறக் காணலாம். இந்த இடத்தில்தான் நீங்கள் செயற்பட வேண்டியுள்ளது. இங்கு கீபோர்டில் SHIFT + F10 விசைகளை ஒரே நேரத்தில் அழுத்துங்கள். அப்போது திரையில் கமாண்ட் விண்டோ தோன்றும். கமாண்ட் ப்ரொம்டில் NUSRMGR.CPL என டைப் செய்து எண்டர் கீயை அழுத்த கண்ட்ரோல் பேனலிலுள்ள User Accounts விண்டோ திறக்கக் காணலாம். இங்கு நீங்கள் விரும்பும் பயனர் கணக்குக்குரிய பாஸ்வர்டை மாற்றவோ நீக்கவோ முடியும்.



ஒரு யூசர் கணக்கில் நுளையும்போது அதாவது லொக்-ஓன் செய்யும் போது பாஸ்வர்டை வினவாமல் செய்ய அதே கமாண்ட் ப்ரொம்டில் control userpasswords2 என டைப் செய்து எண்டர் கீயை அழுத்துங்கள். அங்கு அட்மினிஸ்ட்ரேட்டர் கணக்குக்குரிய பாஸ்வர்டை மாற்றவோ அல்லது நீக்கவோ (Reset password) ரீசெட் பாஸ்வர்ட் பட்டனில் க்ளிக் செய்து மாற்றிக்கொள்ளலாம்.



மாற்றங்கள் செய்த பின்னர் அந்த டயலொக் பொக்ஸை மூடிவிட்டு விண்டோஸ் ரிபெயாரிங் செயற்பாடு பூர்த்தியாகும் வரை அதனைத் தொடரவேண்டும்.

Tuesday, January 14, 2014

கம்ப்யூட்டரை மாற்றும் புதிய ராம் சிப்கள்


புதிய வகை ராம் மெமரி சிப்கள் அறிமுகமாகி, வரும் ஆண்டுகளில் பெர்சனல் கம்ப்யூட்டர் இயக்கத்தில் பெரும் புரட்சியைக் கொண்டு வர இருக்கின்றன. இப்போதெல்லாம், மெமரி மற்றும் கம்ப்யூட்டர் ஸ்டோரேஜ் என்பவனவற்றின் இடையே உள்ள மாறுபாடு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருகிறது. இது நாம் பெர்சனல் கம்ப்யூட்டரை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதனை மாற்றப் போகிறது.
 
புதிய சிப்கள், தற்போது டேப்ளட்டில் இயங்கும் வகையில், பெர்சனல் கம்ப்யூட்டரிலும் இயங்கும். இதில் MRAM (Magnetoresistive RAM) என்ற வகை மெமரி சிப் புதிய தொழில் நுட்பமான nonvolatile memory technology ஐக் கொண்டிருக்கும். இதே போல resistive RAM — RRAM சிப்களும் சில எதிர்பாராத மாற்றங்களைக் கொண்டதாக இருக்கும்.
 
வழக்கமான DRAM மெமரி சிப்கள், தன் ஒவ்வொரு மெமரி செல்லிலும் எலக்ட்ரிகல் சார்ஜ் பயன்படுத்தி பிட்களை (ones and zeros) ஸ்டோர் செய்திடும். ஆனால், Magnetoresistive RAM (MRAM) காந்த சக்தியைப் பயன்படுத்துகிறது. magnetic charge மூலம், பிட்கள் ஸ்டோர் செய்யப்படும். Resistive RAM (RRAM) இரண்டு லேயர் அடுக்குகளில் தயாரானதாக இருக்கும். இரண்டு அடுக்குகளும், ஒன்றுக்கொன்று வித்தியாசமான செயல்பாட்டினைக் கொண்டிருக்கும்.
இந்தப் புதிய தொழில் நுட்பத்திற்குப் பல சிப் தயாரிப்பாளர்கள் மாறிக் கொண்டுள்ளனர். பல நிறுவனங்களும், ஆய்வு மையங்களும் இவற்றை எளிதாகக் கொண்டு வருவதில் ஆர்வம் காட்டி வருகின்றன. வரும் ஆகஸ்ட் மாதத்திற் கான உரிமையைப் பெற இருப்பதாக Crossbar நிறுவனம் அறிவித்துள்ளது.
 
ஆனால், தற்போதைய DRAM சிப்களின் இடத்தில் இவற்றைப் பயன்படுத்த, இன்னும் பல நிலைப் பணி இந்த இரண்டு ராம் மெமரி சிப்கள் வடிவமைப்பில் மேற்கொள்ள வேண்டியுள்ளது. இவை வெற்றிகரமாக முடியும் தருவாயில், கம்ப்யூட்டர் கட்டமைப்பில், அதன் ஸ்டோரேஜ் மற்றும் மெமரியில் பெரிய மாற்றங்கள் வரும். இப்போதைய பெர்சனல் கம்ப்யூட்டர்கள் DRAM சிப்களைப் பயன்படுத்தி புரோகிராம்களை இயக்குகின்றன. புரோகிராம் இயங்கத்தேவையான டேட்டாவினை ஸ்டோரேஜ் செய்திடவும் பயன்படுத்துகின்றன. இந்த சிப்களுக்கான எலக்ட்ரிகல் பவர் நிறுத்தப்படுகையில், இவற்றில் உள்ள டேட்டா நமக்குக் கிடைக்காது. ஆனால், புதிய வகை மெமரி சிப்கள் செயல்பாட்டுக்கு வருகையில், நமக்கு டேட்டா திரும்ப கிடைக்கும்.
 
