தகவல் தொழில்நுட்ப முதல் தமிழ் வலைத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

Friday, July 12, 2013

Ubuntu tamil manual



Ubuntu பற்றி அறிய விருப்பம் உடயவர்களுக்கு மிகசிறந்த ஒரு மின்புத்தகம் இதுவாகும். இதில் Ubuntuபற்றிய உதவிக்குறிப்புக்கள், வரலாறு, எவ்வாறு பதிவிறக்கம் செய்வது நிறுவுவது என்பது பற்றிய தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.
http://www.ubuntu-manual.org என்ற இணையதளம் ஊடாக பிந்திய பதிப்பின் Manual இனை பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கம்.
Ubuntu 10.04 manual link

Tuesday, July 9, 2013

பிரதான கணனி நினைவகம் - 1


கணனி நினைவகம் என்னும் போது எமக்கு நினைவில் வருவது Hard Disk, CD, DVD போன்ற துனை நினைவங்கள் ஆகும். எனினும் கணனியில் பலதரப்பட்ட நினைவகங்கள் பயன்பாட்டில் உள்ளன
1. நிலையற்ற நினைவகம் (Volatile Memory)
மேலே கூறப்பட்ட துனை நினைவகங்கள் மின் இணைப்பு தூண்டிக்கப்படும்போதும் அதில் உள்ள தரவுகள் அழிவுற மாட்டாது இவை நிலையான நினைவகங்கள் ஆகும்(Non Volatile Memory).  நிலையற்ற நினைவகங்களில் மின் இணைப்பு தூண்டிக்கப்படும்போதும் அதில் உள்ள தரவுகள் அழிந்து விடும் இவ்வாறான நினைவகங்கள் நிலையற்ற நினைவகங்கள்(Volatile Memory) என அழைப்பர். கீழ்கானும் நினைவகங்கள் இவ்வகையினை சேரும்
1. எழுமாறு அணுகல் நினைவகம் (Random Access Memory - RAM)
2. பதிவகங்கள் ( Register)
3. பதுக்கு நினைவகம் ( Cash memory)


எழுமாறு அணுகல் நினைவகம் (Random Access Memory - RAM)
இவ் நினைவகத்தினை கணினியின் பிரதான நினைவகம்(Main memory) என அழைப்பர்.  கணினியின் மத்திய செயற்பாட்டு அலகிற்கு(Central Processing Unit – CPU) எதாவது ஒரு செயற்பாட்டை செய்வதற்கு தேவையான தரவுகளை அதாவது முறமை மென்பொருள், பிரையோக மென்பொருள், மற்றும் ஏனைய தரவுகளை களஞ்சியப்படுத்தி வைப்பது இவ் நினைவகம் ஆகும். இதன் சிறப்பம்சம் என்னவென்றால் செயற்பாட்டு அலகிற்கு இதில் உள்ளவகைகளை நேரடியாக பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பு உள்ளமயாகும். இதன் பிரவேச காலம் மிகக்குறைவு ஆகையாள் செயற்பாடுகளை மிகவும் வேகமாக செய்ய முடியும்.
இன் நினைவகத்தின் எதாவது ஒரு இடத்தில் இருந்து தரவுகளை CPUபெற்றுக்கெள்வதனால் இதற்கு ஒரு ஒழுங்குமுறையொன்று தேவையில்லை. இதனால் இன்னினைவகத்ததை எழுமாறு அணுகல் நினைவகம் என அழைப்பர்.
இவ் எழுமாறு அணுகல் நினைவகங்கள் இருவகைப்படும்
1. இயக்கவியல் எழுமாறு அணுகல் நினைவகம் (DRAM)
2. நியைியல் எழுமாறு அணுகல் நினைவகம் (SRAM)
இயக்கவியல் எழுமாறு அணுகல் நினைவகம் (DRAM)
நவீன கணினியில் காணப்படும் நினைவக வகை அசைவு எழுமாறு அனுகல் நினைவகம் ஆகும்.( Eg DDR1, DDR2, DDR3 போன்றன – Dynamic Data RAM) இவ் நினைவக கலன்களில் வைக்கப்பட்டு இருக்கும் தரவுகள் செக்கனுக்கு மில்லியன் அளவு மின்துடிப்புக்களை அனுப்பி மீண்டும் மீண்டும் புத்துனர்வூட்டும்.


