தகவல் தொழில்நுட்ப முதல் தமிழ் வலைத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

Monday, September 16, 2013

தகவல் முறைமை - 7

சோதனை மேற்கொள்ளல் (System Testing)
வடிவமைக்கப்பட்ட முறைமையில் உள்ள குறிமுறை வழுக்கள்(Cording Errors), அமைப்பு வழுக்கள்(Designing errors) அல்லது தேவைக்குறைபாடகள்(Requirement Errors) போன்றன சோதனைக்குட்படுத்தப்படும்.
அமைப்புவழுக்கள் அல்லது தேவைக்குறைபாடுகள் என்பது நாம் வழங்கும் உள்ளீடுகளுக்கு ஏற்ப வருவிளைவு பெறப்படுகின்றனவா எனவும், முறைமையின் வினைத்திறன், நம்பகத்தன்மை, பாதுகாப்பு என்பனவும் செம்மை பார்க்கப் படுகின்றன.
ஒரு முறைமையானது 3 படிமுறைகளில் செம்மை பார்க்கப்படுகின்றது.
     1.   அலகுப் பரிசோதனை (Unit Testing)
     2.   முறைமை பரிசோதனை(System testing) / தொடர்புடைமைச் சோதனை(Integration Testing)
     3.   பாவனையாளர் அங்கிகரிப்பதற்கான சோதனை(Accepting Testing)
அலகுப் பரிசோதனை – முறைமையின் ஒவ்வரு கூறுகளுக்கும் தனித்தனியாக உள்ளீடுகளை வழங்கி வருவிளைவு செம்மை பார்க்கப்படும்
முறைமை பரிசோதனை – முறைமையின் கூறுகள் ஒன்றுடன் ஒன்று தொடர்பு படுத்தப்பட்டு முறைமைக்குரிய செய்நிரல்கள் சரியான முறையில் செயல்படுத்தப்படுகின்றனவா என முறைமைக்கான உள்ளீடுகளை வழங்கி சோதனை மேற்கொள்ளல்.
பாவனையாளர் அங்கிகரிப்பதற்கான சோதனை – முறைமை வடிவமைப்பாளரினால் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் பயனாளரினால் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக உள்ளதா என்பது பற்றி சோதனையினைக் குறிக்கும்.

முறைமையினை செயற்படுத்தல் (System Implementation)
மூலமுறைமையில் இருந்த எல்லாத்தரவுகளும் புதிய கணினி முறைமைக்கு மாற்றம் செய்தலை இது குறிக்கும். இது பின்வரும் இருவழிகளில் மேற்கொள்ளப்படுகின்றது.
            1.   நேரடி அமுலாக்கம் (Direct implementation)
            2.   சமாந்தர அமுலாக்கம் ( Parallel Implementation)
நேரடி அமுலாக்கம் – பழயமுறைமை நிறுத்தப்பட்டு நிறுத்தப்பட்ட தினத்தில் இருந்தே கணினி மயப்படுத்தப்பட்ட முறைமை ஆரம்பிக்கப்படுதலைக்குறிக்கும்.

அனுகூலம் – செலவு குறைவு, நேரச்சிக்கனம்

பிரதிகூலம் – புதியமுறைமையில் கடினத்தன்மை ஏற்படும் பொழுது பழய முறைமைக்கு மாற முடியாது.
            புதியமுறைமைக்கு இயபாக்கம் அடைய ஏற்படும் காலதாமதம் வேலையில் கடினத்தன்மையினை உருவாக்கும்.
சமாந்தர அமுலாக்கம் – பழய முறைமையும், கணினிமயப்படுத்தப்பட்ட புதிய முறைமையும் ஒரேநேரத்தில் இயங்கும்.