தற்போது டேப்ளட் பி.சி.க்களில் பயன்படுத்தப்படும் Flash memory தொடர்ந்த மெமரியை வழங்குகின்றது. மின்சக்தி நீக்கிய பின்னரும், ஸ்டோரேஜ் தக்க வைக்கிறது. புதியதாக வர இருக்கும் மெமரி சிப்கள், இந்த வகையில் இவற்றையும் மிஞ்சிவிடும் எனத் தெரிகிறது.
RRAM சிப்கள், தற்போது பயன்படுத்தப்படும் மின் சக்தியில் 20 மடங்கு குறைவாகவே பயன்படுத்தும். டேட்டா எழுதும் வேகம் 20 மடங்கு அதிகமாக இருக்கும். NAND flash memory ஐக் காட்டிலும் ஸ்டோரேஜ் திறன் கூடுதலாக இருக்கும். உறுதியாகத் தொடர்ந்து இயங்கும் மெமரி இனி கம்ப்யூட்டருக்குக் கிடைக்கும். கம்ப்யூட்டர் கிராஷ் ஆனால், இப்போது போல பதட்டப் படாமல், மெமரியிலிருந்து மீளலாம்.

Sunday, January 5, 2014

OEM லோகோவினை நீங்களும் மாற்றியமைக்கலாமே!



டெஸ்க்டொப்பில் மை கம்பியூட்டர் ஐக்கன் மீது ரைட் க்ளிக் செய்ய வரும் கண்டெக்ஸ்ட் மெனுவில் ப்ரொப்படீஸ் தெரிவு செய்யும் போது வரும் சிஸ்டம் ப்ரொப்படீஸ் டயலொக் பொக்ஸில் ஜெனெரல் டேபின் கீழ் நீங்கள் நிறுவியுள்ள விண்டோஸின் பதிப்பு, பதிவு விவரம், ப்ரொஸெஸர் வகை மற்றும் அதன் வேகம், நினைவகத்தின் கொள்ளளவு போன்ற தகவல்களைக் காணலாம். (படம் -1)

இவற்றில் கணினி தயாரிப்பு நிறுவனம், கணினியின் மாதிரி இலக்கம், அதனுடன் இணைந்த சிறிய படம் (இலட்சினை), மற்றும் அதன் கீழ் காணப்படும் Support Information எனும் பட்டனைக் க்ளிக் செய்ய வரும் டயலொக் பொக்ஸில் (படம்-2) தோன்றும் விவரங்கள் போன்றவற்றை OEM தகவல்கள் எனப்படும்.

OEM என்பது Original Equipments Manufacturer என்பதன் சுருக்கமாகும். ஏதேனுமொரு பொருளை உற்பத்தி செய்யும் (வன்பொருள் / மென்பொருள்) முதன்மை நிறுவனம் அப்பொருளை நேரடியாக வாடிக்கையாளரிடம் கொண்டு செல்லாமல் வேறொரு நிறுவனத்திடம் ஒப்படைத்து விடும். இரண்டாவது நிறுவனம் அப்பொருளை மேலும் மேன்படுத்தி தனது பெயரில் பொதி செய்து வாடிக்கையாளர்களை அடையச் செய்யும். எனி னும் நேர்மாற்றமாக OEM என்பது இரண்டாவது நிறுவனத்தையே குறித்து நிற்கிறது.

இவ்; ழுநுஆ தகவல்கள் அனைத்தும் .ini • பைலாக கணினியில் சேமிக்கப்படுகின்றன. இதனை நோட்பேட் போன்ற டெக்ஸ்ட் எடிட்டர் கொண்டு மாற்றியமைக்கலாம்.

இந்த •பைலானது [General] , [Support Information] எனும் இரு பகுதிகளைக் கொண்டிருக்கும். [General] பகுதி

Manufacturer=
Model=

போன்ற விவரங்களைக் கொண்டிருக்கும்.

இரண்டாம் பகுதி, [Support Information] என்பதாகும். இதனை விரும்பினால் மாற்றலாம். இப்பகுதியின் தகவல்கள் Support Information எனும் பட்டனைக் க்ளிக் செய்யும் போது வரும் வேறொரு டயலொக் பொக்ஸில் காட்டும். இங்கு அளிக்கப்படும் தகவல்களை [Support Information] எனும் தலைப்பின் கீழ்

Line1=
Line2=
Line3=

என்ற வடிவத்தில் உள்ளீடு செய்ய வேண்டும்.

பிறகு அதனை oeminfo எனும் பெயரில் .ini எனும் •ஃபைல் வடிவில் சேமித்து விண்டோஸ் போல்டரில் உள்ள சிஸ்டம்32 (விண்டோஸ் எம்.இ, எக்ஸ்பீ ) எனும் சப் போல்டருக்குள் சேமிக்க வேண்டும். விண்டோஸ் 98, மற்றும் 2000 பதிப்பாயின் சிஸ்டம் எனும் போல்டருக்குள் சேமிக்க வேண்டும்.

அதனுடன் உங்கள் நிறுவன இலட்சினை (லோகோ) தோன்றச் செய்ய வேண்டுமாயின் ஏதேனுமொரு போட்டோ எடிட்டிங் மென்பொருள் கொண்டு நீங்கள் போட விரும்பும் படத்தின் அளவு 120 X 120 பிக்ஸலில் இருக்கத்தக்கதாக உருவாக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை oemlogo எனும் பெயரில் . .bmp (bitmap) •போமட்டில் சேமித்து அதனைக் கட் & பேஸ்ட் செய்து மேற் சொன்ன அதே சிஸ்டம்32 போல்டருக்குள் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும். இப்போது கீ போர்டில் வின் கீயுடன் + Break கீயை அழுத்த சிஸ்டம் ப்ரொப்படீஸ் டயலொக் பொக்ஸில் உங்கள் கை வரிசையைக் காணலாம்.

நோட்பேடைத் திறந்து கீழுள்ளதை மாதிரியாகக் கொண்டு டைப் செய்து (படம்-3) oeminfo.ini எனும் பெயரில் C:\windows\system32 எனுமிடத்தில் சேமிக்கவும்.

ஸ்க்ரீன் சேவர் உருவாக்கலாம் வா!