 Dynamic Data RAM
நியைியல் எழுமாறு அணுகல் நினைவகம் (SRAM)
இவ் நினைவக கலன்களில் வைக்கப்பட்டு இருக்கும் தரவுகள் அடிக்கடி புத்துனர்வு ஊட்டப்படமாட்டாது. இதனால் இதில் உள்ள தரவுகள் மேல் இன்னும்மொரு தரவு எழுதப்படும்வரை அல்லது மின் இணைப்பு தூண்டிக்கப்படும்வரை தரவகள் நிலையாக இருக்கும். அத்துடன் இவ் நினைவக சிப்கள் மெல்லியனவாகவும், அசைவு எழுமாறு அனுகல் நினைவகத்தின விட வேகம் குறைவானதாகவும் காணப்பட்டது.

Statics Data RAM

Tuesday, July 2, 2013

பிரதான கணனி நினைவகம் - 2

பதிவகங்கள்(Register)

பதிவகங்கள் என்பது மிகச்சிறிய கொள்ளளவைக் கொண்ட நினைவகம் ஆகும். நினைவக வேகப் படி நிலையில் உயர்நிலையில் இருப்பது இதுவாகும்.


பதுக்கு நினைவகம்(Cash Memory)

கணினி செயற்பாடு சம்மந்தமான காலத்தினை கணிப்பிடுவது மிகச்சிறிய அலகினால் ஆகும்.  கணினி செயலி (Processor ) பிரதான நினைவகத்தினை அனுக எடுக்கும் நேரம் பொதுவாக வினாடியின் மில்லியனின் 60 ஒரு பங்காகும். அதாவது நனோ செக்கன் 60 ஆகும்.ஆனாலும் செயலியின் செயற்பாட்டில் ஒரு சுற்றுக்காக எடுக்கும் நேரம் நனோ செக்கன் 2 ஆகும். இதன் படி செயலிக்கு நனோ செக்கன் 60 என்பது மிகப்பெரிய காலமாகும்.
இதன்படி கணினி செயலி தரவுகளை பிரதான நினைவகத்தில் இருந்து அனுகிக் கொள்வதற்கு அதிகநேரம் செலவிடப்படும் விடயமானபடியால் பிரதான நினைவகத்தினை விடக்கொள்ளளவு குறைந்து இருப்பினும் வேகமாக அனுகக்கூடிய செயலிக்கு மிக நெருக்கமாக இருக்க கூடிய நினைவக வகையே பதுக்கு நினைவகங்கள் ஆகும்.
இதில் பெரும்பாலும் செயலியினால் அடிக்கடி பயன்படுத்தப்படும் பிரதான நினைவகத்தினுல் உள்ள தரவுகளின் பிரதியாகும். செயலி பிரதான நினைவகத்தில் ஓர் இடத்தில் உள்ளவற்றை வாசிக்க அல்லது அதில் எழுதுவதற்கு தேவைப்பட்டால் செயலி முதலாவதாக பதுக்கு நினைவகத்தில் அதற்குரிய பிரதி உள்ளதா என்பதை பரிச்சித்து பார்க்கும். அதற்குரிய பிரதி இருந்தால் உடனடியாக செயலி பெற்றுக்கொள்ளும்.
நவீன தனிநபர் கணினிகளில் பதுக்கு நினைவக மட்டங்கள் மூன்று உள்ளன. முதல்மட்டம் L1  பதுக்கு நினைவகம் இது மிகவும் வேகமானதுடன் செயலியின் உள்ளேயே அமைந்துள்ளது. இதனால் இது தாய்பலகையின் தரவு மார்கத்தினை பயன்படுத்த மாட்டாது என்பதனால் தரவு அனுகும் வேகம் உயர்வானது. இரண்டாம் மட்டம் L2 , மூன்றாம் மட்டம் L3  என்பன தாய்பலகையில் அமைந்து காணப்படும் . இதனால் இது தாய்பலகையின் தரவு மார்கத்தினை பயன்படுத்துவதினால் இதன் வேகம் சற்று குறைவானதாக காணப்படும்.