அனுகூலம் – பழயமுறைமையில் பெற்றுக்கொள்ளப்பட்ட பெறுபேறுகளையும், புதிய கணினி மயப்படுத்தப்பட்ட முறைமையில் பெற்றுக்கொள்ளப்பட்ட பெறுபேறுகளையும் ஒப்பிட முடியும்.
             புதிய முறைமை ஆரம்ப கட்டத்திலேயே செயல் இழப்பின் அது நிறுவனத்தின் செயல்பாட்டை பாதிக்காது

பிரதிமூகூலம் – நிறுவனத்தின் ஒவ்வரு செயல்பாடுகளும் இருமுறை செய்ப்படுவதனால் மேலதிக வேலைச்சுமையும், நேர விரையமும் ஏற்படும்.
முறைமையினை பராமரித்தல்
          1.   முறைமைப் பயன்பாட்டில் இருக்கும் பொழுது முறைமையில் ஏற்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கும்.
          2.   பயனாளரின் புதிய தேவைகளை இனம் கண்டு மாற்றங்களை செய்வதற்கும்.
          3. எதிர்காலத்தில் ஏற்படும் தொழில் நுட்ப மாற்றங்கள் காரணமாக முறைமையில் புதிய மாற்றங்களை ஏற்படுத்துவதற்கும் முறைமை பராமரிப்பு அவசியமாகும்.

Sunday, September 15, 2013

தகவல் முறைமை - 6

முறைமை பகுப்பாய்வு செய்தல் (System Analysis)
முறைமையின் தேவைகள், அதன் மூலம் நிறைவேற்ற எதிர்பாக்கப்படும் கருமங்கள் பற்றி உரிமையாளர், பயனாளர் போன்றோரிடம் கலந்துரையாடி பூரண ஆய்வில் ஈடுபடுதலைக் குறிக்கும்.
இங்கு முறைமையின் தேவைகள் இருவகைப்படும்.
    1.   செயல்சார்ந்த தேவைகள் (Functional Requirement)
    2.   செயல்சாராத தேவைகள் (Non Functional Requirement)
செயல்சார்ந்த தேவைகள் (Functional Requirement) – முறைமையில் பயன்படுத்த உத்தேசிக்கும் செயல்களைக் குறிக்கும். உதாரணமாக வங்கி கொடுக்கல் வாங்கள் முறைமையில் பணம் வைப்பில் இடுதல், மீளப்பெறல், மீதியினை அறிதல், அறிக்கை தயாரித்தல் போன்ற செய்கைகளை குறிக்கும்.
செயல்சாராத தேவைகள் (Non Functional Requirement) – கணினி மயப்படுத்தப்பட்ட முறைமையின் வினைத்திறன், பாதுகாப்பு, நம்பகத்தன்மை, பயனாளர் சுலபமாக பயன்படுத்த தக்க இடை முகம் போன்ற தேவைகளைக் குறிக்கும்.
இவ்வாறான முறைமையின் செயல்சார்ந்த, செயல்சாரா தேவைகள் பற்றிய அறிக்கை முறைமையின் தேவைகள் விபரக்குறிப்பு (System Requirement Specification) என அழைப்பர்.
முறைமைக்கு தேவையான தரவுகளை தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் நுட்பங்கள் (தரவுத்தளத்தினை திட்டமிடுவதற்கு)
       1.   அறிக்கை கோவைகள் ஆகியவற்றை அவதானித்தல்.
       2.   நேர்காணல்
       3.   வினாக்கொத்து பயன்படுத்துதல்
       4.   அவதானிப்புக்களை மேற்கொள்ளுதல்
       5.   மாதிரிகளை பயன்படுத்துதல்


முறைமை வடிவமைப்பு (System Design)
பயனாளரின் தேவைகள் மற்றும் ஆழமான பகுப்பாய்வு என்பவற்றுக்கு ஏற்ப முறைமை வடிவமைப்பாணது பின்வரும் இரு கட்டங்கலாக நடைபெறுகின்றது.
    1.   ஆரம்பம் அல்லது பொதுவாண வடிவமைப்பு புதிய முறைமையில் உள்ளடங்கவேண்டிய அம்சங்கள் அதாவது உள்ளீடு, செய்முறை, வருவிளைவு என்பன வரையறை செய்யப்படுகின்றது.
    2.   கட்டமைப்பு அல்லது விரிவாண வடிவமைப்புபுதியமுறைமை எழுதப்பட வேண்டிய கணினி மொழி தெரிவு செய்யப்பட்டு பாச்சல்கோட்டுப்படங்கள்(Flow chart), தரவுப்பாச்சல் படங்கள்(Data Flow Diagram – DFD),போலிக்குறிமுறைகள், தரவுத்தளம் என்பன வடிவமைக்கப்படுகின்றது.