ஓளிப்படங்களைக் கொண்டு ஸ்க்ரீன் சேவர்களை உருவாக்கக் கூடிய மென்பொருள்தான் சைபர்லின்க் மீடியாஷோ. இது Cyberlink PowerDVD மென்பொருளடங்கிய சீடீயுடன் இணைந்து வருகிறது.


மீடியாஷோ மென்பொருள் மூலம் அழகிய ஸ்க்ரீன் சேவர்களை இலகுவாக உருவாக்கலாம். மைக்ரோஸொப்ட் பவபொயின்டில் பணியாற்றுவது போன்ற அனுபவம் மீடியாஷோவில் கிடைக்கிறது. அனேகமாக எல்லாவிதமான மல்டிமீடியா பைல் வகைகளையும் மீடியாஷோவில் கையாளலாம். ஒளிப்படங்கள், வீடியோ க்ளிப்ஸ், பவபொயின்ட் ப்ரசன்டேசன், ஒலிப்பகுதிகள் எனப் பல்வேறுபட்ட பைல் போமட்டுக்களை மீடியாஷோவுக்கு இம்போட் செய்து அவற்றை விரும்பிய விதத்தில் ஒழுங்கு படுத்தலாம். அத்துடன் அவற்றிற்கு 100 க்கு மேற்பட பலவிதமான டெக்ஸ்ட் இபெக்ட்ஸ் (effects), 2D (Two Dimensional) , 3D ட்ரான்ஸிஸன் இபெக்ட்ஸ், மாஸ்கிங் இபெக்ட்ஸ், மற்றும் சவுன்ட் இபெக்ட்ஸ் என்பவற்றைப் பிரயோகித்து ஒரு மல்டிமீடியா கலவையுடனான ஸ்க்ரீன் சேவராக மாற்றிக் கொள்ளலாம். ஸ்க்ரீன் சேவராக மட்டுமன்றி, .exe பைலாகவோ அல்லது HTML பைலாகவோ கூட மாற்றிக் கொள்ளலாம்.

ஒளிப்படங்க¨ளை நேரடியாக ஸ்கேனரிலிருந்து அல்லது டிஜிட்டல் கேமராவிலிருந்து இம்போட் செய்யும் வசதி ஒலிப்பதிவு (sound recording) செய்யும் வசதி மற்றும் வீடியோ கேப்ச்சர் (capture) செய்யும் வசதியையும் கொண்டுள்ளது மீடியா ஷோ. இன்டனெட் எக்ஸ்ப்ளோரர் போன்ற வெப் பிரவுஸர்களிலிருந்து ட்ரேக் அன்ட் ட்ரொப் முறையில் படங்களை இலகுவாக இழுத்துப் போடக்கூடிய வசதியையும் கொண்டுள்ளது.

அனைத்துப் பணியையும் பட்டன்கள் மூலமாகவே செய்யக் கூடிய வித்தியாசமான இடைமுகப்பைக் கொண்ட மீடியாஷோவை இயக்கியதுமே ஒரு விசர்ட் தோன்றி நம்மை வழி நடத்துகிறது. மீடியாஷோவுக்குப் புதியவர்களுக்கு இந்த விசர்ட் பெரிதும் உதவும். காட்சிகளைத் தொகுத்தல் (compiling), ஒழுங்குபடுத்தல் (sorting), அவற்றில் தேவையான effects ஐப் பிரயோகித்தல், ஸ்க்ரீன் சேவராகவோ அல்லது .exe பைலாகவோ மாற்றிக் கொள்ளல் என நான்கு கட்டங்களில் நமது பணி நிறைவுபெறுகிறது.

மீடியாஷோ மூலம் ஸ்க்ரீன் சேவர் உருவாக்குவதெப்படி? மீடியாஷோவை ஆரம்பித்ததுமே தோன்றும் விசர்ட் மூலம் முதலில் ஒளிப்படங்களையோ வீடியோ காட்சிகளையோ மீடியாஷோ விண்டோவுக்கு கொண்டு வர (import) வேண்டும். அல்லது மீடியாஷோ வின்டோவின் இடது பக்கத்தில் மவுஸை நகர்த்தும் போது தோன்றும் கன்ட்ரோல் பேனலில் இம்போட் பட்டனில் க்ளிக் செய்ய தோன்றும் சிறிய மெனுவிலிருந்து Import Media Files தெரிவு செய்து தேவையான ஒளிப்படங்களை அல்லது வீடியோ க்ளிப்புகளை இம்போட் செய்து கொள்ள வேண்டும். அவை மீடியாஷோ விண்டோவில் சிறிய படங்களாக (Thumbnail pictures) வந்து உட்காரும். அவற்றிலிருந்து விருப்பம்போல் படங்களைத் தெரிவு செய்து கீழுள்ள படச்சுருள் (film) போன்ற அமைப்பிலுள்ள பகுதிக்கு ட்ரேக் அன்ட் ட்ரொப் செய்து படங்களை ஒழுங்கு படுத்த வேன்டும்.

அடுத்து Film அமைப்பிலிருக்கும் முதல் படத்தில் இரட்டை க்ளிக் செய்வதன் மூலம் எடிட் மோடுக்குச் செல்லலாம். எடிட் மோடில் வைத்து விண்டோவின் வலது பக்கத்திலுள்ள பட்டன்கள் ஒவ்வொன் றாகத் தெரிவு செய்து transition , text, sound மற்றும் masking effects என்பவற்றை ஒன்றன் பின் ஒன்றாக பிரயோகிக்க வேண்டும். இதே முறையில் film பகுதிலுள்ள ஒவ்வொரு படத்தையும் தனித்தனியாகத் தெரிவு செய்து effects பிரயோகிக்க வேன்டும். இறுதியாக இடது பக்க மூலையிலுள்ள வீடியோ கேமரா போன்ற ஐக்கனில் க்ளிக் செய்து இதனை ஒரு ஸ்லைட் ஷோவாக இயக்கிப் பார்க்கலாம்.