Sunday, June 30, 2013

FAT32 to NTFS

Hard disk  அல்லது flash drive இன் file format ஆனது FAT32 ஆக காணப்பட்டால் நாம் சேமித்து வைத்திருக்கும் தரவுகளை அழிக்காமலும் அல்லது வேறு இடத்துக்கு copy செய்யாமலும் இலகுவாக file format இனை மாற்ற முடியும்.


முதலில் நாம் command line prompt க்கு மாறி ( accessories -> command prompt) 
convert/? என்ற command இனை பயன்படித்தி syntax சரி பார்த்துக்கொள்ளவும்

பின்னர் convert E:/FS:NTFS என்ற command இனை பயன்படித்தி தேவையான drive இனை(இங்கு E drive ) இலகுவாக NTFS ஆக மாற்ற முடியும்.

Tuesday, June 25, 2013

Astrology Software

ஜாதகம், பொருத்தம் பாப்தற்கான மென்பொருட்கள்

நாம் எமது குடும்ப உறுப்பினரது ஜதகத்தினை கணிப்பதற்க்கும் ஜாதக பொருத்தம் பாப்பதற்க்கும் சாஸ்திரம் பார்க்க கூடியவர்களை நாடுவது மிகுந்த சிரமான ஒன்றாகும். மிகவும் இலகுவான முறையில் நாமாகவேஜதகத்தினை கணிப்பதற்க்கும் ஜாதக பொருத்தம் பாப்பதற்க்கும் மிக சிறந்த மென்பொருட்கள்.


இதனை install செய்யாவேண்டிய அவசியம் இல்லை. astro.rar file இனை download செய்து winrarமென்பொருளை பயன்படுத்தி extract செய்யவும். extract செய்த folder இல் காணப்படும் DAYANA.TFT என்றfont இனை install செய்யவும். பின்னர் extract செய்யப்பட்ட அதே Folder இனுல் காணப்படும்  PREDICTT.exeஎன்பதை double click செய்ய குறித்த மென்பொருளினை இயக்க முடியும்.

 
இதுவும் astro வை போல் Portable software ஆகும். இதனை download செய்து நேரடியாக extract செய்து பயன்படுத்த முடியும். 

Saturday, June 22, 2013

Artisteer 2

Web templates Designing Software 
Artisteer எனப்படும் web templates designing software ஊடாக CMS (content Management System) application கலான Joomla, wordpress, drupal போன்றவற்றுடன் blogger க்கான templates இனையும்design செய்து கொள்ள முடியும். 

இதன் மூலம் நீங்கலும் இலகுவாக சாதாரன application software இனை பயன்படுத்தும் அறிவுடன் web templates designer ஆக மாற முடியும்.
 just click this ling (Software + Key gun)  

Thursday, June 20, 2013

Moodle பற்றிய அறிமுகம்



Modle (Modular Object-Oriented Dynamic Learning Environment) என்பது ஒரு இலவச இணைய வழி கற்றல் தொகுதியாகும். Martin Dougiamas என்பவர் தனது கலாநிதி பட்ட ஆய்வாக இதனை தொடங்கிவைத்தார். இலங்கையினை சேர்ந்த ஆசிரியர்களும் மாணவர்களும் இதனை பயன்படுத்துவதற்க்கு  http://moodle.schoolnet.lk  என்ற இணைய முகவரி ஊடாக இதனை பயன்படுத்த முடியும். 




schoolnet Moodle அங்கத்தவர் ஆவதற்க்கு schoolnet webmail இல் உங்களுக்கான E-Mail(username@yourschooldomain.sch.lk) உருவாக்கப்பட்டு இருத்தல் வேண்டு்.இதனைschoolnet lab administrator page இன் ஊடாகவே உருவாக்க முடியும்.