முறைமையினை விருத்தி செய்தல் (System Development)
வடிவமைக்கப்பட்ட முறைமைக்கு கணினி நிகழ்ச்சித்திட்டம் எழுதுதல் அதாவது குறிமுறைப்படுத்தல்(Coding) இன்னிலையிலே இடம் பெறுகின்றது. குறிமுறைப்படுத்தல் பகுதி பகுதியாகவே மேற்கொள்ளப்படுகின்றது. இவ்வாறு மேற்கொள்வதனால்
     1.   முறைமையினை விரைவாக அபிவிருத்தி செய்து கொள்ள முடியும்.
     2.   முறைமையினை பராமரித்தல் இலகு.
     3.   எதிர்காலத்தில் முறைமையில் மாற்றம் செய்யும் பொழுது அவற்றினை இலகுவாக மேற்கொள்ள முடியும்(விரைவாக இற்றைப்படுத்திக்கொள்ள முடியும்)
குறிப்பு – முறைமைக்காண கணினி மொழியினை தெரிவு செய்யும் பொழுது பின்வரும் விடையங்களை கருத்தில் கொள்ளல் வேண்டும்.
    1.   பிரையோக ஆள்களம் (Application Domain)
    2.   முறைமையின் பரிமாணமும் அதன் கணிப்பீடும்
    3.   முறைமையினை செயல்படுத்துவதற்காக அம்மொழியில் உள்ள வசதிகள்.
    4.   முறைமையினை பராமரிக்க தேவையான வசதிகள்.
இங்கு பிரையோக ஆள்களம் என்பது அது செயல்படுததப்படும் பரப்பினைக்குறிக்கும் அதாவது இணைய வழி முறைமையாயின் JAVA, PHPபோன்ற மொழிகள் தெரிவு செய்யப்படும். வன்பொருள் சார்ந்த முறைமை மென்பொருட்களை உருவாக்கும் பொழுது C, C++ போன்ற மொழிகள் தெரிவு செய்யப்படும்.
முறைமையின் பரிணாமமும் அதன் கணிப்பீடும் என்னும் பொழுது, முறைமையினை நாம் துரிதமாக அமைத்துக்கொள்வதற்கு Visual Basic, Visual Cபோன்ற மொழிகளும், வல்லுனர் முறைமையினை அமைக்கும் பொழுது தர்கத்துக்கான வசதிகள் உடைய Prolog போன்ற மொழிகளும் பயன்படுத்தப்படும்.

Saturday, September 14, 2013

தகவல் முறைமை - 5

முறைமை விருத்தி வட்டம்(System Development Life Cycle - SDLC)
முறைமையினை கணினி மயப்படுத்தும் போது பின்பற்ற வேண்டிய படிமுறைகளை இது குறிக்கும். அவையாவன
    1.   பிரைச்சனையினை வரைவிலக்கணப்படுத்தல் (Problem Definition)
    2.   இயலுமை ஆய்வு (Feasibility Study)
    3.   முறைமை பகுப்பாய்வு செய்தல் (System Analysis)
    4.   முறைமை வடிவமைப்பு (System Design)
    5.   முறைமையினை விருத்தி செய்தல் (System Development)
    6.   சோதனை மேற்கொள்ளல் (System Testing)
    7.   முறைமையினை செயற்படுத்தல் (System Implementation)
     8.   முறைமையினை பராமரித்தல் (System Maintenance)