அடுத்து இதனை ஒரு ஸ்க்ரீன் சேவராக மாற்றுவதற்கு மீடியா ஷோ கன்ட்ரோல் பேனலில் எக்ஸ்போட் பட்டணில் க்ளிக் செய்ய வேண்டும். அப்போது தோன்றும் சிறிய மெஸ்ஸேஜ் பொக்ஸில் Screen Saver தெரிவு செய்து எக்ஸ்போட் க்ளிக் செய்ய save as டயலொக் பொக்ஸ் தோன்றும். இங்கு (.scr) பைலாக அதனை சேமித்துக் கொள்ள வேன்டும். சேமிக்கப் பட்ட இந்த பைலை திறக்கும் போது ஸ்க்ரீன் சேவராகத் தொழிற்படும். அத்துடன் அதன் மீது ரைட் க்ளிக் செய்து வரும் கன்டெக்ஸ்ட் மெனுவிலிருந்து நீங்கள் உருவாக்கிய ஸ்க்ரீன் சேவரை கணினியில் இன்ஸ்டோல் செய்து கொள்ளலாம்.


Microsoft Virtual PC -2007


கணினிப் பயனர்களில் அனேகர் வெவ்வேறு இயங்கு தள‎ங்களை (operating system) தமது கணினியில் நிறுவிப் பணியாற்ற விரும்புவர். எடுத்துக் காட்டாக விண்டோஸ் எக்ஸ்பீயில் பணியாற்றுவோர் விண்டோU‎ஸின் பழைய பதிப்புகளான விண்டோஸ் 2000 மற்றும் விண்டோஸ் 98, விண்டோUஸின் புதிய பதிப்பான விஸ்டா போ‎ன்ற இயங்கு தளங்களையும் சேர்த்து கணினியில் நிறுவிக் கொள்ள விரும்புவர்.

அவ்வாறே விண்டோஸ் இயங்கு தளத்திற்குப் பழக்கப் பட்டவர்கள் விண்டோஸ் அல்லாத லினக்ஸ் போ‎ன்‎ற இயங்கு தளங்களைப் பற்றி அற்ந்து கொள்ள ஆர்வமாயிருப்பர். லினக்ஸிலும் ரெட் ஹெட், பெடோரா, மென்ரிவா, உபுண்டு எனப் பல நிறுவனங்கள்‎ வெளியிடும் (distributions) பதிப்புகள் உள்ளன.

எனினும் ஒரு பய‎ன்பாட்டு மென்பொருளை (application software)நிறுவுவது போ‎‎ன்று ஒரு இயங்கு தளத்தை நிறுவுவது என்‎பது எளிமையான விடயம‎ல்ல. கணினித் துறையில் சிறிது அனுபவமும் அறிவும் அதற்கு வேண்டியிருக்கிறது. அதுவும் ஒரே நேரத்தில் ஒரு கணினியில் ஒ‎ன்றுக்கு மேற்பட்ட இயங்குதளங் களை (duel booting) நிறுவ வேண்டுமானால் க‎ணினி ஹட்வெயர் துறையில் சிறிது கற்றறிந்தவரா யிருத்தல் வேண்டும்.

நீங்கள் விரும்பிய இயங்கு தளத்தை விண்டோஸ¤ட‎ன்‎ சேர்த்து நிறுவுவதற்கு உதவவென சில மெ‎ன்‎பொருள் கருவிகள் பய‎ன் பாட்டில் உள்ளன. இவற்றுள் மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் வேர்ச்சுவல் பீசியை குறிப்பிட்டுக் கூறலாம் (Microsoft Virtual PC-2007). வேர்ச்சுவல் பீசீ மெ‎‎ன்பொருள் மூலம் இலகுவாக ஒன்‎றுக்கு மேற்பட்ட இயங்கு தளங்களை நிறுவிக் கொள்ளலாம். இதுபோன்ற மற்றுமொரு மென்பொருள் கருவி VMware Player. இம்மெ‎ன்‎ பொருள் கருவி வேர்ச்சுவல் பீசியை விட மேலும் சில வசதிகளைக் கொண்டுள்ளது. இவற்றை இலவசமாகவே இணையத்திலிருந்து டவு‎ன்லோட் செய்து கொள்ளலாம்.

வேர்ச்சுவல் மெசீ‎ன் (virtual machine) எ‎‎ன்பது டுவெல் (duel boot) பூட் அல்லது (multi boot) மல்டி பூட் இயங்குதளங்களைக் கொண்ட கணினி போ‎ன்றதல்ல. மல்டி பூட் எனப்படுவது ஒரு கணினியில் ஒரே நேரத்தில் ஒ‎ன்‎றுக்கு மேற்பட்ட இ‎யங்கு தளங்களை நிறுவுதலைக் குறிக்கும். அப்படி ஒ‎ன்றுக்கு மேற்பட்ட இயங்கு தளங்களை ஒரே கணினியில் நிறுவ முடிந்தாலும் ஒரே நேரத்தில் ஒரு இயங்கு தளத்திலேயெ நம்மால் பணியாற்ற முடியும். ஒவ்வொரு இயங்கு தளமும் ஒரே வ‎‎ன்பொருளிலேயே இயங்குகின்றன. இவை மெய்க்கணினி (real machine) எனப்படும்.

இதற்கு மாறாக வேர்சுவல் மெசீன் எ‎ன்பது ஒரு மாயக் கணினி. இதன்‎ மூலம் ஒன்றுக்கு மேற்பட்ட இயங்கு தளங்களை ஒரே கணினியில் நிறுவி ஒரே நேரத்தில் ஒ‎ன்றுக்கு மேற்பட்ட இயங்கு தளங்களில் நம்மால் பணியாற்ற முடிகிறது. அதாவது உங்கள் கணினி முதலில், பிரதான இயங்கு தளத்தை பூட் செய்யும்.. பி‎ன்னர் அத‎ன்‎ மீது ஏனைய இயங்கு தளங்கள் பூட் செய்யப்படும். இவை சாதாரண ஒரு பய‎‎ன்பாட்டு மென்பொருள் போல் இயங்கும்.