Moodle பற்றிய மேலும் அறிமுகத்தினை பெறுவதற்கு

Monday, June 17, 2013

Portable Image Converter

உங்களிடம் உள்ள படங்களை இணையத்தில் Upload செய்வதற்கு முன்னர் இப்படங்களை Compressசெய்வதற்காக பல மென்பொருட்களை பயன்படுத்தி இருப்பீர்கள், இதன்போது ஒவ்வருபடமாக Compressசெய்து Upload செய்து இருப்பீர்கள்.
உங்களிடம் உள்ள அனைத்து படங்களையும் ஒரே முறையில் ஒரே அளவாக Compress செய்வதற்கு மிக சிறந்த இலகுவான ஒரு Portable Software.
Image Converter என்னும் இம் மென்பொருளின் ஊடாக குறிப்பிட்ட Folder உள்ள அனைத்து படங்களையும் ஒரேமுறையில் அதன் Quality மாறாமல் இலகுவாக Compress செய்ய முடியும்.

  
Absolute என்றபகுதியின் ஊடாக உமக்கு தேவையான நீள அகலத்தினையும் Format என்றபகுதியின் ஊடாக உமக்கு தேவையானபட Format இனையும் Quality இனையும் தெரிவு செய்து Process இனை தெரிவு செய்து குறிப்பிட் Folder உள்ள அனைத்து படங்களையும் இலகுவாக மாற்றமுடியும்.
download Ling

Net work of computer

கணினிகளுக்கு இடையிலான வலையமைப்பு என்பது ஒரு கணினியை ஏனைய கணினிகளோடு பல் பயன் பெறும் நோக்குடன் வலைப்பின்னல் அமைப்பின் ஊடு இணைத்துக்கொள்ளும் செயற்பாடு கணினி வலையமைப்பு ஆகும். இது 3 வகைப்படும்.
  • LAN – Local Area Net work
  • MAN – Metropolitan Area Net work
  • WAN – Wide Area Net work
 LAN:

இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட கணினிகளை இணைப்பதன் மூலம் குறிப்பிட்ட புவியியல் எல்லைக்குள் அதாவது குறிப்பிட்ட அறை அல்லது அலுவலகங்களில் மேற்கொள்ளப்படும் வலைப்பின்னல். இங்கு புவியியல் எல்லை வரையறை செய்யப்பட்டுள்ளது. 
Eg :  பாடசாலை கணனி ஆய்வு கூட வலையமைப்பு

MAN

நிறுவனங்களுக்கு இடையிலான அல்லது தலைமை நிறுவனத்துக்கும் அதன் கிளை நிறுவனத்துக்கும் இடையிலான வலையமைப்பு இதுவாகும். இது பல LAN களைக்கொண்டிருக்கும்.
Eg: வங்கிகளுக்கு இடையிலான வலையமைப்பு

WAN
நகரங்களுக்கு இடையிலான அல்லது நாடுகளுக்கு இடையிலான  வலையமைப்பு இதுவாகும். இங்கு புவியியல் எல்லை வரையறை செய்யப்படமாட்டாது. இது பல LAN, WAN களைக் கொண்டிருக்கும். 


வலையமைப்பின் நன்மைகள்

  • தகவல்களையும், தரவுகளையும் மிக விரைவாக கணினிகளுக்கு இடையில் பரிமாறலாம்;
  • ஒரே நேரத்தில் பலர் ஒன்றாக இணைந்து வேலை செய்யக் கூடிய வசதி.
  • ஒரு கணினியில் உள்ள மென்பொருட்கள், தகவல்களை மற்றய கணினிகளில் பயன்படுத்தக்கூடிய வசதி.
  • Printer,Scanner போன்ற peripheral device களை ஏனைய கணினிகளோடு பகிர கூடிய வசதி.
வலையமைப்பின் தீமைகள்:
  • செலவு அதிகம்.
  • கணினிகளை பாதுகாப்பது,பராமரிப்பது கடினம்.
  • வலையமைப்பில் ஏற்படும் பாதிப்பானது குறித்த நிறுவனத்தின் அனைத்து செயற்பாடுகளையும் பாதிப்படைய செய்யும்.
வலைப்பின்னல் ஏற்படுத்த தேவையான கருவிகள்:

  • sever, Personal computer
  • Communication media (Twisted pair wire,Coaxial cable,Fiber optical) 
  • Modem, Network card
  • Hub / Switch,,Router
  • Network soft ware 
வலையமைப்பின் வகைகள் (Network topology)
Star topology

Ring topology


Bus topology

Mesh topology

Tuesday, June 4, 2013

கணினியின் அடிப்படை-2



Hardware (வன்பொருள்)
கணினியினை உருவாக்கப் பயன்படுத்தப்படுவதும், Software இனால் செயற்படுத்தப்படுவதுமான இலத்திரனியல் பகுதிகள் Hardware என அழைக்கப்படுகின்றது .

Software (மென்பொருள்)
கணினியினால் செயற்படுத்தப்படுகின்ற அறிவுறுத்தல்களின் பட்டியல் Software என அழைக்கப்படுகின்றது. இவை  பிரதானமாக மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. 
அவையாவன :
1. Firmware
2. System software
3. Application software



Firmware
கணினி வன்பொருள் உற்பத்தியாளர்களால் கணினியின் வன்பொருளில் இல் நிரந்தரமாகப் பதியப்படும் ஒரு தொகுதி அறிவுறுத்தல்கள் Firmware என அழைக்கப்படுகின்றது. இதனை அடிப்படையாக வைத்தே கணினியின் ஏனைய மென்பொருட்கள் இயங்குகின்றன.
 உதாரணம் : BIOS (Basic Input Output System) Program

System Software (பணிச்செயல்முறை)
கணினியின் வன்பொருள் பகுதியினைப் பயனுள்ளதாக்குகின்ற சகல நிகழ்ச்சித்திட்டங்களும் System Software என அழைக்கப்படுகின்றன. கணினியின் செயற்பாட்டுக்கு தேவையான மென்பொருள் தொகுதியினை இது கொண்டிருக்கும்.
உதாரணம் : 
1. Ms DOS
2. Windows (XP, Vista, Windows7)
3. UNIX
4. Linux (Ubuntu, Fedora, K Ubuntu etc..)   
5. Mac OS

Application Software (பிரயோக மென்பொருட்கள்)
கணினியில் குறிப்பிட்ட வேலைகளைச் செய்யவென பிரத்தியோகமாக உருவாக்கப்பட்ட நிகழ்ச்சித்திட்டங்கள் பிரயோக மென்பொருட்கள் என அழைக்கப்படு கின்றன. இவை System Software இனை அடிப்படையாக வைத்துக்கொண்டு செயற்படுகின்றன.  பிரயோக மென்பொருட்கள் ஆனது பிரதானமாக இரண்டு பிரிவுகளைக் கொண்டுள்ளது.
அவையாவன :
1. Application Package.
2. Programming Language

Application Package
கணினியில் குறிப்பிட்ட வேலையினை செய்வதற்கென பயனாளர் இடைமுகத்தினைக்கொண்ட பிரத்தியோக மென்பொருள் பொதி இதுவாகும்.
உதாரணம்  
1. Microsoft office Application (Word, Excel, Access, Power point)
2. Photoshop.
3. Note pad 

Programming Language
கணினியில் மென்பொருள் நிகழ்ச்சித்திட்டங்களை உருவாக்குவதற்குப் பயன்படுத்தப்படும் நிகழ்ச்சித்திட்ட மொழி இதுவாகும்.  இதில் பிரதானமாக மூன்று பிரிவுகள் உள்ளன.
அவையாவன:
1. Machine Language
2. Low level Programming language
3. High level Programming language

Machine Language
1 இனையும் 0 இனையும் பயன்படுத்தி உருவாக்கும் கணினி நிகழ்சித்திட்ட மொழி இதுவாகும். இதனை Binary Language எனவும்அழைக்கப்படும். இதுவே கணினி விளங்கிக்கொள்ளும் மொழி யாகும்.ஏனைய மொழிகளில் நிகழ்ச்சித்திட்டங்களை எழுதினாலும் அவை அவற்றுக்குரிய மொழிமாற்றிகள் (Translator Program)  மூலம் கணினிக்கு புரியும் மொழியான Machine language இற்கு மாற்றியே செயற்படுத்தப் படுகின்றன. 