பிரைச்சனையினை வரைவிலக்கணப்படுத்தல் (Problem Definition)
முறைமையின் முகாமைத்துவ குழுவும், முறைமை விருத்தி குழுவும் இணைந்து முறைமையின் குறிக்கோள், உள்ளீடு, வருவிளைவு, செய்முறை, பாதுகாப்பு, முறைமையின் இடைமுகம் பற்றிய எளிய ஆவணத்தினை தயார் செய்தலைக்குறிக்கும்.
இயலுமை ஆய்வு (Feasibility Study)
முறைமையினை உருவாக்க தேவையான வளங்கள் உள்ளனவா, இப்புதிய முறைமையில் இருந்து பெறத்தக்க பொருளாதார அனுகூலங்கள் பற்றிய ஆய்வே இதுவாகும்.பின்வரும் 3 வகைகளில் இவை ஆய்வு செய்யப்படும்.
   1.   தொழினுட்ப இயலுமை – முறைமையினை உருவாக்க தேவையான தொழினுட்ப வழங்களைக் கொண்டுள்ளனவா என்பது பற்றி ஆராய்தல்.
   2.   செய்பணி இயலுமை -  முறைமையினை இயக்க தேவையான மானுட, பௌதீக, நேரவளங்களைக் கொண்டுள்ளனவா என ஆராய்தல்.
   3.   பொருளாதார இயலுமை – முறைமையினை உருவாக்க தேவையான பொருளாதார வளங்கள் பற்றியும், செலவிடப்படும் பெறுமதிக்கு பொருத்தமான பயன்பாடு உள்ளனவா என்பது பற்றியும் ஆராயப்படும்.

Friday, September 13, 2013

தகவல் முறைமை - 4

தகவல் முறைமை ஒன்றின் வகைகள்
தகவல் முறைமையானது அதன் செயற்பாட்டு பிரையோக அடிப்படையில் பின்வருமாறு வகைப்படுத்தப்படும்.
    1.   கொடுக்கல் வாங்கல் முறை வழியாக்க முறைமைகள். (Transaction Processing Systems)
    2.   முகாமைத்துவ தகவல் முறைமைகள் (Management Information Systems)
    3.   தீர்மான உதவி முறைமைகள் (Decision Support Systems)
    4.   வல்லுனர் முறைமைகள் (Expert Systems)
கொடுக்கல் வாங்கல் முறை வழியாக்க முறைமைகள். (Transaction Processing Systems)
அன்றாடம் இடம்பெறும் கொடுக்கல் வாங்கல்களை முறைவழிப்படுத்துவதற்கான தகவல் முறைமையாகும்.
உ-ம் – வங்கி கொடுக்கல் வாங்கல்களை முறைவழிப்படுத்தல்
       வர்த்தக நிறுவன கொடுக்கல் வாங்கல்களை முறைவழிப்படுத்தல்

முகாமைத்துவ தகவல் முறைமைகள் (Management Information Systems)
ஒரு நிறுவனத்தின் முகாமைத்துவ தகவல்களை செயற்படுத்தும் முறைமையினை குறிக்கும்.
இவ்முறைமையின் கீழ் ஊழியர்  விபரம், சம்பளம், வரவு, செலவு, இலாப நட்ட பதிவுகள் என்பவற்றின் தரவுத்தளங்களை பேனலும், இவற்றினை முறைவழிப்படுத்தி நிர்வாகத்துக்கு தேவையான தரவுகளை பெற்றுக்கொடுத்தலும் இம் முறைமையின் பணியாகும்.

தீர்மான உதவி முறைமைகள் (Decision Support Systems)
தீர்மானம் எடுக்க தேவையான தரவுகளை பயனாளருக்கு பெற்றுக்கொடுக்கும் முறைமை இதுவாகும்.
இதற்கு கணினிக்கு தீர்மாணம் ’மேற்கொள்ளும் முறை, விதிகள், செயலொழுங்குகள், தகவல்கள் என்பவற்றை பெற்றுக்கொடுத்து முறைவழிப்படுத்தப்பட்டு தீர்மாணம் எடுக்க தேவையான தரவுகளை பயனாளருக்கு பெற்றுக்கொடுப்பதாகும்.
வல்லுனர் முறைமைகள் (Expert Systems)
மனிதர்கள் சில துறைசார்ந்த அறிவனைக்கொண்டிருப்பது போல் கணினிக்கும் சில சிறப்பான மென்பொருட்களை பயன்படுத்தி துறைசார்ந்த அறிவினை பெற்றுக்கொடுத்து உரிய நிலைமைக்கு ஏற்ப அறிவுமட்டத்திலான (Knowledge Base) ஆராய்வினை மேற்கொண்டு ஆலோனை வழங்கலை குறிக்கும்.
அதாவது கணினிக்கு செயற்கை முறை சிந்துக்கும் ஆற்றலை(Artificial Intelligent) வழங்கும் முறைமையாகும்.
உதாரணமாக கணினி சார் வைத்திய முறை(Computer Base Medicine)    