ஆங்லகிலத்தில் வேர்ச்சுவல் எனும் வார்த்தை இல்லாத ஒன்றை இருப்பதாகக் கருவதைக் குறிக்கும். அதேபோல் இ‎ங்கு வேர்ச்சுவல் மெசீன் என்பது நிஜமான கணினியல்ல. அது நிஜம் போல் இயங்கும் ஒரு கற்பனைக் கணினியே.

வேர்ச்சுவல் கணினி என்‎பது ஒரு போலியன ஹாட்வெயர் சாதனங்களையும் போலியான ஹாட்டிஸ்கையும் கொண்ட நிஜமல்லாத ஒரு கற்பனைக் கணினி. வேர்ச்சுவல் கணினியில் நிறுவப்படும் இயங்கு தளங்கள் நிஜமாகவே உங்கள் ஹார்ட் வெயர் சாதனத்தில் இயங்குவதில்லை. ஒரு மெ‎‎ன்பொருளே இங்கு ஹாட்வெயர் சாதனம் போ‎‎ன்று இயங்குகிறது. வேர்ச்சுவல் கணினியில் ஒரு இயங்கு தளத்தை நிறுவும் போது, அந்த இயங்கு தளம் உங்கள் கணினியின் ஹாட் வெயர் சாதனங்களோடு தொடர்பாட முயற்சிக்கும். இவ்வேளைIல் கணினியில் நிறுவியுள்ள வேர்ச்சுவல் கணினி மெ‎ன்‎பொருள், இயங்கு தளம் கேட்கும் கேள்விக்கு நிஜமான ஹாட் வெயர் சாதனம் எவ்வாறு பதிலளிக்குமோ அதே போ‎ன்றே பதிலளிக்கும்.

உதாரணமாக வேர்சுவல் கணினி மெ‎ன்பொருள் , உங்கள் கணினி Intel சிப்செட் கொண்ட மதர்போர்டை வைத்திருப்பதாக உணர்த்திவிட்டால், நிஜமாக உங்கள் கணினி மதர்போர்டில் எந்த வகையான சிப்செட் இருந்தாலும் வேர்ச்சுவல் கணினியில் உள்ள இயங்கு தளம் Intel சிப்செட் கொண்ட மதர்போர்டிலேயே தா‎ன் இயங்குவதாகக் கருதும்.

வேர்ச்சுவல் மெசீன் என்பதற்கு மறைந்த பிரபல எழுத்தாளர் சுஜாதா சொல்லலியிருந்த ஒரு உதாரணத்தை இங்கு தரலாமென என நினைக்கிறே‎ன். உங்களுக்கு ஏதோ ஒரு பொருள் தேவைப்படுBறது. அதனைக் கொண்டுவர உங்கள் வேலையாளிடம் பணி‎க்கிறீர்கள். வேலையாளும் அதை வீட்டிலிருந்தோ, வெளியிலிருந்தோ அல்லது கடைத்தெருவிருந்தோ வாங்கி வந்து உங்கள் மு‎ன்‎னே நீட்டுகிறா‎ர். அதனை எங்கிருந்து கொண்டு வரவேண்டும் என நீங்கல் அவரிடம் சொ‎ல்லவில்லை. உங்கள் தேவை நிறைவடைந்தால் போதும். இவ்வாறே வேர்ச்சுவல் கணினியும் தனக்குத் தேவையானதை கொடுத்துவிட்டால் அல்லது காட்டி விட்டால் அது எங்கிருந்து கிடைக்கப் பெற்றது எனப் பார்பதில்லை.

வேர்ச்சுவல் கணினியானது நம்முட‎ன் தொடர்பாட உள்ளிடும் மற்றும் வெளியிடும் டேட்டாவை அல்லது‎ தகவலை நிஜக் கணினியின் கீபோட், மவுஸ், மொனிட்டர் எ‎ன்பவற்றகற்கே கடத்துகிறது. அவ்வாறே நிஜக் கணினியில் ஒரு யூஎஸ்பீ மவுஸ் பொறுத்தியுள்ளதாக வைத்துக் கொள்வோம். ஆனால் வேர்ச்சுவல் மெசீனில் ஒரு பீஎஸ் 2 மவுஸே பொறுத்தியுள்ளதாக உணர்தப்பட்டுள்ளது. எனினும் யூஎஸ்பீ மவுஸை நாம் நகர்த்த வேர்சுவல் மெசீனில் பிஎஸ் 2 மவுஸை நகர்த்தப்படு வதாகக் காட்டப்படும்.

அவ்வாறே வேர்ச்சுவல் கணினில் நிஜ ஹாட் டிஸ்கிற்குப் பதிலாக வேர்ச்சுவல் ஹாட் டிஸ்கே பய‎ன்‎ படுத்தப்படுBறது. வேர்ச்சுவல் ஹாட் டிஸ்க் எ‎ன்பது உண்மை யில் நிஜக் கணினியில் சாதாரன ஒரு பைலையே குறிக்கிறது. வேர்சுவல் கணினி மெ‎‎ன்பொருள், வேர்ச்சுவல் கணினிக்கு அதனை ஒரு நிஜ ஹாட் டிஸ்காகக் காட்டிவிடுகிறது. வேர்ச்சுவல் ஹாட் டிஸ்கை பாட்டிஸன் செய்யவும் போமட் செய்யவும் கூட முடியும். எனினும் இந்த செயற்பாடுகளை வேர்ச்சுவல் கணினியிலிருந்தே செயற்படுத்த முடியும். நிஜக் கணினியில் இந்த ஹாட் டிஸ்க் எ‎ன்‎பது ஒரு வழமையான பைல் மாத்திரமே.

வேர்ச்சுவல் கணினியை உருவாக்குவதற்கு முதலில் வேர்ச்சுவல் பீசீ மெ‎ன்‎பொ ருளைக் கணினியில் நிறுவ வேண்டும். பி‎ன்னர் வேர்ச்சுவல் கணினி, வேர்ச்சுவல் டிஸ்க் என்பவற்றை உருவாக்கி அவற்றில் இயங்கு தளங்களை நிறுவிக் கொள்ளலாம்.