Low level Programming language
இதனை Assembly language   என்றும் அழைக்கப்படுகிறது. ஏனெனில்  Low level Programming language இல் இந்த Assembly language மட்டுமே உண்டு. இது விளங்கக்கூடிய குறியீட்டு வடிவில் அமைந்த மொழியாகும். இது, Machine Language இனைவிட இலகுவாக விளங்கக்கூடிய ஒரு மொழியாகும். 
இம் மொழியில் தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சித்திட்டங்களைக் கணினி நேரடியாக ஏற்றுக்கொள்ள மாட்டாது. எனவே இவை Machine Language இற்கு மாற்றப்பட்ட பின்னரே அதனை கணினி விளங்கிக்கொள்ளும் பின் அதில் உள்ள அறிவுறுத்தல் களின்படி தொழிற்படும். 
Low level Programming language இல் எழுதப்படும் நிகழ்ச்சித்திட்டங்களை Machine Language இற்கு மாற்றும் செயற்பாட்டினையும் கணினியே செய்கிறது. இதற்குத்தேவையான மொழிபெயர்ப்பு நிகழ்ச்சித்திட்டமான (Translator Program) assembler எனும் நிகழ்ச்சித்திட்டம் எழுதப்பட்டு கணினிமொழியுடனேயே உற்பத்தியாளர்க ளினால் விற்கப்படுகின்றது. 

High level Programming language
இம்மொழி Low level Programming language இலும் முன்னேற்றகரமானது. கணினிக்கு Assembly language  இல் பல அறிவுறுத்தல்களில் கொடுக்க வேண்டிய விடையத்தினை இந்த மொழிமூலம் ஒரே அறிவுறுத்தலில் கொடுக்கக்கூடியவாறு இருக்கின்றது. மற்றும்  Assembly language  இல் programஎழுதுவதற்கு Hardware பற்றிய அறிவு தேவைப்பட்டது. 
எனவே விஞ்ஞானிகள் மட்டுமே Assembly language இல் program எழுதக்கூடியவாறு இருந்தது (எழுதினார்கள்).
ஆனால் High level language ஆனது இலகுவானதாகவும் ஆங்கில மொழியில் அமைந்திருப்பதனாலும் இதில் சாதாரண அறிவுடனேயே நிகழ்ச்சித்திட்டங்களை தயாரிக்கக்கூடியவாறு இருந்தது (இருக்கின்றது). பல High level language கள் உருவாக்கப்பட்டுள்ளன.
உதாரணம் :
 BASIC, Pascal, Java, C++, C#, PHP
 High level language இல் எழுதப்பட்டprogram இனை Machine Language இற்கு மாற்றுவதற்காக மூன்று வகையான Translator கள் பயன்படுத்தப்படுகின்றன. 
அவையாவன:
1. Compiler (தொகுப்பி)
2. Interpreter (பொருள்கோடலி)
3. இவை இரண்டும் இணைந்த மாற்றிகள்.

Compiler இ ற்கும் Interpreter இற்கும் இடையேயான வேறுபாடுகள்.
Compiler ஆனது source program இனை முழுமையாக ஒரேதடவையில் இயந்திர மொழியாக மாற்றப்படும். 
ஆனால், Interpreter  ஆனது source program இனின் ஒவ்வொரு கட்டளைகளை செயற்படுத்தும்போதும் அதற்குரிய இயந்திரமொழியாக மாற்றப்டும்.

Blogger Tips and TricksLatest Tips For BloggersBlogger Tricks

சொயற்படுத்துங்கள்

Blog Archive

Total Pageviews