Thursday, September 12, 2013

தகவல் முறைமை - 3

முறைமை ஒன்றில் தீர்மாணம் எடுக்கம் நிலை
          1.  அதியுயர் முகாமைத்துவம் (Top level Management)
          2.  மத்திய தர முகாமைத்துவம் (Middle level Management)
          3.  களநிலைப்பகுதி (Operational level/Low level Management)

 களநிலைப்பகுதி (Operational level/Low level Management)
இங்கு நன்கு திட்டமிடப்பட்ட தகவல்கள் தேவையாக இருப்பதுடன் அதனை தொகுதியல் இருந்தே பெற்றுக்கொள்வர்
உ-ம் பாடசாலை வகுப்பறை ஒன்றின் ஆசிரியர் நிலை.

மத்திய தர முகாமைத்துவம் (Middle level Management)
இவர்கள் முறைமை ஒன்றினை கண்கானித்தல் கட்டுப்படுத்தல் போன்ற யெற்பாடுகளை மேற்கொள்வர். இவர்களுக்கு குறைந்தளவு தகவல் பொதுமானது.
உ-ம் பிரதி அதிபர், பகுதிதலைவர்

அதியுயர் முகாமைத்துவம் (Top level Management)
இவர்களுக்கு நன்கு வடிகட்டப்பட்ட சுருக்கமான நேரடியாக பயன்படத்தக்க தகவல்கள் தேவைப்படும் தேவை ஏற்படும் பொழுது முறைமைக்கு வெளியே இருந்து தகவல்களை பெற்று இறுதி தீர்மாணத்தினை மேற்கொள்வர். ஆனாலும் இவர்கள் சுயமாக செயற்பட முடியாததாக இருப்பர்.
உ-ம் பாடசாலை அதிபர்.


Wednesday, September 11, 2013

தகவல் முறைமை - 2

தொகுதி பிரதானமாக 3 செயற்பாடுகளை கொண்டது 
    1.       உள்ளீடு
    2.    முறைவழியாக்கம்
    3.   வெளியீடு

தகவல்முறைமை இருவகைப்படும்
   1.   கையினால் செயற்படுத்தப்படும்/தன்னியக்கமற்ற தகவல் முறைமை(Manual information system)
   2.   கணினி சார் தகவல் முறமை (Computer base information system)

கையினால் செயற்படுத்தப்படும்/தன்னியக்கமற்ற தகவல் முறைமை (Manual information system)
எல்லா முறைவழியாக்கமும் மனித வலு மூலம் செயற்படுத்தப்படும் முறைமை இதுவாகும். இங்கு தரவுகளும் தகவல்களும் கடதாசியில் எழுதி கோவைகளாக பராமரித்தல் வேண்டும்.
தீமைகள்
    ·         திருத்தமற்றதாக கணப்படும்.
    ·         துரிதமாக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியாது.
    ·         பெரும் தொகையான தகவல்களை கையாள்வது கடினம்.
    ·         வினைத்திறன் குன்றிய முறைவழியாக்கமாக காணப்படும்.
    ·         பாதுகாப்பது கடினம்.
    ·         தகவல்களை பேணுவதற்கு பெரிய இடவசதி தேவை.