வேர்சுவல் பீசீ 2007 எ‎‎ன்‎பது மைக்ரோஸொப்ட் நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ள ஒரு மெ‎‎ன்பொருள். விண்டோஸ் எக்ஸ்பீ மற்றும் விஸ்டா பதிப்புகளில் நிறுவத்தக்க வகையில் இது உருவாக்கப்பட் டுள்ளது. இம்மெ‎‎ன்பொருளைக் கணினியில் நிறுவிக் கொண்டால் எம்.எஸ்.டொஸ் உட்பட விண்டோU‎ஸின் எப்பதிப்பையும் வேர்ச்சுவல் கணினியில் நிறுவிக் கொள்ளலாம். மைக்ரோஸொப்ட் தயாரிப்பல்லாத லினக்ஸ் போ‎ன்ற வேறு இயங்கு தளங்களையும் கூட நிறுவலாம்.

ஒரு இயங்குதளத்தை கணினியில் நிறுவும் போது பயோஸ் விவரங்களை வாசித்தறிதல், பிரதான நினைவகம்‎ மற்றும் வீ.ஜீ.ஏ நினைவகம் என் பவற்றின் அளவினைப் பரிசோதித்தல், ஹாட் டிஸ்கைக் கண்டறிதல், அவ்வாறே நிறுவிக் கொண்டிருக்கும்போது ஹாட் டிஸ்கை போமட் செய்தல், சிஸ்டம் பைல் பிரதி செய்தல், ரீஸ்டார்ட் செய்தல், கணினி வன்‎பொருள்களுக்கான ட்ரைவர் மென் பொருளை நிறுவுதல் போ‎ன்ற பல செயற்பாடுகளைக் கொண்டிருக்கும். மேற் சொ‎ன்ன அத்தனை செயற்பாடுகளும் வேர்ச்சுவல் கணினியிலும் ஒரு இயங்கு தளத்தை நிறுவும் போது நடைபெறுகிறது. இவை அத்தனையும் ஒரு விண்டோவுக் குள்ளேயே நடைபெறுவது ஒரு புதுமையான அனுபவம்.

இந்த வேர்சுவல் பீசீ மெ‎ன்‎பொருளை மைக்ரொஸொப்ட் இணைய தளத்திலிருந்து இல‎வசமாக டவு‎ன்லோட் செய்து கொள்ளலாம். இதன் பைல் அளவு 32 MB. வேர்சுவல் கணினியை உருவாக்க உங்கள் கணினியில் குறைந்த பட்சம் 512 MB அளவாவது நினைவகம் இருத்தல் அவசியம்.




Monday, December 23, 2013

உங்கள் ஞாபக சக்தியை அதிகரிக்க







  • இத்தனை தொடர் மூலம் எளிமையான அக்குபிரஷர் பயிற்சிகளை நீங்கள் தெரிந்து கொண்டிருப்பீர்கள். அவற்றில் பலவற்றை முயற்சி செய்து  பார்த்திருப்பீர்கள். அந்தப் பயிற்சிகள் தந்த அற்புத நிவாரணத்தை பலர் அனுபவித்து இருப்பீர்கள். ‘இதுக்கெல்லாம் நமக்குப் பொறுமை இல்லைப்பா’  என்று சிலர் தொடராமலும் விட்டிருப்பீர்கள். ஆனால், உங்களை ஒருபோதும் அக்கு மருத்துவம் விடப் போவதில்லை. காரணம், இந்தத் தொடருக்கு  முன்பே நீங்கள் அக்குபிரஷர் மருத்துவத்தைக் கடைப்பிடித்து வந்தவர்தான்.



  • என்ன... குழப்பமாக இருக்கிறதா? காலை எழுகிறீர்கள்... கைகளையும் கால்களையும் நீட்டி, உடலை அசைத்து சோம்பல் முறிக்கிறீர்களே... அது  எதற்கென்று தெரிந்தா செய்கிறீர்கள்? உடல் அனிச்சையாக அதைச் செய்கிறது. அதன் மூலம் ஒரு உற்சாகத்தையும் அது அடைந்து விடுகிறது. எந்த  வித ஊக்க மருந்தையும் எடுத்துக் கொள்ளாமல், நம் உடல் தானே முயன்று ஒரு உற்சாகத்தைப் பெற முடியுமென்றால், நோய்களுக்கான சிகிச்சையை  மட்டும் ஏன் பெற முடியாது? இந்தக் கேள்வியில்தான் எழுகிறது அக்கு மருத்துவத்துக்கான அஸ்திவாரம்.


  • மனிதன் என்ன காரணங்களுக்காக தலையைச் சொறிகிறான்? பேன் தொல்லையால் மட்டும்தானா சொறிகிறான்? கேட்ட கேள்விக்கு பதில் தெரியாமல்  தலையைச் சொறிந்து நிற்கும் மாணவர்களைப் பார்த்திருக்கிறீர்கள்தானே? பதில் தெரியாததற்கும் தலையை சொறிவதற்கும் என்ன சம்பந்தம்?  தலையைச் சொறிந்தால் மறந்து போன ஒன்று நினைவுக்கு வர வாய்ப்பிருக்கிறதா? நிச்சயம் இருக்கிறது. நம் உடல் செய்யும் எந்த ஒரு அனிச்சை  செயலுக்கும் அர்த்தம் இல்லாமல் இல்லை.


  • விரல்களில் அடிக்கடி சொடுக்கு எடுக்கிறோமே அது ஏன்? கடும் வேலைக்குப் பிறகு உடல் அசதியை நொடிகளில் போக்கி உற்சாகத்தை வரவழைக்கும்  அந்த அக்கு சிகிச்சையை நமக்கு சொல்லித் தந்தது யார்? நாடியில் விரல் வைத்து யோசிக்கிறோம்... கோபத்தை அடக்கும்போது பல்லைக்  கடிக்கிறோம்... இதெல்லாம் எதற்காக? ஒரு பதற்றம், எதிர்பார்ப்பு, சஸ்பென்ஸ் என்றால் கையைப் பிசைந்து குறுக்கும் நெடுக்கும் அலைவது  நமக்கெல்லாம் இயல்பு. அந்தச் செயல் நமக்குள் ‘எண்டார்ஃபின்’ என்ற பொருளைச் சுரக்கச் செய்து, ஆசுவாசப்படுத்துகிறது என்பது தெரியுமா?


  • அதேபோலத்தான் கை தட்டுவதும். மகிழ்ச்சியின்போதும் மற்றவர்களைப் பாராட்டவும்தான் நாம் கை தட்டுவதாக நீங்கள் நினைத்துக்  கொண்டிருக்கலாம். கைதட்டலின்போது உள்ளுறுப்புகளில் ஏற்படும் மாற்றங்களின் விளைவாக, ‘அசிட்டைல் கொலைன்’ என்கிற சுரப்பு சுரந்து,  உடலையும் மனதையும் ஒருசேர உற்சாகப்படுத்துகிறது. இந்த உண்மை தெரியாமலே அதைச் செய்து கொண்டிருக்கிறோம் நாம். சிரிப்பு சிகிச்சை, இசை  சிகிச்சை போல டெல்லியில் ஒரு சாது, தனது பக்தர்களை கை தட்ட வைத்தே கவலைகளைப் போக்குகிறாராம். இப்படி நம்மைச் சுற்றிலும் நாம்  அறியாமலே அக்கு சிகிச்சை நிறைந்திருக்கிறது.


  • இந்த அனிச்சை செயல்கள் தவிர, நம் முன்னோர்கள் சம்பிரதாயமாகச் சொல்லி வைத்த சில மருத்துவ முறைகளும் உள்ளன. காது குத்துவது என்பது  நம் அறிவுத் திறனை வளர்க்கும் விஷயம். எனவேதான் பொய் சொல்கிறவரைப் பார்த்து, ‘எனக்கு ஏற்கனவே காது குத்தியாச்சு’ என்கிறோம். சாமி  சிலையைப் பார்த்தால் கன்னத்தில் போட்டுக்கொள்கிறோம். பிறந்த குழந்தைக்கு மூன்று முறை முடி எடுப்பது ஆரோக்கியம் என்று நம்புகிறோம்.  இன்னும் கம்மல், வளையல், கொலுசு போன்ற அணிகலன்களின் அக்கு பலன்கள் பற்றி நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம். 


  • பொதுவாகவே நம் ஊரில் ஒரு மனப்பான்மை இருக்கிறது, விலை உயர்ந்ததுதான் சிறந்தது என்று. சொத்தை எழுதிக் கேட்கும் மருத்துவ  சிகிச்சைகளுக்கு மத்தியில், செலவே இல்லாத அக்கு மருத்துவம் செல்வாக்கு குன்றியிருப்பது இதனால்தான். ஆனால், இன்று மாற்று மருத்துவத்தை  மக்கள் நம்பத் துவங்கியிருக்கிறார்கள். உலகம் முழுக்க அக்கு மருத்துவத்துக்கு செல்வாக்கு உயர்ந்திருக்கிறது. 


  • ஆஸ்திரேலியாவில் மட்டும் அக்கு மருத்துவத்துக்கென 17 பல்கலைக்கழகங்கள் இயங்குகின்றன. இந்தியாவிலும் அக்கு மருத்துவத்தின் பலன்  எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே என்னைப் போன்றவர்களின் விருப்பம். பள்ளிக்கூடப் பாடத்திட்டத்திலேயே இதைக் கொண்டு வர அரசு  நடவடிக்கை எடுத்தால் இது சாத்தியமாகலாம். அது நடக்க காலங்கள் ஆகலாம். அதுவரை, உங்களுக்கு நீங்களே டாக்டர். உச்சிமுதல் உள்ளங்கால்  வரை ஒவ்வொரு பிரச்னைக்குமான அக்குபிரஷர் தீர்வுகளை இந்த தொடர் முழுக்கப் படித்திருக்கிறீர்கள். அதை வைத்தே உங்களுக்கு மட்டுமல்ல,  உங்களின் சுற்றத்தார்களுக்கும் இந்த அதிசய அக்குபிரஷரை அப்ளை பண்ணி ஆரோக்கியமாக வாழுங்கள். ஆல் தி பெஸ்ட்!