கணினி சார் தகவல் முறமை (Computer base information system)
தகவல் முறைமை ஒன்றின் செயற்பாடகள் கணினி ஊடாக செயற்படுத்தப்படும் எனில் அதனை கணினி சார் தகவல் முறைமை எனப்படும். இதன் பிரதான கூறுகளாக
·         வண்பொருள்
·         மென்பொருள்
·         பயனாளர்/செய்நிரலாளர்
·         செயல்முறைகள்
·         தரவுகளும்,தகவல்களும்

முறைமை ஒன்றின் முறைவழியாக்கத்தின் வகைகள்
  1.   தொகுதி முறைவழியாக்கம் (Batch Processing)
  2.   நிகழ் நேர முறைவழியாக்கம் (Real Time Processing)
தொகுதி முறைவழியாக்கம் (Batch Processing)
முறைமை ஒன்றின் முறைவழியாகம் ஆனது தொகுதி தொகுதியாக நிறைவேற்றப்படும் ஆயின் அதனை தொகுதி முறைவழியாக்கம் என அழைப்பா்.
உ-ம்   மாணவர் தினவரவு பதிவு, பல்கலைக்கழக மாணவர் அனுமதி

நிகழ் நேர முறைவழியாக்கம் (Real Time Processing)
முறைமை ஒன்றின் முறைவழியாகம் ஆனது தொடர்சியாக இடம் பெற்றக்கொண்டு இருக்கும் ஆயின் அதனை நிகழ் நேர முறைவழியாக்கம் என அழைப்பா்.
உ-ம்   தொலைபேசி பரிவர்த்தன முறைமை, வங்கி ATM முறைமை

Tuesday, September 10, 2013

தகவல் முறைமை - 1

தகவல்முறைமையும் தகவல் தொழில் நுட்பமும்
(Information System and information Technology)
முறைமை (System)
யாதாயினும் ஒரு குறிப்பிட்ட செயலை அல்லது குறிக்கோளை நிறைவேற்று வதற்றுவதற்காக அத்தியாவசியமான குறிப்பிட்ட செயன்முறையினை மேற்கொள்கின்ற ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய பல்வேறு கூறுகளின் சேர்கையே முறைமையாகும்.
ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய பல்வேறு கூறுகள் உபமுறைமையாகும்(Sub system)
உதாரணம்    1. பாடசாலை முறைமை
              உபமுறைமை விளையாட்டுத்துறை
                           பரீட்சைப்பகுதி
                           நிர்வாகபகுதி
              2. வியாபார உற்பத்தி நிறுவனமுறைமை
              உபமுறைமை உற்பத்திபகுதி
                           சந்தைப்படுத்தல் பகுதி
                           நிர்வாக பகுதி
              3. மனித உடல் முறைமை (இயற்கை முறைமை)
              உபமுறைமை சுவாச தொகுதி
                           குருதி சுற்றோட்டத் தொகுதி
                           நரம்புத் தொகுதி
                           சமிபாட்டுத் தொகுதி  

முறைமை மாதிரி



Tuesday, August 20, 2013

பிளாக்கருக்குத் தேவையான புதிய Grid style image விட்ஜெட்..!

Grid Style recent post widgetகடந்த பிளாக்கர் டிப்ஸ் தொடர்பான பதிவில் புதிய பிளாக்கர்களுக்கா அடிப்படை டிப்ஸ்களைபிளாக்கர் டிப்ஸ் என்ற தலைப்பில் பதிவிட்டிருந்தோம். இன்றைய பிளாக்கர் டிப்ஸ் பதிவில் பிளாக்கரில் Grid style image recent post widget வைப்பது எப்படி எனப் பார்ப்போம். பிளாக்கரில் நிறைய பயனுள்ள விட்ஜெட்கள் இருக்கின்றன. அவற்றில் Recent Post Widget -ம் ஒன்று. இதில் பல்வேறுபட்ட நிரல்வரிகளைப் பயன்படுத்தி அவரவர் வலைப்பூவுக்கிற்கு ஏற்றவாறு கேட்கெட்டை அமைக்கிறோம். பிளாக்கர் தரும் recent Post விட்டில் படத்துடன் கூடிய தலைப்புகள் அமைந்திருக்குமாறு சமீபத்திய இடுகைகளைக் காட்ட விட்ஜெட் உள்ளது. அதில் பதிவிற்கான சுக்கத்தைக் காட்டும் வசதி.. பதிவினுள் அமைந்திருக்கும் படத்தை காட்டும் வசதி.. போன்றவைகளுடன் இருக்கும். 
அவ்வாறில்லாமல் வெறும் படத்தை மட்டுமே ஒவ்வொரு இடுகைக்கும் காட்டுமாறு அமைத்தால் எப்படி இருக்கும்? இந்த எண்ணத்தைச் செயல்படுத்தி விட்ஜெட் ஒன்றை உருவாக்கித் தந்திருக்கிறார்கள் http://www.bloggerplugins.org தளத்தினர்.
வழக்கம்போல உங்கள் பிளாக்கர் தளத்தில் லாகின் செய்துகொள்ளுங்கள்.
Design==>Page Elements==>Add Gadget==> Popular Post என்பதைத் தேர்ந்தெடுக்கவும். 
அதில் படத்தில் காட்டியுள்ளபடி image thumbnail என்பதில் மட்டும் டிக் மார்க் ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.
Click only Thumbnaill

பிறகு Save கொடுத்து சேமித்துக்கொள்ளுங்கள். 

முன்பே popular post widget உங்கள் தளத்தில் இணைத்திருந்தால் மேற்சொன்ன மாற்றத்தை மட்டும் செய்து சேமித்துவிடுங்கள். 

இப்போது வார்ப்புருவில் படங்களை மட்டும் Grid Style-ல் காட்டுவதற்கான நிரல்வரிகளைச் சேர்க்க வேண்டும். அதற்கு Design ==> Edit HTML என்பதை திறந்துகொள்ளவும். Expand Widget Template என்பதில் டிக்மார்க்கை ஏற்படுத்த வேண்டாம். அதில் காட்டப்படும் வலைப்பூவின் வார்ப்புரு நிரலில் இந்த வரிகளைத் தேடுங்கள்.



மேற்கண்ட நிரல்வரிகளை நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக கீழிருக்கும் நிரல்வரிகளை கொடுத்து Save Template அழுத்தி செய்த மாற்றத்தை சேமித்துக்கொள்ளவும்.



பிறகு Template Designer என்பதைச் சொடுக்கி தோன்றும் பக்கத்தில் இறுயில் இருக்கும் Advanced என்பதை கிளிக் செய்யவும்.

Click to Template Designer
இப்போது தோன்றும் பக்கத்தில் Add Custom CSS என்பதில் கீழ்க்கண்ட நிரல்வரிகளை காப்பி செய்து பேஸ்ட் செய்துகொள்ளவும்.


பிறகு வலது மேல் மூலையில் Apply to Blog என்பதைக் கிளிக் செய்யவும்.

அவ்வளவுதான். முடிந்தது. இப்போது உங்கள் பிளாக்கரில் Grid style image recent post widget இணைந்திருக்கும்.
Grid Style recent post widget

இதுபோன்ற விட்ஜெட்கள் படங்களை மட்டும் பதிவேற்றம் செய்யும் வலைப்பூக்களுக்கு(Image Gallery Blogs) பொருத்தமாக இருக்கும். மேலும் பலதரப்பட்ட பதிவுகளைக் கொடுக்கும் வலைப்பூக்களும் ஓரளவு பொருந்திப்போகும். இதனால் தளத்தில் வரும் வாசகர்கள்(Visitors) படங்களைப் பார்த்து கிளிக் செய்யும் வாய்ப்புகள் அதிகம். இன்னும் சொல்லப்போனால் வார்த்தைகளாக உள்ள தலைப்பைப் பார்த்து, படித்து அதை கிளிக் செய்யும் நேரத்தைவிட படமாகப்(Image) பார்த்தால் உடனே அதை கிளிக் செய்யத் தோன்றும். இந்த உத்தி உங்கள் வலைப்பூவின் தரத்தை உயர்த்தும், மேலும் வாசகர்களின் கவனத்தையும் ஈர்க்க முடியும். நன்றி நண்பர்களே..!!

Blogger Tips and TricksLatest Tips For BloggersBlogger Tricks

சொயற்படுத்துங்கள்

Blog Archive

Total Pageviews