இன்னும் இதை பற்றி விரிவாக பார்க்க உடனே விரையுங்கள் தினகரன்

உங்கள் வலைபூவை பிரபலப்படுத்த, தொழில்நுட்ப டிப்ஸ் – SEO Tips. Buzz this


seo உங்கள் வலைபூவை பிரபலப்படுத்த, அனைவரும் பார்க்கும் வண்ணம் கிடைக்க செய்ய நிறைய தொழில்நுட்ப வழிகள் உள்ளன, கீழே நான் கூறி இருக்கும் வழிகளை பின்பற்றீனால், உங்கள் வலைபூவை மேலும் பிரபலப்படுத்தலாம்,
1. Search Engine Optimization or SEO என்பது பற்றி உங்களுக்கு தெரிந்து இருக்கலாம். அதாவது உங்கள் வலைபூவை தமிழிஸ், தமிழ்மணம் போண்ற இணையதளங்களில் சேர்த்தால் மட்டும், அனைவருக்கும் காண கிடைத்துவிடாது. அது தவிர Google,Yahoo மற்றும் Bing போண்ற பெரிய Search Engine –களிலும், உங்கள் வலைதளத்தை இணைக்க வேண்டும். அப்படி இணைத்தால் தான் நிறைய பேர், Keyword கொண்டு இத்தளத்தில் தேடும் போது, உங்கள் தளம் கண்ணில் சிக்கும்.
இதில் நிறைய தொழில்நுட்ப விஷயங்கள் இருக்கின்றன, ஆனால் அனைத்துமே எளிதானதுதான், இப்போது நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் வலைபூவின் பக்கத்தை, Google,Yahoo மற்றும் Bing  போண்ற இணையத்தில் இணைக்க வேண்டும். இதனால் உங்கள் வலைபூவின் பார்வையாளர்கள் பலமடங்கு உயருவார்கள்.
முதலில் Google Webmaster Tools –ல் உங்கள் வலைபூவை இணைப்பதை பற்றி பார்ப்போம்…
  • Google Web Master Tools –எனும் தளத்திற்கு செல்லுங்கள்.
  • இதில் உங்களுடைய Google Account-யை வைத்து, பதிவு செய்து கொள்ளுங்கள்,
  • உள்ளே சென்றீர்கள் என்றால் Add a site எனும் Option இருக்கும் அதில் உங்கள் வலைபூவின் பெயரை கொடுத்து Cotinue கொடுங்கள்,add site
  •   உங்கள் வலைபூவின் பெயரை கொடுத்த பிறகு, உங்கள் வலைபூவை Verify பண்ண சொல்லி கேட்கும்
  •   இதற்கு இரண்டு வழிகள் உள்ளன.
  • ஒன்று File Upload Method – இதற்கு நீங்கள் ஒன்றுமே செய்ய வேண்டாம், இந்த Option –யை மட்டும் கொடுத்து விடுங்கள்,   Google தானாக File-யை உங்கள் தளத்தில் Upload செய்துவிடும்,
  •   இரண்டு - Meta Tag Verification method இந்த முறையானது, கீழே காட்டப்பட்டுள்ள கோடிங்கை, Copy செய்து உங்கள் வலைபூவில் Edit HTML சென்று இணைக்க வேண்டும்,
<meta name="google-site-verification" content="verificationkey" />



  • இந்த கோடிங்கை இணைக்க Layout >Edit HTML செல்லவும்,


  • </head> எனும் Tag-யை Ctrl+F கொடுத்து தேடவும்,


  • கிடைத்தவுடன் இந்த </head> Tag-ற்கு மேல் அந்த கோடிங்கை இணைக்கவும்.


  • இதை செய்த பிறகு, உங்கள் Google Webmaster Tools தளத்திற்கு செல்லவும்,


  • அதில் Site Configuration > Sitemap –க்கு செல்லவும்,

sitemap


  • இதில் கீழே உள்ள கோடிங்கை கொடுத்து Submit கொடுக்கவும்,

atom.xml?redirect=flase&max-results=100




உங்கள் வலைபூவானது 100-க்கும் அதிக பதிவுகளை கொண்டு இருந்தால் கீழே உள்ள கோடிங்கை, பயன்படுத்தவும்.

atom.xml?redirect=false&start-index=101&max-results=100

200 – பதிவுக்கும் அதிகமாக இருந்தால்,

atom.xml?redirect=false&start-index=201&max-results=100

300 – பதிவுக்கும் அதிகமாக இருந்தால்,

atom.xml?redirect=false&start-index=301&max-results=100


2. Adding Meta Tag – என்பது உங்கள் வலைபூவிற்கு முக்கியமான ஒன்றாகும், எப்படியெனில் உங்கள் வலைபூவானது தொழில்நுட்பம் சார்ந்ததெனில் (அ) வேறு ஏதாவது குறிபிட்ட Content-யை பற்றியது எனில், உதாரணமாக, தேடுபவர்கள் Google-யில் “தொழில்நுட்பம்” என Type செய்து தேடுகிறார்கள் எனில், நீங்கள் Meta Tag தொழில்நுட்பம் சார்ந்த Keyword கொடுத்துள்ளீர்கள் எனில், அது உங்கள் வலைதளத்தை, முதலில் காட்டும்.

pulimagan


  • உதரணமாக, என்னுடைய pulimagan.com –யை Pulimagan என்றோ (அ) வேறு (நான் கொடுத்து வைத்துள்ள Keyword-யை) உபயோகித்து தேடும் போது, எனது வலைதளம் தான் முதலில் வந்து நிற்கும். இது போல கொண்டுவர செய்ய வேண்டியது,


  • கீழே உள்ள கோடிங்கை காப்பி செய்து கொள்ளவும்,


<b:if cond='data:blog.url == data:blog.homepageUrl'>
<meta content="Your keywords separated by commas"
name="keywords"/>
<meta content="Your Site Description" name="description"/>
</b:if>



  • Your keywords separated by commas – ல் உங்கள் வலைபூ பற்றிய Keyword –களை, கமா கொடுத்து டைப் செய்யவும், தமிழிலே கொடுக்கலாம், ஆனா ரொம்ப கொடுக்காதீங்க,

  • Your Site Description – என்ற இடத்தில் எழுதிக்கொள்ளுங்கள், ஆனால் இரண்டு வரிக்கு மேல் வேண்டாம்.


  • description - 150 characters மட்டுமே இருக்க வேண்டும்,


  • keyword - 200 characters இதனை Count செய்ய Character count tool இத் தளத்திற்கு செல்லவும்,


  • பின்னர் பழைய கதை போலவே, Layout >Edit HTML சென்று,Ctrl+F கொடுத்து, கீழே உள்ள கோடை தேடவும்,

<title><data:blog.pageTitle/></title>



  • இதன் பின்னர் அந்த கோடிங்கை இணைத்து விடவும்.


  • உங்கள் வலைபூவை பிரபலமாக்க இவை போதும். உங்கள் வலைபூவின் பக்கத்தை Google-காட்ட கொஞ்சம் நேரம் எடுத்துக் கொள்ளும். 24 மணி நேரம் கழித்து, Google-யில் Search செய்து பாருங்கள். உங்கள் வலைபூதான் முதலில் இருக்கும்.

Blogger Tips and TricksLatest Tips For BloggersBlogger Tricks

சொயற்படுத்துங்கள்

Blog Archive

Total Pageviews